APPA ( 2016 ) tamil movie review | சமுத்திரகனியின் அப்பா திரைவிமர்சனம்




அப்பா திரை விமர்சனம்…
==============
உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல…
உங்கள் பிள்ளைககள் உங்கள் பிள்ளைகள் அல்ல…
அவர்கள் அவர்களுடைய  வாழ்க்கையை வாழ வந்தவர்கள்.
உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள்  அல்ல

                          கலீல் ஜிப்ரான்.
எழுதிய இந்த வரியை முன் வைத்துதான்  அப்பா  திரைப்படத்தை சமுத்திரகனி  எடுத்து இருக்கின்றார்

=====
அப்பா திரைப்டபத்தின் கதை என்ன?
 மூன்று  அப்பாக்கள்  தங்கள் பிள்ளைகளை எப்படி புரிந்துகொள்கின்றார்கள் என்பதையும் அவர்களின்   பிள்ளைகள்  வாழ்வில் எப்படியான  தாக்க்ததை அவர்களுடைய அப்பாக்கள் ஏற்படுத்துகின்றார்கள் என்பதை பிரச்சார நெடியோடும் வாழ்வியல் எதார்த்தங்களையும்  35 எம் எம்   திரைப்பட  பார்மெட்டில் பதிவு  செய்துள்ளார்.
===.

.படத்தின் சுவாரஸ்யங்கள்.

சமுத்திரகனி அப்பா நடித்ததோடு எழுதி இயக்கி இருக்கின்றார். ஒரு நல்ல அப்பா  எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணத்துக்கு வாழ்ந்துள்ளார்.
வயதுக்கு வந்த  பிள்ளையிடம் இது உன் வாழ்க்கை…வாழ்க்கையில எதை செய்யனும்ன்னு நினைக்கிறியோ? அதை செய் அதே போல எதையெல்லாம் என்கிட்ட பகிர்ந்துக்க முடியுமோ… அதை செய்.. அப்பாக்கிட்ட பகிர்ந்துக்க முடியாத விஷயத்தை தயவு செய்து செய்யாமே என்று பதிவு செய்யும்  காட்சி அருமை.


 தம்பி ராமைய்யா.. பிள்ளையை படிக்கும்  மெஷினாக  பாவிக்கும்  ஒரு அப்பா.. நிறைய இடத்தில் இயல்பு தன்மையை மீறி நடித்து இருப்பது போல  அவர் நடித்த காட்சிகள் இருக்கின்றது.


நாமக்கல் கல்வி கூடங்களை ஒரு பிடி பிடித்துள்ளார்.. அதில்  நிறைய உண்மைகளை போகிற போக்கில்   மிக ஆழமாக பதிவு செய்துள்ளார்.
மனைவி பிரிந்து போய் திரும்ப வந்துவுடன்… அவள் வீட்டில் இயல்பாய் மாற அவர் கொடுக்கும் அந்த ஸ்பேஸ் நல்ல ரசனை.


அதே போல வீட்டில் வாழவெட்டியாக போன என்னமாதிரி சொந்த வீட்டில் நடத்துவார்கள்  என்பதை வேல ராமமூர்த்தி சொல்லும் காட்சிகள் வாழ்வியல் எதார்த்தம்.


 ரிச்சர் எம் நாதனின் ஒளிப்பதிவில் நெய்வேலியின்  நேர்க்கோட்டான சாலைகள்  மழை நேர அழகில் பதிவு செய்து அசத்தி இருக்கின்றார்கள்.

.
இளையராஜா ஏமாற்றி விட்டார் என்றே சொல்ல வேண்டும். 
அந்தமானுக்கு செல்லும் போதும் சரி பச்ங்க  இங்க விளையாடும் போதும் சரி… ஒரே மாதிரியான பின்னனி இசை..

ஒரு திரைப்படம் ஒரு சப்ஜெக்ட்டை பற்றி பேசும் போதும் பிரச்சார நெடி  தூக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இந்த படத்தில் பிரச்சார நெடி அதிகம்… நல்ல கருத்துகளை  சொன்னாலும்  அது டாக்குமென்ட்ரி வடிவில் இருந்தால்  யாரும் ரசிக்க முடியாது அல்லவா- ஆனாலும் நான் படத்தில் நான் ரசித்த விஷயம் மெச்சூர்டான டயலாக்குகள்.

இப்படியான கருத்துக்களை வெகுஜன சினிமாவில் பதிந்தமைக்கு சமுத்திரகனிக்கு வாழ்த்துகள் அதே வேளையில் ஒரு திரைப்படம் கருத்துக்களை மட்டுமே முன்னிலை படுத்தி திரைக்கதையில் சுவாரஸ்யம் குறையும் போது அது விழலுக்கு இறைத்த நீராகவே போய் விடும்…


இருப்பினும் பிள்ளைகள் மற்றும் அப்பாக்கள் இந்த திரைப்படத்தை ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.

இந்த திரைப்படத்துக்கு ஜாக்கிசினிமாஸ் அளிக்கும் மதிப்பெண்
ஐந்துக்கு மூன்று.
ஜாக்கிசேகர்

01/07/2016





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner