மிஸ்யூம்மா



ஆகி விட்டது 20 வருடங்கள்…. அம்மா எங்களைவிட்டு சென்று…. நேற்று நடந்தது போல இருக்கின்றது..இதே தேதியில் 20 வருடங்களுக்கு முன் அந்த காலையை என்னால் மறக்கவே முடியாது....அழுதே பார்க்காத என் அப்பா உடைந்து அழுததை பார்த்தேன்...அம்மாவை அந்த அளவுக்கு நேசித்து இருப்பார் என்பதை அந்த அழுகையும் கண்ணீரும் உணர்த்தியது… கைலியில் கண்துடைத்து அப்பா வேலைக்கு சென்றார்… அந்த அளவுக்கு நேர்மை.. அப்படி இருந்தும் அந்த நிறுவனம் அப்பாவை ஏமாற்றியது என்பேன்.
பாண்டி ஜிப்மர் எதிரில் இருக்கும் நெஞ்சக நோய் மருத்துவமனையில் நேற்றுவரை மூன்றாம் நம்பர் பெட்டில் படுத்து வலி பொருத்து என்னோடு வேதனையோடு பேசிய என் தாய் படுத்து இருந்த படுக்கை காலியாய் கிடந்தது...


அம்மா 42 வயதில் எங்களை தவிக்க விட்டு விட்டு போய் விட்டாள்....அவளுக்கு அப்படி என்ன அவசரம் என்று தெரியவில்லை....நாலனா கிடைக்கும் என்று ஒரு சேர் பூ முதுகுவலிக்க கட்டிக்கொடுத்து எங்களை வளர்த்தது ....என்ன சாதாரண உழைப்பா...?


எட்டனா கிடைக்கும் என்று வெள்ளரி விதைகளை உடைத்து கொடுத்தது சின்ன உழைப்பா என்ன??கிழிசல்கள் ஜாக்கெட் பிளவுஸ் என்று தைத்து கொடுத்து எங்களை வளர்த்து இருக்கின்றாள்..வாஷிங் மெஷின் இல்லாத காலத்தில் எங்கள் ஐவர் மற்றும் அப்பாவுடையதையும் அவளுடையதும் சேர்த்து மொத்தம் எழு பேர் உடைகளை கையால் துவைப்பது என்ன சாதாரண வேலையா?வாஷிங் மெஷின் வந்த உடன் என் ஜட்டியை கசக்கி கட்டியே நாளாகி விட்டது...ரேஷன் அரிசி வாங்கவும், மண்ணெண்ணை கியுக்களில் கால் கடுக்க நின்ற தினங்களை நினைத்துப்பார்கின்றேன்… சிவப்பு அரிசி வடிக்க முடியாது… பில் போட்டு விட்டு மூட்டை திரும் வரை காத்திருந்து நல்ல அரிசி மூட்டை வந்ததும் அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டு இருக்கின்றோம்…


அது என்ன வறுமையை மட்டுமே பார்த்து விட்டு இறந்து விட்டாயே..??? சண்டாளி.என் உழைப்பில் எழுபத்தி ஐந்து ரூபாய்க்கு நான் முதல் முதலாக வாங்கி கொடுத்த மஞ்சம் கலர் புடவையை கையில் வாங்கிய அந்த மகிழ்ச்சியை இனி நான் எங்கனம் காண்பேன்… அந்த மகிழ்ச்சி பெருமை பொங்க அவள் கண்களில் பார்த்தது இன்னும் என் நினைவு அடுக்குகளில் வவுத்து புருசன் தலையெடுத்து உழைத்து மானத்தை மறைக்க வாங்கி கொடுத்த புடவை ஆயிற்றே....??? இன்று தினமும் என்னால் உனக்கு 500 ருபாய்க்கு புடவை எடுத்து கொடுக்க முடியுமே ஆத்தா....அதிக பட்சம் இரண்டரை ரூபாய் டிக்கெட்டில் இருந்து 20 ரூபாய் பால்கனி டிக்கெட் வரை டிக்கெட் வாங்கி குருதிப்புனலில் இருந்து திருடா திருடா வரை எல்லா படத்தையும் இரவு காட்சி பார்த்து தொலைத்தோமே...ஏசி அறை தூக்கம் என்றால் என்ன வென்றே தெரியாமல் இறந்துவிட்டாயே பாவி...


கடைசி வரை என் சொந்த காசில் வாங்கிய மோட்டார் சைக்கிளில் ஏறி ஒரு ரவுண்ட் அடிக்காமலே சென்று விட்டாயேடி பாவி… சொந்த ஆல்ட்டோ .காரில் மூனாறு வரை செல்கிறேன்… உனக்கு பிடித்த சிவாஜி பாடல்களை ஓடவிட்டு உன்னை குதுகலப்படுத்து ஆசை…பிள்ளைகள் ஐந்து பேரில் எவர் திருமணத்தையும் பார்க்காமலே சென்று விட்டாயே??


உனக்கு தலைவலி பொருக்காது,... டீக்கடையில் நின்று டீ குடித்தால் அசிங்கம் என்று டீ க்கூட வாங்கி கொடுக்காமல் அப்பா அழைத்து வருவதை சொல்லி சொல்லி மாய்ந்து போவாயே..?? இன்று சென்னையின் தேருவோர சுவையான கடைகள் பலது எனக்கு தெரியும்.. ஆனால் நீ சுவைத்து சாப்பிடுவதை பார்க்கத்தான் கொடுத்து வைக்கவில்லை..


தொலைகாட்சி விவாத மேடைகளில் நான் பங்கு பெற்றதை பார்த்து இருந்தால் உன் முகம் எப்படி மகிழ்ச்சியில் பொங்கி இருந்து இருக்கும் என்பதை கற்பனையில் மட்டுமே நினைத்து பார்க்கிறேன்.... பத்திரிக்கைகளில் உன் மகனது பேட்டியும் புகைப்படத்தையும் பார்த்து இருந்தால் எந்த அளவுக்கு சந்தோஷம் கொண்டு இருப்பாய் என்பதை என்னால் உணர முடிகின்றது.


யாழினி பள்ளியில் கிரான்ட் பேரன்ட்ஸ்டே வச்சி இருந்தாங்க…. எல்லா பாட்டிகளும் வந்து இருந்தாங்க… நீயும் வந்து இருக்கலாம்… நீ இருந்து இருந்தா எப்படி பீல் பண்ணி இருப்பன்னு கற்பனையில மட்டும்தான் நினைச்சிக்க முடியுது.


ஜாக்கி சினிமா ஆரம்பித்தேன்…. ரொம்ப கஷ்டம்தான் இருந்தாலும் மனசுக்கு பிடிச்ச வேலை செய்யறேன்…இன்னைக்கு கூட எனது பேட்டி டைம்பாஸ் விகடன்ல உனது நினைவு நாளில் வெளியாகி இருக்கின்றது…


எல்லாம் உன் ஆசிர்வாதம்தான்..


ஐ லவ்யூ மிஸ் யூம்மா...


அம்மா நான் உன்னை ரொம்பவே மிஸ் பண்ணறேன்… நீ சொல்ற தனுசு ராஜா என்று அன்போடு அழைப்பதையும்தான்.இன்னும் கொஞ்சம் நாள்.......... நீ உயிரோடு இருந்து இருக்கலாம் அம்மா...


அம்மா மறைந்த இதே நாளில்தான் நடிகை சிலுக்கும் மண்ணை விட்டு மறைந்தார்


ஜாக்கிசேகர்23/09/2016

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...


7 comments:

  1. அம்மா என்றும் உங்களுடன் இருப்பார் அண்ணா...

    ReplyDelete
  2. போன வருடமும் படித்த நினைவு! அம்மாவின் இழப்பு தாங்க முடியாத ஒன்றுதான்! ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  3. வருசம் எத்தனையானாலும் , இத்துயர் நமக்கு ஆறாது.

    ReplyDelete
  4. bro be brave mgr and other great men lost their mothers when they did not earn your mothers blessings you have much..
    bro aathha aatthaa enru anbodu ezhudhukirai adikkadi oru slang vvaarthaiyum ezhudhirappala.... vittru bro

    ReplyDelete
  5. bro be brave mgr and other great men lost their mothers when they did not earn your mothers blessings you have much..
    bro aathha aatthaa enru anbodu ezhudhukirai adikkadi oru slang vvaarthaiyum ezhudhirappala.... vittru bro

    ReplyDelete
  6. கார்த்தி என் மகன்.இருந்தாலும் என் தாய் , என் அம்மா அவன்தான்.அவன் என்னை தன குழந்தை போல்தான் அன்பு செய்வான். அதுவும் நான் என் கணவரை 2000 ம் ஆண்டு இழந்த பின் 2005 வரை அவன் என்னை தன அன்பால் வாழ வைத்தான்.அப்படிப்பட்ட என் தெய்வம் 2005ல் என்னை பிரிந்து விண்ணுலகம் சென்று விட்டது.12 ஆண்டுகளாக தீயில் வெந்து கொண்டிருக்கிறேன்.
    karthik amma
    kalakarthik

    ReplyDelete
  7. கார்த்தி என் மகன்.இருந்தாலும் என் தாய் , என் அம்மா அவன்தான்.அவன் என்னை தன குழந்தை போல்தான் அன்பு செய்வான். அதுவும் நான் என் கணவரை 2000 ம் ஆண்டு இழந்த பின் 2005 வரை அவன் என்னை தன அன்பால் வாழ வைத்தான்.அப்படிப்பட்ட என் தெய்வம் 2005ல் என்னை பிரிந்து விண்ணுலகம் சென்று விட்டது.12 ஆண்டுகளாக தீயில் வெந்து கொண்டிருக்கிறேன்.
    kalakarthik
    karthik amma

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner