அல்பம்..
30 சட்டசபை சீட், ஒரு ராஜ்யசபா சீட் பா.ம.க.வுக்கு கொடுத்ததில் தெரிகின்றது .. கலைஞரின் பயம்...அதிமுகவிடம், நடிகர். கார்த்திக் பத்து சீட் தனது கட்சிக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கின்றார். காங்கிரசும், திமுகவும் தொகுதிப் பங்கீடு பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். தே.மு.தி.க.வுக்கு எத்தனை சீட் என்று இன்னமும் தெரியவில்லை.. பார்ப்போம்.
==========
பாராளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்கி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடளுமன்ற கூட்டுக்குழு தேவை என்பதை வலியுறுத்திய எதிர்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது. டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளார்கள். போன குளிர் கால கூட்டத்தொடர் முழுவதும் அவை முடங்கியது.. இன்று ஒத்துக்கொண்ட ஆளும்கட்சி அன்றே ஒத்துக்கொண்டு இருந்தால், அவை நடந்து இருக்கும் .. ஏதாவது நல்ல காரியம் இரண்டு அல்லது மூன்றாவது நடந்து இருக்கும்.......
=======================
செல்போனில் பேசியபடி சென்னை சைதாப்பேட்டையில் ரயில்வே டிராக்கை கிராஸ் செய்த பெண் ரயில் மோதி பலி.. அடுத்த மாதத்தில் அந்த பெண்ணுக்கு திருமணம். ஒரு தனியார் சேனலில் எடிட்டராக வேலை செய்கின்றார்... செல்போன் பேசிய படி டிராக் கடப்பது இப்போ சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.. இது பற்றி நான் விரிவாக ஒரு பதிவு எழுதி இருந்தேன். ரயில் டிராக்கை பாதுகாப்பாக கடப்பது நமது பொறுப்பு என்பதை நாம் எப்போது உணரப் போகின்றோம்.???
===================
ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்கின்றோம், காலதாமத்த்தை தலைப்பில் அறிவிக்கின்றோம்.. இது என்ன ரயிலா? நேரத்தை எல்லாம் குறிப்பிட? என்று ஒரு மெயில் நக்கல் விட்டு வந்தது.. நான் எதையோ பண்ணிட்டு போறேன்...ஏண்டா நீ இங்க வந்து உன் பொன்னான நேரத்தை வேஸ்ட் பண்ணிகிட்டு.... இன்னைக்கு நொடியோட போடறேன் பாரு... இப்ப என்ன பண்ணுவ????
==========
பிரதமர் ஸ்பெக்ட்ரம் விவகாரம் எனக்கு தெரியாமல் நடந்த ஒரு சம்பவம் என்று திருவாய் மலர்ந்து இருக்கின்றார்..நீதான் இந்த நாட்டுக்கு பிரதமர் என்பதாவது உனக்கு தெரியுமா? அல்லது தெரியாதா என்று யாரோ எங்கேயோ டிவிட்டில் கேட்டதை படித்த ஞாபகம்.
============
மிக்சர்
இன்னும் இரண்டு வாரத்துக்கு மேல் பெங்களூரில் வாசம்...இன்று இரவுதான் பெங்களூர் வந்தேன். என்கிட்ட பேசணும்னா ஒரு மேசேஜ் தட்டுங்க.. லோக்கல் நம்பரில் இருந்து நான் கூப்பிடுகிறேன் ... ரோமிங் என்ற பெயரில் இன்கம்மிங்குக்கு ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் டெபிட் ஆவதால் எஸ்.எம்.எஸ் செய்யுங்கள்.. ரொம்ப அவசரம் என்றால் போன் செய்யுங்கள்.=========================
சஞ்சய் கல்யாணத்துக்கு போன போது, கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரிக்கு போகும் வழியில் காவேரிப் பட்டினம் என்ற ஊரில் பிளக்ஸ் எல்லாவற்றிலும் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் ஜெ.வின் புன்னகை போட்டோக்கள் அந்த ஊர் முழுக்க நிரம்பி இருக்கின்றன.
================
இரண்டு அஞ்சலிகள்...
சமகாலத்தில் தமிழன் வீரத்தை உலகஅளவில் நிலைநாட்டிய பிரபாகரன் என்ற மாவீரனை பெற்று உலகத்துக்கு கொடுத்த பெண்மணி பார்வதி அம்மாள் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.
=====
பிரபல பாடகர் மலேசியாவாசுதேவன் அவர்களும் இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த வார சலனபடம்
இந்த பாட்டு என்னோட ஆல்டைம் பேவரிட்... இந்தப் படமும் எனக்கு ரொம்ப பிடிச்ச படம் தான்.
====================
என் அம்மா இறந்த பிறகு, எங்க அப்பா அடிக்கடி முணுமுணுக்கும் இந்த பாடல் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் அத்தனை பேருக்கும் இந்த பாடல் பரிட்சயம்... அப்பா சத்தமாக இந்த பாடலை பாடுவார்.. இந்த பாடலில் வரும் என்ன சொல்லுவேன்? என் உள்ளம் தாங்கலை என்ற வரிக்கு அழுத்தம் கொடுத்துப் பாடுவார்... மேலுள்ள, இரண்டு பாடல்களும் மலேசியா வாசுதேவனுக்கு சமர்ப்பணம்....
======================================
நடுநிசிநாய்கள்...
படம் பார்த்து விட்டு, இரவு ஒரு மணிக்கு நண்பர் ஒருவர் போன் செய்தார்... சார்! எப்படி சார் இப்படியெல்லாம் படம் எடுக்கறாங்க?னு பொங்கிவிட்டார்... நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்... இந்திய சென்சார் ஒரு படத்துக்கு ’ஏ’ சர்ட்டிபிகேட் கொடுக்கிறது எதுக்குனா, குடும்பத்தோட பார்க்கக் கூடிய படமல்ல என்பதற்காகத் தான். ஆனா, குடும்பத்தோடு போய் படத்தை பார்த்துட்டு, குய்யோ முறையோன்னு காத்தாதீங்கய்யானு ஏற்கனவே சொல்லி இருந்தேன்.. பலர் அப்படியும் மனைவியை அழைச்சிகிட்டுப் போயிட்டு ரொம்ப வெறுத்துப் போயிட்டோம் என்று போன் செய்து சொன்னார்கள்.. என் ஒய்ப் ரொம்ப டென்ஷன் ஆயிட்டாங்க. ஏன்? என்றால் அப்படிச் சொன்னாத் தான் அவுங்க மனைவி கற்புக்கரசின்னு நாம நினைப்போம்னு நினைக்கறாங்க... நாங்க சுனாமியிலேயே சும்மிங் போட்டவங்கன்னு படத்துல சொன்ன டயலாக்குக்கு நடிகர் தனுஷ்க்கு ஒரு மீனவ அமைப்பு எதிர்ப்பு தெரிவிச்ச நாடு இது. நடுநிசிநாய்கள் படத்துக்கு எதிர்ப்பு நிறைய வரும்.. ஒரு படைப்புக்கு ஆதரவோ எதிர்ப்போ வந்தாத்தான் அதுக்கு பேரு படைப்பு இல்லைன்னா அது வேஸ்ட்....
====
நண்பர் கேபிள் நடுநிசிநாய்கள் படத்தை பற்றி ஒரு கருத்தை பொட்டில் அடித்தது போல சொல்லி இருக்கின்றார்...அது கீழே..
சில பேருக்குத் தமிழில் கொஞ்சம் காதல், காமம், வன்முறையோடு படமெடுத்தால் உடனே காச் மூச்சென கத்துவார்கள். ஏதோ எல்லா தமிழ் திரைப்படங்களும் சமுதாயத்தை மாற்றும் நோக்கோடுதான் படமெடுக்கப்படுவதாக நினைத்துக் கொண்டு. அடுத்த காமெடி, ஆங்கில படத்தில் டபுள் மீனிங், ட்ரிபிள் மீனிங் டயலாக்கெல்லாம் வந்தால் புரியாமலேயே ஆஹா ஓஹோ என்று பாராட்டுவார்கள். அதுவே, தமிழ் படத்தில் வந்தால் சீலீங்கிற்கும், தரைக்குமாய் குதிப்பார்கள். அதற்கடுத்த ஒன்று, ஆங்காங்கே வரும் வசனங்கள், நெளிய வைக்கிறது. குடும்பத்தோடு படம் பார்க்க முடியாது என்று எழுதுவது. என்னவோ ஒரு படம் நன்றாக இருக்கிறது என்றவுடன் மொத்த குடும்பத்தையும் தியேட்டருக்கு கூட்டிக் கொண்டு போய் படம் பார்க்கிறார் போல். ஏ சர்டிபிகேட் படத்திலென்ன யூ சர்டிபிக்கேட் மேட்டரையா காட்டுவார்கள்? இம்மாதிரியான உண்மைத்தமிழர்கள் இருக்கும் பட்சத்தில் ஆயிரம் ஏன் லட்சம் பேர் வந்தாலும் திருத்த முடியாதுங்க.
=============
இந்தவாரகடிதம்
Hi jackie,
Just now I read your story kamal and niru. Excellant story and touching one.
I 'm very muck like your movie review especially english movie review.
I would like to say one thing,
Yesterday I had seen 2 hindi movies, Taare Zameen par and 3 idiots. both are excellant movies in my angle, could you able to review those movies if you know hindi. bcos you have very excellant friends circle and powerful media.
Note: I don't know hindi but i like this movies. and this is my first hindi movies
--Kishore
============================
பிலாசபி பாண்டி
எதிர்பார்ப்பை குறைச்சா ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.
எதிர்பார்ப்பு இல்லை என்றால், எதிர் வரும் ஒவ்வொரு நிமிஷமும் வாழ்க்கையில் ஆச்சர்யமூட்டுவது மட்டும் இல்லாமல் அந்த ஒவ்வொரு ஆச்சர்யமும் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.
================
நான்வெஜ்18+
80வயசுக்கு மேல இருக்கும் ஒரு பெரியவர், தினமும் மருந்துகடைக்கு போய் நிறைய வயக்ரா மாத்திரையை வாங்கி குவிக்க ஆரம்பிச்சாரு.. மருந்து கடைக்காரனுக்கு டவுட்டு ஒரு மணிநேரத்துக்கு ஒண்ணுன்ற லெவலுக்கு மாத்திரையை வாங்கிகிட்டு பெரிசு போவுதேன்னு ஆர்வத்துல கடைக்காரன் கேட்டே போட்டான்... அதுக்கு அந்த பெரியவர் நான், என் காலிலேயே ஒண்ணுக்கு அடிச்சிட்டிருக்கிறேன். அதுக்குதான் இந்த மாத்திரை என்றாராம்.
ஜோக் உபயம் ....தெளிவான நிலையில் மயில்ராவணன்
==================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
தலையும் தளபதியும் சேர்ந்த மாதிரி நீங்களும் கேபிளும் சேர்ந்து டீர்கள ? ( நாங்க எப்போ பிரின்சொம்னு கேக்க கூடாது )
ReplyDeletesandwich nalla karam kalanthu irukku.
ReplyDeleteஒரு விஷயத்தை தொடர்ந்து செய்கின்றோம் காலதாமத்த்தை தலைப்பில் அறிவிக்கின்றோம்.. இதுஎன்ன ரயிலா நேரத்தை எல்லாம் மென்ஷன் பண்ண என்று ஒரு மெயில் நக்கல் விட்டு வந்தது.. நான் எதையோ பண்ணிட்டு போறேன்...ஏன்டா நீ இங்க வந்து உன் பொன்னான நேரத்தை வேஸ்ட் பண்ணிகிட்டு.... இன்னைக்கு நொடியோட போடறேன் பாரு...இப்ப என்ன பண்ணுவ????
ReplyDeleteஇதுக்கு எல்லாம் போய் பதிவுல பதில் சொல்லிக்கிட்டு , கோபத்தை கொஞ்சம் குறைங்க தல . வழக்கம் போல பதிவு அருமை ,
பெங்களூருவில் இரண்டு வாரம் இருப்பதால் பப் மற்றும் பார் களில் நடக்கும் லீலைகள் பற்றி ஒரு பதிவு போடலாமே?
ReplyDeleteமலேசியா வாசுதேவன் குறித்து ஒரு தனிப்பதிவை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteவழக்கம் போல் கலக்கல், கேபிளாரின் கருத்தை செவிமடுக்கும் நிலையில் எங்கள் உலக ரசிகர்கள் சிலரில்லை. அவர்கள் மட்டுமே ஆங்கிலப்படம் பார்ப்பார்கள் எங்களைப்போன்ற ஆங்கிலம் தெரியாதவர்கள் என்ன செய்வதாம்.
ReplyDeleteஉங்கள் தில்லுக்கு பாராட்டுக்கள்.
adadaa jackie sir, enga oorukku vanthirukeenga.. munnadiye solli irunthal ungalai parthiruppene...
ReplyDeleteenga ooru kaveripattinam..
Anbudan,
ManiSekaran, Avathuvadi (Vill)
K.giri. Dt
9842697280..
அண்ணே உன்னோடு இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
ReplyDeleteமரணப் படுக்கையிலும் மறக்காதுண்ணே.ஜெய் ஜாக்கி.