மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞாயிறு/13/02/2011


ஆல்பம்.

பெண்களூரில் நிறைய நேரம் இருப்பதால் கூகிள் பஸ் பக்கம் போகும் வாய்ப்பு வந்தது... போனதும் நிறைய பேர் ஜாலியாகப் பேசினார்கள். சிலர்  வாரினார்கள்.. அது தெரியாமல் இல்லை...ண்டா தம்பிகளா? உயர்வு நவிற்சி என்னன்னு தெரியாமையா நான் இங்க வந்து உட்கார்ந்து இருக்குறேன்?


எந்த கேள்வி என்னை வாரும் கேள்வி? எது என்னை தட்டிக்கொடுக்கும் கேள்வின்னு எனக்குத் தெரியாதா???  ஆனால்,  ஒன்று  எனக்கு புரிந்து போனது.... என்னை நக்கல் பண்ண பெரும்பான்மையோர் என் எழுத்துப் பிழைகளை கோடிட்டுக்  காட்டி இருந்தார்கள்.. சிலர் அதை நக்கல் விட்டு இருந்தார்கள்....அதே பஸ்ல சின்ன பாக்ஸ்ல நாலு வரி அடிச்சி அனுப்பறதுக்கே அத்தனை மிஸ்டேக்....நான் டெய்லி இரண்டு மணி நேரம் உட்கார்ந்து  டைப் செய்யறேன் ... எனக்கு டைப்பிங் தெரியாது.. கூகுள் டிரான்ஸ்லேட்டரில் நான் அடிக்கவில்லை...ஓல்டு டைப்ரைட்டர் மோடில் தடவி தடவித் தான் அடிக்கிறேன். எனக்கு இது பெரியவிஷயம்... ஒரு நாளைக்கு ஒரு  பதிவு போடறேன்.. அப்படி பிழையோட எதுக்கு சார் போடணும்?? எதுக்கு எழுதணும்னு  சொல்றீங்களா? குட்... என்னைப் புறக்கணியுங்கள்.. என்னோட பக்கம் வராதீர்கள்... நான் இப்படித்தான் எழுதுவேன்...? என்ன சார் நல்லது சொன்னா கோவிச்சிக்கிறீங்க?  படிச்சிட்டு இது நொள்ளை இது நொட்டைன்னு ஈசியா சொல்லலாம். எழுதிப் பாருங்கள்...?? எனக்கு இது தொழில் இல்லை... இது எனக்கு சோறுபோடலை... எனக்கு இருக்கும் நேரத்துக்கு நான் கிறுக்குகிறேன்...

சரி! உங்களுக்குதான் தமிழ் நல்லா வருதே? எழுதிக் கிழிங்கடான்னா
உடம்பு வணங்க மாட்டேங்குது...  சரி நாம ஒழுங்கா எழுதுறோம் எவனும் வாசிக்கலைன்னு போங்கு.....அலெக்சாவுல தப்புத் தப்பா எழுதி,  இந்தக் கிரகம் இன்னைக்கு அலெக்சாவுல  54,600ல் இருக்கின்றானே, என்று அலச்சல்....


ரைட் தப்பாத்தான் எழுதறேன்.. எனக்கு தெரிஞ்சு முன்னைக்கு இப்ப எவ்வளவோ கொறஞ்சி இருக்கு....அதனால்  ஒன்று  சொல்லிக் கொள்கின்றேன்.... புடிக்காத இடத்துக்கு வராதீங்க.....இரண்டாவது எங்கப்பா ஒண்ணும் தமிழ் பண்டிட் இல்லை.. இந்த விஷயத்தை நிறைய வாட்டி சொல்லிட்டேன்.... இன்னமும் சொல்லுவேன்... நேரம் இருந்தால் பிழை திருத்திப் போடுவேன்

இல்லையென்றால், இப்படித் தான் வரும். முடிஞ்சாப் படி.. இல்லையா?   தமிழ் வாழ வைக்கும் தளத்துக்குச் சென்று உங்களை ஆத்ம திருப்தி  செய்து கொள்ளுங்கள்... தப்பை சுட்டிக்காட்டுவது ஒரு பெரிய விஷயமே இல்லை.. ஆனால் சைக்கிள் ஓட்ட மட்டும் தெரிந்தவன், லாரி,  கார் ஓட்டுபவனைப் பார்த்து எப்படி ஓட்டவேண்டும் என்று சொல்லும் போது ஒரு கோபம் வரும் பாருங்க......அதான் எனக்கும்..

நீங்க என்ன விமர்சனம் வைத்தாலும் எனக்கு கவலை இல்லை. நான் இப்படித்தான்...புடிக்கலையா? போய்கிட்டே இரு....                                                                                                            
==================

சமகால உலக அரசியலில் புரட்சி சாத்தியம் இல்லை என எல்லோராலும் முன்மொழியப்பட்ட ஒரு விஷயத்தை எகிப்து மக்கள் தவிடு  பொடியாக்கி இருக்கின்றார்கள். எண்ணி  ஒரு மாதத்தில்  புரட்சியை சாத்தியப்படுத்தி இருக்கின்றார்கள்.

==========

பெங்களுரில் 87 நாட்களில் மடிவாலாவில் ஒரு  பெரிய சப்வே கட்டி முடிக்கப்படும் போது வருடக்கணக்கில் நம்மவர்கள் இழுத்தடித்து மக்களை வேதனைக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயம்.??? நம்ம ஊரில் எனக்குத் தெரிந்து சப்வே கட்டி முடிக்க வருடக்கணக்காகின்றது..

=========================
பெங்களுர் நகராட்சியிடமும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது... நகரம் சுத்தமாக இருக்கின்றது. இத்தனைக்கும் எந்தத் தெருவிலும் குப்பைத் தொட்டி இல்லை... தினமும் வாசலில்  குப்பையை வைக்கின்றார்கள்.. வண்டி வந்து எடுத்து போகின்றது.  கோழி அரிந்தாலும், ஆட்டை வெட்டினாலும், அந்தக் குப்பைகளை அடுத்தநாள் வரை வீட்டில் வைத்து, அந்தக் குப்பைகள் காலையில்தான் வீட்டை விட்டு வெளியே வருகின்றது. பொதுச் சுத்தம் அவர்களிடத்தில் நிரம்பவே இருக்கின்றது.. குப்பை தொட்டி வைத்தாலும் அதுக்கு வெளியே போடுவது நம்ம ஸ்டைல்...
ஒரு வாரமாக இங்கு விமானக் கண்காட்சி நடந்தது. உள்ளே போக 500 ரூபாய் கட்டணம் என்றதும், வேறு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்..
===============================

மிக்சர்
நாளைக்கு பிப்ரவரி 14 காதலித்தவர்களுக்கும், காதலிக்கப் போகின்றவர்களுக்கும்,  காதலித்துக் கொண்டு இருப்பவர்களுக்கும், அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்..

நிறைய  நண்பர்கள் வந்து சந்தித்தாலும் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டாலும்.... பிற மொழிப் படங்கள் என்ற தளத்தை எழுதிய பெங்களுர் ஜெய் இப்போது எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை.. போன் அடித்தால் நம்பர் மாற்றி இருக்கின்றார்... இந்தப் பதிவை  படிப்பவர்கள்  அவரைப் பற்றி தெரிந்திருந்தால், அவர்  பற்றிய தகவலையும் அவரின் அலைபேசி எண்ணையும் என்னிடத்தில் கொடுக்கவேண்டும்... ஜெய் நீங்களே படித்தாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
.
==================

நான் யாரையும் திட்டியது இல்லை..
பெரிதாய் எவர் எழுதியதையும் குற்றம் சொன்னதில்லை
இணையம் நேர விழுங்கி என்பதால்.. பதிவு போட்டு விட்டு சிஸ்டத்தை ஆப் செய்துவிட்டு போய்விடும் ரகம்.... நண்பராக இருப்பார். இதைச் சொன்னால் அவர் வருத்தபட்டு விடப் போகின்றார் என்பதால், நான்  பல விஷயங்களில் கடந்து போயிருக்கின்றேன்.. ஆனால்  அப்படி இருக்கக் கூடாது என்று பல விஷயங்கள் உணர்த்திக் கொண்டு இருக்கின்றன... இனி என் ஸ்டைலில் என்னுடைய பதில் இருக்கும்...
===============

படித்ததில் பிடித்தது.

