திருமணத்துக்கு
பிறகு அமலாபால் ஆக்ஷன் கட் இரைச்சலில் இருந்து விலகி இருப்பார் என்று பார்த்தால்…முன்னிலும்
அதிக வேகத்துடன் களம் இறங்கி இருக்கின்றார்… சிறப்பான பாத்திரங்களை ஏற்று செய்வதோடு தன் தனித்தன்மையையும் நிருபிக்கி போராடுகின்றார்…
அதற்காகாவே அவருக்கு ஜாக்கி சினிமாஸ் வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.
தனுஷ்க்கு எப்படி
படம் பண்ண வேண்டும்? எப்படி முதலீடு செய்து
வெற்றி பெற வேண்டும்? எப்படி வோண்டர்பார் நிறுவனத்தின் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்?
எப்படி குறைவான பட்ஜெட்டில் படம் எடுத்து நல்ல பெயரை எப்படி எடுக்க வேண்டும் என்ற வித்தை அவருக்கு கை வருகின்றது…
இந்த படமும் அதற்கு விதிவிலக்கில்லை.
======
அம்மா கணக்கு திரைப்படத்தின்
கதை என்ன?
கணவனை இழந்த அமலா
பால் வீட்டு வேலை செய்து தன் மகளை படிக்க வைக்கின்றார்…
மகளுக்கு படிப்பின் மேல் கவனம் இல்லை..எதிர்காலம் குறித்த பயம் இல்லை.. தன் மகளுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தையும் எதிர்காலம் குறித்த பயத்தையும் எப்படி ஏற்ப்படுத்துகின்றாள் என்பதுதான் அம்மா கணக்கு திரைப்படத்தின் கதை.
===
படத்தின் சுவாரஸ்யங்கள்.
அமலாபால் அசத்துகின்றார்…
சங்கரன் வீட்டில் வேலை செய்வதை விடுங்கள்.
மீன் மார்கெட்டில் ஒரு ஆணின் அழுக்கு சட்டையை அணிந்துக்கொண்டு மீன் சுத்தப்படுத்தும்
இடத்தில் ஒரு நடிகையாக கவனம் ஈர்கின்றார்.. அதை விட புரிந்துக்கொள்ளாத தன் மகளின்
நடத்தை குறித்து கவலை கொள்ளும் காட்சிகளில்
உணர்வுகளை வெளிப்படுத்தி பின்னுகின்றார்.
அமலாபாலின் மகளாக நடித்த பெண்ணும் சிறப்பாக நடித்துள்ளார்.. அம்மா
வைத்த பணத்தை எடுத்து விட்டு இப்பதான் கணக்கு நேராச்சி என்று சொல்லும் அந்த வில்லத்தனமும்..
தன்னை விட்டு நண்பர் விலகியதும் வரும் கோபமும் உணர்வாய் வெளிப்படுத்தியுள்ளார்.
சமுத்திரகனி போல
அரசு பள்ளி ஆசிரியர்களை நான் அறிவேன். இருப்பினும் ஒரு கட்டத்திற்கு மேல் அது மிக செயற்கையாய் இருந்தது அயற்சியை
கொடுத்தது என்பதே உண்மை.
ரேவதி..
கிளாசான நடிப்பு… சங்கரன் பேமிலியை கண் முன் நிறுத்தினார்கள்.. இந்து பேப்பர்
படிப்பது… இன்னைக்கு என்ன சமையல் செய்து வாய்க்கு ருசியாக செய்து சாப்பிடலாம் என்று காலையிலேயே யோசிப்பது என்று டிபிக்கல்
சங்கரன் பேமிலியை கண் முன் நிறுத்தி இருந்தார்கள்.
இளையராஜா பின்னனி
இசை படத்துக்கு பலம் என்றாலும் 1990களில் வந்த டிவி சிரியல் பாடலை ஒரு பாடல் நினைவு படுத்துகின்றது. வானம் தொடதா மேகம் தழுவ தழுவ பாடலை
பேக்ரவுண்ட் ஸ்கோராக மாற்றி இருப்பது அசத்தல்.
கவேமிக் யூ அரியின்
ஒளிப்பதிவு சென்னையின் அழகை கண் முன் நிறுத்துகின்றது… காலையில் வீட்டில் டிராவல் அகும் கேமரா அமலாபால் எழுந்து வெளியே வர பளிச் என்று அப்பரேச்சர் அதிகப்படுத்தி அசத்தி இருக்கின்றார்கள்/
ராஜா முகமதுவின்
எடிட்டிங் படத்தை ரசிக்க வைக்கின்றது.
ஒன்னு தலையெழுத்து
நல்ல இருக்கனும் இல்லை உழைச்சி முன்னேறனும் இது ரெண்டுதான் முன்னேற்றத்துக்கு வழி என்று ரேவதி பேசும் வசனம் கிளாஸ்
அமலா பால் அழகான
விடோயராக இருந்தும் அவர் மீது அவரும் பாலியல்
சீண்டல் கொடுக்காதது போல காட்சி அமைத்தமைக்கே இயக்குனருக்கு ஸ்பெஷல் பொக்கே.
அதே போல கணக்கை
எளிமையாக புரிந்துகொள்ளகூடிய வழிகள் சுவாரஸ்யம்.
இருந்தாலும் சுவாரஸ்யான
காட்சிகள் மட்டும் இடைவேளைக்கு பின் இருந்து இருந்தால் படம் வெறு இடத்துக்கு சென்று
இருக்கும் இருப்பினும் அம்மா கணக்கு அவ்வளவு பழுதில்லை.
ஜாக்கிசினிமாஸ்
மதிப்பெண்
ஐந்துக்கு மூன்று.,
இந்த திரைப்படம்
கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment