ஒரு லட்சம் கையெழுத்து தேவை..தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கான கவன ஈர்ப்புக்கு..

 கார்கில் போர் நடக்கின்றதா? வடக்கு தெற்கு என்று பேதம் பார்க்காமல் உணர்ச்சிவசப்பட்டு பணத்தை கலக்ஷன் செய்து கொடுப்பது நம் தமிழ் இனம்தான்..

போபால் விஷவாயுதாக்குதலில் நீதி வழங்கியதில் பாரபட்சமா? உடனே டுவிட்டர், வலைபதிவு என்று கூக்குரல்  கொடுப்பவர்கள் நம்மவர்கள்தான்.. ஆனால் நமக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது  அந்த வட இந்திய ஆதரவு என்பது ஏட்டாக்கனியாகவே இருக்கின்றது...

நம்மை மட்டும் தீண்டதகாதவர்களாக நடத்தப்படும் மனோபவம் மட்டும் குறையவில்லை அதுக்கான காரணம் தெரியவும் இல்லை....


ஓத்தா அடுத்தவாட்டி எதாவது உங்களுக்கு பிரச்சனைன்னா நாங்க வாயையும் சூத்தையும் முடிகிட்டு இருப்போம் என்று நம்மால் சொல்ல முடியவில்லை.. காரணம் நம்மை அந்த மனநிலையில் நம் பெற்றோர் வளர்க்க வில்லை...


அதனால்தான் இன்று வந்தாரை வாழவைக்கும் தமிழகமாக நாம் சிறந்து விளங்குகின்றோம்...சௌக்கார்பேட் தாரைவார்த்து கொடுத்தோம்.. இன்றும் வட இந்தியனை சகோதரன் போலத்தான் பாவித்து வருகின்றோம்..


ஆனால் வட இந்தியாவில் இன்னும் மதராசி என்ற ஏளனபார்வையோடுதான் பார்க்கபடுகின்றோம்...


 தமிழக மீனவர்களை காக்க  ஒரு பெட்டிஷன்... அதில் உங்கள் கையெழுத்து போட்டு உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்...ஒரு லட்சம் கையெழுத்தாவது  இந்தநேரம் வந்து இருக்க வேண்டும்... ஆனால் முக்கி முக்கி இப்போதுதான் 1000கையெழுத்து போட்டு இருக்கின்றார்கள்.... 

இந்த வலையை வாசிக்கும் வாசகர்கள் பெட்டிஷனில் கையெழுத்து போட வேண்டுகின்றேன்... இந்த ஒற்றுமை நம் இனத்தை காக்க வேண்டிய ஒற்றுமை.. ஆட்டை கடித்து மாட்டை கடித்து அந்த பொறம் போக்கு சிங்களநாய்கள் நம்மை சீண்டி பார்க்க ஆரம்பித்து விட்டடனர்.... அவர்களை எதிர்க்க இப்போது இருக்கும் ஒற்றுமை அவசியம்... அந்த  ஒற்றுமை இந்த நேரத்தில் வந்தது குறித்து மகிழ்ச்சி...
தமிழன் இன்னும் மாற்றாந்தாய்மனோபவாத்துடன்தான் நடத்தபடுகின்றான். இன்னும் விரிவாய் அறிய.. நான் தமிழக மீனவனுக்காக எழுதிய இந்த கடித பதிவை படியுங்கள்.... இந்த கடிதத்தை படித்தால் நிச்சயம்  பெட்டிஷனில் ஓட்டு போடுவீர்கள்... அந்த பதிவை  படிக்க இங்கே கிளிக்கவும்


மேலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்கும் பெட்டிஷனில் கையெழுத்து போட இங்கே கிளிக்கவும்......


மறவாதீர்.. தயவு செய்து பெட்டிஷனுக்கு பத்து நிமிடம்  ஒதுக்குங்கள்..

நாளை  சென்னையில் டுவிட்டரில் பயணிக்கும் அத்தனை பேரும்  சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு அருகில்  மாலை 5.30க்கு தமிழக மீனவ படுகொலை குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் கூடி விவாதிக்க இருக்கின்றார்கள்... என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
 இன்னும்  நீங்கள் உதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த செய்தியை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல முயலுங்கள்...இன்னும் விபரம் அறிய கீழே படியுங்கள்....

டிவிட்டர்:
டிவிட்டரில் ஹாஷ் குறியுடன் tnfisherman என்ற குறிச்சொல்லுடன் உங்கள் ஆதரவை மீனவருக்குத் தாருங்கள். அப்படியே சில டிவிட்டுகளைப் படித்து பிறருடன் பகிருங்கள். http://twitter.com/#!/search/%23tnfisherman இதுவரை வந்துள்ள டிவிட்டுகளை இங்கே பார்க்கலாம்.
http://www.savetnfisherman.org/
துரித நேரத்தில் தயாரான துடுக்கான இணையத்தில் உங்கள் பங்களிப்பை வழங்கலாம். உங்கள் எண்ணங்களும், இதற்கான தீர்வுகளும், காரண காரியங்களையும் அரசியல் பார்வையும் கொண்டு கொடுக்கலாம்.
http://www.facebook.com/savetnfisherman http://twitter.com/savetnfisherman கரம் சேரலாம்

மின்னஞ்சல் சங்கிலி:
பிடித்த விஷயங்கள், பிடித்த கருத்துகள் பிடித்த கேலி சித்திரங்கள் என கட்டி தவறவிட்ட இணையவாசிகளுக்கு வழங்கலாம். தவறான அணுகுமுறைகளை களைய அற்புதமான ஐடியாகளை சொல்லலாம். கீழுள்ள படிவத்தையும் மின்னஞ்சலில் சுற்றிவிடலாம்

பெட்டிஷன்:
இந்த துயரை இந்தியா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இணைய படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை படித்து நீங்களும் கையெழுத்துயிடலாம். http://www.petitiononline.com/TNfisher/petition.html கூடுதலான கோரிக்கைவைக்க விரும்பினாலும் அங்கே கருத்துரையில் தெரிவிக்கலாம். முன்னுரிமை தரப்படும். தற்போதைய குறைந்த பட்ச இலக்கு 1000 கையெழுத்து[போலி கையெழுத்துக்கள் கணக்கில் நிற்கா] இதுவரை வந்துள்ளது. இந்த படிவத்தை முக்கிய செய்தி நிறுவனங்களுக்கும் அரசுக்கும் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. முந்துங்கள்!

வலை பதிவர்கள்:
இதுதொடர்பான கருத்தாக்கங்கள் எழுதத்தொடங்கிவிட்டதால், தொடருங்கள்.டிவிட்டரில் தொடங்கிய அந்த தீயை உங்கள் வலை தளத்தில் இணைக்க விரும்பினால் [இப்பக்கத்தின் வலதுபுறம் போல] Dashboard -> design ->page template ->add a gadget -> HTML/Java script என்ற கட்ஜெட்டில் கீழுள்ள கோடுகளைப் போட்டு சேமிக்கலாம். அதுபோக மேற்கண்ட விஷயங்களையும் சொல்லலாம்.

<script src="http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/tnfisherman.js"/>


சரி இதையெல்லாம் செய்தால் என்ன நடந்து விட போகின்றது என்று நினைக்காதீர்கள்... இரண்டு  நாட்கள் தொடர்ச்சியாக டுவிட்டரில் குரல் கொடுத்ததின் விளைவு மற்ற ஊடகங்கள் நம்மை திரும்பி பார்க்கின்றன...

நேற்று விகடன் ஆன்லைனில் டுவிட்டரில் தமிழக மீனவ படுகொலைக்கு தொடர்ந்து வந்த எதிர்ப்பை பதிவு செய்தார்கள்....

இப்போதுதான் ஈழத்தில் உள்ள தமிழர்களை கொல்லாதீர்கள் என்று கெஞ்சினோம்.. இப்போது தாய் தமிழகத்தின் மண்ணின் மைந்தர்களுக்கே இந்த கதியா?

கெஞ்சவது தமிழனின் சாபம் போல...............

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

18 comments:

  1. கையெழுத்து போட்டாச்சு அண்ணாச்சி!1059 வது ஆள் நான்.

    ReplyDelete
  2. கை எழுத்து போட்டு விட்டேன்!

    ReplyDelete
  3. நிச்சயமாக நம்மால் முடிந்தவரையும் தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம்....

    உங்களின் பங்களிப்புக்கு நன்றி அண்ணே

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி. அந்த டிவிட்டர் கட்ஜெட் ஜாவா கோடுகளை உருமாற்றாமல் பதிய முடியாது அதனால் உங்கள் தளத்தில் கோடுகள் இல்லை என நினைக்கிறேன்.
    இங்கிருந்து எடுத்துக் கொள்ளவும் http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.html

    ReplyDelete
  5. கை எழுத்து போட்டு விட்டேன 1258 வது ஆள் நான்.

    ReplyDelete
  6. உரிய நேரத்தில் அவசியமான பதிவு.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  7. கையெழுத்து போட்டாச்சி, உங்களுக்கு வோட்டு போடலே பரவ இல்லையா

    ReplyDelete
  8. கையெழுத்து போட்டாச்சி....
    ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த திரையுலகினர், இப்பொழுது மௌனம் ஏன்? என்ன நிர்பந்தம்?? சினிமாவை மிகவும் நேசிக்கும் உங்கள் கருத்து?

    ReplyDelete
  9. ஒன்று படுவோம்... வென்று காட்டுவோம்...

    ReplyDelete
  10. தமிழ்நாட்டில் இப்பதான் உப்பு விற்க ஆரம்பிச்சிருக்காங்க அப்படீன்னு நினைக்கிறேன்.
    மீனவர்கள் பிரச்சினையில தமிழனுக்கு இப்பதான் கோபமும் ரோசமும் வர ஆரம்பிச்சிருக்கு!!

    ReplyDelete
  11. எதிர்ப்பு தீ அணையாமல் பார்த்துக்கொள்வோம்!

    ReplyDelete
  12. கையொப்பமிட்டு விட்டேன். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

    ReplyDelete
  13. இப்பிரச்சனையில் எல்லா பதிவுகளும் தமிழில்மட்டும் உள்ளது பெரிய குறைப்பாடு. இந்திய மற்றும் உலகளவில் விவாதிக்க ஆங்கில பதிவுகள் தேவை.

    ReplyDelete
  14. //ஆனால் நமக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது அந்த வட இந்திய ஆதரவு என்பது ஏட்டாக்கனியாகவே இருக்கின்றது...//

    முற்றிலும் உண்மை.. தமிழன் மற்றவர்களுக்காக படும் உணர்ச்சிவசத்தை தன் சொந்த இனத்துக்காக காட்டினால் நல்லது.. இந்த விசயத்தில் நாம் நம் அண்டை மாநிலத்தாரை பார்த்து கற்று கொள்ளவேண்டும்... ஒரு கேரள மீனவன் கொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும் என்று சொல்ல தேவை இல்லை...

    ReplyDelete
  15. அண்ணே
    இன்னும் 2000 கூட வரலை,முடிஞ்சவரைக்கும் விடாமல் ப்ரொமோட் பண்ணுவோம்

    ReplyDelete
  16. அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்..
    அரசியல் சாயம் பூசாமல் ...கொள்வதற்கு இலங்கையில் தமிழன் தீர்ந்து போய்விட்டான்
    அதான் அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்...
    தமிழனின்குரல் ஒன்றாய் ஒலிக்கட்டும் அது ஒன்றுதான் தீர்வுக்கான வழி...

    ReplyDelete
  17. எங்களுக்கு வேற வேலை இருக்கு....

    இது எப்ப்ப்ப்ப்படி?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner