நவ் யூ சி மி
2
இப்ப நீ என்னை பாரு என்பதுதான் தமிழாக்கம்…அதை ஒரு மேஜிக்காரன்
சொன்னா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சி பாருங்க….
இந்த படத்தின்
முதல் பாகம்..2013 ஆம் ஆண்டு வெளியா‘கி பட்டையை
கிளப்பியது… நான்கு மேஜிக் நிபுனர்கள் ஒன்று சேர்ந்து பெரிய பண
பொக்கிஷத்தை எல்லோர் கண்களிலும் மெஜிக் செய்து அபிட் விடுகின்றார்கள் என்பதுதான்
கதை.
அந்த வெற்றி கொடுத்த இறுமாப்பில் இரண்டாம் பாகத்தில்
களம் இறங்கி இருக்கின்றார்கள்..
முதல் பாகத்தில்
நடித்த பெண் மெஜிஷியன் பிஷ்ஷர்க்கு பதில் லிசி
கேப்ளன் நடித்துள்ளார்…
இரண்டாம் பாகம் எப்படி என்று இப்போது பார்த்து விடுவோம்.?
முதல் பாகத்தை போல விறுவிறுப்புக்கு குறைவில்லை.
போர்ஹார்ஸ்மேன் நால்வருக்கு ஒரு வேலை வருகின்றது..
வேலையை கொடுப்பவன் வால்டர்…அதி முக்கியமான
தகவல் தொழில் நுட்ப டேட்டா கொண்ட சிப்பை அபிட்
விட்டு வர சொல்கிறான்..அது நாட்டின் பொருளாதாரத்தையே
கபளீகரம் செய்து விட செய்ய வல்லது.. இருந்தாலும் சில பல கமிட்மென்ட் மற்றும்
மிரட்டல் காரணமா அந்த வேலையை செய்ய
ஒப்புக்கொண்ட நால்வரும் எப்படி அதில் இருந்து
வெளியே வந்தார்கள் என்பதுதான் கதை…
========
நால்வருக்கும் சமமான வாய்ப்புகள் அதனால் அவர்கள்
திறமையை வெளிப்படுத்தும் போது பின்னனி இசையோடு
நாடும் சந்தோஷப்படுகின்றோம்…
முக்கியமாக முதல்
முறையாக அவர்கள் திறமை வெளிப்படுத்தும் இடமாகட்டும்.. அதே போல இன்டர்வல் பிளாக்கின்
போது சிப்பை அடித்து வரும் சீன்ஸ் மற்றும்
கிளைமாக்ஸ் காட்சிகள் அசத்தல் மேக்கிங்.
இது போன்ற படங்களில்
முதலில் நால்வர் திறமையை வெளிக்கொண்டு வந்து இண்டவெல்லில் இவர்கள் அசாத்திய திறமையை
நிருபிக்க… அதை விட வில்லன் இவர்களை விட மிக திறமையாக ஒரு வேலையை செய்து இவர்களை வலையில் சிக்க வைப்பான்…
கடைசியில் வில்லனுக்கு கல்த்தா எப்படி திறமையாக கொடுக்கின்றார்கள் என்பதுதான் இது போன்ற ஸ்பிரிப்ட்டின் அடிநாதம்..
வால்டர் என்ற வில்லன்
கதாபாத்திரத்தில் ஹாரிபாட்டர் ஹீரோ டேனியல் ரெட்கிளிப் நடித்து அசத்தி இருக்கின்றார்…
கிளைமாக்ஸ் காட்சி
அசத்தல் ரகம்..
ஓஷன் லெவன் பார்ட்
பார்த்தவர்களுக்கு இந்த திரைப்படம் ஓகே ரகம் என்றாலும் பின்னனி இசையும் அசத்தலான ஒளிப்பதிவும்
படத்துக்கு பெரிய பலம்.
பிஷ்ஷர் ஏன் நடிக்க
வில்லை என்றால் அவர் மாசமாக இருக்கின்றார்
அதனால் இந்த பார்ட்டில் நடிக்கவில்லை.. அவருக்கு பதில் லிசி கேப்ளன் நடித்துள்ளார். அவரை எங்கேயோ பார்த்து இருக்கின்றோமே என்று நனைத்தால்
கேட் வின்செல்ட் கொஞ்சமும் வரலட்சுமி சரத்குமார் மீதியை மிக்சியில் போட்டு ஆட்டி எடுத்தது போல இருக்கின்றார்..
இந்த படத்தை ஜான்
எச்சூ சுவாரஸ்யமாக இயக்கியுள்ளார்…
ஆக்ஷன் மற்றும்
திரில்லர் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வீணாக்காது என்று உத்ரவாதம் தருகின்றேன்.
இந்த படத்துக்கு ஜாக்கிசினிமாஸ் அளிக்கும் மிதிப்பெண்
ஐந்துக்கு மூன்று..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
21/06/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

super movie jackie sir !!...
ReplyDelete