ஆல்பம்.
கர்நாடாகவில் எந்த
தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன் வண்டிகளும் இன்னும்
சென்றபாடில்லை…மாண்டியாவில் 20 நாட்களுக்கு
பிறகு இப்போதுதான் அமைதி திரும்புகின்றதாம்.
ஓசூர் பார்டரில் தமிழ் நாட்டு லாரிகளை தடுத்து நிறுத்தி இருக்கின்றார்கள்..
எங்கள் லாரிகளை இயக்க விடவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என்று லாரி உரிமையார்கள்
அறிவித்து இருக்கின்றார்கள். என்ன நடக்கின்றது என்று பார்க்க மட்டுமே முடியும்.. இதுவே கலைஞர் ஆட்சியாக இருந்தாலும்
கம்பு சுத்தலாம்..இந்தியாவில் இருக்கும் கர்நாடாகவிலேயே
புடுங்க முடியவில்லை.. இலங்கையில்
போய் புடுங்க வேண்டும் என்று ஊதார் விட்டவர்கள் எல்லாம் வாய் பொத்தி இருப்பதை
பார்க்கையில் மகிழ்ச்சி.
=====
மன்மோக் மிக்சர்
சாப்பிட்டுக்கிட்டு இருந்தார்.,...அதுவே மோடி மட்டும் இருந்தா அவ்வளவுதான் தூள் கிளப்புவார்ன்னு
கூவிக்கிட்டே இருக்கும் போதே...
சரி வந்து ஒரு
வாய்ப்புதான் கொடுக்கலாமேன்னு லைட்டா நினைச்சவன்ல நானும் ஒருத்தன். வந்த கொஞ்சநாளிலேயே
அவர் கார்பரேட் லெவல்னு நிருபிச்சிட்டார்...
கர்நாடகா உள்ள
கடந்த இரண்டு வாரத்துக்கு மேல ஒரு தமிழ் நாடு ரிஜிஸ்ட்ரேஷன் வண்டி போய் ஒரு வாரத்துக்கு
மேல ஆகுது
பிரதமர் அதை பத்தி
கவலை பட்டதாகவே தெரியலை.. இன்னும் ஊரடங்கு உத்தரவு அங்க அமலில் இருக்கு... பாதிக்கப்பட்டவர்களை
சந்தித்தா எந்த செய்தியும் இல்லை...
பாகிஸ்தான்ல இருந்து
வந்து மூனு நிமிழத்துல நாம்மாளு 23 பேரை சாவடிச்சிட்டு போய்ட்டானுங்க...
நீயும் மிக்சர்
திங்கதானான்னு சமுகவலைதளங்களில் ஓட்டி தள்ளறானுங்க.....
வந்ததும் சரியில்லை
வாச்சதும் சரியில்லை நம்ம டிசைன் அப்படி என்று புலம்புவதை தவிற வேறுவழியில்லை.
===========
மிக்சர்.
முதலமைச்சர் அம்மாவுக்கு
உடல்நிலை சரியல்லாமல் நான்கு நாட்களாய் அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கின்றார் இன்னமும் சரியான ரிசல்ட் தெரியவில்லை… ஆனால் வதந்திகள் மட்டும் றெக்கை கட்டி பறக்கின்றன.. ஆனாலும் அவர் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்பதுதான் நம் பிரார்த்தனைகள்.
=====
கவுண்டமணி நல்லாதான்
இருக்கின்றார்.. ஆனால் கடந்த வாரத்தில் மட்டும்
கவுண்டமணியை வாட்சப் குருப்பில் தினமும் ஒருவர் அவர் இறந்து
விட்டதாக தகவல் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள்.. கவுண்டமணியே டேய் நான் நல்லாதான்
இருக்கேன் என்று கதற விட்டுதான் மறு வேளை பார்ப்பார்கள்
போல.
==========
மெட்ரோ ரயில் இரண்டாம்
கட்ட பணிகள் முடிந்து சின்ன மலையில் இருந்து ஏர்போர்ட் வரை மெட்ரோரயில் ஓட ஆரம்பித்து விட்டது.. இது எனது
கனவு திட்டம் என்று கூசாமல் முதல்வர் ஜெ அடித்து விடுகின்றார்.. அது மட்டுமல்ல.. மோனோ ரயில்தான் சிறந்த ரயில்… மெட்ரோ
ரயில் திட்டம் வேஸ்ட் என்று நிறைய முறை இந்த திட்டத்தை எதிர்த்தவர்… ஆனால் இன்று சொந்தம் ‘கொண்டாடுகின்றார்… சர்ச் பார்க்கில் படித்து
என்ன பயண்?
=========
//=============
நண்பர் வீட்டில் ஒரு பெண் இருக்கின்றாள்… வயது 37 சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணி…
மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகின்றார்… சொந்த வீடு வாங்கி விட்டார்… அது பிரச்சனையில்லை.. அவருக்குவரன் இன்னும் அமையவில்லை என்று எனது நண்பர் வருத்தம் கொண்டனர்…
எந்த சாதியும் பரவாயில்லை.. ஆனால் மணமகன் தன் உழைப்பில் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே நிபந்தனை…
. காசு பணம் இருக்கின்றது.. ஆனால் பணத்தை குறி வைத்தே நிறைய வரன்கள் வருகின்றாரர்கள்… என்பதுதான் பிரச்சனை.
நம் நண்பர் வட்டத்தில் சாதி தடையில்லை என்று நினைக்கின்ற சென்னையில் பணிபுரியும் படித்த உழைப்புக்கு அஞ்சாத மணமகன் கீழ்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்…
9786773452
நண்பர்கள் முடிந்தால் இந்த செய்தியை ஷேர் செய்து அப்பெண்ணின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த ஒரு காரணியாய் இருக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
வாழ்க்கை வசப்பட பரம்பொருளை பிரார்திக்கிறேன்.
ஜாக்கிசேகர்
25/09/2016
25/09/2016
சினிமா.
தோனி பயோகிராபிக்கல் திரைப்படம் இந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகின்றது.. நீராஜ் பான்டே அசத்துவார் என்று எண்ணுகிறேன்… அந்த
அளவுக்கு டிரைலர் பார்க்கும் போதே அசத்துகின்றது.
==============
இந்த வார விகடன்டைம்பாஸ் இதழில் எனது பேட்டி..
===========
இந்த வார திரைப்பட விமர்சனங்கள்.
ஆண்டவன் கட்டளை அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்… இந்த வருடத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் இதுவரை ஐந்து படங்கள் வெளியாகியுள்ளன..
ஒவ்வொன்றும் வெவ்வேறானவை.
வெற்றிகளை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் கதையின் நாயகனாக தன்னை பொருத்திக்கொள்வதே விஜய்சேதுபதியின்
வெற்றிக்கான சூத்திரம்..
#aandavankattalai #vijaysethupathi
=========
#Thodari reivew by Jackie Cinemas
=========
லிப்ஸ்ட்டிக் கண்மை வைத்துக்கொண்டாலோ,
டீ ஷர்ட் ஜீன்ஸ் அணிவதாலோ,
ஒற்றை பிளிட்டில் புடவை கட்டினாலோ
சிகரேட் பியர் அடிப்பதனாலோ,
பாய் பிரண்டுடன் டேட்டிங் சென்றாலோ,
உங்களுக்கு சகஜமாய் கை கொடுத்து ஹக் செய்வதாலோ,
செக்யூர்டாக பீல் பண்ணி செக்ஸ் ஜோக் பேசுவதாலோ,
நைட் பார்ட்டிக்கு
வந்து செல்வதாலோ,
அவள் எதற்கும் தயாரான பெண் எப்போதும் அழைத்தாலும் வந்து படுத்து விடுவாள் என்று நினைக்கும் பொது புத்திக்கு சாட்டை அடி திரைப்படம்..
பிங்க். #pinkmovie #pink #nomeansno
no means no
அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்.
=============’
நான்வெஜ் 18+
My girlfriend told me to go out and get something that makes
her look sexy... so I got drunk
===========
ஜாக்கிசேகர்
25/09/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

NICE
ReplyDeleteஅருமை சாக்கி-இ அவர்களே உடம்பை பார்த்துங்கங்க.
ReplyDelete