நிறைய இடங்களில் பெண் பார்த்தோம்… ஆனாலும் திருமணம் தகையவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்தே போனோனம்…
இயக்குநர் கவுதம்மேனன் ஒரு பெண்ணை காதலித்தார் ஆனால் அவருக்கு அந்த காதல் கை கூடவில்லை… ஆனாலும் அவரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் அவருக்கு ஒரு பெண் நண்பி இருந்தார்.. கவுதமின் ஏற்ற தாழ்வுகளிலும் இன்ப துன்பங்களிலும் அவர் உடன் இருந்தார்
இன்பேக்ட் கவுதமின் காதல் தோல்வியில் மிகப்பெரிய ஆதரவாய் அவரின் தோழி கவுதமோடு இருந்தார். ஒரு கட்டத்தில் அவரின் உற்ற தோழியான அவரையே திருமணம் செய்து கொண்டார்.
அது போலத்தான் என் மச்சானின் வாழ்விலும்….. அவன் வாழ்வில் பதினோரு வருடமாக அவனோடு பயணித்த தோழி பவுசியா நுத்ரத்தை கடந்த வாரம் பதிவு திருமணம் செய்து கொண்டான்…
ஆஹா கல்யாணத்தில் ஒரு காட்சி வரும் காதல் வயப்பட்ட வாணிகப்பூரிடம் அவரின் அம்மா கேட்பார்…
சக்தியை கல்யாணம் பண்ணிக்கி போறியா என்றதும்.. அம்மா அவன் என் பெஸ்ட் பிரண்ட் அம்மா என்பார்…
அதற்கு அவர் அம்மா சொல்வார்… என்னடி உங்க கான்சப்ட்டே புரியலை … கல்யாணம் பண்ணிக்க போறவன் பிரண்டா இருக்கனும்னு சொல்றிங்க… ஆனா பிரண்டையே கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா… அவன் என் பிரண்டுன்னு சொல்றிங்க…? ஏன் இப்படி கொழப்பறிங்க என்று ஒரு டயலாக் இருக்கும்..
என் தோழியை நான் திருமணம் செய்துகொண்டேன்… நண்பர்களில் திருணமம் என்ற ஸ்பெசில் தோழனையோ தோழியையோ அனுமதிக்கலாம் என்ற கட்டத்தை இவரும் பரஸ்பரம் வரும் போது அது நன்கு வரும் என்பது என் எண்ணம்.
அவனின் தோழியை நான் நன்கு அறிவேன் நல்ல பெண்… மரியாதையான பெண்… எந்த இடத்திலும் சிறு செருக்கும் நான் கண்டதில்லை…அவள் பொசிஷனில் அவள் நிறையவே அலட்டலாம் ஆனால் அவள் அலட்டியதில்லை. அதனாலே இது சாத்தியமானது.
அதை விட அவளின் உறவுகள் நேசமான மனிதர்கள்.
அவன் வாழ்வில் எடுத்து இருக்கும் மிக முக்கியமான முடிவு இது…. இது ஒன்றும் புதிது இல்லை என்றாலும் நிறைய விட்டுக்கொடுத்தலும் பரஸ்பரம் புரிதல் நிறைய வேண்டும்.. அவர்களுக்கு அந்த மனபலம் வேண்டும் என்பதே என் வேண்டுகோளாய் அவர்களிடத்தில் வைத்தேன்.
கடந்த ஞாயிற்றுகிழமை மிக சிறப்பாக பெங்களூர் மாரத்தள்ளி அருகே இருக்கும் டெம்பிள் டிரீ லேஷரில் திருமண வரவேற்பு நடைபெற்றது…
பெங்களூருவில் போனில் சொன்னாலே நேரில் வந்து வாழ்த்தும் நண்பர்களை மட்டும் அழைத்தேன்.. கையில் காசு இல்லை என்றாலும் கடந்த ஒரு மாதமாக கல்யாண வேலைகளுக்காக அலைந்துக்கொண்டு இருந்தேன்…
காரணம் அவன் சார்பாய் பெண்ணின் குடும்பத்தில் போய் நானும் அவளனின் அக்காளும்தான் பேசினோம் ….அதனாலே பொறுப்பு அதிகம்…. அதனால் முக நூலில் கூட பெரிதாய் ஏதும் எழுதி பகிரவில்லை… ஒரு மாதமாக கல்யாண வேலைதான்…
வாட்சப்பில் வந்த எந்த செய்தியையும் வாசிக்கவில்லை.. டுவிட்டர் பக்கம் தலைவைத்து கூட படுக்கவில்லை…
பத்தாம் வகுப்பு படிக்கும் போது கோட் அணிந்து போட்டோ எடுத்ததோடு சரி.. என் கல்யாணத்துக்குகூட நான் கோட் அணியவில்லை.. என் மனைவி மற்றும் மச்சானின் கோரிக்கை ஏற்று கோட் அணிந்த கல்யாணம் இதுதான். அதே போல படம் பார்த்து டிவி பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகின்றது.
கடந்த வாரங்கள் நிறைய மகிழ்வான தருணங்கள்… அந்த தருணங்கள் எங்கள் வாழ்வில் என்றும் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல பரம்பொருளை நீங்கள் வேண்டிக்கொண்டு மணமக்களை மனப்பூர்வமாய் வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்….
ஜாக்கிசேகர்
22/11/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment