Ultimate Heist-2009/ பிரான்ஸ்/கொள்ளை தொழில் குடும்ப தொழில்...


சென்னையில் நேற்று கூட பார்த்தேன்... அடையாறு பஸ் டிப்போகிட்ட அதாவது அம்பிகா அப்பளத்துகிட்டு இருந்து அந்த கார் ஜுயிங்னு செம பாஸ்ட்டா பறந்து வந்துச்சு.. எல்லாரும் கிளிபிடிச்சு நகர்ந்து வழி விட்டாங்க... இதுல கொடுமை என்னன்னா? அந்த கார்ல இரண்டே பேர்தான் உட்கார முடியும்... அது ஒரு பாரின் கார்.. ஒயிட் கலர்... நம்பர் கூட 5ன்னு நினைக்கின்றேன்.. சரியா நினைவு இல்லை... அப்ப என்  பைக்குக்கு பக்கத்துலேயே ஒரு  ஆண்ட்டி ரொம்ப ஸ்டைலா அக்டிவாவுல போனாங்க.. அதனால் நம்பர் சரியா நினைவு இல்லை..

இப்ப பெட்ரோல் லிட்டர் 64ரூபாய்.. ஒரு லிட்டருக்கு அந்த கார்  மிஞ்சி போனா லிட்ருக்கும் நாலு கிலோமீட்டர் கொடுப்பதே பெரிய விஷயம்.. ஆனால் அந்த கார் சென்னைக்கு புதுசு..வெள்ளைக்கலர் நீங்க கூட அதை எங்கயாவது பார்த்து இருக்கலாம்.. அனா அந்த காரை  ஓட்டும் அளவுக்கு சென்னை சாலைகள் வேலைக்கு அகாது...லாங் வேண்டுமானால் எடுத்துகிட்டு போகலாம்... சென்னையில் இருந்து பெங்களுருக்கு இரண்டு மணி நேரத்தில் போய் விடலாம்...

அந்த கார் யாரோ ஒரு பிரபல நடிகர் காருன்னு கேள்வி நமக்கு சரியா தெரியலை...  பட் அந்த விலை உயர்ந்த காரை  செம் பாஸ்ட் ஓட்டிகிட்டு வர்ரிங்க..... பெட்ரோல் போடனும்.... பின்னாலேயே இன்னோரு கார் அதே போல இரண்டு பேர் மட்டும் உட்காரும் கார்... அதுவும் செம பாஸ்ட்டா வருது... அதுல இரண்டு பேர் உட்கார்ந்து இருக்காங்க.. பின்னாடி வந்த காரில் இருந்த இரண்டு பேரில் ஒருத்தன் லூவுக்காக டாய்லட் போகின்றான்..அவன் போனதும் பெட்ரோல் போடும் காரை லேசாக இடித்து விட வண்டி ஓனர் வெளியே வந்து எப்படி என் காரை இடிக்காலம்? என்று சத்தம் போடும் போது டாய்லட் போனவன்  நைசா  முன்னாடி இருந்த காரில் ஏறி வண்டியை எடுத்துகிட்ட சிட்டா பறக்க... என் காரு என்று  கத்த வாயை திறப்பதற்குள் பின்னாடி இடித்தக்காரும் சிட்டாக பறந்து விட்டால் எப்படி இருக்கும் வாயிலும் வயிற்றிலும்அடித்துக்கொள்ள தோனாது...? தோனும் அது சென்னையா இருந்தா... அது பிரான்ஸ் அதனால் அப்படி அடித்துக்கொள்ளவில்லை.....இப்படித்தான் இந்த பிரெஞ் படம் தொடங்குது..

Ultimate Heist-2009(Le Premier Cercle) படத்தின் கதை என்ன?

1915ல் டர்கிஷ் இராணுவம்  ஆர்மினிய மக்களை இனப்படுகொலை செய்கின்றது... ஒரு ஆயிரம் பேர் அந்த இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க கப்பல் மூலம் பிரான்சுக்கு அகதிகளாக வருகின்றார்கள்... அதில் பல குடும்பங்கள் சோத்துக்கு கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டு  தனது வாழ்வை வாழ்கின்றார்கள்.. ஆனால் சில  ஆர்மினியன் அகதிகள் அப்படி வாழவில்லை... அப்ப சோத்துக்கு ?? குட் கொஸ்ட்டின்...ரொம்ப சிம்பிள்... திருடுவதுதான்.. குடும்ப தொழிலாக இருக்கின்றது... அப்படி குடும்பமே சேர்ந்து தண்ணி அடிப்பது போல திருடும்  குடும்பத்தை பற்றிய கதை இது...

இந்த மாதிரி திருடும் பேமலிக்கு பேர் மாவாக்கைன்னு பேரு... மிலோ(ஜேன் ரினோ)  இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன்.. பெரிய பையனை ஒரு திருட்டு சம்பவத்தில் இழந்து விடுகின்றான்.. இரண்டாவது பையனை வைத்துக்கொண்டு கார் திருடுவதில் இருந்து சகல திருட்டும் செய்கின்றான். இப்படியே லைப்போய்கிட்டே இருந்த டுவிஸ்ட் வேனாம்... மிலோ அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அந்த அம்மாவ கவனிச்சிக்க வரும்  நர்ஸ்பெண்ணை மிலோ வோட இரண்டாவது பையன் ஆன்டன் உசார் பண்ணிடுறான். உசார்னா? லட்டர், கிஸ்ன்னு மட்டும் இல்லை.. பிரெக்லர் கார்டு வாங்கும் அளவுக்கு வச்சிடுறான்..படுக்கும் போது அவன் யார் என்ன? அவன் தொழில் என்னன்னு  சரியா தெரிஞ்சிக்கறது இல்லை.... பட் புள்ள வரும் போது யாருன்னு விசாரிச்சா  ஆன்டன் மற்றும் அவன் குடும்பமே திருட்டுக்குடும்பம்ன்னு தெரியுது.. போலிஸ் வலை விரிக்குது... இரண்டு கொள்ளை சம்பவங்கள் நடந்தால் காவல் துறை கொஞ்சுமா?- ஆனா எவிடேன்ஸ் இல்லாம தவிக்குது...நர்ஸ் காதல் பிடிக்காத மிலோ தன் மருமகளை கொலை செய்ய சொல்லறான்... ஆனா அதில் இருந்து தப்பித்து தன் பொண்டாட்டியை கொலை செய்ய சொன்னவனே தான் அப்பான்னு தெரிஞ்சிகிட்ட இரண்டாவது பையன் அப்பாவை போட்டுத் தள்ளும் முடிவுக்கு வரான்... அந்த நேரம் பார்த்து  பிளைட்டில் ஏறும் ஐந்து மில்லியன்  யூரோக்களை கொள்ளை  அடிக்க  வீடு கட்ட பிளான் போடுவது போல் திட்டம் போட்டு இருக்கும் போது.. அந்த கொள்ளையில் இரண்டாவது மக்ன் ஆன்டன் ஈடுபடுகின்றான்.. காரணம் அவனுக்கும் பணம் வேனுமில்லை. கொள்ளை அடிச்சாங்களா? மருமகள் என்ன ஆனாள்-? அப்பாவை சுட்டானா? என்பதை  வெண்திரையில் பாருங்கள்.


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

ஜென் ரினோ இந்த படத்தில்  ரொம்ப அமைதியான டான் கதாபாத்திரம்...  ரொம்ப அமைதியா நடிச்சி இருக்கார்...ஆனா இவருக்கும் இந்த மாதிரி படங்கள் அல்வா சாப்பிடுவது போல..

இரண்டாவது பையான ஆன்டன் கேரக்டரில் நடித்து இருக்கும் அந்த பையன் கிட்ட ஒரு பெரிய ஸ்மார்ட்நஸ்  இல்லை என்பது குறைதான்..

அந்த நர்ஸ் கேரக்டர் பெண்ணேடு திடிர்ன்னு ஒரு படுக்கை சீன் சரிஆர்வமா  பார்க்க ஆரம்பிக்கும் முன்  அந்த பெண்ணுக்கு மார்பு தெரிவதோடு  அந்த சீங்ன கட் செய்து விடுகின்றார்கள்... அந்த பெண் உடலில் நிறைய மச்சம் வேறு....டிரைலர் பாருங்கள்.

இந்த படத்தோட பெரிய பிளஸ் போட்டோகிராபி.. முக்கியமா அந்த கார் சேசிங் காட்சிகள்... ஆங்கிள்ஸ் என அச்த்தலாய் இருக்கும்.

ஒரு கேங் ஸ்டார் படம் பெரிய துப்பாக்கி வெடித்தல் பெரிய  வன்முறைன்னு
எதுவும் இல்லை. ஆனால் விறு விறுப்பு இல்லாமல் இல்லை.. அந்நத லாஸ்ட் பிளைட் கொள்ளை சம்பவம் கொஞ்சம் தான்.

பட் அந்த கிளைமாக்ஸ் நெகிழ்ச்சி..

படத்தின் டிரைலர்..



படக்குழுவினர் விபரம்.


Directed by     Laurent Tuel
Produced by     Alain Terzian
Christine Gozlan
Written by     Laurent Tuel
Laurent Turner
Simon Moutaïrou
Starring     Jean Reno
Gaspard Ulliel
Vahina Giocante
Sami Bouajila
Music by     Alain Kremski
Cinematography     Laurent Machuel
Editing by     Marion Monestier
Studio     Alter Films
Thelma Films
TF1 International
TF1 Films Production
Medusa Film
Distributed by     TFM Distribution (FR)
Hollywood Classic Entertainment (CZ)
Release date(s)     March 4, 2009 (2009-03-04)
Running time     94 minutes
Country     France
Language     French
Armenian
Budget     €15,000,000
$19,500,000 (approx.)
Gross revenue     $2,226,117

பைனல்கிக்...

இந்த படத்தை பார்க்கவேண்டியபடங்களில் என்னால் சொல்ல முடியவில்லை ரொம்ப ஸ்லோவாக நகரும் திரைக்கதை... ஆனால் ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம்.. காந்தி ஜெயந்தியின் போது சரக்கை வாங்கி வர போன  நண்பன் வேகு நேரம் ஆகியும் வராமல் இருக்கும் போது அந்த நேர இடைவெளியை குறைக்க இந்த படத்தை பார்த்து வைக்கலாம்..இந்த படம் டைம்பாஸ்படம்..




பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...


குறிப்பு..
 
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள். 
 
 
 
 

7 comments:

  1. மொத வெட்டு வெட்டீட்டு அப்புறம் சொல்றேன்

    ReplyDelete
  2. விமர்சனத்தை விட விமர்சனத்தின் அறிமுகம் அருமை

    ReplyDelete
  3. பகிர்தலுக்கு நன்றி

    ReplyDelete
  4. நன்றி ஜாக்கி அறிமுகத்திற்கு

    ReplyDelete
  5. neenga sonna car ithuva???

    http://www.cardekho.com/carmodels/BMW/BMW_Z4

    ReplyDelete
  6. ஜாக்கி... யுத்தம் செய் விமர்சனம் எழுதியிருக்கேன்... எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க...

    http://philosophyprabhakaran.blogspot.com/2011/02/blog-post_163.html

    ReplyDelete
  7. Jackie, i just saw the movie today, but i couldnt understand the climax, can u pls tell me wts the climax..
    Means, Antons GF is Milos' daughter?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner