ஜாக்கிரதைடா ஜாக்கி




சென்னை போன்ற மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில் டிராபிக்கில் போர் அடித்து விடும்… ஒவ்வோரு முறையும் எதையாவது ரசித்து பார்த்து அந்த பயணத்தை அர்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டும் என்பது எனது அவா.


அதனாலே சாலைகளில் பயணிக்கு போது நிறைய விஷயங்களை உற்று நோக்கி பயணிப்பது எனக்கு பிடித்த விஷயம்… பேசிக்காக நான் கேமராமேன் மற்றும் புகைப்படகலைஞன் என்பதால் அதனை அதன் அழகியலோடு பார்பது எனக்கு பிடித்த விஷயம்.



இரு சக்கர வாகனத்தில் பயணிக்கு போது முன்னே செல்லும் கார்களில் இருக்கும் ரிவர்யூமிரர்களில் காரை ஓட்டும் ஆணையோ பெண்ணையோ பார்ப்பது வழக்கம்..
கார்களின் ரிவர்யூ மிரர் பிரேம் ஒரு சின்ன டிவி பெட்டி மாதிரியும் அதில் அவர்கள் முகபாவங்களையும் அவர்கள் அலட்டல்களையும் ரசித்து செல்வது என்னுடைய பொழுது போக்கு…

கிழவனில் இருந்து யுவன் யுவதி வரை ஒவ்வோரு கார்களில் ஒரு முகம்.. அந்த முகம் என்னவாக இருக்கும் பொதுவாக இந்த காரை யார் ஓட்டுகின்றார்கள் பார்ப்போம்? பொண்ணா ? பையனா? கிழவனா? கிழவியா? என்று மனதில் ஒரு விளையாட்டு ஓடிக்கொண்டு இருக்கும்..



முக்கியமா வயசானவங்க ஓட்டினாங்கன்னு வச்சிக்கோங்க கட் அடிச்சி எல்லாம் போக ‘மாட்டாங்க.. ரொம்ப பயந்து ஓட்டுவாங்க.. காலியான ரோட்ல கூட 40ஐ தாண்டாது…


ஒருவேளை ஒரு பெண் அந்த காரை ஓட்டினால் என்று வைத்துக்கொள்ளுங்கள். பக்கி போல கண்ணாடி கிட்ட போய் நின்னு லைட்டா திரும்பி பார்க்கறதுக்கு முன்னாடி அதை பார்க்கலாமா வேண்டாமான்னு ரிவர்யூமீரர் பார்த்தே முடிவு பண்ணிடலாம்…



சில கார்ல இருக்கற பொண்ணுங்களை நாம திரும்பி பார்க்கலைன்னா.. எவ்வளவு நேரம் வெயில்ல நிக்கறவனை அப்ப பார்த்தோம்.. ஆனா நம்மளை கொஞ்சம் கூட கன்சிடர் பண்ணவேயில்லைன்னு கோவம் வேகமா மாறும்.. முதல் கீர்லயே தூக்கி அடிப்பாங்க பார்த்துக்கொங்க…



நேத்து மவுண்ட் ரோட்டுல டுவிலர்ல போய்க்கிட்டு இருந்தேன்…


மவுன்ட் ரோடடில் செம டிராபிக்… மாலை செக்க போடு போடபோகும் மழைக்காக நெருப்பில் வாட்டும் சோளம் போல சென்னை மக்களை சூரியன் வாட்டி வதக்கிக்கொண்டு இருந்தான்.

ஸ்பென்சர் சிக்னல் அருகே

எனக்கு பின்னால் ஒரு ஐ டென் என்னை முந்த டிரை செய்து கொண்டு இருந்தது… நான் வழிவிட்டேன்.
முன்னால் சென்றது…

சிக்னலில் நின்றது.

ரிவர்யு மிரர் பிரேம் பார்த்தேன்… அழகான பெண்….
அந்த உதடும் நாசியும்…. டோனி அன்ட் கையில் 40 ரூபாய் கொடுத்து வலியோடு வில்லாக திருத்தப்பட்ட புருவம் அந்த பெண்ணை தேவதை போல காட்டியது…

ச்சே என்னா அழகு என்னா அழகு என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே…. ஐ டென் சன்னமாக நகர்ந்து இரு சக்கர வாகனம் செல்லும் அளவுக்கும் வழி விட்டது…



நான் ஆர்வமாய் முன் சென்று காரின் கண்ணாடி பக்கம் நின்று உடனே அலச்சக்காரன் போல பார்க்காமல் மெல்ல தலை திருப்பினேன்…

செம அழகு

கார் கண்ணாடி சத்தம் போடாமல் கீழ் இறங்கியது.. எனக்கும் அந்த பதுமைக்கும் எந்த தடையும் இல்லை..
சென்னை வெக்கை அவள் சருமத்தை தாக்கியது…
அட்ரஸ் கேக்க போறாளோ?


நீங்க ஜாக்கிதானே..?

ஆமாம்…

உங்க வீடியோ விமர்சனம் பார்க்கறேன்… ரொம்ப நல்லா பண்ணறிங்க… முக்கியமா இறைவி படத்து லேடி கேரக்டர்களை பத்தி பேசி இருந்திங்க இல்லை… அது செம…. அதே போல அந்த பேங்களூர் ஹலோ பான் வீடியோ இன்ட்ரஸ்டிங் கீப்பிட்டப்

முதல் கீரில் வேகம் எடுத்து இரண்டாம் கீரில் 60ஐதொட்ட அந்த ஐ10னை ஙே என்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஜாக்கிசேகர்


02/09/2016



நினைப்பது அல்ல
 நீ நிரூபிப்பதே நீ....
.EVER YOURS..
.

4 comments:

  1. காற்றில் பறந்த வாழ்த்தா...?

    உங்கள் விமர்சனத்துக்கு கிடைத்த பரிசு அது...

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆமா நீங்க ஹெல்மெட் போடுறது இல்லய்யா ??

    ReplyDelete
  3. hi man all know that you sincerely wish such an incident to happen.... i pity your SELF GLORIFICATION

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner