அதிரடி நேரு...
நேற்று சென்னைக்கு இரவு பதினோரு மணிக்குதான் வந்தேன்... நாளை காலை யாழினி நேருவாக வர வேண்டும் என்று பள்ளியில் இருந்து வந்த ஈ மெயில் கலவரத்தை ஏற்படுத்தியது...

100 ரூபாயை செலவழிக்க நிறைய யோசிக்க வேண்டியதாய் இருக்கின்றது. ஆனாலும் மனைவி... ஒரு ஒயிட் டிரஸ் வீட்டுல இருக்கு என்று தெம்பினை கொடுத்தார்.... தொப்பியும் பூவும் இருந்தா நேருவை தயார் செய்து விடலாம் என்று உப்புமா தயாரிப்பு ரேஞ்சிக்கு பேசிக்கொண்டு போனாள்...

காலையில் நேரு தொப்பிக்கு என்ன செய்யலாம்?
காதிகிராப்ட் எப்படியும் பத்து மணிக்குதான் கடை திறப்பார்கள்.

ஆனாலும் நம்பிக்கை யாரிடம் கேட்பது? யாரிடம் கிடைக்கும் ? என்று மனதில் பட்டி மன்றம் நடத்திக்கொண்டு இருந்தேன்.

இருந்தாலும் தோழி ஒருவள் நினைவுக்கு வந்தாள்...
கணவனுக்காகவே வாழ்ந்து , பிள்ளைக்காகவே தேய்ந்து, நாட்டுக்காக அற்பணிப்போடு வாழும் அவள் நியாபகத்துக்கு வர போன் செய்தேன்..


இண்டிபன்டன்ஸ்டெவுக்கு வாங்கிய தொப்பி இருக்கு ஆனா எங்க இருக்கும் என்று தெரியலை என்றாள்...

தேடிட்டு போன் செய் என்றேன்... இரண்டு நிமிடத்தில் நேரு தொப்பி இருப்பதாக போன் செய்தாள்...

நான் சென்று வாங்கி யாழினியை நேரு வாக்கினோம்...

ரோஜா பூவுக்கு சாய் பாபா கோவில் எதிரில் உள்ள பூக்கார பெண்மணியிடம் பத்து ரூபாய் கொடுத்து இரண்டு பூ கேட்க .. சில்லரை இல்லை என்றார்.. வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன போது ... குழந்தைக்கு ஆசையா கொடுக்கறதுமா... காசு வேணாம்.. என்று மேலும் நெகிழ்ச்சி அடைய செய்தார்...தீபாவளிக்கு மட்டும் வருடத்துக்கு ஒரு உடை எடுத்து அந்த உடையும் வளருகின்ற பையன் என்ற ஒற்றை சொல்லால் பைஜமா ரேஞ்சிக்கு தொள தொள என்று தைத்து

சூத்து பக்கம் தரையில் தேய்ந்து கிழந்து போன டிரவுசர் போட்டுக்கொண்டு போகும் போது தபால் பெட்டி என்று எள்ளல் செய்யப்பட்ட எனக்கு
(சில பசங்க பேப்பரை எடுத்து அந்த கிழிசல் வழியே போட்டு போஸ்ட் எல்லாம் செய்து இருக்கின்றார்கள்.)

பள்ளியில் இறக்கி விடுகையில் காங்கிரஸ் தொப்பியும் பூ வும் நேருவுக்கு நிரம்ப சந்தோஷத்தை கொடுத்தன.....

நேருவின் சந்தோஷம் கலந்த வெட்கம் என்னிடம் வியாபித்து இருக்கும் நிறைய கவலைகளை போக்கியது...

ஜாக்கிசேகர்
14/11/2016நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

1 comment:

  1. //. குழந்தைக்கு ஆசையா கொடுக்கறதுமா... காசு வேணாம்// Very nice.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner