வாழ்த்துகள் முரளி மச்சி.




உங்கள் பால்ய கால நண்பன் என்று யாரை சொல்லுவீர்கள்… ஒரு சிலர் ஒரு பெரிய பட்டியலே வாசிப்பார்கள்…



ஆனாலும் அன்றும் இன்றும் எனக்கு ஒரு சிலர் மட்டுமே.. காரணம் என் அலைவரிசையோடு பயணிப்பது மிக கடினம்… இதே போல பூனை போல நண்பர்களை நான் தான் தேர்ந்து எடுப்பேன்..

என்னுடைய பால்ய நண்பர்கள் என்று பட்டியல் இட்டால் வரும் ஒரு சிலரில் முதன்மையானவன் முரளிதரன்தான்.

என் அத்தை பையன்… என் அத்தைக்கு மூன்று பிள்ளைகள் அதில் இவன் நட்ட நடு சென்டர். என்னை விட மூன்று மாதங்கள் பெரியவன்…என் வாழ்வில் கால் பகுதி வருடங்கள் அவனோடு கழித்து இருக்கின்றேன்.
அத்தை வீட்டில் விசேஷம் என்றால் பாலகாரங்களை ஆள் வைத்து செய்து அதனை பெரிய பெரிய எவர்சில்வர் டிரம்மில் அடுக்கி வைத்து விடுவார்கள்..நாங்கள் விளையாடும் போது பந்தி பறிமாறுதல் போல ஒரு விளையாட்டு நடக்கும் அப்போது முரளி டிரம்மில் இருக்கும் மைசூர் பார்க்கு, ஜிலேபி, காரசேவ் போன்றவற்றை எடுத்து வந்து பறிமாறுவான்… அதனாலே அந்த வயதில் அவனை ரொம்ப பிடிக்கும் சிலர் சீன் போடுவார்கள்… இல்லையா? அன்றில் இருந்து இன்று வரை அப்படி எந்த சீனையும் போட்டதேயில்லை,…
விளாம்பழம் எடுப்பதில் இருந்து எலந்தபழம் புளியம் பழம் என்று எதையும் விட்டு வைக்காமல் நானும் அவனும் பயணித்த கணங்கள் நிறைய… ஜோப்பியில் மிட்டாய் வைத்துக்கொண்டு தூங்கி இரவில் எறும்புறிய கணங்களும் என் நினைவுகளில் பத்து பைசா கிடைத்தால் முதலில் பெட்டிக்கடையில் உண்டை கட்டுவது அவனுக்கு பிடித்த செயல்...

எட்டு வருடங்கள் கழித்து ஒரே பள்ளி.. ஒரே மாதிரி ஒன்பதாவது பெயில்… வாத்தியாரை பார்த்தால் ரெண்டு பேரும் மிரளுவோம்.திருப்பாதிரிபுலியூர் புனித வளனார் பள்ளில் ஒன்பதாவது படித்த போது பரிட்டை முடிந்து வீட்டுக்கு போகாமல் அனை மோடு என்று அழைக்கப்படும் கெடிலம் ரயில் பாலத்தில் நடந்து சென்று நடு பாலத்தில் இருந்து மணல் இருக்கும் இடத்தில் குதித்தேன்… எப்படியும் அது 20 அடி உயரம்… அதில் இருந்து நான் முதலில் மணல் பகுதியில் குதித்தேன்.. குதித்த வேகத்தில் பின்பக்கம் தரையில் வேகமாக மோத மேல இருந்து என்னடா ஆச்சி என்று கத்திக்கொண்டு இருந்தான்…குதிக்க வேண்டாம் என்று சைகை செய்ய அவன் குதிக்கவில்லை..

பத்தாம் வகுப்பு டியுஷனுக்கு விடியற்காலை நாலு மணிக்கு எழுந்து நியுசிலாந்து இந்தியா மேச் பார்த்து விட்டு குளிரில் விடியலும் வியர்க்க விறுவிறுக்க அவசரம் அவசரமாக டியூஷன் சென்றது மறக்க முடியாத கணங்கள்.

,இன்று வேண்டுமானால் வித விதமான காரில் செல்ல முடிகின்றது.. ஆனால் 1988 முதல் 98 வரை அவன் வீட்டு சைக்கிளில் இருந்து டிவிஎஸ் 50 வரை நான் எடுத்து செல்லாத நாட்களே இல்லை.. ஒரு போதும் என்னை கடிந்து பேசியதில்லை… என் மீது கோவமே இருந்தாலும் வெளிக்காட்டிக்கொண்டதில்லை…

வீட்டினை அப்படி பார்த்துக்கொள்வான்.. சின்ன சின்ன எலெக்ட்ரிக் வேலையில் இருந்து பிளம்பிங் வரை அவனே பார்த்துக்கொள்வான்..

எங்கள் வீட்டு எந்த விசேஷத்திலும் ஒரு நாளும் முதல் பந்தியில் உட்கார்ந்து அவன் சாப்பிட்டதில்லை… வியர்வை வழிய வழிய சாம்பார் வாளியோடு பந்தி பந்தியாக சுற்றி வருவான்.. எல்லாரும் சாப்பிடுவதை பார்த்து விட்டு சாப்பிடுவது அவன் வழக்கம்… அது சின்ன வயதில் இருந்து அப்படியே….

சில மாதங்களுக்கு முன் அத்தை பையன் பிரபு திருமண நிச்சயதார்த்தத்தில் இரண்டு பேரும் ரொம்ப நாட்கள் கழித்து கல்யாண பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டோம்..சின்ன வயதில் எப்படி ருசித்து சாப்பிட்டானோ.. அதே போலத்தான் இன்றும்.அவன் முகத்தில் உச்சக்கட்ட சந்தோஷம் என்று நான் பார்த்தேன் என்றால்… கலைஞரை பார்க்க வேண்டும் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவனின் நெடுநாள் ஆசை…தம்பியண்ணன் அப்துல்லா மூலமாக கலைஞரை பார்க்க அழைத்து சென்றேன்…

கலைஞரை பார்த்து அவரோடு ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு கோபாலபுரத்து வீட்டு வாசலில் ஒரு நிம்மதி சந்தோஷத்தை அவன் முகத்தில் அன்றுதான் கண்டேன்.
இந்த கட்டுரை எழுதும் போது கூட என்றாவது நாங்கள் இரண்டு பேரும் சண்டை போட்டோமா என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்… அப்படி ஏதும் நடந்ததாய் தெரியவில்லை…கலைவாணி என்ற அழகான மனைவி என்னை போலவே அவனுக்கும் ஒரே ஒரே பெண்குழந்தை பெயர் இந்துமதி டைமிங்கில் கமென்ட் அடித்து காமெடி பண்ணுவது அவனது சுபாவம்…. சில நேரங்கள் செமையாக இருக்கும்..

என் அத்தை ஒரு உலகத்தில் வாழ்ந்தார்… அந்த உலகமே சிறந்த உலகம் என்று நம்பினார்.. பிள்ளைகளையும் அப்படியே வளர்ந்தார்கள்… என்னை போல அவனும் சுதந்திர காற்றை சுவாசித்த படி சிறகடித்து பறந்து இருப்பின் அவன் வாழ்வில் மிகப்பெரிய உயரம் தொட்டு இருப்பான் என்பது எனது நம்பிக்கை..

எனது பால்ய கால நண்பனும் சமீபகாலங்களில் செல்லமாக மச்சி என்று அழைக்கும் முரளிதரனுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்… இன்னும் அவன் மென்மேலும் வாழ்வில் வெற்றியும் சந்தோஷ கணங்களை அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்திக்கிறேன்.



ஜாக்கிசேகர்24/11/2016Murali Dharan


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...


0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner