காதலர்தினம்...ஒரு பிளாஷ்பேக்...
எனக்கு நிறைய காதலிகள்...நிறைய பகிர்தல்கள்...மனதாலும், உடம்பாலும் நிறையவே கடந்து வந்து இருக்கின்றேன்.யாரையும் நம்பவைத்து கழுத்து அறுத்ததில்லை..நம்பிக்கை வார்த்தை கூறியதில்லை,பெண் நண்பிகள் நிறைய...அழகை ரசித்து இருக்கின்றேன்... நெருங்கிய பெண்களிடம் என் சூழ்நிலை சொல்லி விலக்கி இருக்குன்றேன்...
முதலில் என்னோடு பழகும் எந்த பெண்ணுக்கும் என்னை பிடிக்காது... என் நடை,உடை, பேச்சில் ,ஒரு roughness இருக்கும் பார்த்த மாத்திரத்தில் என்னை பொறுக்கி என்று வெகு அழகாய் முத்திரை குத்தி விடுவார்கள்...
ஆனால் எனக்கு நிறைய காதலிகள்.. அவர்கள் காதலை என்னிடம் சொன்ன போது எல்லாம் எனக்கு திருமணமாகாத நான்கு தங்கைகள் கட் ஷாட்டில் வந்து போவார்கள்..
நான் ஒன்றும் மன்மத குஞ்சு அல்ல... ஆடுகளம் தனுஷ் போல வெட வெட வென்று இருப்பேன்..கன்னதசைகள் குறைவாக இருந்த காரணத்தால் சிறுவயதில் விபத்தில் தானகவே மாற்றி அமைத்துக்கொண்ட என் முன் பல்வரிசை சற்று அதிகபடியான இன்பிரியாரிட்டி காம்ப்பளக்சை. எனக்கு கொடுத்தது...கருப்பு வேறு, வசதி இல்லை என்று எனக்கு நானே கற்பித்துக்கொண்ட காரணிகளுடன் நான் இருந்தேன்..
எனக்கு நிறைய இன்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் அதனால் இயல்பாய் நெருங்கும் பெண்களை கூட நான் தவிர்த்து இருக்கின்றேன்.. நான்கு பெண்கள் என்னை வெகு நெருக்கமாய் நேசித்து. அது காதல் என்று எனக்கு புரிய வைத்த போது கூட.. நமக்கு எங்கே இது எல்லாம் வாய்க்கப்போகின்றது என்றே அவைகளை இழந்து இருக்கின்றேன்..
நான் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ராமகிருஷ்னாஉதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தவன்...அதுவரை எண்ணெய் தடவி பவுடர் அடித்து ,சின்னதாக சாந்து பொட்டு வைத்துக்கொண்டு தினசரி பள்ளி சென்றவன் நான்...காரணம் அது ஒரு ஐயர் நடத்திய பள்ளி...
அதன் பிறகு கடலூர் கம்பியம்பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளிக்கு சென்றவுடன்...எனக்கு மீசை அரும்பும் போது எனக்கு இன்பிரியாரிட்டி காம்ளக்சும் சேர்ந்து அதிகமாக அரும்பிது... அதனால் நான் கண்ணாடியில் முகம் பாத்து,வருடக்கணக்கு ஆகியது..உடைகளில் நல்ல லுக் இருக்கின்றதா, இல்லையா என்று எல்லாம் நான் பார்த்தது இல்லை... உடலை மறைக்க ஒரு உடை என்பதாகவே நான் உடை அணிந்து இருக்கின்றேன்.
பவுடர் போட்டுக்கொள்ளவே மாட்டேன் ஏன் என்று கேட்கும் போது? ஆண்மகனுக்கு எந்த மேல் பூச்சும் தேவையில்லை என்று சொல்லி இருக்கின்றேன்.. முதல் காரணம் இண்பிரியாரிட்டி காம்பளக்ஸ்.. இரண்டாவது அப்படியே நான் காதலிக்க நினைக்கும் போது என் நான்கு தங்கைகள் நினைவில் வந்தார்கள்...
ஷேவ் செய்யும் போது கூட முகத்தை சிலர் ரசித்து சிலாகித்து வாயில்உள்ளே நாக்கை உருட்டி தாயபாஸ் போல சூழல விட்டு ரசிப்பார்கள்...நான் கடமைக்கு ஷேவ் செய்துவிட்டு வருவேன்..என் முகத்தை என்க்கு பிடிக்காது.. நான் அழகில்லை என்று எனக்கு நானே போட்டுக்கொண்ட வேலிகள்..வெறுப்பின் உச்சமாய் என் வாழ்க்கை இருந்த காலகட்டம் அது..
பன்னிரென்டாம் வகுப்பு படித்த போது ஒரு முஸ்லிம் பெண்... டியூஷன் சென்டரில் பழக்கம், என் பக்கத்தில்தான் உட்காருவாள், அந்த பெண் கேரளா...படம் நடத்திக்கொண்டு இருக்கும் போது சட்டென அவளை பார்த்தால் அவ்ள் என்னை பார்த்துக்கொண்டு இருப்பதை நான் உணர்ந்து இருக்கின்றேன்.. வீட்டில் இருந்து அவள் எடுத்து வரும் சாப்பாட்டை என்னோடு பகிர்ந்தே உண்பாள்... படிப்பு முடிந்து போய்விட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு கேரளாவுக்கு கிளம்ப, லோக்கல்பேருந்தில் ஏறும் முன் களுக் என்று கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டு ,என் கைபிடித்த அழுத அந்த பெண்ணை நட்பு பிரிதலுக்கு அழுகின்றாள் என்று நினைத்து, தோள் சாய்த்து அனைத்து பேருந்து ஏற்றிவிட்டேன்... அதே பெண், இரண்டு குழந்தைக்கு தாயாக என் சொந்தஊர் திரும்ப வருகையில் அவளுடைய பெண் நண்பிகள் என்னிடத்தில் அவள் என்னை காதலித்த கதையை சொன்ன போது , ஏன்டி என்னிடம் முன்னாடியே சொல்லவில்லை என்று அவளுடைய பெண் நண்பிகளை சகட்டுமேனிக்கு திட்டியது காலம் கடந்த கதை...
எதனால் அவளுக்கு என்மீது காதல் வந்து இருக்கும் என்று நிறைய யோசித்து இருக்கின்றேன்...அவள் என்னை காதலித்தால் என்று அவள் நண்பிகள் என்னிடத்தில் சொன்ன அன்று இரவு வெகு நேரம் என் வீட்டில் இருக்கும் ரசம் போன கண்ணாடியில் என் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன்.....அந்த காதல் தோல்வியில் முடிந்தாலும் அன்றிலிருந்து எல்லா கண்ணாடிகளும் என்னை அழகாய் காட்டுகின்றன...
வைரமுத்து சொன்னது போல்
என் வீட்டு கண்ணாடி என்னை ஒரு போதும் கருப்பாய் காட்டியதில்லை....
இப்போதும் எப்போதாவது கண்ணாடியை ரசித்து என் முகம் பார்க்கையில் மிக மெல்லிதாய் அந்த கேரளத்து பெண்ணின் முகம் பிளாஷ் கட்டில் வந்து போகின்றது......
====================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
ஓட்டு போட மறவாதீர்கள்.
Labels:
அனுபவம்,
நினைத்து பார்க்கும் நினைவுகள்....
Subscribe to:
Post Comments (Atom)
Idan Ullagam ....... This is the fact
ReplyDeleteஜாக்கி அதான் உங்க முதல் காதலா? காதல் காலம் கடந்து தெரிய வரும்போது வலிதான்... ஆனா அதுதான் உங்களை கொஞ்சம் கொஞ்சமா மாத்தி இருக்குன்னு நெனைக்கிறேன்.
ReplyDeleteராமசாமி.. அதுதான் முதல் என்று என்னால் சொல்ல முடியாது... இந்த பொண்ணுக்கு நம்மகிட்ட என்னத்தை பார்த்து காதல் வந்து இருக்கும்னு கண்ணாடி பார்க்க வைத்தவங்க அவுங்கன்னு சொல்லலாம்..
ReplyDeleteவணக்கம் அண்ணே.. நா உங்களோட இந்த தளத்த கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா ரெகுலரா/தினமும் படிச்சிட்டு வரேன்.. நா தினமும் காலைல ஆப்பீஸ் வந்து முதல் வேலை உங்க ப்ளாகும் , கேபிள் சாரோட ப்ளாகும் தான் படிக்கறது. ஆனா பின்னூட்டம் ஏதும் போட்டது இல்ல (ப்ரோபைல் இல்லாத நம்மள மதிக்க மாட்டங்கன்னு ஒரு சின்ன பீலிங்). ஆனா இந்த பதிவு போட வச்சிடுச்சு ..உங்களோட பெரிய ஸ்பெஷாலிட்டி நீங்க ரொம்ப உண்மையா பேசறீங்க. வார்த்தைகளுக்கு மேக்கப் போடறது கெடயாது. மனசுக்கு பட்டத அப்படியே சொல்றீங்க. உங்க ப்ளாக்ல இது வர எனக்கு ஒரு சின்ன விஷயம் கூட இவரு மத்தவங்க படிக்கறதுக்காக கொஞ்சம் exaggerate பண்றாரு அப்டீன்னு தோணினது கெடையாது. முகம் தெரியாத ஆனா ரொம்ப பழக்கப்பட்ட நண்பர் , தான் பார்த்த நமக்கு சுவாரசியமா, நகைச்சுவையா சொல்றாருன்னு தான் எனக்கு தோணும்.
ReplyDeleteஇப்படியே தொடர்ந்து கலக்குங்க.. உங்களோட எல்லா வெற்றிகளுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அருமை !!! இப்பொழுது நினைத்தாலும் அந்த காதல்(கள்) சொர்க்கமாகத்தான் தோன்றுகிறது:-) :-(
ReplyDeleteஅண்ணே... அந்த போட்டோவுல ஹீரோ மாதிரி இருக்கீங்க...
ReplyDeleteஉங்கள் காதல் அனுபவங்களை அழகாக பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்கண்ணே :))
ReplyDeleteஇப்போ என்ன அதுக்கு? நல்லதா ஒரு போட்டோ வே போட்டு வலை விரிகிற மாதிரி தெரியுதே அதுவும் வீட்ல ஆள் இல்லாத நேரம் நடக்கட்டும். அப்பாட எதோ நம்மளால முடிஞ்சது.
ReplyDelete"அவள் என்னை காதலித்தால் என்று அவள் நண்பிகள் என்னிடத்தில் சொன்ன அன்று இரவு வெகு நேரம் என் வீட்டில் இருக்கும் ரசம் போன கண்ணாடியில் என் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன்.....அந்த காதல் தோல்வியில் முடிந்தாலும் அன்றிலிருந்து எல்லா கண்ணாடிகளும் என்னை அழகாய் காட்டுகின்றன..."
ReplyDeleteகவிதை. :D
நல்லது அடுத்த காதலர் தினத்துக்கு அடுத்த காதலை சொல்லுங்க .அருமை அருமை
ReplyDeleteSame blood.....
ReplyDeleteகொஞ்சம் வித்தியாசமான பதிவு பாஸ்கிட்ட இருந்து!!
ReplyDeleteநமீதாவுக்கு "மொக்கை பதிவர்கள்" பற்றி கடிதம்!
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_15.html
காதலர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteஎழுத்து நடை சுவாரஸ்யமாக உள்ளது, சினிமா சம்பந்தப்பட்ட போஸ்ட்களை விட இது போன்றவை நன்றாக உள்ளது
jacky sir photo kalakkal nalla vekka paduringa ponga.........
ReplyDeleteகல்லுக்குள் கேரள ஈரம் !
ReplyDeleteNice Photo Boss...supera irukku.... :)
ReplyDeleteanbydan jakke thankagai kaka sondha verubagalai vitukudathtuka paratukal vanzthukal pasam vandum enna nasam vandam endra ungal manam pdeitherukeerathu kadhal faileyar vadanai vanndam nalla manavei kudumbam ethu podum NADPUDAM NAKKEERAN
ReplyDeleteநானும் காதலிக்காமல் போய்விட்டேனே?
ReplyDelete