நேற்று இரவு பெங்களுருவில் இருந்து நான், மனைவி, யாழினி ஆல்ட்டோ காரில் வந்துக்கொண்டு இருந்தோம் யாழினி பின்னால் தூங்கி கொண்டு இருந்தாள்.. கார் முழுவதும் பொருட்கள்… கேமரா, லைட், லேப்டாப் என்று சகலமும் இருந்தன சுருங்க சொன்னால் புல்லி லோடேட்.
ஸ்ரீ பெரும்பதூர் முன்னே ஒரு மாருதி ரிட்ஸ் நின்று கொண்டு இருந்தது.. பக்கத்தில் ஒரு பைக் மற்றும் சில இளைஞர்கள் நின்று கொண்டு ஆம்புலன்சுக்கு போன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.. யாரோ அடிப்பட்டு விட்டார்கள் என்பது தெரிந்து காரை ஓரம் கட்டி நிறுத்தினேன்.
இறங்கி சென்று பார்த்தேன்.. 25 வயது மதிக்கத்தக்க பெண் விபத்தில் சிக்கி இருந்தார்… தலையில் இருந்து ரத்தம் வழிந்துக்கொண்டு இருந்தது… காலில் மூட்டியில் பெரிய காயம் அதில் இருந்தும் ரத்தம் வழிய ஆரம்பித்து… உதடு வீங்கி இருந்தது….நான் முதலில் ரிட்ஸ் இடித்து விட்டதாகவே நினைத்தேன்… ஆனால் அவர்கள் என்னை போன்ற வழி போக்கர்கள் உதவி செய்துக்கொண்டு இருந்தார்கள்..
நண்பர்கள் என்று சொன்னார்கள் நம்பினோம்….. இருவரும் சென்னையில் ஒரே அலுவலகம்… காஞ்சிபுரம் காமாட்சி கோவிலுக்கு சென்று விட்டு சென்னை திரும்பிக்கொண்டு இருந்த போது இருட்டில் திடிர் என்று ஆரம்பிக்கும் மீடியனில் பைக்கை விட்டு பெண் மீடியனில் விழுந்து தலையில் நான்கு இன்ச் அளவுக்கு வெட்டு….இரண்டு இன்ச் அளவுக்கு நெற்றியில் பள்ளமமான காயம் ரத்தம் நிற்காமல் வழிந்துக்கொண்டு இருந்தது..
பையனுக்கு பெரியதாய் அடி இல்லை.
ஆம்புலன்சுக்கு போன் செய்து அது வருவதற்குள் அந்த பெண்ணின் உடல் நிலை இன்னும் மோசமாக போய் விட்டால்..? எனக்கு அப்படியே விட்டு விட்டு செல்ல மனது கேட்கவில்லை… அதை விட மோசமாக கால் கை உடைந்து இருந்தால் எனது குட்டி காரில் ஏற்றி செல்ல முடியாது… காரணம் ஸ்டெச்சரில் மட்டுமே படுக்க வைத்தால் மட்டுமே சரியாக இருக்கும்… தலையிலும் காலிலும் மட்டும் ரத்தம் வழிந்துக்கொண்டு இருந்தது…
அந்த பெண்ணின் சுடிதார் ஷால் முழுக்க ரத்தம் சொத சொத என்று நனைந்துக்கொண்டு இருக்க…
யாழினியை எழுப்பி… மனைவியை பின்னால் உட்கார செய்து… பொருட்களை எடுத்து இடம் ஏற்படுத்தி அந்த பெண்ணை முன்னால் சீட்டில் உட்கார வைத்து அந்த பையனை பின்னால் உட்காரை செய்து தலையில் வழியும் ரத்தத்தை மேலும் கசியாமல் ஷாலால் அழுத்தி பிடித்துக்கொள்ள சொன்னேன்.
ரிட்ஸ் காரில் வந்தவர்களில் ஒருவர் அந்த பையனின் பைக்கை எடுத்தக்கொண்டு காரில் பறந்தோம்…
காரில் ஏறியதும் அந்த பெண்ணுக்கு காதில் ரத்தம் வருகின்றதா என்று என் மனைவி செக் செய்தார்.. யாழினி தூக்கத்தில் எழுந்த காரணத்தால் யாழினி மிரண்டு போய் இருந்தாள்…
சுங்குவார் சத்திரத்தில் ஒரு மருத்தவமனைக்கு தேடி சென்றோம்.. தேவி மருத்துவமனை… அதில்இருந்த மருத்துவர்… ஆழமான காயம் ரத்தம் வடியாத படி காயத்தில் பஞ்சை அழுத்தி தண்டலத்தில் இருக்கும் சவிதா மெடிக்கல் காலேஜிக்கு அழைத்து செல்ல சொன்னார்… காரணம் உள்ளே ஒரு தையல் அதற்கு மேல் ஒரு தையல் போடுவார்கள் என்பதோடு உடனே தலையை எக்ஸ்ரே எடுத்து உடனடி வைத்தியம் செய்ய சரியான இடம் அதுதான் என்று பரிந்துரைத்தார்…
அந்த பெண்ணுக்கு காதில் ரத்தம்வரவில்லை… வாமிட் இல்லை..தலையிலும் முட்டியிலும் ரத்தம் நிறைய சேதம்… கிழந்த சுடிதாரையும் மீறி ரத்தம் வழிய ஆரம்பிக்க அந்த பெண் மிரண்டு போனார்.. என் மனைவி அவரிடம் பேசியபடி ஆறுதல் சொல்லிக்கொண்டு வந்தார்..
வலியில் துடித்து அந்த பெண்ணின் உதடு துடிக்க ஆரம்பித்தது.
புயல் போல பறந்து தண்டலம் சவீதாவில் சேர்த்தோம்… மூன்றுக்கு நான்கு டாக்டர்கள் ஓடி வந்து முதலுதவியை ஆரம்பித்தார்கள்… அந்த இளம் பெண்ணின் முன் பக்க தலையை சிரைக்க ஆரம்பித்தார்கள்… சுடிதார் பேண்ட்டை தொடையில் இருந்து கால் வரை கிழித்து மூட்டியில் வழிந்த ரத்த காயம் மற்றும் இன்ன பிற சிராய்ப்புகளை டெட்டால் தடவப்பட்ட பஞ்சால் துடைக்க ஆரம்பித்தார்கள்..
பெண்ணை பார்க்கையில் ஏழை பெண் என்று தெரிந்தது.. அவள் உடையை மருத்துவர்கள் கிழித்ததுமே என் மனைவி ஓடிப்போய் அவளுடைய டிரஸ் பேகில் இருந்து ஒரு செட் சுடிதார் உடையை எடுத்து வந்து கொடுத்தாள்…
அந்த பெண் என் மனைவி கை பிடித்து நன்றி சொன்னார்…டிரஸ் கொடுத்ததற்கு நன்றி என்றார்.
பைக்கை ஓட்டி வந்த நண்பர் மற்றும் அவர் நண்பர்களும் காரோடு வந்து உதவி செய்தார்கள் அது மட்டுமல்ல… முதல் கட்ட மருந்துகளை வாங்கி கொடுத்தவர்களும் அவர்களே…
அவர்கள் எனக்கு நன்றி தெரிவித்தார்கள். நான் அவர்களுக்கு நன்றி சொன்னேன்… விசாரித்த போது செய்திதாள் என்ற தலைப்பில் வளர்ந்து வரும் தமிழ் திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதாகவும் தனது பெயர் சதன் என்று தெரிவத்தார்… குமரேசன் பீஆர்ஓ எங்கள் குடும்ப நண்பர் என்று சொன்னார்…
சென்னையில் சந்திப்பதாக சொல்லி வாழ்த்து சொல்லி பிரிந்தோம்..