இந்த பின்னுட்டம் எனக்கு வந்த பின்னுட்டம்பெரிய கருத்தை ரொம்ப மேலோட்ட்மாக சொல்லிவிட்டு போய் இருக்கின்றார்..


ஜாக்கி,

நம் தமிழ் / இந்திய சமூகத்தில் புரையோடியிருக்கும் - கிட்டதட்ட கேன்சரைப் போல - இனம் சார்ந்த மதிப்பீட்ற்க்கு தங்கை திவ்யாவின் கொலை ஒரு எடுத்துக்காட்டு. என்னைப் பொருத்தவரை இது ஒரு அப்பட்டமான கொலை. அந்த பெண்ணோட அப்பா, அம்மாவ விடுங்க... அண்ணனா நான் / நீங்க இருந்திருந்தா, என்ன செஞ்சி இருப்போம்?. இந்த புள்ளியில்தான் வன்முறை, திட்டமிட்டு, சாமர்த்தியமாக - சில குறிப்பிட்ட இனங்களின் கைகளில் திணிக்கபடுகிறது. அத சத்தமில்லமா செய்யிறது - இதுபோல் மெத்த படிச்சவங்கதான்.
இதுபோன்ற மனரீதியான டார்ச்சருக்கு பயந்துதான், பலபேர் படிச்சு மேலவந்தவுடன் , இனரீதியான அடையாளத்தை மாத்திடறாங்க / மறைக்கிறாங்க.


அந்த 4 பேருக்கும் தண்டனை ?? - அவங்க தலை மயிரைக்கூட புடுங்கமுடியாது. இந்நேரம் அவங்களை காப்பாத்த அத்தனை வேலைகளையும் செய்து இருப்பார்கள். என்னோட ஆதங்கமெல்லாம் திவ்யா தன்னுடைய முடிவின்மூலம் , அந்த 4 பேரின் நோக்கத்தை நிறைவேற்றி விட்டாரே என்பதுதான்.

மூர்த்தி

உண்மைதான் மூர்த்தி ஆனால் அதே ஜாதியின் பெயரை வைத்துக்கொண்டு செய்யும் தவறுகளையும் ஆராய வேண்டி இருப்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்... ஜாதியில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற போர்வையில் யார் தவறு செய்தாலும் அதை சூட்டிக்காட்டவேண்டும் என்பதே என் நிலைப்பாடு....
==============
ஒரு உதவி..

இப்போது ஓல்டு டைப்ரேட்டர் சிஸ்டத்தில் அடிக்கின்றேன்... அதுதான் பழகி இருக்கின்றேன்.. இதனை ஆன்லைனில் கற்றுக்கொடுக்க எதாவது இலவச தளங்கள் தங்களுக்கு தெரிந்தால் எனக்கு லிங்க் மெயிலவும்.
==============
இந்த வாரசலனனபடம்..

இந்த பாடலை எனது நண்பன் சுபாஷ்  60மினிட்டஸ் டேப்ல ஏப்பக்கம் புல்லாவும் பி பக்கம் புல்லாவும் ரெக்கார்ட் பண்ணி கேட்டபாட்டு.. அதுமட்டும் அல்ல அந்த ஆட்டோ டேப்ரிக்கார்ட்ர்ல எ பக்கம்முடிஞ்சிட்டா  பி பக்கம் அதுவா ஒட ஆரம்பிக்கும் நைட்டு புல்லா இந்த பாட்டுதான் ஓடிகிட்டு இருக்கும்.. இன்னைக்கு அவனே நினைச்சு பார்த்தாசிரிப்பா இருக்கும்.. ஆனா அன்னைக்கு அது போதை.. அது போலதான் காதலும்.... உங்களுக்கும் இந்த பாட்டு ரொம்பவும் பிடிக்கும்..==========
இந்தவார கடிதம்


பெங்களுரில் சந்தித்த நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவர்கள் சமுக சேவையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. அவர்கள் செய்யும் சேவைக்கு என் நன்றிகள். அகரம் சூர்யாவின் பிரபலத்தால் அது ஒரு சைடில் போகின்றது பிரபலம் இல்லாத  இவர்கள்.. இவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றார்க்ள்... உதவி செய்ய ஆர்வம் இருப்பவர்கள்... நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்.. இமைகள் வெற்றி பெற  வாழ்த்துக்கள்.


Hi Jackie,

It was so good to meet you in person. I felt really great. A sweet-surprise, and I should thank Ramkumar for arranging this meet. We hope you liked & enjoyed the Tequila too! :)))

I tried to write about Imaigal. But, I wrote in English. I should try to write in Tamil soon. I hope you will grasp these, and write in your own words. Even we would love to read in your own words. 

I have been thinking of helping the needies from my school days, but with my family situation at that time I was not in a position to help any one. May be this habit came into me, from my family. My father (passed away when I was 3 yrs old), mother,  brother & sisters, every one wanted to help others & society, even when we were in bad financial state.

After I completed MCA, and started working, I thought of helping others. But, considering the college fees & medical expenses, I could not support any one with what ever I can spend.

Then I rememered this "தனி மரம் தோப்பாகாது" and came the idea of grouping similar-minded people. I talked with my close friends (5 at that time), and all of them immediately said "we will do". 

We started இமைகள் ("Imaigal - Lets dream to make others realize their dreams") in August-2001. Collecting money when the request arises is not easy. So, we planned to put some money every month, and give it to needys when they approach us. We put Rs.250 per head, per month. It will come to 1500 and we started supporting முதியோர் விடுதி, அனாதை இல்லம் & பார்வை இழந்தோர் இல்லம். After that we started getting requests from students. Based on their marks & family situations we started supporting them. Currently, we mainly focus on supporting students (on average, 65% towards students, and 35% towards medical emergency needs)

We have supported many students from 2001. Some of them are working in IT industry now (in Oracle, TCS etc). Few of them have joined colleges & schools as lecturers/teachers. Many of them said, they would have gone to கூலி வேலை, if இமைகள் has not supported on time. Its so touching that, we could do some good to their family.

Year on year, friends & well-wishers kept on joining இமைகள், and strengthened it. Currently there are about 60 members and growing. இமைகள் has no limit on how much to contribute. As the years go, few people started increasing their monthly contributions. Currently, members are contributing in the range of Rs.200 - Rs.1500 per month.

Every year in March, we will close the accounts and create the annual-report (balance-sheet). This Annual-report will be circulated to all members. (attaching our first & latest reports to you, for your reference)

As of now, இமைகள் is not-registered. We are trying to get it register for long time, every time we get some or the other issues. If any one can help us in registering the trust & help to get us the 80G tax-exemption it would be great.

An attempt to build the website is on the way: www.imaigal.org
Contact details for Imaigal: trmadhes@imaigal.org / info@imaigal.org

Please let us know if you need any more detail/clarification.

Regards
Madhes


========================

..
இந்தவாரநிழற்படம்.
 உலக கோப்பைக்காக பெங்களூர் பெரிய பெரிய .ஹோர்ட்டிங்களில் தன்னை தயார்படுத்திக்கொண்டு இருக்கின்றது.... நம்ம ஊர்ல.. ம்ம்ம் வெறும் அரசியல் பேனர் ஹோர்டிங்தான் இருக்கு...

ஐடி துறையினர் தமிழக மீனவ படுகொலையை கண்டித்து வரும் 19ம் தேதி சோழிங்கநல்லூரில் உண்ணாவிரத போராட்டம் மேற்க்கொண்டு இருக்கின்றார்கள்.. நேரம் இருப்பின் உங்கள் ஆதரவை கொடுத்து கலந்து கொள்ளவேண்டுகின்றேன்...

============
பிலாசபி பாண்டி

 என்னடா அம்மா காலையில் இருந்து பேசாம வாயை மூடிக்கிட்டு உட்கார்ந்து இருக்கா....அம்மா லிப்கார்டு கேட்டாங்க நான் பேவிகுவிக் கொடுத்துட்டேன்... என் மகன் இல்லைடா... நண்பேண்டா...

நான்வெஜ்18+

வயசுக்கு வந்த போது நான் முதன் முறையா பண்ணும் போது ரத்தம் வந்துச்சி, இரண்டாவது வாட்டி பண்ணும் போது வலிச்சிது, மூனாவது வாட்டி பண்ணும் போது எரிச்சல் வந்தச்சி, நாலவது வாட்டி பண்ணும் போது ரொம்பவும் ஸ்மூத்தா  இருந்துச்சி, இப்பெல்லாம் தினமும் செய்கின்றேன்..
என் தாடையில் ஷேவ்.. 

பிரியங்களுடன் 
ஜாக்கிசேகர்


இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
ஓட்டு போட மறவாதீர்கள்.14 comments:

 1. நீங்க என்ன விமர்சனம் வைத்தாலும் எனக்கு கவலை இல்லை நான் இப்படித்தான்...புடிக்கலையா? போய்கிட்டே இரு....

  கூல் அண்ணே ! ஏன் இந்த கோபம் .. அமைதி அமைதி

  தூற்றுவோர் தூற்றட்டும் வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் .. நாம் நம் வழியில் செல்வோம்

  ReplyDelete
 2. வுடுங்க,ஜாக்கி!இதுங்களையெல்லாம் கணக்கில எடுத்துக்கிட்டா ஒண்ணும் முடியாது!பொழைப்பப் ^பாருங்க!

  ReplyDelete
 3. Anne, i couldnt able to find the link for the song which your friend hears in 60 mins cassette..

  ReplyDelete
 4. ஜாக்கி,

  அர்த்தமில்லாத விமர்சனத்துக்கு இன்னும் பதில் சொல்ல வேண்டுமா? உங்களை நிபந்தனையின்றி ரசிக்கும் வட்டம் இருக்கும்போது ஏன் கவலையும், கோபமும்? இன்னும் பல வெற்றிகளைக் காண்பீர்கள். காதலர் தின நல்வாழ்த்துக்கள்..!

  ஸ்ரீ....

  ReplyDelete
 5. ungal paniyil ezhuthungal... etharkku ithanai kovam... relax... continue ur style...

  ReplyDelete
 6. அட வுடுங்கண்ணே! குத்தம் சொல்றவனுக சொல்லிட்டுதான் இருப்பானுங்க,

  அப்புறம் என்னைத்தொட்டு பாட்டு இப்பவும் எனக்கு ஃபேவரட்டுதான், ஆனா இப்போ கேட்கும் போது ஸ்வர்ணலதா நியாபகம் வருவதை தவிர்க்க முடிவதில்லை..

  ReplyDelete
 7. >>> உலக கோப்பை ஆரம்பித்ததும் சென்னை பரபரப்பாகலாம். கல்வி தேர்வுகள் வருவதால் சற்று மந்தமாக உள்ளது

  ReplyDelete
 8. உங்க ஸ்டைல் தனிங்க...

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 9. வழக்கம் போல் அருமை


  அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க

  ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

  http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

  ReplyDelete
 10. "ஒரு உதவி.. இதனை ஆன்லைனில் கற்றுக்கொடுக்க எதாவது இலவச தளங்கள் தங்களுக்கு தெரிந்தால் எனக்கு லிங்க் மெயிலவும்"

  இந்த லிங்க் வைத்து desk top version instal செய்துக் கொள்ளவும். உங்கள் டாஸ்க் பாரில் 'அ' என்று தேர்வு செய்ய்ம் போதெல்லாம் தமிழில் வெப் பேஜூக்கோ, அல்லது MS word/ power point வெகு எளிதில் டைப் செய்யலாம். (செய்யலாம் = seyyalam). edhu type seidhalum, 4 or 5 options varum. :) Good luck.

  ReplyDelete
 11. //என்னை நக்கல் பண்ண பெரும்பான்மையோர் என் எழுத்துப் பிழைகளை கோடிட்டுக் காட்டி இருந்தார்கள்.. சிலர் அதை நக்கல் விட்டு இருந்தார்கள்....//
  hi Jackie
  நான் முதலில் வேலை பார்த்த கம்பனியின் CEO அவரே மெயில் எழுதும்போது ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவார். அதை பற்றி ஒருவர் மீடிங்கில் சொன்னபோது அவர் சொன்னது : Any one can write correct english. but only few can run the company successfully. what is important? running the company successfully or writing correct english? அதே பதில் தான் உங்களை குறை சொல்பவர்களுக்கும்! எழுத்தில் என்ன இருக்கிறது என்பது தான் முக்கியம். எழுத்து பிழைகள் ஒரு பொருட்டே இல்லை!

  ReplyDelete
 12. bandhu சொல்வது போல் எழுத்து பிழை தவறல்ல கருத்து பிழை தான் தவறு

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner