மக்கு அப்பா




யாழினி எருமை 12 மணி வரைக்கு தூங்காம ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்க…. நாளைக்கு ஸ்கூலுக்கு போக எழுந்திருக்கும் போது ரொம்பவே படுத்துவ என்று கத்தினேன்..

மீண்டும் ஆட்டம் தொடங்கியது….

எனக்கு கோபம் தலைக்கேறியது…

பக்கத்தில் ஒரு காலி டம்ளர் இருந்தது… அதை கையில் எடுத்துக்கொண்டு யாழினியை பார்த்து தோ பார் யாழி.. இப்ப நீ தூங்கலை…??

இந்த டம்பளர் புல்லா தண்ணி இருக்கு… என்று டக் என்று பக்கத்தில் இருந்த சேர் மேல் வைத்தேன்… நாளைக்கு காலையில நீ எழுந்து இருக்கலை.. அவ்வளவுதான். இந்த புல் டம்ளர் தண்ணியையும் அப்படியே மூஞ்சில ஊத்தி நான் எழுப்பறேன் பார் என்று கோபமாக சொன்னேன்..

யாழினி சொன்னாள்..

அப்பா அந்த டம்பளர்ல தண்ணி இல்லை… அப்படி இருந்திச்சின்னா… சேர் மேல வைக்கும் போது டக்குன்னு கேக்காது… டொக்குன்னு கேட்கும்.. சோ அதுல தண்ணி இல்லை.

‘ அப்படியே தண்ணி இருந்தாலும் நீங்க வச்ச வேகத்துக்கு தண்ணி தெரிச்சி இருக்கும்… அப்படி எதுவும் இல்லை..
சோ எனக்கு எந்த பயமும் இல்லை என்று இரவு 12 மணி வரை மீண்டும் விளையாட ஆரம்பித்தாள்..

நான் உதாரணத்துக்குதான் சொன்னேன்..

ஆனால் அவள் லாஜிக்கா பிரிச்சி மேஞ்சது… சான்சே இல்லை..

இப்படி எல்லாம் பேச இவள்க எங்க கத்துக்கறாளுங்கன்னு தெரியலை…

நான் எல்லாம் ஆறு வயுசுல ஆய் வந்துடுச்சின்னு டீச்சர்க்கிட்டு சொல்ல பயந்துக்கினு டவுசர்ல ஆய் போய் வீட்டுல வந்து உதை வாங்கினவன்யா நான்…


எனக்கு இப்படி ஒரு பொண்ணு..


ஜாக்கிசேகர்


31/08/2016



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

5 comments:

  1. We should admit that this generation kids are smarter than any previous generation. Moreover, my understanding is you give her more space to learn and that's the reason. You were not a smart child in your age, but you are now a smart Appa.

    ReplyDelete
  2. Jackie

    If you ask your Dad he would be still worse than you.

    Every child is smarter than their parents.

    Have fun reading your keep it up.

    Regards
    Hari

    ReplyDelete
  3. hi man try to understand that the dull headed man too could have a smart daughter .......

    ReplyDelete
  4. குறள் 65
    மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

    குறள் 68
    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது



    VALLAVAR YEPPODHO SOLLIVITTAAR...

    ReplyDelete
  5. nice Jakie ,Best wishes for your daughter

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner