என்னோடு பயணித்த காதலர்கள்.


லாகர்தம்மாக டிக்கெட் புக் செய்து பயணப்படுவது என்பது எனக்கு இன்னும் கைவரவில்லை.  ஒரு வேளை, மூன்று மணி நேரத்தில் எனது சொந்த ஊருக்கு போய் விடலாம் என்ற அலட்சியம் கூட காரணமாக இருக்கலாம்.

பெங்களுருவில் இருந்து சென்னைக்கு போக தாவது டிக்கெட் புக் செய்து வைத்து இருக்கின்றீர்களா? என்று  பெங்களுர் நண்பர்கள் கேட்ட போது இல்லை. அப்படி ஒரு பழக்கமே என்னிடத்தில் இல்லை என்றேன்.


கடந்த செவ்வாய் இரவு பதினோரு மணிக்கு மடிவாலா பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தேன். கர்நாடக அரசின் ராஜஹம்சா பேருந்து வந்து நின்றது. அதில் ஏறினேன்.

எனக்கு பேருந்தின் முன் பகுதியில் உட்கார்ந்து பழக்கம் இல்லை.  பேருந்தும் கொஞ்சம் கொஞ்சம் நிரம்பி இருந்தது. சிலர் இரண்டு சீட்டையும் ஆக்கிரமித்து படுத்து இருந்தார்கள். கடைசியில்தான் சீட் இருந்தது. கடைசி  சீட் பக்கம் போனால் இரண்டு காதலர்கள் மிக நெருக்கமாக  உட்கார்ந்து இருந்தார்கள். அந்தப் பெண் மெல்லத் திறந்தது அமலா போல பொட்டு இல்லாமல் செமையாக இருந்தார். பையன், அவன் எப்படி இருந்தா நமக்கு என்ன??   என்னைக்கு நாம பசங்களைப் பத்தி கவலைப்பட்டு இருக்கின்றோம். நான் போனதும் சட்டென நெருக்கம் தளர்ச்சி அடைந்தது.  திடீர்னு எருமைமாடு போல, முன்னால  போய் நின்னா யாருக்குத் தான் தளர்ச்சி ஏற்படாது.

சிலருக்கு காதலர்களைப் பார்த்து எரிச்சல் வருவது போல எனக்கு அவர்களைப்  பார்த்ததும் வரவில்லை. பேருந்தில் கடைசி சீட்டுக்கு முன் சீட்டில் உட்கார்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் இரண்டு சீட்டும், கடைசி சீட்டுகளும் காலியாக இருந்தன.  நான் அவர்களுக்கு எதிர் சீட்டுக்கு முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன்.
எனக்கு ஜன்னல் ஓர சீட் பிடிக்கும். தூக்கம் வரவில்லை என்றால் பேருந்தின் ஜன்னல் வழியே  வேடிக்கை பார்ப்பதும் கேமராவை வைத்துக்கொண்டு எதையாவது எடுத்துக்கொண்டு  இருப்பதும் எனது பொழுது போக்கு. யோவ்! இருட்டுல என்னய்யா  எடுப்ப? என்ற  உங்கள் ஆர்வக் கேள்விக்கு பதில்.. வெளிச்சம் வரும் போது எடுப்பேன். மதியம் நானும்,  பெங்களுர் நண்பர் யுவாவும் சாப்பிட்ட போது, நான் மட்டும் டிரிங்ஸ் எடுத்துகொண்டேன். அதனால் இரண்டு மணி நேரம் நன்றாக பகலில் தூங்கி விட்டேன். அதனால் உட்கார்ந்து, உட்கார்ந்து பார்த்தும் தூக்கம் வரவில்லை.

அவர்களுக்கு எதிரான, எனக்கு பின் சீட்டில் ஒருவன் வந்து உட்கார்ந்தான். அவர்கள் பக்கம் திரும்பியவன், வச்சகண் வாங்காமல் அவர்கள் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவர்கள் பக்கம் திரும்பவே இல்லை. எனக்குப் பின்னால் இருந்தவன், அந்தப் பெண்  ரொம்பவும் சிவப்பாக, நார்த் இண்டியன் போல இருந்த காரணத்தால், ஹிந்தி பாடல்களை சன்னமான ஒலியில் ஒலிக்க செய்தான்.

கடைசி இருக்கைகள் காலியாக இருந்த காரணத்தால், நான் கடைசி இருக்கைக்குப் போய் பையை தலைக்கு வைத்து படுத்து பார்த்தேன்.  ஒன்றும்  வேலைக்கு ஆகிவில்லை. கர்நாடகா செக் போஸ்ட் தாண்டியயது லைட் ஆப் செய்தார்கள். வெளிச்சம் வரும் போது எல்லாம் கூட்டணிக்  கட்சிகளுக்குள் பிரச்சினை வரும் போதெல்லாம் சேர்ந்து சேர்ந்து பிரிவார்களே, அது போல அவர்கள் செயல் இருந்தது.


 (ஜன்னல் பக்கத்தில் இருந்நது ஒரு பார்வை)

அவர்கள் எதிரில் உட்கார்ந்து இருப்பவன் இப்போது சுனோனா சுனோனா சுனோனா என்று சத்தமாக அலறவிட்டான்.  தூக்கம் வரவில்லை. ஜன்னல் ஓரம்  இரண்டு போட்டோ எடுத்துத் திரும்பினால் காதலர்கள் இருவரும் கடைசி சீட்டுக்கு டிரான்ஸ்பர் ஆகி இருந்தார்கள். அப்போது தான், அந்தப் பெண்ணை முழுசாகப் பார்த்தேன்.  அவர்களுக்கு எதிர் சீட்டுக்காரனின் பார்வையில் இருந்து தப்பிக்க பின்னால் வந்து இருக்கலாம் அல்லது ......... வேறு என்ன பேருந்தில் செய்து  விட முடியும்?


அவன் பார்மலாக இருந்தான். அந்தப் பெண்  ஒரு  பெர்முடா அணிந்து,  மேலே பனியன் போட்டு, அதன் மேல் ஜெர்க்கின்  அணிந்து இருந்தாள்.  எதிர் சீட்டுக்காரனின் பார்வையில் இருந்து தப்பிக்க, அந்தப் பெண்  ஜெர்க்கினை புல்லாக மூடி இருந்தால் அவன் காதலனே  ஒரு சில இடங்களை ஸ்பரிசிக்க நிறையப் போராட வேண்டும்.. நிறைய மெனக்கெட வேண்டும், என்று நினைத்துக்கொண்டேன். பாவம்....

இப்போது என்னால் கடைசி சீட்டில் பயணிக்க முடியாது. எனக்கு இரண்டு சீட் தள்ளி அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள்.  அந்தப் பேருந்தில் உள்ளே விளக்கை அணைத்தாலும், பேருந்தின் மேற்புரத்தில் உள்ள மஞ்சள் பிளாஸ்டிக் ஷீட் மேலே  பேருந்தின் மேலே டாப்பில் முன்பக்கமும் பின்பக்கமும் பொருத்தி இருந்தார்கள். அதனால் எங்காவது தெருவிளக்கு இருந்தால் அந்த இடத்தை பேருந்து கடக்கும் போது அந்த தெருவிளக்கு  வெளிச்சம் பெருந்தின் மேற்கூரை வழியாக  பேருந்தினுள் அவ்வப்போது வந்து போனது.

சத்தியமாக நம்புங்கள் நான் எதேச்சையாக அந்த பக்கம் திரும்பினேன்... எதுக்கு திரும்பினே??  எனக்கு  நான் பயணப்படும் பேருந்துப்  பக்கம் பெரிய பெரிய கண்டெய்னர் லாரி கிராஸ் பண்ணும் போது, அது கடக்கும் வரை அதையே கவனிப்பேன். அதனால், அந்தப் பக்கம் திரும்பிய போது, அந்தப் பெண் ஜெர்க்கினுக்கு  எந்த போராட்டமும் இல்லாமல்  விடுதலை கொடுத்து இருந்தாள்.


(கர்நாடகா பார்டர் டோல் கேட்.. வாகனம் கடக்கும் போது,)
அவர்கள் மேல் எரிச்சல் இல்லாவிட்டாலும், தமிழகத்தின் அல்லது உலகத்தின் பொது புத்திக்கு நானும் விலக்கு அல்லவே.,  அதனால், ஏதாவது ஒரு நேரத்தில் அந்தப் பக்கம்  அனிச்சையாக, திரும்ப வாய்ப்பு  இருக்கும் என்பதால் நான்
கேமராவை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, எனக்கு முன் சீட்டு ஹிந்தி பாட்டுக்காரனுக்கு முன் சீட்டில், நான் ஏற்கனவே உட்கார்ந்து இருந்த இடத்தில் போய் உட்கார எழுந்தேன்.


அவன் என்னை தெய்வமாகப் பார்த்தான். நான் எனது சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டேன். பேருந்து தூங்கியது. எனக்கு தூக்கம் வரவில்லை. பிக்கனபள்ளி அருகே அக்க்ஷயா பவனில் பேருந்து நின்றது.  தருமபுரி பேருந்தில் இருந்து இறங்கிய கிராமப் பெண்கள் சிறுநீர் கழிக்க மூன்று ரூபாய் மிச்சம் பண்ண, அப்படியே ஓரமாக ஒதுங்க  நினைக்க, அங்கு நின்று இருந்த  செக்யூரிட்டி விசில் அடித்து  அந்த  பெண்களை  கலவரப்படுத்தி  கட்டண கழிவறைக்கு திருப்பி அனுப்பினான்.

திரும்பவும்  பேருந்தில் ஏறினேன்.  காதலர்கள் இருவரும் அசதியில் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். பாட்டுப் பார்ட்டி இப்போது தமிழ் பாடல்களுக்கு தாவி இருந்தாலும், அவர்கள் பக்கம் அவ்வப்போது தலை திருப்பி அவர்களை கவனித்துக் கொண்டு இருந்தது.

(கர்நாடகா அரசு பென்ஸ் பேருந்து)


வேலூர் பக்கத்தில் ஒரு டீக்கடையில் பேருந்து திரும்பவும் நின்றது.  நான் இறங்கி டீ சாப்பிட்டேன். ஒரு கர்நாடக மெர்சிடிஸ் பென்ஸ் பேருந்து ஒரு சின்ன இடைவெளியில் வளைந்து நின்றது பாருங்கள். அந்த ஸ்டைலைப் பார்த்து மிரண்டு விட்டேன். பேருந்து சுத்தத்துக்கு கர்நாடகா பேருந்துகளை அடித்துக் கொள்ள முடியாது.
(விடியலில் சென்னை   கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் பணிகள்....டுவைலைட்டிங்கில் பிளாஷ் இல்லாமல் எடுத்த இந்த படம் எனக்கு பிடித்த படம்.)
சென்னை கோயம்பேடு வந்தது மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாலும் பேருந்தை வழியில் நிறுத்தி அனைவரையும் ஏற்றி இறக்குவதாலும் பேருந்து  உள்ளே செல்ல நீண்ட நேரம் பிடித்தது.. காதலர்கள் இறங்கினார்கள்.. அந்த பாட்டு பார்ட்டியும் கூடவே இறங்கியது... அவர்களைப் பின்தொடர்ந்து ரொம்ப ஸ்டைலாக நடை போட்டது.. அதில் ஒரு சந்தோஷம் போல....


குறிப்பு

சஞ்சய் காந்தி திருமணத்துக்கு  மொரப்பூர் போய் விட்டு, அப்படியே  பெங்களுர் செல்வதாக இருக்கின்றேன்.  அடுத்த வாரமும் பெங்களுர்தான்.
===========பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

பிடித்தால் நண்பர்களுக்கு அறிமுகபடுத்தவும்.. ஓட்டை மறக்காமல் போடவும்.

10 comments:

 1. தலைப்பை பார்த்தவுடன் ஏதோ வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்த் மாதிரி காதலுக்கு மரியாதை கொடுக்க கிளம்பி விட்டீர்களோ எனத்தோன்றியது.

  ReplyDelete
 2. நடுநிசி சிங்கம்!

  ReplyDelete
 3. எதிர்நோக்கின பதிவு.
  பயணிகள் கவனிக்கவும்... ஜாக்கி இருக்கார்.
  பாதுகாப்பான பயணத்துக்கு பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 4. பேருந்து தூங்கியது. எனக்கு துக்கம் வரவில்லை.

  epapdi varum.... ennavo ponga boss...

  ReplyDelete
 5. //Yuva said...
  எதிர்நோக்கின பதிவு.
  பயணிகள் கவனிக்கவும்... ஜாக்கி இருக்கார்.
  பாதுகாப்பான பயணத்துக்கு பிரார்த்தனைகள்.//

  அடடா... தப்பார்த்தம் ஆயிடிச்சே. என் பிரார்த்தனைகள் தங்களின் இந்த ட்ரிப்-க்காக. சகபயணிகளுக்காக இல்லை.

  ReplyDelete
 6. நிகழ்வை அருமையாக சொல்லி இருக்கு றீர்கள் இந்த போட்டோ எல்லாம் மொபைல் ல எடுத்ததா ?அருமை அருமை

  ReplyDelete
 7. பேருந்து காதலர்களே...

  அண்ணன் ஜாக்கி அவ்வப்போது சொல்லாமல் கொள்ளாமல் நகர்வலம் வருவார்... எச்சரிக்கை...

  ReplyDelete
 8. amaam ovvoru pathivilu ottai podavum appadeengareengale enge ottai podanumnu sollavelliye?

  ReplyDelete
 9. Bus View Photo Super, Chennai Coiyambedu Photo Super, Lovers Disturb Panna Kudathu Endra Ennam Romba Super,

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner