சனியன் சகடை நம்ம பனியனுக்குள்ள போவதை யாராலும் தடுக்க முடியாது. விதி அப்படித்ததான் இருந்திச்சின்னா அதை யாராலும் மாற்றமுடியாது என்பதே உண்மை.
நாம் சும்மாதான் சிவனேன்னு இருப்போம் அதுவா வந்து நம்ம மேல ஏறி உக்காந்துகிட்டு இல்லாத ஆட்டம் எல்லாம் போடும் ...சின்னவயசுல கன்னித்தீவு கதையை தந்தியில் தினமும் படிச்சேன்.. அதுல ஒரு சம்பவம் இன்னமும் என் நினைவில் இருக்கு...
சிந்துபாத் ஒரு தீவுல நடந்து போயிகிட்டே இருப்பான்... அந்த தீவுல ஒரு ஆறு ஓடும்... அந்த இடத்தில் ஒரே ஒரு ஆள் நடக்ககமுடியாம உட்கார்ந்துகிட்டு இருப்பான் என்னை ஆத்துக்கு அந்த பக்கம் அழைச்சிக்கினு போய்விடேன்னு கெஞ்சி கேட்டுக்குவான்..
சிந்துபாத்தும் பரிதாபபட்டு தன் முதுவுல ஏத்திகிட்டு ஆற்றைகடந்து அந்த ஆளை இறங்க சொன்னால் இறங்கவேமாட்டான்.. அந்த மேட்டரை வச்சிகிட்டு தந்தி ஒரு ஆறுமாதத்துக்கு மேல போனதா ஞாபகம் அப்படி பாப்னு ஒரு தனிமை விரும்பி உதவி செய்யபோயி உபத்திரவத்தை வாங்கிகட்டிக்கொண்ட கதை இது.......
DUSKA படத்தின் கதை என்ன?
இது போல ஒரு சம்பவம் நம்ம நாட்டுல எல்லாம் நட்க்கவே போறதில்லை.. உங்களுக்கு வயசு50க்கு மேலன்னு சும்மா வச்சிக்கோங்க...உங்களுக்கு பொழப்பே.. கதை எழுதுவது, படம் பார்ர்ககறது, அந்த படத்து விமர்சனம் எழுதறது, ஊர்ர்ல நடக்கும் ஒரு பிலிம் பெஸ்ட்டிவில் விடாம படம் பாக்கறது இதுதான் உங்க வேலை... உங்க பேரு பாப்னு வச்சிக்கோங்க....தியேட்டர்க்கு கீழ இருக்கும் ஒரு புட் கோர்ட்டுல இருக்கும் ஒரு பொண்ணை டெய்லி பார்க்கறிங்க...
அந்த பொண்ணுக்கும் அவன் லவ்வருக்கும் தினமும் சண்டை வேற நடக்குது.. ஒரு நாள் அந்த சண்டை முத்தி போக டெய்லி அந்த பொண்ணையே பார்த்துக்கிட்டு இருக்கற உங்க கிட்ட வந்து சட்டுன்னு அந்த அழகான பொண்ணு ஒரு லிப்கிஸ் அடிச்சா என்ன செய்விங்க?
மெர்சலாயிடமாட்டிங்க??? அதேதான் பாப்பும் அப்படித்தான் ஆகிடுறாரு....பட் அந்த பொண்ணு பாப் ரூமுக்கு வரும் போத என்னைக்கோ செஞ்ச உதவி உபத்ரமா வந்து எதிரில் நின்ன எப்படி இருக்கும்??? அது என்ன பிரச்சனைன்னு படம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுகின்றேன்..அப்புறம் பாப்புன்னு பேர் உதாரணத்துக்கு வச்சிக்க சொன்னது.. அதுக்காக ஒரு சின்ன பொண்ணு உங்களை கிஸ் பண்ணிடுவாளா? ஆசை தோசை அப்பளம் வடை.... போய் வேலையை பாருங்கப்பு..
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.......
ஒருவருக்கு நீங்கள் சிகரேட் கொடுக்கின்றீர்கள்.. அவர் உங்கள் கூடவே வருகின்றார்...
உங்கள் வீட்டுக்கு வந்து விடுகின்றார்
உங்களோடு தங்கியும் விடுகின்றார்...
எங்கே அழைத்து போய் விட்டாலும் அந்த நபர், உங்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டினால் எப்படி இருக்கும்??
ஒரு நாள் இரண்டு நாள் பொறுத்துக்கொள்ளலாம், அட ஒரு வாரம் கூட பொறுத்துக்கொள்ளலாம் வருடக்கணக்கில் உங்களோடு இருந்தால்?
அதெல்லாம் விடுங்கய்யா .. கிஸ் பண்ண பொண்ணு வீட்டுக்கு வரும் போது கூட எங்கேயும் போகாம குட்டி போட்ட் பினை போல பக்கத்துலேயே அந்த ஆள் இருந்தா அந்த ஆளை என்ன செய்யலாம்??
அட சின்னபையனா இருந்தாலும் பராவாயில்லை எருமை போல வளர்ந்தவன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்...???
த்தா நானா இருந்தா உதைக்கிற உதையில என் தெரு பக்கமே தலை வச்சி படுக்காத அளவுக்கு பண்ணிடுவேன்..
எவ்வளவோ பிரச்சனை செய்தாலும் பாப் ஒரு கட்டத்தில் டுஸ்காவை தேடும் பொது அதுதான் மனிதனின் பொதுபுத்தி என்பேன்..
டுஸ்க்கா என்று அந்த ஊர் பேர் தெரியாதவனுக்கு பாப் பேர் வைக்கும் காட்சி இண்ரஸ்ட்டிங்..
அந்த பொண்ணு செமையா இருக்கா.... அந்த பொண்ணு தன்னை வெளிபடுத்தின பல சீன்கள் இந்திய சென்சாரல் கற்பழிக்கபட்டு சக்கையாக பிழியபட்டு கிழிந்த நாராக லுமியரோ அல்லது யூடிவி வேர்ல்டு மூவிஸ்லேயோ ஒளிபரப்பினார்கள்...அதில்தான் இந்த படத்தை பார்த்தேன் பெங்களூர்வாசிகள் ரீப்பீட்டினால் பார்க்க வாய்ப்பு இருக்கு...
படுக்கையில் பாப்பை அழைக்கும் அந்த பெண் அதுக்கு பாப் ரெடியாகாமல் டுஸ்கா தன் வாழ்வில் எவ்வாறு வந்தான் என்று கதை சொல்லுவது சுவாரஸ்யம்...
இந்தபடம் பிளாக்ஹுயூமர் காமெடி வகை... மிக மெலிதாய் நகரும் திரைக்கதை ஆனாலும் திரைக்ககதையில் முடிச்சி அவிழும் சின்ன சின்ன இடங்கள் ரசனை..
இந்த படம் உலக படவிழாக்களில் திரையிடபட்டு பலவிருதுகைளை வென்றது ..இந்த படம் சிறந்த வெளிநாட்டுபடத்துக்கான ஆஸ்கார் விருது பெற்றது...
கிளைமாக்ஸ் கவிதை...
படத்தின் டிரைலர்...
===================================
படக்குழுவினர் விபரம்
Starring: Gene Bervoets, Sylvia Hoeks, Sergey Makovetsky, Ruslana Pysanka
Directed by: Jos Stelling
Written by: Hans Heesen, Jos Stelling
Language: Dutch, Russian
Country: Netherlands, Russia, Ukraine
Runtime: 110 min
MPAA Rating:
=============
பைனல்கிக்
இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படம் ....டுஸ்க்கா நடிப்புக்காக பார்க்க வேண்டும்..
ரிப்பீட்டினா கண்டிப்பா பார்த்துடுவோம். அந்த கன்னித்தீவு லிங்க் அழகு. என்னதான் படு திராபையான கோட்டு சித்திரம் என்றாலும் (இப்போது இன்னும் மோசம் என்று நினைக்கிறேன்), படிக்க வைத்துவிடும் பிரித்த உடனே.
ReplyDeleteகண்டிப்பா பாருங்க நல்லபடம் யுவா...
ReplyDeletenice!!
ReplyDeletesenthil, doha