
இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்ல கார்டுல தேய்க்கறவனே கதி கலங்கி போய் இருக்கான் என்பதுதான் நிதர்சனம். நிறைய விஷயத்துக்கு கேஷ் தேவைப்படும்.. அதனால் பர்சேஸ் போய் கார்ட் ஒர்க் ஆகாம கைல வச்சி இருக்கற கேஷ் செலவு பண்ணக்கூடாதுன்னு தெளிவா இருக்கான்..
அதனால... மோஸ்ட்லி வெளித்தெருவுல அலையறதில்லை..திநகர் சரவணா ஸ்டோர் பிரமாண்டமாய் துணிக்கடையில்... சாதாரண நாட்ககளில் கடை திறந்ததுமே கூட்டம் அள்ளும்... கடை வாசலில் இருக்கும் வணக்கம் வைக்கும் அழகு பெண்களின் கைகள் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருந்தன. நேற்று திநகர் காலியாகவே இருந்தது... ரங்கநாதன் தெரு பரபரப்பில்லாமல் இருந்தது...சென்னை முழுவதும் அப்படித்தான்... எடிஎம் வாசலில் இன்னமும் கூட்டம் அலை மோதிக்கொண்டு இருந்தது...வழக்கத்துக்கு மாறாய் போலிஸ் நிறைய இடங்களில் பார்க்க முடிகின்றது... சாலையில் ஒரு இடத்தில் டிராபிக் ஜாம் ஆகின்றது என்றால்... அங்கே நிச்சயம்... பேங்க் அல்லது ஏடிஎம் இருக்க வேண்டும் என்பதை மனதில் மிகச்சரியாக சீவல்புரி சிங்காரம் போல கணிக்க முடிகின்றது..எல்லா இடத்திலும் 500, ஆயிரம் பணப் பிரச்சனையில் வியாபரம் டல்தான்..இரவு பதினோரு மணிக்கு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தேன்...மயிலை அருன்டேல் தெருவில் வலம்புரி விநாயகர் கோவில் வாசலில் பூவிற்கும் பாட்டி பூத்த பூவுடன் யாராவது பூ வாங்கி விட மாட்டார்களா ? என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார்....எத்தனை மணிக்கு கடைகட்டி இருப்பார் என்று தெரியவில்லை.சர்ஜிக்கல் ஸ்டைரைக் என்பது இலக்கை மிகச்சரியாக தாக்குவது என்பது...இந்த இலக்கில் அன்னாடம்காச்சிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்... அப்புறம் இனி வரும் வரிகள்... மோடிக்கு முட்டு கொடுக்கும் நண்பர்களுக்காக... நல்ல திட்டம் இது.....நாட்டு மக்கள் இந்த இழப்பை தாங்கியே ஆக வேண்டும் நாட்டுக்காக ,130 கோடி பேர் நல்லா இருக்க 20 கோடி பேர் செத்து போனாதான் என்ன?என்கிட்ட தான் டெபிட் கார்ட் கிரெடிட் கார்டு இருக்கின்றதே....இந்திய பொருளாதார முன்னேற்றத்துக்கு தன் வாழ்க்கையையே பணயம் வைத்த மோடி நாமம் வாழ்க.... அண்ணா நாமம் வாழ்க புரட்சிதைலைவி ச்சே புரட்சிதலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க.
ஜாக்கிசேகர்16/11/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
0 comments:
Post a Comment