ஆல்பம்
இனிதமிழர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன் என்று நடிகர் விஜய் சூளுரைத்து இருக்கின்றார்...மகிழ்ச்சி ஒரு பிரபலம் அடிமட்டத்து மனிதருக்கும், மக்களுக்கும் குரல் கொடுத்து இருப்பதை வரவேற்கின்றோம்.. ஒரு நடிகன் அரசியலில் புகுந்து முதல்வர் பதவிவரை செல்வது எம்ஜிஅருக்கு பிறகு அது யாருக்கும் சாத்தியபடாது. காரணம் எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் சினிமா பொத்திவைக்கபட்ட விஷயம்.. ஆனால் இப்போது அப்படி இல்லை....அதே பொதுக்கூட்டத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு நாள் தூங்க மாட்ட என்று பேசியது கொஞ்சம் ஓவர்...
============================
நியூசிலாந்தில் பூகம்பம் என்றதும் எனக்கு துளசி டீச்சர் ஞாபகம்தான் வந்தது.. நல்லவேலை அவர்கள் இந்தியாவில் சுற்றுபயணத்தில் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.
இந்த பூகம்பத்தில் 80 பேருக்கு மேல் உயிரோடு புதைந்து போய் இருக்கின்றார்கள்.
மிக்சர்
தப்பாக கைமுறுக்கி படுத்துவிட்டேன் இரண்டுநாட்களாக கைகைளில் செமவலி... நேற்று இரவுகடுமையான கைவலி...தூக்கமே இல்லை...கையை தூக்கி சட்டையை போட முடியவில்லை.... எவன்கிட்டயாவது கோத்துகிட்டா முதல் அடியை வலது கையால தடுத்துடலாம்... அடுத்த அடியை இடதுகையால தடுக்கமுடியாம நேரா என் மூக்குக்குதான் எதிராளியின் கை வரும்... அதை துடுக்காமல் தேமே என்று எனது இடது கை வேடிக்கை பார்க்கும் என்பதாலும், சரி இதுக்கு மேல டாக்டருக்கு மொய்வைக்கவில்லை என்றால் காலைக்கடன் கழிக்கவே பிரச்சனை ஆகிவிடும் என்பதால், காலையில் பிடிஎம் தாவற்கரையில் இருக்கும் ஒரு கிளினிக்கில் பொது மருத்துவரை பார்த்தேன்.. ஊசி எழுதி கொடுத்தார்... ஊசி இருபது ரூபாய்தான்... நர்ஸ் பல்ஸ் பார்த்தார்.... ஊசியை இடுப்பில்தான் போட வேண்டும் என்று சொன்னார்... காலங்கார்த்தால ஜாக்கியின் கற்புக்கு வந்த சோதனையை நினைத்துக்கவலைபட்டேன். நர்ஸ் நம்மகலரில் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.. நர்ஸ் சேரநாட்டு மேக்கிங் என்பதால் எனக்கு தாழ்வுமனப்பான்மை வந்து தொலைத்தது...சரி வருவது வரட்டும் சூனா பானா என்று மனதை தேற்றிக்கொண்டு கவுந்து படுத்தேன் ஊசி போட்டார்... பீஸ் 100ரூபாய் என்றார்.. மொத்தம் 120மட்டுமே... நம்ம ஊரில் 10க்கு 10 கடையில் இருக்கும் டாக்டரே 150ரூபாய் பீஸ் வாங்குகின்றார்கள்... இங்கு தேவலை என்று சொல்லவே இந்த கதை.....
================================
பெங்களூரில்இரண்டு தினத்துக்குமுன் மழை பெய்தது...டேய் இவனுங்க வாழறானுங்கைய்யா என்று பொறாமைபட்டேன் இரவு சென்னையில் இருந்து நண்பர் எஸ்எம் எஸ் செய்கின்றார்.. சென்னையில் நல்ல மழை அங்கே ஏப்படி என்று??? பராவயில்லை சென்னையில் நடு இரவில் பெய்த அந்த பலத்த மழை... கொஞ்சம் சூட்டை தணித்து இருக்கின்றது..
=============================
சன்டிவியில் அனுபல்லவி சீரியலில் காதலன் காதலியிடம் படத்துக்கு போலாமா என்று கேட்க..?அதுக்கு ஆடுகளம் படம் ரொம்ப நல்லா இருக்காம், பாட்டு எல்லாம் செம சூப்பர் என்று சொல்வதை பார்த்தேன்.. எதில் எல்லாம் விளம்பரம் பாருங்கள்.
படித்ததில் பிடித்தது...
பதிவுலகில் இரண்டு பேர் பேச்சை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.. சிலநேரத்தில் சிலது படு மொக்கையாக இருக்கும்... சிலது மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கும்...அந்த இரண்டு பேர் ஒன்று மணிஜி... மற்றது கார்க்கி...
கார்க்கி பேச்சை நிறைய ரசிக்கலாம்....சமீபத்தில் கார்க்கி எழுதி நான் ரசித்த டுவிட்..
பணத்தால் வாங்க முடியாத மூனு விஷயம்
1.அன்பு
2.ஆரோக்கியம்
3.சவுரவ்கங்குலி
===================================
இந்தவார சலனபடம்..
கிரிக்கெட்பீவரில் நாடே பித்து பிடித்து இருக்கின்றது.. எனது மாணவ செல்வங்கள் நமது கிரிக்கெட் அணிக்கு உற்சாகம் ஊட்டும் விதமாக ஒரு சலனபடத்தை உருவாக்கி இருக்கின்றார்கள்.. பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்கள்..
==========================
இந்தவார கடிதம்
Hi jackiesekar ,
Zia with u from Kuwait i hope everything fine there when i read your blog am really enjoy on that moment
past 1 year am reading your blog its very entertaiment and very useful information for me we don't know what's going
on our home town when we read your messages i learn something from that so pls goahead .
--
Thanks & Regards
A.Md Zia
Onsite Technician
=====================================
பார்த்ததில் பிடித்தது.
இங்கே பெங்களூரில் ஒரு பத்து கண் தெரியதவர்கள் பாட்டு பாடி சத்தமாக பிச்சைஎடுத்து நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்..இரண்டாவது மாடியில் இருந்து தனது அப்பாவிடம் காசு வாங்கி வேகமாக இறங்கி அவர்களிடம் அந்த காசை சேர்பித்தது கவிதை....
==========================
இந்த வார நிழற்படம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் எடுத்த போட்டோ அவசரம் என்ற காரணத்தால் டோக்கன் போடாமல் வெளியே வாகனத்தை நிறுத்தி விட்டு பேருந்தில் ஏற்ற உங்கள் மகனையோ மகளையோ அழைத்துக்கொண்டு வேகமாக உள்ளே போனீர்கள் என்றால் உங்கள் வாகனம் தற்கொலை செய்து கொண்டது போல தரையில் கிடக்கும்... நிறைய பேர் நிறுத்தி இருந்தார்கள் அதனால் நானும் நிறுத்தினேன் என்று நீங்கள் சொன்னால் காரணம் எடுபாடாது... இப்படி வாகனத்தை தள்ளிவிடும் வேலையை அங்கே கோயம்பேடு வாகன நிறுத்தத்தை காண்ட்ராகடர் எடுத்த நண்பரின் அரும்பணியாம் இது... அதனால் வாகனம் ஜாக்கிரதை....
===================
பிலாசபி பாண்டி..
புத்திசாலிகள் ரகசியத்தை இதயத்தில் வைத்து இருப்பார்கள் முட்டாள்கள் உதட்டில் வைத்து இருப்பார்கள்...
=================
நான்வெஜ் 18+
ஒரு பெண்ணின் டி ஷர்ட்டில் எழுதி இருந்த வாசகம்...
F....CK
IT, NEEDS U
பொண்டாட்டி, பேப்பர் படிச்சிகிட்டு இருக்கற புருசன் கிட்ட சொன்னா பக்கத்து வீட்ல புருசன் பொண்டாட்டிக்குள்ள அடிதடியே நடக்குது... ஒருதடவை போயிட்டு என்னன்னு கேட்டுட்டு வாங்களேன்...நான் ஒருதடவை போனதாலதான் சண்டையே...........
Me the First
ReplyDeleteநர்ஸ் சேரநாட்டு மேக்கிங் என்பதால் எனக்கு தாழ்வுமனப்பான்மை. What does it mean ? Why u say so after seeing Kerala Nurse ?
ReplyDeleteMe the First... Heyyyyyyy...
ReplyDelete//போட்டோ அவரம் என்ற காரணத்தால்//
ReplyDeleteஅப்பதான் “அவரம்” இப்ப என்ன “அவசரம்” ?
பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி...
ReplyDeleteஜெகன் அப்படி பெருசு பெருசா எழுதி கெடுத்து வச்சி இருக்கேன் போல...
வாய்யா புருப்ரீர்டர் புண்ணியகோடி திருத்திட்டேன்.
அன்பின் ஜாக்கி,
ReplyDeleteமடிவாளா செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் ரூ50 க்கு சிறப்பு மருத்துவரையே காலை நேரங்களில் பார்ககலாம்.சிறப்பான சேவை நியாயமான கட்டணம்.
அன்புடன்
அரவிந்தன்
..பீஸ் 100ரூபாய் என்றார்.. மொத்தம் 120மட்டுமே.....
ReplyDeleteஇந்த டாக்டருக்கு நம்ம ஊர்ல பேரு பொழைக்கத் தெரியதாவன்...
அருமை லேட் ஆக வந்ததிற்கு கை வலியும் காரணமோ? இப்ப எப்படி?
ReplyDeleteஅண்ணே சரியான நேரத்தில் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் வந்தது மிக்க மகிழ்ச்சி.உடம்ப பாத்துக்குங்க. சுத்தி போடுங்க வர்ற வெள்ளிக்கிழமை, ரொம்ப கண்ணடி பட்டிருக்கு உங்கமேல.
ReplyDeleteவணக்கம் அன்பரே ...உங்களது வார்த்தைகள் வசீகரிக்கின்றன.முழு நேர வாசகன் ஆகிவிட்டேன் ...
ReplyDeleteஇப்படி வாகனத்தை தள்ளிவிடும் வேலையை அங்கே கோயம்பேடு வாகன நிறுத்தத்தை காண்ட்ராகடர் எடுத்த நண்பரின் அரும்பணியாம் இது... அதனால் வாகனம் ஜாக்கிரதை....
ReplyDelete=================== its true.. i saw an incident last month wen i came to chennai..
husband and wife with a kid stopped their vehicle in that place (place which is in photo) its a new pulsor, that contractor idiot without courtesy he pushed that vechile.. that husband and wife were arguing that will be back in 2mins but that idiot treated them like anything with very irrespective words.. i am not telling that family man wt e did is correct but that contractor would have told him little polite r atleast courtesy... stupids..
Nice entry. I hope you get better soon.
ReplyDeleteI love that video as well as the joke.
Very Nice.
ReplyDeleteஎந்த ஒரு பதிவ போட்டாலும் அதை உன் ஸ்டைல்ல எழுதி எங்கள பரவசப்படுத்துற பாரு..கலக்குற தல.
ReplyDeleteதமிழ் பதிவுலகின் சுஜாதா நீஇர்..