ஐரோப்பிய யூனியனில் தொடரலாம் என்பது பிரதமரின் கருத்து… ஆனால் கூடாது என்று ஒரு கூச்சல்… சரி மக்களிடம் வாக்கெடுப்பை எடுத்து அதன் படி நடக்கலாம் என்கின்றார்கள்…
வாக்கெடுப்பு நடக்கின்றது…
52 சதவிகதிம் பேர் ஐரோப்பிய யூனியனில் தொடரவேண்டாம் என்கின்றார்கள்.
48 சதவிகதம் பேர் தொடரலாம் என்கின்றார்கள்…
இருந்தாலும் 2 சதவிகித மக்களின் எண்ணவோட்டத்துக்கு எதிராய் இருந்த காரணத்தால் தன் பிரதமர் பதவியை தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகுகின்றார்… டேவிட் காமரோன்
கவரிமானுக்கு உதாரணமாக கண்டிப்பாக அவரை சொல்லலாம்….
அவர் பதவி விலக வேண்டும் என்று அவசியம் இல்லை… ஆனாலும் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகுகின்றார்..
அவர் 10 டௌனிங் இல்லத்தில் இருந்து அவர் கிளம்பும் காட்சிகள் மனதை ஈரப்படுத்துகின்றன…
மறுநாள் அவர் தன் பிள்ளைகளை பள்ளியில் விட்டு வர செல்கின்றார்..
பதவி மக்களுக்கு சேவை செய்யவே என்பதே புரிய வைத்தவர்..
ஒரு காலத்தில் இந்திய ராஜாங்கத்தை ஆண்டவர்கள் அவர்கள்.. ஏம்பா இந்த மாதிரி நல்ல விஷயத்தை எல்லாம் சொல்லிக்கொடுத்துட்டு ஏம்பா போகலை.?
இங்கே இருக்கும் அரசியல்வாதிகளையும் அவரோடு ஒப்புமை படுத்து பார்த்துக்கொள்ளுங்கள்..
பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்.
நினைப்பது அல்ல
நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
மக்களின் தகுதிக்கு ஏத்த ஆட்சியாளர்கள் தான் எப்பவும் எந்த நாட்டுலயும் வருவாங்க. நம்ம மக்களோட தகுதி அவ்வளவுதான்.
ReplyDeleteவாக்கெடுப்பை தேவையில்லாமல் நடத்தியது அவர்தான்! இப்போது ஆப்பசைத்த குரங்காய் முழிக்கிறது பிரிட்டன். சும்மா யுரோப்பியன் யூனியனை பயமுறுத்திப் பார்க்கலாம் என்று சூதாடியது இவர்தான். வரப்போகும் நாட்கள் கடினமாக இருக்கும்போது இவர் அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். அதனால்தான் ராஜினாமா செய்திருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை!
ReplyDelete