17 மணி நேரம் தாமதமாக சா.வெ/நான்.வெ..(புதன் 16/02/2011).



நிறைய  முறை மீனவர்கள் கைதாகி இருக்கிறார்கள்..  சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.அப்போதெல்லாம் கண்ணம்மா கம்னுகிட! என்பது போல இருந்து விட்டு, தலைவரின் பெண் நேற்று  இலங்கை ராணுவத்தின் அத்து மீறலைக் கண்டித்து, காலையில்  போராடி, ஜன்னல் ஓர போலீஸ்  வாகனத்தில் உட்கார்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு, சாயந்திரம்  ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வருவது போல கனிமொழி வந்து இருப்பது, படித்தவர்கள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. எலெக்சன் வரும் வரை  இன்னும் நிறைய நாடகங்களைக் காண தமிழக மக்கள் காத்து இருக்கின்றார்கள்.
======================


இன்று காலைதான் சென்னைக்கு வந்தேன். சென்னையில் தான் இருக்கின்றோமா? என்பதை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் முறுக்கி விட்ட மீசையோடு  சிரிக்கும் புகைப்படத்தை பார்த்து விட்டு, சென்னையில் தான் இருக்கிறோம் என்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்.  மிக முக்கியமாக லட்சுமண் சுருதி சிக்னல் அருகில் கண்ணகி சிலை போல எப்போதும், அதே இடத்தில் இருக்கும் பேனர் மேலும் உறுதிபடுத்தியது.
==================

மிக்சர்..

காதல்  பற்றிய கதைகள் கேட்டு ரொம்ப நாளாகிவிட்டது. நான் தினமும் காதலித்துக் கொண்டு இருப்பதால்  மற்றவர்கள்  காதலைக் கேட்க  நேரம் இல்லை. இன்று அதுவாக என்  காதுக்கு வந்தது. நண்பர்  ஒரு பெண்ணை சில நாட்களாக பார்த்துக் கொண்டு இருக்கிறார். அந்த பெண்ணுக்கும் தெரியும். தினமும் இந்த பேக்கு நமக்காக காத்து இருக்கின்றது என்று.. காரணம்.. அந்த பெண் அவரை ஒரு முறை மட்டும் நிமிர்ந்து பார்த்து விட்டு செல்லும். இன்னைக்கு பேக்கு எந்தக் கலர் உடையில்  நம்மை பார்க்க  வந்து இருக்கின்றது என்ற ஆர்வமாகக் கூட இருக்கலாம். தினமும் பொறியியல் கல்லூரி பேருந்து விட்டு இறங்கி நடக்கும் போது, அந்தப் பெண் பார்க்கும் வகையில் தோதான இடத்தில் நின்று தினமும்  பார்ப்பது நண்பரின் சமுதாய  பணி.

ஒரு நாள் விடாது இது தினமும் நடக்கும்.. நெத்தியடி ஜனகராஜ்க்கு ஆறு மணியானால், கை நடுக்கம் வருவது போல மாலை 5 மணி என்றாலே, இவருக்கு கால் நடுக்கும். சரியாக  5 மணிக்கு எந்த வேலை எப்படி இருந்தாலும் போட்டு விட்டு வழக்கமான இடத்தில் அட்டெண்டன்ஸ் போட்டு விடுவார்.  புதன் கிழமையான  இன்று   பல மணிநேரம் கால் கடுக்க  சாரி  கால் நடுங்க நின்று விட்டு வெறுத்துப் போய் தனது சின்ன மூளையை உபயோகப்படுத்த, இன்று மிலாடி நபி அதனால் கல்லூரி இல்லை என்று லேட்டாக தெரிந்து இருக்கின்றது.  இதனால் அறியப்படும் நீதி... காலையில் காலண்டர் பார்க்க வேண்டும்....
===================
நேற்று மாலை  ராமாபுரத்தில் எனது மாமா மேல் பைக்  வேகமாக மோதி விபத்து நடந்து விட்டது.  அதனால் நிறைய  அலைச்சல்கள். மாமாவுக்கு  ஸ்கேன் செய்து பார்த்துவிட்டோம் அவர் நலம். பைக்காரர் (என்ன மரியாதை எல்லாம்..) இடித்து விட்டு நிறுத்தாமல் போனால் காரன்.. நிறுத்தி மருத்துவமனை வரை சென்னையில் கூடவே அலைந்தகாரணத்தால் காரர் ஆகிவிட்டார்... ஓ.எம்.ஆரில் ஒரு தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் வேலை செய்யும் விஜயகுமார்.  நல்ல மனம் படைத்தவர்.  மோதினாலும் ஓடிப்போகாமல் உதவி செய்த அவருக்கு நன்றி..
===============


இந்தவார சலனபடம்




தமிழில்  எனக்கு மிகவும் பிடித்த  பாடல்.. ராஜூசுந்தரம் மாஸ்டர்  கோரியோகிராபி... அந்தப் பெண் டான்சர்கள் ஆடும் ஸ்டெப் மற்றும் சில்லவுட்டில் பாடலை காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத்ரெட்டியின் உழைப்பும் அருமை. தொலைகாட்சி சானல்களில் இந்தப் பாடல் வந்தால் நின்று பார்த்து விட்டு செல்வது  என் வழக்கம்.

 ==============
இந்த வார கடிதம்

நன்றி ஜாக்கி!

அழைப்பு கடைசி நேரத்தில் என்றாலும், வந்தமைக்கு நன்றி மீண்டும்.
அது ஒரு அழகிய, மனதுக்கு நெருக்கமான (நன்றி – எஸ்.ரா.,)  சந்திப்பாக அமைந்தது. நல்லதொரு தொடக்கம். அனுமதிக்கிற சகோதரிக்கு  நன்றி.  படங்களை இந்த முகவரியில் அனுப்பவும். நான் எடுக்க மறந்துவிட்டேன் சௌகரியமாக... ஏனெனில் சரக்கு இருக்கறப்ப, "சைட் டிஷ்' சைடாகவே  இருத்தல் நலம் என்பதால்.
என்னுடைய ப்ளாக் - http://yuva-theprince.blogspot.com/.

நட்புடன்,
யுவா.
===============
யுவா நேரமின்மையால்  உங்களுக்கு நாம் எடுத்த படத்தை  அனுப்ப இயலவில்லை...மன்னிக்கவும்...  நம் சந்திப்பு மிக மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல ஓட்டல்.. மிக முக்கியமாக அந்த அப்பளம் பொரி சைட் டிஷ்...
மீண்டும் சந்திப்போம்.

===============


நான்வெஜ்18+

அவளுக்கு செக்ஸ் பத்தி எதுவுமே தெரியாது. அவள் அப்பாவி. செக்ஸ் ரங்கநாதன் தெருவில் கிடைக்குமா? என்று கேட்கும் அளவுக்கு ஞானசூன்யம்னு வச்சிக்கிங்க.. அவளுக்கு பொறுமையான, அன்பான, கணவனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாங்க.  செக்ஸ் பத்தி தெரியாத பொண்ணு முதலிரவு அறைக்கு போகும் போது மாப்ளை  என்  பொண்ணுக்கு உலகம் தெரியாது.. அவகிட்ட பக்குவமா நடந்துக்கோங்கன்னு சொல்ல.. மாப்ளையும் மண்டையை ஆட்டினான்..  முதலிரவு அறைக்குப் போயிட்டு, அவளுக்கு எந்த பயமும் வரக்கூடாதுன்னு... உன் உறுப்புக்குப் பேரு ஜெயில்.. என் உறுப்புக்குப் பேர் கைதின்னு  அந்தப் பொண்ணுகிட்ட சொல்லி  கோட் நேம் போல வெச்சான்.. அன்னைக்கு நைட், சரி! இப்ப கைதியைப் புடிச்சி ஜெயிலில் போடலாமா?னு கேட்டான். அவளும் மண்டையை ஆட்டினா. கைதியைப் புடிச்சி ஜெயிலில் அன்னைக்கு நைட் மட்டும்  மூன்று வாட்டி போட்டான்.  ருசிகண்ட பூனையா, அந்த  அப்பாவி புதுப் பொண்ணு மாறிப் போனா...  மாமியார்க்காரி இருக்கும் போது கூட.. ஏங்க கைதி தப்பிட்டான்! புடிச்சி உள்ள போடுங்க என்று சொல்ல அவனும் அதே போல செய்தான்... ஆனால், தினமும் கைதி பாடு திண்டாட்டம் ஆயிடிச்சி... ஒரு நாள் நைட் 5வாட்டிக்கு மேல கைதியை புடிச்சி ஜெயிலில் போட்டான்.. ஜெயிலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனா,  கைதிக்கு நாக்கு தள்ளி போயிடுச்சி... ரொம்ப சோர்வா படுத்துட்டு இருக்கும் போது, என்னங்க கைதி  தப்பிச்சிட்டான், ஜெயிலில் தூக்கிப் போடுங்கன்னு அவ சொல்ல...ஏண்டி கைதி விசாரணைக் கைதி தான்.. அவனை ஆயுள் கைதி போல ட்ரீட் பண்ணறேன்னு அவமேல எரிஞ்சி விழுந்தான்.



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

பிடித்தால் நண்பர்களுக்கு அறிமுகபடுத்தவும்.. ஓட்டை மறக்காமல் போடவும்.

12 comments:

  1. நேத்து நடந்த கனிமொழி நாடகம் படித்தவர்கள் மட்டும் அல்ல , படிக்காதவர்களையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது தல . இன்னும் என்ன என்ன நாடகம் நடக்க போகுதோ ?

    ReplyDelete
  2. நடிப்பு அனைத்தும் வீணாய் போச்சு ,மேலும் 24 மீனவர்கள் கைது.ஒரு மீனவர் மோசமாக தாக்கப்பட்டார்.

    http://enathupayanangal.blogspot.com

    ReplyDelete
  3. அண்ணே நான் சென்னைக்கு 2006 ல வந்தேன் அப்ப
    “மிக முக்கியமாக லக்ஷமன் சுருதி சிக்ன” அங்க அவர் பேனர் பார்த்த ஞாபகம். இன்னுமா இருக்கு அங்க?

    ReplyDelete
  4. கனியையும் ராசாவுடன் ஒரே சிறையில் அடைக்கமுடியாதா? விரைவில் முதல்வர் கதை திரைக்கதை வசனத்தில் எத்தனை நாடகங்கள் நடக்கப்போகின்றதோ? ஏமாளித் தமிழனும் இலவசத் தமிழனும் திமுகவுக்காக குரல் கொடுக்கும் முதுகெலும்பு இல்லாத தமிழனும் இருக்கும் வரை கனிமொழி மட்டுமல்ல அவர்கள் குடும்பமே ஏமாத்திக்கொண்டுதான் இருக்கும்.

    அப்பு படப்பாடலைவிட நடன அசைவுகளும் அதனைப் படம் பிடித்திருக்கும் பாணியும் எனக்கும் பிடித்தது.

    ReplyDelete
  5. பதிவை போட்டு வாசகர்களது பதட்டத்தை தணித்த ஜாக்கி அண்ணனுக்கு நன்றி..அருண்

    ReplyDelete
  6. ellam therthal neraththu nadakangal... inthamurai karunanithi eppadi kathai ezhuthinalum Odathu anna...

    sandwich romba nalla irukku.

    ReplyDelete
  7. The other side of Indian fisherman....
    "இந்திய மீனவர்களினால் தொடர்ச்சியாக தமது மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டு லட்சக்கணக்கான ரூபா நட்டமேற்பட்டு வருகிறது, இதனையடுத்து செவ்வாயன்று இந்திய மீனவர்களுடன் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் ஏற்பட்டது, பின்னர் இந்திய மீனவர்களின் 18 இழுவைப் படகுகளை உள்ளுர் மீனவர்கள் கைப்பற்றி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்"
    http://www.bbc.co.uk/tamil/news/story/2011/02/110215_fishermenarrest.shtml

    ReplyDelete
  8. எனக்கு 50 ரூபா தான் பாட்டு புடிக்கும் தல...பெங்களுருவில் வேலை செய்த பொது வீட்டுக்கு அனுப்பிய காசு போக 50 ரூபாயை வைத்து வாழ்ந்த காலம் நினைவுக்கு வரும்...

    ReplyDelete
  9. எனக்கு 50 ரூபா தான் பாட்டு புடிக்கும் தல...

    மீ டூ...

    ReplyDelete
  10. நண்பரே அந்த கனிமொழி அம்மா அய்யோ சாரி அக்கா போராட்டத்துக்கு எங்க ஏரியா பிரியாணி கடையெல்லாம் காலி... ஹம்ம்ம்ம்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner