காலையில் எழரை மணி வரைக்கும் தூக்கம்… அம்மா தண்ணி முஞ்சில ஊத்திதான் எழுப்புவா… அந்த அளவுக்கு தூக்கி தொலைப்பேன்.
எழுந்து வெப்பங்குச்சி உடைச்சி வாயில முனையை மைய வச்சி பிரஷ் போல ஆக்கி…. பச்சக் பச்சக்ன்னு எச்சி துப்பிக்கினே கொள்ளிக்கு போய் காலைக்கடன் முடிந்து, வீட்டுக்கு வந்து குளித்து, முதுகில் உள்ள தண்ணீரை துடைக்காமல் சட்டை டவுசர் போட்டு, ஏன் முதுகு தண்ணியை துடைக்காம சட்டை போட்ட என்று திட்டி அம்மாவிடம் சவுக்கு மெளாறால் அடிவாங்கி தலையில் எண்ணெய் வைத்து படிய சீவி முன் பக்கம் கொஞ்சம் மோது வைத்து கண்ணாடி முன் சிங்கார் சாந்து பொட்டு எடுத்து நெற்றிக்கு நடுவில் சின்னதாய் ஒரு டாட் வைத்து அதற்கு மேல விபூதி சின்ன கீற்றாக பூசி ….
அப்பா சைக்கிளில் பள்ளிக்கு சென்று ஆடி பாடி ஓடி விழுந்து வீடு வந்து கை கால் அழுக்கு கலைந்து முகம் துடைந்து உடை மாற்றி அம்மா கொடுத்த மாலை ஸ்நாக்சை கடித்துக்கொண்டே லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் க ங ச படித்து தூங்கி காலையில் ஏழரை மணிக்கு திரும்ப அம்மா மூஞ்சில தண்ணி ஊத்தி எழுப்பி…
என்று என் பால்யகாலம் இப்படித்தான்… காலையில் கண்ணாடி பார்ப்பது பொட்டு ஒழுங்காக வைக்க வேண்டும் என்பதற்காக.. நான் படித்த ராமகிருஷ்ணா உதவி பெரும் நடுநிலைப்பள்ளியில் பொட்டும் விபூதியும் வைத்து செல்ல வேண்டும்..
இல்லையென்றால் கொட்டு விழும் என்பதால் கண்ணாடி பார்ப்பதுண்டு..
அதனால் எப்போதாவதுதான் கண்ணாடி பார்ப்பேன்..
அழகு என்பது மனது என்பது ஆணித்தரமான எனது நம்பிக்கை…
சில பேர் கண்ணாடி எதிரில் வாழ்வார்கள்…. தலையை கலைத்து திரும்ப வாரி கலைத்து திரும் வாரி என்று நமக்கு அந்த பிசினஸ் எப்பயுமே செட்டாகது..
முடியெல்லாம் கொட்டிய போது திருமணத்துக்கு முன் எனது நெருங்கிய நண்பர் கேட்டார்..
விக் வச்சிக்க வேண்டியதுதானே ஜாக்கி…
கண்ணாடி பார்க்கும் போது ஒரு மாதிரி இருக்காது.?
சிம்பிள்.. விக் வச்சி பந்தா பண்ணிட்டு அதை கழட்டி வேறு முகத்தை காட்டினா ஒரு போலித்தனம் இருக்கும் இல்லையா
I don’t like it என்றேன்.
எப்போதாவது பைவ் ஸ்டார் ஓட்டல்களுக்கு செல்லும் போது கண்ணாடி வம்படியாய் பார்பதுண்டு காரணம் கொஞ்சம் நீட்டாக இருந்தால்தான் மதிப்பார்கள் என்பதால்….
எட்டாவது படிக்கற வைரைக்கு அம்மா பவுடர் பூசி விடுவாங்க.. அதுக்கு பிறகு நான் பவுடர் பூசியதே இல்லை.. பாஸ் போர்ட் போட்டோ எடுக்க… கல்யாணத்துக்கு போகும் போது என்று ஒரு சில தருணங்கள்தான்..
முஞ்சிக்கு பிளிச் செஞ்சிக்கிட்டதே.. கல்யாணத்துக்கு ஒரு நாளு முன்னதான்..
என்ன சொல்ல வரேன்னா.. நான் கண்ணாடி பார்க்கும் வழக்கம் மிக மிக குறைவு என்பதே….
யாழினியும் நானும் அவள் அம்மாவை அழைத்து வர பெருங்குடியில் இருக்கும் அவர் அலுவலகத்தை நோக்கி மயிலையில் இருந்து பைக்கில் இரவு பத்து மணிக்கு புறப்பட்டோம்.
கிளம்பும் போதே இரண்டு நிமிடம் கண்ணாடிக்கு தின்னக்கொடுத்தாள்… மாற்றி மாற்றி தலை சீவினால் லூஸ் ஹேர் விட்டாள்…
அப்பா நல்லா இருக்கேனா?
நல்லா இருக்கடி…
எதுக்கு எப்ப பார்த்தாலும் கண்ணாடி பார்த்துக்கிட்டு இருக்கே..? என்றேன்..
அப்பா எப்பவுமே பிளசன்டா இருக்கனும்ன்னு மிஸ் சொல்லி இருக்காங்க...
ச்சே எந்த மிஸ்சம் எனக்கு அப்ப சொல்லிக்கொடுககலையே? அப்படியே சொன்னாலும் என்று மனது அதட்டியது...
சூர்ய குமாரன் போல ஜொலிச்சி இருப்பியோன்னு திரும்பவும் அதே மனது நக்கல் விட்டது...
மனதை அடக்கி அவளை பார்த்தேன்.
அப்பா என்னை பார்த்து சொல்லுங்க…
உன்னை பார்த்து என்ன… உன் கண்ணை பார்த்து கூட சொல்லறேன்…
You are looking good and gorgeous என்றேன்..
thank you da இது யாழினி.
சென்னை வாசிகள் அசதியில் உடை மாற்றி தூக்க செல்லும் நேரம் என்பதால் சாலையில் டிராபிக் மிக குறைவாக இருந்தது.
வண்டியை விரட்டினேன்..
வெள்ளிக்கிழமை சாம்பிராணி புகை போட்டு மயிலறகு விசிறியால் முகம் தலை வருடும் பாய் போல யாழினி தலை முடி என் முகத்தில் கோலம் போட்டது.
ஐந்து நிமிடம் அவள் அம்மா வருகைக்காக வெயிட் செய்தோம்..
அப்பா தலை கலைஞ்சி இருக்கா.?
சரியா இருக்கு..
பொய் சொல்றிங்க..
இல்லை சரியா இருக்கு…
ரிவர்யூ மிரர் திருப்பி முகம் பார்த்தால் அப்பா தலை கலைஞ்சி இருக்கு…
சூனிய காரி போல இருக்கேன். என்று செல்லமாய் சினுங்கினாள்…
யாழினிக்கு வயது 6
ஜாக்கிசேகர்
15/08/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.
hi man try to understand that YAZHINI will be spending more time in the future by frequently seeing in this face mirror......
ReplyDelete