அடிபட்ட பெண்ணின் நண்பரிடம் பைக்கை ஒப்படைத்துவிட்டு கிளம்பினோம்..
இரவு பத்து மணிக்கு வீட்டை அடைய வேண்டிய நாங்கள் இந்த சம்பவத்தால் இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்தோம்… யாழினி மலங்க மலங்க விழித்துக்கொண்டு இருந்தாள்…
அந்த பையன் வித்தியாசமாக இருந்தான்… இரவு வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொன்னான்.. பைக்கை ஓரம் விட்டு வா என்றால் திரும்ப வந்து எப்படி எடுப்பது என்று‘ யோசித்தான்… உயிர் போக ஒருவள் துடித்துக்கொண்டு இருக்கும் போது… காரில் சட்டென்று ஏறி கிடைத்த இடத்தில் உட்காராமல் தான் சரியாக உட்கார வேண்டி பொருட்களை எடுத்து பின் பக்கம் அடிக்கி இடத்தை சரிசெய்துக்கொண்டு பின்பே உட்கார்ந்தான்… பரபரப்பாய் கிளம்பவேண்டிய நேரத்தில் இப்படி ஒருவன் இருக்க முடியுமா என்று யோசித்தேன்…
அந்த பெண்ணுக்கு உயிருக்கு எந்த பயமும் இல்லை என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.. தன் பைக் கீ போன்றவற்றை மறக்காமல் வாங்கி கொண்டான்…
விடை பெற்றோம்..
சரிங்க என்று தலையசைத்தான்….
ஆனால் ஆச்சர்யமாக ஒன்றை வார்த்தையான நன்றியை சொல்லவேயில்லை….
நன்றியை எதிர்பார்த்து அந்த உதவியை நாங்கள் செய்யவில்லை ஆனால் யாரேன்றே தெரியாதவர்களுக்கா மூன்று மணி நேரம் பதட்டத்தோடு சுற்றி இருக்கின்றோம்… ரொம்ப நன்றிங்க என்ற அந்த வார்த்தையை சொல்லும் அளவுக்கு கூடவா பக்குவம் வரவில்லை..?
காரை விரட்டவே இல்லை… மெரினா கலங்கரை விளக்கம் அருகே ஒரு டீக்கடை அங்கே காபி குடித்த படி யோசித்தேன்… மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் நாம் அப்படித்தான்…
ஒரு பெண்ணை காப்பாற்றிய திருப்தி எங்கள் இரண்டு பேருக்குமே மன நிறைவை கொடுத்தது
நல்ல உறக்கமும் வந்தது.
ஜாக்கிசேகர்
13/06/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நல்ல காரியம் செய்துள்ளீர்கள்! நன்றி கூட சொல்ல தெரியாத அந்த நண்பனை நண்பனாக பெற்ற அந்த பெண் தான் பரிதாபத்துக்கு உரியவள். பாராட்டுக்கள்!
ReplyDeletegood job dear
ReplyDeleteVery good Anna
ReplyDeletewell done bro...keep doing it...
ReplyDeleteபலரும் பிரச்சனைகளை மட்டுமே பேசி எழுதி கொண்டிருக்கையில் நீங்கள் அந்த பிரச்சனைய கையாண்டு ஒரு நல்ல காரியம் செய்து இருக்கிறீர்கள் அதற்காக உங்களை பாராட்டத்தான் வேண்டும்.
ReplyDeletegood job
ReplyDeleteSila Nerangalil Sila Manitharkal..
ReplyDeletevallka vallamutan
ReplyDeletesuper ji
ReplyDeleteInda generation kku nanriyyum sorry enra varthaiyum theriyave illai....
ReplyDeleteDear Jackie,
ReplyDeleteGood job
Good and kind heart...God bless you!
ReplyDelete