இப்போது என் ரிப்பிட் மோடில் தினமும் நான் கேட்டுக்கொண்டு இருக்கும் பாடல்
தர்மதுரை படத்தில் வரும் ஆண்டிப்பட்டி கணவா காத்து பாட்டுதான் என்ன அற்புதமான வரிகள்….
வைரமுத்து யுவன் கூட்டனியில் அசத்தலோ அசத்தல் பாடல்இது.
பாடலில் வரிகள் மனதுக்கு இணக்கமாய் இருக்கின்றன…
மாமன் விஜய் சேதுபதி டாக்டராகி விட்டான்… அத்தை பெண் ஐஸ்வர்யா கிராமத்தில் விவசாய வேலைகளை பார்த்துக்கொண்டு கிளை நுலகத்தில் புத்தகங்கள் படித்த படி ராணி வாரஇதழுக்கு கடிதம் எழுதிக்கொண்டு இருக்கின்றாள்…
மாமன் டாக்டராகி வந்து விட்டான்… ஆனால் அவன் உயரத்துக்கு அதாவது படிப்பு மற்றும் வேலையில் இல்லை என்பதால் கொஞ்சம் சிறிய தாழ்வு மனப்பான்மை.
அதில் ஒரு வரி வரும்..
இந்த பாட்டுல 3:54 இல் இருந்து பாருங்க…
உன் பவுஷுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்ப..
இந்த கிரிக்கியை ஏழை சிறுக்கியை எதுக்காக பிடிச்ச.?
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெளுத்து ஓடிப்போவா?
இவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா…
இரண்டு பேரின் மன உணர்வுகளும் வார்த்தைகளாய்…
ஐஸ்வர்யாவின் கண்ணும்… படித்த மாமன் அதுவும் டாக்டர் மாமன் தன்னை கட்டிக்கொள்வானா என்ற ஏக்கம் இருக்கும் பாருங்க…
ஐ லவ்யூ ஐஸ்
சான்சே இல்லை…
பாடல் காட்சியை படமாக்கிய விதமும் அருமை.
ரொம்ப நாள் கழிச்சி உள்ளுக்குள்ள இருந்த கிராமத்தானை தட்டி எழுப்பிய திரைப்பட பாடல் இது…..
ஜாக்கிசேகர்
18/08/2016
#dharmadurai #vijaysethupathi #ishwarya #தர்மதுரை #வைரமுத்து #யுவன் #சினுராமசாமி #yuvan #jackiecinemas
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நல்ல பாடல்...
ReplyDeleteMy favorite line from the song too.. Super lyric.
ReplyDelete