திருவாரூர்





திருவாருர் பக்கம் காரில் பயணித்து இருக்கிறேன்.. ஆனால் இந்த முறை நேற்றும் இன்றும் திருவாரூரில் வாசம்...

நேற்று இரவு என் வாழ்வில் முதல் முறையாக திருவாரூர் கோவிலுக்கு சென்றேன்.. என்னா பிரமாண்டம்... தஞ்சை பெரிய கோவிலுக்கு பிறகு என்னை அசரடித்த பிரமாண்டம் இந்த தியாகராஜர் கோவில்தான்...
33 ஏக்கர் கோவில் அதே பரப்பளவில் கோவிலுக்கு பின்புறம் 33 ஏக்கர் பிரமாண்ட தெப்ப குளம்.
கோவிலுக்கு உள்ள 24 கோவில் இருக்கற அதிசியத்தை இப்பதான் பார்க்கறேன்...
சாமி கும்பிட்டு கும்பிட்டு கை வலிக்க ஆரம்பிச்சிடுச்சின்னா பார்த்துக்கோங்களேன்
வாழ்வில் நிச்சயம் திருவாரூர் கோவிலை அவசியம் கண்டுகளிக்க வேண்டும்...




திருவாரூர் பற்றி இன்னும் விரிவாய்  சில தினங்களில்

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

4 comments:

  1. Hi Jackie! Welcome to our town. Do taste some food around and write about it.

    ReplyDelete
  2. நான் இன்னும் போனதில்லை.

    ReplyDelete
  3. Jackie Anna ungallukku vayppu amainthal thiruvaiyaru aiyarappar kovilaiyum sendru parungal. Namma munnor miratti irupparkal...

    ReplyDelete
  4. அய்யா ... ! மிகவும் பெரிய கோயில் இது -- கோயிலைப் போலவே இக்கோயிலின் " ஆழித்தேரும் " மிகவும் பெரியது ---- மொத்தம் 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.....

    .இத்தலத்தில் சாயங்கால வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.....மிகவும் சிறப்பான இந்த வழிப்பாட்டை தரிசிப்பது பெரும் பாக்கியம் .... .எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயங்காலம் எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.... இன்னும் எவ்வளவோ இருக்கின்றன -- " சப்தவிடங்க ஸ்தலங்களில் " தலைமை இடமாக இக்கோயில் இருக்கிறது --- கண்டு துதித்த தங்களுக்கு -- எனது ... நன்றிகள் .... !!!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner