பல்பு என்பது யாதெனில்.?



நேற்று யூடியூபில் ஒரு மீட்டிங்….

முதல் முறையாக சென்னையில் நடைபெற்றது.
நான்கு நாட்கள் பெங்களூரில் இருந்து வந்த காரணத்தால் சட்டென சென்னை இயல்பு வாழ்க்கையில் ஒட்ட முடியவில்லை..

செம மொக்கை வாங்கினேன் என்று கூட பாலிஷாக சொல்லிக்கலாம்…

மதியம் இரண்டரைக்கு யாழினியை பள்ளியில் இருந்து நான்தான் அழைத்து சென்று டே கேரில் விட வேண்டும்..
ஓட்டலில் இரண்டரை மணிக்கு ரிஜிஸ்ட்ரேஷன் ஆரம்பம் என்பதாலும் காலையில் இறுமுகன் ஆடியோ லான்ச் போய் விட்டு நிற்க நேரம் இல்லாமல் எடிட் செய்து வலையேற்றி உடை மாற்றி மீட்டிங் நடந்த ஓட்டலுக்கு கிளம்பி விட்டேன்….

பெயர் கொடுத்து உள்ளே சென்று இருக்கை பிடித்து அமர்ந்து…. நிகழ்ச்சி ஆரம்பிக்க மூன்றே முக்கா ஆனது… வீட்டம்மாவிடம் இருந்து போன்… யாழினியை பிக்கப் செய்யலையா? என்றதும் பக் என்று அடிவயிறு கலங்கியது….. ஒன்னே முக்கா மணி நேரம் பிள்ளை பள்ளியில் தவித்து போய் இருப்பாள்…

சரி கிளம்பிவிடட்டுமா என்று கேட்ட போது நான் மேனேஜ் பண்ணிக்கறேன் என்று சொல்லி உறவுக்கார பையனை அனுப்பி பிள்ளையை பிக்கப் செய்து டே கேரில் விட்டாச்சு என்றாலும்… எப்படி மறந்து போனேன் என்று யோசித்த படி இருந்தேன்..

தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் பிள்ளை பள்ளி செல்லும் மேட்டரை மறந்து விட்டு இருக்கின்றேன் என்பது புரிந்தது… இருந்தாலும் அப்படி மறக்கும் ஆள் இல்லை.. பிள்ளை எப்படி தவித்து போய் இருக்கும் என்று மீண்டும் மனைவிக்கு போன் செய்தேன்…

குழந்தை ஒன்னும் அழலை செம ஜாலியா விளையாடிக்கிட்டுதான் இருந்தா என்று சொன்னார்கள்… மனதுக்கு சற்று நிம்மதி…
இன்று தர்மதுரை திரைப்படம் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சென்று வீடு வந்தேன்…
போன்… வீட்டம்மாதான்…

மிஸ்டர் ஜாக்கிசேகர் இருக்காரா..

மே ஜாக்கி போல் ராஹான் ஹும் என்றேன்..
கொஞ்சம்நாள் நானும் டிடி பார்த்து இருக்கேன்லா.. அதான் இந்தி…

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சி தெரியுமா?
தெரியும் மேம்.

எந்த வருஷம்.?

சட்டென நினைவுக்கு வரவில்லை.. அதுக்கு எதுக்கு இப்ப ? என்றேன்

உனக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியும்….

ரைட் விஷயம் என்னன்னா?

உங்களுக்கு கல்யாணம் பண்ணி குழந்தை கூட பொறந்துடுச்சி… தெரியுமா?

தெரியும் மேம்.. அந்த குழந்தைக்கு பேரு யாழினி……… என்று பதில் தெரிந்த உற்சாகத்தில் பேசினேன்….

குட் பேர்லாம் இன்னும் மறக்கலை… சந்தோஷம்

அது எப்படிங்க மறக்க முடியும்???

உங்க குழந்தை யாழினியோட ஸ்கூல் இரண்டரை மணிக்கு விடுவாங்க.. இன்னைக்கும் மறந்து தொலைச்சிடாதிங்க..

டொக்…

படிச்ச பொண்டாட்டிதான் வேணும்ன்னு நினைச்சது ஒரு தப்பா ஆண்டாவா? மறந்து போனதுக்கு இப்படியான கவுண்டரா? பேசமா அப்பா சொன்னா கள்ளக்குறிச்சி பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கலாமோ -? என்று மனம் யோசித்தது…


ஒருவேளை அந்த கள்ளக்குறிச்சி பொண்ணு…..பெத்த புள்ளைய ஸ்கூலில் இருந்து அழைச்சிக்கினு வர துப்பிலை… அதை மறந்து தொலைச்சிட்டு என்கிட்டு வந்து வக்கனை பேசிக்கிட்டு… போய்யா..


போய்….இன்னைக்காவது மறக்காம ஸ்கூல்ல இருந்து புள்ளைய அழைச்சிக்கிட்டு வா என்று சொல்லி இருப்பாளோ?

யோசிக்கவே தலை சுற்றி மயக்கம் வரும் முன் வண்டியை கிக் ஸ்டார்ட் செய்து மயிலை வீதியில் யாழினி பள்ளி நோக்கி செல்லும் போது… எதிரில் வந்த சுடிதார் பெண்ணின் துப்பாட்டா காற்றில் பறந்ததையும் அவள் பதறி போய் காற்றோடு சண்டை போட்டு துப்பட்டாவை சரிசெய்து சிறை வைத்ததை கவனிக்காமல் விரைந்தேன்.


ஜாக்கிசேகர்


03/08/2016


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. Idellam Jujubi matter. Idhaivida periyya periyya bulb yellam vangi irukkom theriyummille.

    ReplyDelete

  2. விரும்பிய பொண்ணை கட்டினதால தலையில் இந்த அளவிற்காகவது முடி இருக்கிறது கள்ளக் குறிச்சியை கட்டி இருந்தால் சுத்தாமக இருந்திருக்கும்

    ReplyDelete
  3. "எதிரில் வந்த சுடிதார் பெண்ணின் துப்பாட்டா காற்றில் பறந்ததையும் அவள் பதறி போய் காற்றோடு சண்டை போட்டு துப்பட்டாவை சரிசெய்து சிறை வைத்ததை கவனிக்காமல் விரைந்தேன்..." இந்த வரிகளை அண்ணி கவனிக்காமல் இருந்தா சரி .

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner