கலாச்சார காவலர்களே…ஒரு நிமிடம்



நடுநிசிநாய்கள் படத்தை பற்றி விமர்சனங்கள் நிறைய படித்து விட்டேன்..ஏதோ இந்த பூமி எனும் கிரகத்தில் தன் அரிப்பை தீத்துக்கொள்ள வேறு வழியே இல்லாமல் கவுதம் மேனன், ஒரு படம் எடுத்து அந்த அரிப்பை தீர்த்துக்கொண்டு விட்டதாகவும் நிறைய பேசுகின்றார்கள் எழுதுகின்றார்கள்...இன்னும் ஒருபடி மேலே போய் அந்த படைப்பை பான்பராக் எச்சிலால் நிரப்ப வேண்டும் என்று சொல்லிகின்றார்கள்..

இந்த கட்டுரை கவுதம்மேனனுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரை  அல்ல என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்..

அந்த படம் காப்பிபடம்
அந்தபடம் நல்ல திரில்லர் படம் இல்லை
அந்த படம் செமை போர் உட்காரமுடியவில்லை.. குட் இதை பற்றி நான் எதுவும்  சொல்லபோவதில்லை....

இந்த படத்தின் அடிநாதமாக பலர் முன் வைக்கும், கேள்வி.....

அப்பா தன் மகனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகின்றார்...

இதுக்கு பதில் சொல்லிவிடுகின்றேன்...


உலகம் சுபிட்சமாக இயங்குகின்றது என்று சொல்லிவிட்டால் இலக்கியமும் இதிகாசமும் தோன்றி இருக்க வாய்ப்பே இல்லை...எல்லோரும் சுபிட்சமாக நேர்மையாக  இருந்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லையே....அப்புறம் எப்படி இலக்கியம் இதிகாசம் எல்லாம்...

உதாரணத்துக்கு கடவுள் எல்லாவற்றையும் கொடுத்தார்..ஆதாம் ஏவளை படைத்தார்..  எந்த பிரச்சனையும் இலலை.. அவர்கள் சுகமாக  வாழ்ந்தார்கள்... இதை எவன் படிப்பான்...கடவுள் சொல்கின்றார்.. அந்த  ஆப்பிள் கனியை உண்ணவேண்டாம் என்று அங்கே கதை சொல்லபடுகின்றது .. அந்த கனியை உண்பதால் என்ன விளைவு ஏற்ப்பட்டது என்று....அதுதான் கதை...

உதாரணத்துக்கு 2000 அப்பா இருக்கின்றார்கள்... எல்லோரும் நல்ல அப்பாக்கள்...சத்தியமேவ ஜெயதே என்றுவாழ்க்கை வாழ்பவர்கள் அவர்களுடைய பிள்ளைகளும் நல்லபடியாக வளர்கின்றார்கள்.. எந்த அப்பாவும் தன் மகனிடம் தன் ஆண்குறியை சப்ப சொன்னது இல்லை....இப்படி நல்லதே நடக்கும் போது  எதுக்கு செய்தி சேனல்,  தினப்பேப்பர்,  வாரபத்திரிக்கை எல்லாம்???

  சற்றே கற்பனை செய்யுங்கள் யோசித்து பாருங்கள் 

தினத்தந்தி
தினகரன்
தினமலர் போன்ற தினப்பத்திரிக்கையின் முகப்பில் தலைப்பு செய்தியாக தினமும் செய்தி இப்படியதக வருகின்றது...

//நாட்டில் எல்லாம் சுபிட்சம்// என்று அரைப்பகத்துக்கு தினமும் வந்தால் எப்படி இருக்கும்.. எல்லோரும் யோக்கியராக இருக்கும் போது குற்றம் எப்படி நடக்கும்????


ஆனால் 2000ம் நல்ல அப்பாக்களில், ஒரு அப்பா தவறு செய்கின்றான்... அப்படி அந்த செக்ஸ் தவற்றை  தனது சின்ன பிள்ளை மீது திணித்தால், அந்த  பிள்ளை  பின்னாளில் என்னவாகும் என்பதை இயக்குனர் காட்டி இருக்கின்றார்..

உன் அப்பா என் அப்பா அப்படி இல்லை அதனால்  நாம் இப்படி இருக்கின்றோம்.... ஆனால் அந்த பையனின் அப்பா ஒரு மிருகம் அதனால் அவன் அப்படி மாறினான்...இதுதான் கதை...

 பத்திரிக்கைகாரர்கள், சேனல்காரர்கள் மட்டும் வித்யாசமான மனிதர் தனியாக எதை செய்தாலும் கவர் ஸ்டோரிஆக்கிவிடுவார்கள்...அவர் மரம் நட்டார்,இவர் குஷ்ட்ட ரோகிகளை துயர் துடைத்தார், பாலியல் தொழில் செய்த பெண்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக்கொடுத்தார் எங்கையோ யாரோ ஒரு ஆள்தானே செய்தான் எதுக்கு அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்...

சார் அவர் நல்லது செய்கின்றார் அதை சொன்னதானே இன்னும் நாலு நல்லது நடக்கும்....

அதே போல் சமுகத்தில் ஒரு கெட்டது நடக்கின்றது அதை ஒருவர் சொல்லிகின்றார்...சார் அவன்  கெட்டதை சொல்லறான் சார்..அதை பார்த்து எத்தனைபேர் கெட்டு போயிடுவாங்க தெரியுமா?

அப்படிங்களாசார்.. நீங்க நல்லது நடக்கும்னு எழுதுனிங்க இல்லை.. அதை பார்த்து எல்லோரும் மரம் நட கடப்பாறையும் கையுமா? கிளம்பிட்டாங்களா, அப்படி நடந்து இருந்தா இந்திய மக்கள் தொகைக்கு இந்தியா முழுவதும் இந்த நேரத்துக்கு  மழைக்காடுகள் அதிகமா  இருந்து இருக்கும்...

நல்லதுக்கே மாறதவங்க கெட்டதுக்கு உடனே மாறிடுவாங்களா? சார் கெட்டது அது ஈசியா மனசுல பதியும்...அப்படியா அதனால் பின் விளைவுகள் அதிகமாகும்....

உதாரணத்துக்கு  பரங்கிமலை ஜோதியில பிட்படம் பார்த்துட்டு எல்லோரும் கைல புடுச்சிகிட்டு வெளியே வந்தது போலவும்.. ரோட்டில் போகும் வரும் பெண்கள் எல்லாரையும் வன்புணர்வு செய்தது போலவும் அல்லவா சொல்கின்றீர்கள்...


 தமிழகத்தில் 100க்கு 85பர்சன்ட் பேர் பிட் படம் பார்க்காமலோ அல்லது சரோஜாதேவி படிக்காமலோ காமத்தை அருகே போய் பார்த்ததில்லை.. அப்படி அந்த 85பர்சென்ட்  பிட் படம் பார்த்த அத்தனை பேரும் கிளம்பி இருந்தால் யோசிக்கவே பயமாக இருக்கின்றது.. தமிழகத்தில் எந்த பெண்ணும் கற்போடு இருந்து இருக்க வாய்ப்பு இல்லை..

பிட் படத்துல ஒரு  ஆண்ட்டி குளிக்கறதை  ஓட்டை போட்டு பார்த்தான் என்று காட்டியதால் இந்த சமுகம் கெட்டுபோய் இருந்தால் 85 பர்சென்ட் வீட்டில் பாத்ரூம் அத்தனையும் ஓட்டையாகத்தான் இருக்கும்...

 படத்தில் காட்டிய செய்தி,காட்டிய விஷயம் தமிழ் சூழலுக்கு புதுசு.. அதனால் எங்களால் அந்த கருத்தை ஜீரனிக்க முடியவில்லை என்று சொன்னாலாவது அதை கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ளலாம்...ஆனால் அந்த இயக்குனருக்கு அரிப்பு என்று சொல்வதையும் அந்த வாதத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை....

ரோட்டில் செல்லும் அப்பா மகனை இந்த படம் வந்ததில் இருந்து கேலி செய்கின்றது... என்று ஒருசாரர் சொல்கின்றார்கள்.. அப்படி பார்த்தால் கடந்த இரண்டு மாதங்களில் தந்தியில் வ்ந்த செய்திகளில் தனது மகளை அப்பாவே நாசமாக்கிய செய்திகள் வந்து இருக்கின்றது... அதுக்காக  எல்லா அப்பா மகள் உறவையை இந்த சமுகம் கொச்சையாக பார்க்கின்றதா?


பாஞ்சாலி 5 பேரை வைத்துக்கொண்டு விட்டாள் என்பதற்க்காக 5 பேர் அண்ணன் தம்பி இருக்கும் வீட்டில் யாரும் பெண் கொடுக்கவில்லையா? அது போலத்தான் இதுவும்....

குற்றம் நடந்தது எனன? என்று ஆரம்பித்து தொலைகாட்சிதொடர்களில் இல்லாத பாலியல் செய்திகளா? காட்டிவிட்டார்கள்..



உண்மை என்ன யூனிசெப் சொல்கின்றது... பெண்பிள்ளைகளுக்கு இழைக்கபடும் வன்கொடுமைகளில்  சரிக்கு சரிக்கு சமமாய் ஆண்குழந்தைகளுக்கு சமமாய் நடக்கின்றது என்று ஆய்வு சொல்கின்றது...அதைதான் படமாக எடுத்து இருக்கின்றார்கள்..


பெண் பிள்ளைகளுக்கு கொடுக்கபடும் பாலியல் தொல்லைகள் ஆண்பிள்ளைகளுக்கு இணையாக கொடுக்கபடுக்கின்றது என்ற செய்தியை இந்த படம் உரத்து சொல்கின்றது..


4
ல் ஒரு பெண்குழந்தையும்
7
ல் ஒரு ஆண்குழந்தையும் பாலியல்தொல்லைக்கு  உட்படுத்துபடுகின்றார்கள்.

இது போலான குற்றங்கள் எங்கும் பதிவு செய்யப்படுவதில்லை... என்பதையும் இந்த படம் சுட்டிக்காட்டுகின்றது...


அங்கு ஒன்றும் இங்குஒன்றுமாகத்தான்  இந்த செயல்கள் நடக்கின்றது என்றால் குட் டச் பேட் டச் பற்றிய விழிப்புணர்வை ஏன் நாம் நடத்த வேண்டும்.... அப்படி நடத்தும் போது ஆண்குழந்தைகளும் இந்த காலத்தில் பாதிக்கபடுகின்றார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சொல்கின்றது இந்த படம்.

என் வீட்டில் உங்கள் வீட்டில் எதும்நடக்கவில்லை என்று சொல்வதால் ஊரில் யாருக்குமே இது நடக்காது என்றும் நீங்கள் நினைத்தால் நீங்கள் ஒரு நெருப்புக்கோழிதான் நெருப்புக்கோழிதான் தனது பெரிய  உடலை வெளியெ தெரியவைத்து விட்டு தலையை மறைத்துக்கொள்ளுமாம்...அப்படி தலையை மறைத்துக்கொள்வதால் தான் யாரும் தெரியிவில்லை என்று நினைத்துக்கொள்ளுமாம்..

முன்பெல்லாம் படித்தார்கள் இப்போது எல்லாம் எல்லா பசங்களுக்கும் போனில் உள்ள வீடியோவில், குருப் செக்ஸ், நக்குவது, சப்புவது, எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது..

ஏசர்ட்டிபிகேட் கொடுத்த ஒரு படத்தில் அது நொட்டை இது நொள்ளை இதை என்னால எற்றக்கொள்ளமுடியவில்லை என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் அது உங்கள் உரிமை.. அதை விடுத்து கவுதம் மேனன் அரிப்பெடுத்தவன் என்று சொல்வது ஏற்புடையது அல்ல....ஒருவேளை கவுதம் அரிப்பு சொறிந்து  காயம் வெளியே தெரிந்து விட்டது மற்றவர்கள் அரிப்புக்கு இச்கார்டு போட்டு வெளியே தெரியாமல் வைத்து இருக்கின்றார்கள்.......


நடுநிசிநாய்கள் படத்தில் கவுதம் அரிப்புக்கு படம் எடுத்து விட்டார் என்று குய்யோ முறையோ என்று கத்துபவர்கள்...இதறகு முன் தமிழ் திரைஉலகில்  இலக்கிய உலகில்  உங்கள் பார்வையில் அரிப்புக்காக என்று சொன்ன விஷயத்தை மற்றவர்கள் எப்படி சொல்லி இருக்கின்றார்கள் என்று ரவிசங்கர் எழுதிய இந்த பதிவை அனைவரும் வாசிப்பது நலம்...



பாய்ஸ் படத்தை த்தூ என்று முதலில் சொல்ல நினைத்து ச்சி என்று ஆனந்தவிகடன் சொல்லியது... ஆனந்தவிகடன் முகமாற்றம் செய்து கொண்டு வந்த போதும் இப்போது அது வெளியிடும்  கவர்சி படங்கள் எந்தவகைரகம்....

துப்புவது யாருக்கும் எளிதாகி விட்டது..ஒரு படைப்பை துப்பும் உரிமையை எவர்கொடுத்தார்கள்.... நன்றாக இருக்கின்றது நன்றாக இல்லை  அத்தோடு விட்டு விடுங்கள்.. உங்கள் பத்திரிக்கை சரியில்லை என்று உங்கள் அலுவலகத்துக்கு எதிரில் கிழித்து போட்டு துப்பினால் எப்படி இருக்கம்???? உங்கள் கட்டுரை சரியில்லை  எனக்கு  பிடிக்கவில்லை என்று உங்கள் எதிரில் அந்த கட்டுரையை மட்டும் கிழித்து போட்டு துப்பினால் உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியுமா??

தன் பெண்பிள்ளையை பெண்டால நினைத்தவனை துப்புங்கள்... நல்லது செய்கின்றேன் என்று வாக்கு கொடுத்து விட்டு நம்மை பற்றிகவலைபடாத  அரசியல்வாதிமேல் துப்புங்கள்... நம் வீட்டுக்கு எதிரில்  போடும் ரோட்டின் தரம் குறைவாக இருக்கின்றதா? அந்த காண்ட்ராக்டர் மீது துப்புங்கள், பஸ்டே என்று தினமும் ரகளை செய்யும் மாணவர்கள் மீது துப்புங்கள்... அப்படி துப்பி பாருங்கள் வாய் குழப்பிக்கொள்ளும்...வாய் நம்மிடம் இருக்காது..

அப்படி நாம் துப்ப சமுகத்தில் நிறைய விஷயம் இருக்கின்றது... ஆனால் நாம் சினிமாவைமட்டும குறிபார்த்து துப்புவோம்...ஏனென்றால் அதன் மேல் துப்பினால்தான் அனைவருக்கும் தெரியும்...அதுவும் காரணம்...சிந்து சமவெளி எடுத்த இயக்குனர் மீது நிறைய வண்மம் அவரை விமர்சனத்தால் கிழித்தார்கள். இந்த கலாச்சாரகாவலர்கள்... நடக்காததை எடுத்து விட்டது போல.....

சார் ஒரு விஷுவலில் வெகு ஜனமக்கள் ரசிக்கும் திரைப்படத்தில் இதனை  காட்ட வேண்டிய அவசியம் இல்லை....

அப்படியா...அப்படி எதுவும் ஆபாசம் கலக்காத கீழ் உள்ள படங்கள் ஏன் ஓடவில்லை....

அம்பேத்கர்
காமராஜர்
பாரதி
பூ
மகாநதி
அன்பேசிவம்


நீங்கள்தான்மக்களின் கலாச்சாரகாவலர்கள் ஆயிற்றே...நடுநிசிநாய்கள்...சிந்துசமவெளி கெடுத்துடுச்சி..

 சரி.. அம்பேத்கர்,காமராஜர்,பாரதி, போன்ற படங்கள் ஏன் பெருவாரியான மக்கள் அபிமானத்தை பெறவில்லை....மேலுள்ள  மூன்று படங்களில் நீங்கள் சொன்ன எந்த கருமாந்திரமும் இல்லாமல் படம் எடுத்தார்கள் என்னவாயிற்று மக்கள் சீண்டவில்லை... அதாவது நல்ல படத்தை கொடுத்தால் சீண்டவில்லை...

நடுநிசிநாய்கள், சிந்துசமவெளி சூப்பர் டூப்பர் ஹிட் அல்ல.. காரணம் அதுவும் மக்களுக்கு பிடிக்கவில்லை...

அதாவது நல்லபடத்தையும் கொண்டாடவில்லை கெட்ட படம் என்ற நீங்கள் சொன்ன படத்தையும் கொண்டாடவில்லை..
சோ மிகுந்த நல்லது சொன்ன படத்தையும் கொண்டாடவில்லை...நீங்கள் சொன்னது போல ஏற்றுக்கொள்ளமுடியாத படத்தையும் கொண்டாடவில்லை

பொதுபுத்தி ரசனை ஆடுகளத்தையும் சிறுத்தையையும் ரசிக்கின்றது...

1330 திருக்குறளில்  நல்ல கருத்தை சொல்லி திருந்தாத இந்த தமிழ் சமுகம்.. எவ்வளவுதான் நல்லகருத்தை சொன்னாலும் திருந்த போவதில்லை....

 
கடைசியாக  ஒன்று சொல்லிக்கொள்கின்றேன்... இன்று சென்னையில்  நல்ல நிலையில் இருக்கும் பல பேர் பிளாட்பாரத்தில் படுத்து ஹோட்டலில் வேலை செய்து வயிற்றை கழுவி இன்று நல்ல நிலையில் இருக்கின்றனர்...ஆனால் தமிழில் ஒரு பிரபல எழுத்தாளர் தான் சென்னையில் கஷ்டபட்டுக்கொண்டு இருக்கும் போது குப்பி (கேட்டமைன்) கொடுத்து தனது பசியை ஆற்றிக்கொண்டதாக சொன்னார்...

சார் சென்னைக்கு வருகின்றவர்கள் எல்லாம் இப்படித்தான் குப்பி கொடுக்கின்றார்களா? என்று கேள்வி கேட்கலாம்.. ஆனால் அவர் அரிப்பை தீர்த்துக்கொண்டார்,  எதிர்கருத்தையும் வாதத்தையும் சொல்லுங்கள்...


ஒரு படைப்பு பிடிக்கவில்லையா புறக்கனியுங்கள், உங்கள் கருத்தை சொல்லுங்கள்... அதை விடுத்து துப்புவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை..அப்படி  கோபப்பட்டு துப்ப உண்ர்வுபுர்வமாய் சமுகத்தில் நிறைய விஷயங்கள் உள்ளன..

கடைசியாக ஒரு விஷயம் ஒரு தமிழ் இயக்குனர் தனது அரிப்பை தீர்த்துக்கொள்ள படம் எடுக்கவேண்டிய அவசிய்ம் இல்லை,ஒரு விரல் அசைவில் அரிப்பு தீர்ப்பட்டுவிடும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 ஒரு படைப்பாளி தனது கருத்தை  சொல்ல உரிமை இருக்கின்றது... அதை எதிர்க்கவும்  உரிமை இருக்கின்றது ஆனால் துப்புவதைதான்  என்னால் எற்றுக்கொள்ள முடியவில்லை...


குறிப்பு....

இந்த பதிவு யாருக்கும் பதில் சொல்ல அல்ல...இதற்கு எதிர்கருத்தோ அல்லது எதிர்பதிவோ வந்தாலும் நான் பதில் சொல்ல போவது இல்லை.. காரணம் ஒரு  விஷயத்தை தொடர்ந்து  என்னால் பேசிக்கொண்டு இருக்கமுடியாது.. இது எனது கருத்து அவ்வளவே...



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...

இந்ததளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்... திரட்டிகளில்  ஓட்டு போட மறக்காதீர்கள்.. அப்படியே மைனஸ் ஓட்டு குத்தும் புண்ணியவான்கள் அதையும் செவ்வனே செய்ய கேட்டுக்கொள்கின்றேன்..


70 comments:

  1. அருமையா, நெத்திப்பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லி இருக்கிங்க ஜாக்கி

    ReplyDelete
  2. முதல் மைனஸ் ஓட்டு நான்தான்..!

    இப்படிக்கு
    உண்மைத்தமிழன்
    தலைவர்
    ஜெய் ஜாக்கி உலகளாவிய தலைமை ரசிகர் மன்றம்,
    விருகம்பாக்கம்
    மாம்பலம் வட்டம்
    விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி
    தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி
    தென் சென்னை
    சென்னை
    திருவள்ளூர் மாவட்டம்
    தமிழ்நாடு மாநிலம்
    இந்திய தேசம்
    யூனிவர்சல்..!

    ReplyDelete
  3. // ரவிசங்கர் எழுதிய இந்த பதிவை அனைவரும் வாசிப்பது நலம்...
    //

    Link not working. Pls check

    ReplyDelete
  4. நெத்தியடி ...வன்மம் காமம் வக்கிரம் வன்புணர்வு எல்லாம் அந்த படத்துக்கு இணையத்தில் எழுதப்பட்ட விமர்சனங்களில் மலிந்திருந்தது.. படம் சுமார் தான்.. இருந்தாலும் இந்த போலி கலாசார காவலர்கள் செய்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை //தன் பெண்பிள்ளையை பெண்டால நினைத்தவனை துப்புங்கள்... நல்லது செய்கின்றேன் என்று வாக்கு கொடுத்து விட்டு நம்மை பற்றிகவலைபடாத அரசியல்வாதிமேல் துப்புங்கள்... நம் வீட்டுக்கு எதிரில் போடும் ரோட்டின் தரம் குறைவாக இருக்கின்றதா? அந்த காண்ட்ராக்டர் மீது துப்புங்கள், பஸ்டே என்று தினமும் ரகளை செய்யும் மாணவர்கள் மீது துப்புங்கள்... அப்படி துப்பி பாருங்கள் வாய் குழப்பிக்கொள்ளும்...வாய் நம்மிடம் இருக்காது..//
    அதெல்லாம் நம்மால முடியாது...
    ...

    ReplyDelete
  5. எல்லாரும் காரி துப்பிய ஒருவிஷயத்தை நீங்கள் மட்டும் ஏன் நியாயப்படுத்த நினைக்கிறிங்க? கவுதம் மேனனிடம் எதிர்காலத்தில் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவா?

    துப்புனது துப்புனதுதான் பாஸ். பார்த்து உங்க மேலையும் துப்பிடப்போரானுங்க பயப்புள்ளைங்க நம்பாளுங்க ரொம்ப கோபக்காரனுங்க.

    ReplyDelete
  6. Tamilmanam vote 0/3 . உ த அண்ணே உங்க கை ராசியான கை போலிருக்கு

    ReplyDelete
  7. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள் தொப்பி தொப்பி நான் அதுக்கு எல்லாம் கவலை படும் ஆள் இல்லை..நானவது எனது போட்டோ போட்டு இருக்கின்றேன் நம்பர் கொடுத்து இருக்கின்றேன்.. அதனால் என் மீது சரியாகதுப்பலாம்... ஆனால் பாவம் நீங்கள்தான் உங்களை பற்றி சொல்லாமல், உங்கள்படத்தை கூட வெளியிட பயந்து கொண்டு இருக்கின்றீர்களே... நீங்க்ள்தான் அதுக்கு கவலைபடவேண்டும்....நேரில் எனனை அடிக்க வருபவன் வீரன்.. ஒரு விரன் எதையும் செய்யலாம்...கோழை மறைந்து இருப்பான்.. அதனால் நீங்கள் கவலைபடாதீர்கள்.. எல்லா சொல்லிட்டதாய் சொல்லும் நீங்கள்..இரண்டு பேர் எதிர்கருத்து சொன்னாலும் அதற்கு பதில் சொல்ல வேண்டும்...இதில் இன்னும் நிறைய பேர் துப்பியது தவறு என்ற கருத்தை சொல்லுவார்க்ள்.. அதில் ஒரவர் எனது கருத்தை ஆதரித்தாலும் எனக்கு வெற்றியே..

    ReplyDelete
  8. வராணம் ஆயிரம் படத்தை கிழிக்கும் போதும் நான் அது நல்லபடம் என்று எழுதி இருந்தேன்.. செம்மொழிபாடல் அவர் இயக்கியது தவறு என்றும் என் கருத்தை சொல்லி இருந்தேன்..

    தொப்பி தொப்பி நீங்கள் வேண்டுமானால் ஆதாயத்துக்கு எழுதலாம்.. உங்களை போலவே என்னையும் எண்ணிக்கொண்டுவிட்டீர்ர்கள்..

    நான் ஜாக்கி... தொப்பி தொப்பி அல்ல...

    ReplyDelete
  9. ராஜகோபால் ....7501 மைனஸ் ஓட்டு விழுந்தாலும் உதா அண்ணன் போல அதை பத்தி கவலைபடமாட்டேன்..

    ReplyDelete
  10. //நீங்கள்தான் உங்களை பற்றி சொல்லாமல், உங்கள்படத்தை கூட வெளியிட பயந்து கொண்டு இருக்கின்றீர்களே... //

    Comment moderation

    //கோழை மறைந்து இருப்பான்//

    அண்ணே புகைப்படம் போடுவதாலேயே அல்லது மொபைல் என் போடுவதாலேயே ஒருவன் வீரனாகி விட முடியாது. இங்கே அவரவர் தங்களுடைய கருத்தைதான் பதிவிடுகிறார்கள் இதில் பயப்பட என்ன இருக்கு?


    //நானவது எனது போட்டோ போட்டு இருக்கின்றேன் நம்பர் கொடுத்து இருக்கின்றேன்.//

    //தொப்பி தொப்பி நீங்கள் வேண்டுமானால் ஆதாயத்துக்கு எழுதலாம்.. உங்களை போலவே என்னையும் எண்ணிக்கொண்டுவிட்டீர்ர்கள்..//

    இந்த தளத்தில் விளம்பரம் செய்ய அணுகவும்
    ஜாக்கிசேகர். கைபேசி..98402 29629

    நீங்கள் ஏதோ மொபைல் என் போடுவதால் தினமும் இரண்டுபேரை அடித்து த்வம்சம் செய்வது போல் அல்லவா சொல்றிங்க.

    ReplyDelete
  11. அண்ணே ஜாக்கி சேகர் அவர்களுக்கு

    தகப்பன் தன்னுடைய மகனை வைத்து செய்வதாக காட்சி இருந்தாலும் இந்த செய்தி எத்தனை ஆயிரம் குழந்தைகளை கண செய்கிறது இதை பார்க்கும் சிறுவர்களின் மனநிலையிருந்து யோசியுங்கள்.

    சும்மா வறட்டுத் தத்துவம் பேசதீர்கள்

    இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன்முறையாக வருகிறேன்

    வந்தவுடன் எதிர் பின்னூட்டம் போட நேர்ந்ததை நினைத்து வருந்துகிறேன்

    ReplyDelete
  12. தொப்பி தொப்பி உங்க பசங்க கோபக்கார பயலுங்கன்னு துப்புவாங்கன்னுசொல்லி இருக்கிங்களே.. அவுங்க முகத்தை நான் பார்க்கனும் இதை தைரியமாஎழுதின உங்க முகத்தையும் நான் பார்க்கனும்...உங்க எண் தைரியம் இருந்நதா கொடுங்க...இதை உங்க பதிவில் வெளியிட்டு விட்டு அடுத்தவன்கிட்ட வந்து கருத்தை சொல்லுங்க... உங்க கருத்தை சொல்லவே எதுக்கு இப்படி பயடபபடனும்....

    ReplyDelete
  13. தொப்பி தொப்பி உங்களை வெளிபடுத்திகிட்டு உங்க கருத்தை சொல்லுங்க..பத்து பேர் ரோட்டில் அடிக்கும் போது இறங்கி நீங்களும் ஒரு ஆள் போல அடிச்சிட்டு ஏன் போகனும்....

    சுபாஷ் சந்திர போஸ் படத்தை எல்லாம் போட்டு இருக்கிங்க.. உங்க கிட்ட அந்த தைரியம் இருக்கும்னு எதிர்பார்க்கிறேன்...

    செய்விங்கதானே...?? தொப்பி...

    ReplyDelete
  14. ஹைதர் அலி..நான் என்ன பெரிய இவனா? நீங்க வருத்தம் கொள்ள தப்புன்னா தப்புதான்...நீங்க உங்க கருத்தை சொல்லி இருக்கிங்க... இப்போதைய சிறுவர்கள் உங்களை விட என்னை விட பிரிலியன்ட் நண்பரே...

    ReplyDelete
  15. யார் வேண்டுமானாலும் முகத்தை மறைத்து கருத்து சொல்லலாம்...ஆனால் நான் ஒருத்தருக்கு பதில் சொல்கின்றேன் என்றால் அவரைபற்றி எனக்கு தெரியவேண்டும்....அப்படி தன்னை போட்டோ செல் எண்ணோடு வெளிபடுத்திக்கொள்பவரிடம்தான் என்னால் பதில் சொல்ல முடியும்.. சுவற்றுகிட்ட அல்லது சுவற்றை பார்த்து பேச முடியுமா,????

    ReplyDelete
  16. அண்ணே என்னங்கனே ஓவர் ச்பீடுல்ல போறீங்க இது சினிமா இல்லை, போய் தண்ணி குடிச்சிட்டு வாங்க முடிஞ்சா கொஞ்சம் மோர் குடிங்க தெளிதானு பார்ப்போம்.

    மொபைல் நம்பர் எதுக்கு? நம்ப ரெண்டு பேரும் என்ன லவ்வா பண்ணுறோம் மொபைல்ல பேசிக்கிரதுக்கு. மோதிதான் பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டிங்கனா சொல்லுங்க மோதி பாத்துடுவோம்.

    ReplyDelete
  17. என்கிட்ட மட்டும் அல்ல தொப்பி தொப்பி உங்க தளத்துல நிங்க யாருன்னு சொல்லுங்க... நான், லக்கி,கேபிள், அதிஷா, உண்மைதமிழன் போல உங்களை பற்றி வெளிப்படையா சொல்லட்டு இந்த டகுல் எல்லாம் விடுங்க..

    ReplyDelete
  18. மோதிதான் பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டிங்கனா சொல்லுங்க மோதி பாத்துடுவோம். //

    போங்க தம்பி இது போல நிறைய பாத்தாச்சு

    ReplyDelete
  19. முதலில் அவ்வளவு தைரியம் இரந்தா உங்களை உங்கள் தளத்தில் வெளிபடுத்திக்கோங்க... அவ்வளவு தைரியமான ஆம்பளையா இருந்தா?

    ReplyDelete
  20. மொபைல் நம்பர் எதுக்கு? நம்ப ரெண்டு பேரும் என்ன லவ்வா பண்ணுறோம் மொபைல்ல பேசிக்கிரதுக்கு. //

    நீ அந்தமாதிரி புத்திசாலியா?????

    போன்ல லவ்வர்தான் பேசுவாங்கன்னு யார் சொன்னது உனக்கு...??

    இதுவரை பதில் சொன்னதே வேஸ்ட்டா...??

    நல்ல புரிதல் உங்களுக்கு.,...

    பை பை

    ReplyDelete
  21. நீங்க தான் பதிலே சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டீங்கல்ல... அப்புறமும் எதுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்குறீங்க...

    போயி வேலையை பாருங்க தல... This is not our profession... COOL...

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. பாஸ் ,

    மைனஸ் ஓட்டு போடுறதுக்கு பதிலா பிளஸ் வோட்டு போட்டுட்டேன்..எப்படி அதை மைனஸ் வோட்டு ஆக்குவது.??..தெரிஞ்சா சொல்லுங்க.
    தேர்தல் வோட்டு மாதிரி ஒரு தடவை போட்டுட்டா அவ்வளவு தானா.?..இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..

    I wrongly pressed Indli "like" button instead of "Unlike" button..How to revert my vote back to unlike.?If anybody knows,please let me know.

    ReplyDelete
  24. தம்பி உங்க தைரியத்தை மெச்சினோம்.. உங்கள் தெளிவான முதிர்ச்சியான பதிலையும் சேர்த்துதான்..தன்னை வெளிபடுத்திக்கொள்ளாதவர்களோட நான் வாதம் செய்வதில்லை... நன்றி..

    ReplyDelete
  25. கந்தசாமி ஒரு ஓட்டு போடும் போது உங்களுக்கு பொறுப்புனர்ச்சி வேண்டாமா??? போங்க சார்..

    ReplyDelete
  26. என்ன சார் பண்ணறது,இது வரை நான் மைனஸ் வோட்டு போட்டதே இல்லை..முன்ன பின்ன செத்து இருந்தா தானே சுடுகாடு தெரியும் ... சரி, இந்த லைக் பட்டனை அழுத்துவோம்..அப்புறம் site க்கு போய் unlike னு மாத்திடிலாம் னு பார்த்தா,,option யை காணோம்..நான் என்ன செய்ய?

    நானும் google ல செக் பண்ணிட்டேன்.. வாய்ப்பே இல்லை.எல்லாம் ஒரு அனுபவம் தான்..

    MLA electionla தமிழ்நாடு வந்து ஒழுங்கா பாத்து வோட்டு போட்டுடறேன் சாமி.

    ReplyDelete
  27. தெருவுல தர்மஅடி குடுக்கும்போது ஏன் அடிக்கிறோம், எதுக்கு அடிக்கிறோம்னு யாராவது யோசிப்பாங்களா? கிடைக்கிற சான்ஸ விட்ரக்கூடாதுன்னு வெச்சு வீக்கிரமாட்டோம்?

    இணையவீதியில் கௌதம் மாட்டினார். பிரிச்சு மேஞ்சுட்டாங்க.

    ReplyDelete
  28. //தகப்பன் தன்னுடைய மகனை வைத்து செய்வதாக காட்சி இருந்தாலும் இந்த செய்தி எத்தனை ஆயிரம் குழந்தைகளை கண செய்கிறது இதை பார்க்கும் சிறுவர்களின் மனநிலையிருந்து யோசியுங்கள்.//

    சிறார்கள் அந்தப் படத்தைப் பார்க்கக் கூடாதென்று 18+ வயதோருக்கு மட்டுமான A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

    பெற்றோர்களுக்கும், திரையரங்குகளுக்கும் பொறுப்பு என்று ஏதுமில்லையோ?

    இனிமேலாவது யார் படத்துக்கும் நம்ம்ம்ம்பி போகமாட்டார்கள் என நம்புவோமாக!

    ReplyDelete
  29. //தன் பெண்பிள்ளையை பெண்டால நினைத்தவனை துப்புங்கள்... //

    அப்ப ஆம்பள பசங்கள அவங்க அம்மா, சகோதரி @#%#$^%$^&$% அது மட்டும் துப்புவதர்க்கு இடம் இல்லையா

    ReplyDelete
  30. சூப்பர் தலைவா..... இவ்வளவு நாளும் நான் உங்களுக்கு சாதாரண வாசகன்.... ஆனால் இன்னையோட உங்களோட fan ஆகிட்டேன்.... படம் பாத்தியா உனக்கு புடிக்கல்லையா பேசாம விட்டிட்டு போய் பொழைப்பை பாரு அத விட்டிட்டு சும்மா வள் வள் ன்னு குரைச்சிட்டு இருக்கானுக.... boss இதுவே ஸ்பீல் பேர்க்கோ / கமரூனோ எடுத்திருந்தா செம்மை திரில்லர் படமா இருந்திருக்கும் நம்ம விமர்சகர்களுக்கு.... இவனுகளை எல்லாம் ................. வெட்டி நடு ரோட்ல ஓட விடனும்.....

    ReplyDelete
  31. சூப்பர் தலைவா..... இவ்வளவு நாளும் நான் உங்களுக்கு சாதாரண வாசகன்.... ஆனால் இன்னையோட உங்களோட fan ஆகிட்டேன்.... படம் பாத்தியா உனக்கு புடிக்கல்லையா பேசாம விட்டிட்டு போய் பொழைப்பை பாரு அத விட்டிட்டு சும்மா வள் வள் ன்னு குரைச்சிட்டு இருக்கானுக.... boss இதுவே ஸ்பீல் பேர்க்கோ / கமரூனோ எடுத்திருந்தா செம்மை திரில்லர் படமா இருந்திருக்கும் நம்ம விமர்சகர்களுக்கு.... இவனுகளை எல்லாம் ................. வெட்டி நடு ரோட்ல ஓட விடனும்.....

    ReplyDelete
  32. ஜாக்கி சார்! இப்படியான காலச்சார காவலர்களின் விமர்சனங்களை படிக்கும் போது சிரிப்பு தான் வருகின்றது. தினசரி பேப்பரை பார்த்தல் இப்படியான விடயங்களே செய்திகளாக இடம் பெறுகின்றது. ஆனால் படத்தில் இடம்பெற்றால் மட்டும் ஐயோ குய்யோ என்று அலறுவது வேடிக்கையாக இருக்கிறது. உணமைகளை ஏற்று கொள்ளும் பக்குவம் தமிழர்களிடம் மிக குறைவு ஆக இருப்பது வேதனை.நீங்கள் இப்படியான எதிர்புக்களுக்கு கலங்காதீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  33. http://tamilcharam.net/nadu-nisi-naygal-movie-review/

    இந்த பதிவையும் கலாச்சார காவலர்களே படியுங்க!

    ReplyDelete
  34. தல,
    என்ன தான் சொல்லுங்க. படம் பாத்தப்ப பக்குன்னு இருந்துச்சு.
    இந்த பதிவ பிலிம் சேம்பர்ல பதிவு பண்ணிடுங்க. இதையே கவுதமேனன் லூசு மேனன் இன்னொரு படமா எடுக்க வாய்ப்பு இருக்கு.

    //பரங்கிமலை ஜோதியில பிட்படம் பார்த்துட்டு எல்லோரும் கைல புடுச்சிகிட்டு வெளியே வந்தது போலவும்
    லூசு மேனன்க்கு செம தீனி. பெரும்பாலும் அடுத்த படம் இதன் தழுவலாதான் இருக்கும்.

    //இப்போதைய சிறுவர்கள் உங்களை விட என்னை விட பிரிலியன்ட் நண்பரே..
    அதுக்காக. ஜாமென்ட்ரி பாக்ஸ் ல நோரோத் பக்கெட்ட வைக்க கத்து கொடுக்காதீங்க. தல

    //நல்லது செய்கின்றேன் என்று வாக்கு கொடுத்து விட்டு நம்மை பற்றிகவலைபடாத அரசியல்வாதிமேல் துப்புங்கள்...
    கரெக்ட்.
    கோடி கோடியா கொள்ள அடிச்ச நாயிக்கி சப்போர்ட் பண்ணி சாதிவெறி பிடிச்ச அல்லகயிங்கதான் பதிவு போடுதுன்னா. இதுமாதிரி தேவையில்லாத கருத்தை திணிக்கும் சைகோ மேனன்களை நீங்க ஏன் சப்போர்ட் பண்ணி பதிவ வேஸ்ட் பண்றீங்க. பாருங்க ... அந்த படம் பாத்த எபக்ட்ல எவ்வளவு வக்கிரமான வாக்கியத்தெல்லாம் பதிவுல சாதாரணமா சொல்லிடீங்க. ம்ம்ம் கருத்து சுதந்திரம்.
    வேணாம் தல.

    ReplyDelete
  35. நல்ல பதிவு, நல்ல கருத்துக்கள்... நீண்ட நாட்களாகவே என் மனதில் ஒடி கொண்டிருந்த பல கேள்விகளை தாங்களும் பகிர்ந்துள்ளீர்கள்....!

    ReplyDelete
  36. நண்பா ஜாக்கி, நீங்கள் நியாயமானவர் என்று மீண்டும் நிருபித்துள்ளீர்கள். நானும் பல பதிவுகள் படித்தேன். எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. எது ஓர் A certificate படம். இந்த படத்துக்கு எதுக்கு குடும்பதோட போறாங்க? அப்புறம் இது என்ன குழைந்தைகள் படமா? உனக்கு படம் பிடிக்கவில்லை என்றால் போகதே. படம் கதை இப்படின்னு தெரிஞ்சு போயி பார்த்துட்டு அப்புறம் நொட்ட சொல்ல கூடாது. அப்புறம் போராட்டம் நடத்துராங்க... எனக்கு புரியல... போயி நாட்டு பிரச்சனைக்கு போராட்டம் நடத்துங்க.. லூசு பசங்களா...

    ReplyDelete
  37. ஜோதி தியேட்டர் படம் பார்பவர்களையும், குடும்ப படம் என்று நினைத்து வருபவர்களையும் நீங்க ஒன்றாக பாவிக்க முடியாது ஜாக்கி நண்பரே.
    'A' படம் என்றால் ஏன் போகிறார்கள் என்று கேட்பதே மடத்தனம். ஒரு அரிவாள் வெட்டு காண்பிக்கும் படத்துக்கும் 'A ' சர்டிபிகேட், இதற்கும் 'A ' சர்டிபிகேட். இந்த படம் ஒருவேளை ஜோதி, பெருங்களத்தூர் தியேட்டர் என ரிலீஸ் ஆகி இருந்தால் இது விவாதத்துக்குரியதே அல்ல. அனைவரும் ஒப்புக்கொள்வர்.
    வெளிநாடுகளில் 18+ படம் என்றால், கண்டிப்பாக அனுமதி இல்லை. (திருட்டு தனமாக இன்டர்நெட்டில் பார்பவர்களை தவிர்ப்போம்) . நம் சூழ்நிலை அவ்வாறு இல்லை. இன்னும் பல காலம் ஆகலாம். பாக்யராஜ் / பாலசந்தர் படங்களை இதற்கு உதரணமாக சொல்ல அருகதையும் இல்லை. அவர்கள் திரைகதை-இல் காட்டும் விதம் வேறு. இங்கிலீஷ் மேட்டர் படம் மனைவியுடன் பார்க்கும் மனிதனுக்கும், இது கொஞ்சம் அருவருக்கும் என்பது சந்தேகமே இல்லை.

    ReplyDelete
  38. ஜோதி தியேட்டர் படம் பார்பவர்களையும், குடும்ப படம் என்று நினைத்து வருபவர்களையும் நீங்க ஒன்றாக பாவிக்க முடியாது ஜாக்கி நண்பரே.
    'A' படம் என்றால் ஏன் போகிறார்கள் என்று கேட்பதே மடத்தனம். ஒரு அரிவாள் வெட்டு காண்பிக்கும் படத்துக்கும் 'A ' சர்டிபிகேட், இதற்கும் 'A ' சர்டிபிகேட். இந்த படம் ஒருவேளை ஜோதி, பெருங்களத்தூர் தியேட்டர் என ரிலீஸ் ஆகி இருந்தால் இது விவாதத்துக்குரியதே அல்ல. அனைவரும் ஒப்புக்கொள்வர்.
    வெளிநாடுகளில் 18+ படம் என்றால், கண்டிப்பாக அனுமதி இல்லை. (திருட்டு தனமாக இன்டர்நெட்டில் பார்பவர்களை தவிர்ப்போம்) . நம் சூழ்நிலை அவ்வாறு இல்லை. இன்னும் பல காலம் ஆகலாம். பாக்யராஜ் / பாலசந்தர் படங்களை இதற்கு உதரணமாக சொல்ல அருகதையும் இல்லை. அவர்கள் திரைகதை-இல் காட்டும் விதம் வேறு. இங்கிலீஷ் மேட்டர் படம் மனைவியுடன் பார்க்கும் மனிதனுக்கும், இது கொஞ்சம் அருவருக்கும் என்பது சந்தேகமே இல்லை.

    ReplyDelete
  39. Hi Jackie hats of you it’s really a good article..

    ReplyDelete
  40. Very nice and meaningful post but useless for this KALACHARA KAVALARGAL

    ReplyDelete
  41. நம்ம ஆளுங்க மோசமான படமாக இருந்தாலும் கடைசிவரை பார்த்துவிட்டு அதன் பின் ஐய்யோ குய்யோன்ணு கத்துவாங்க. அதுதான் இந்த தமிழனுடைய பழக்கம் இந்த படம் மோசமான படம் என்று தெரியவந்தும் ஏன் இந்த தமிழன் இன்னும் அதை பார்க்க போறாங்கள்..எல்லோரும் ஆகோ ஒகோன்னு சொன்ன நம்ம சூப்பர் ஸ்டார் படத்தை இரண்டு தடவை பார்க்க டிரைப் பண்ணியும்( 2டாலர் கொடுத்து டிவிடி வாங்கி காசை வேஸ்ட் பண்ணிட்டேன்) இன்னும் பாதி படத்துக்கு மேலே அந்த கண்றாவிய என்னால உட்கார்ந்து பாக்க முடியலப்பா. என்னவோ அடிச்சிங்கப்பா.

    காரசாரமான கருத்துகளை பறிமாறி கொள்ளூங்கள். ஒவ்வொருவரின் சிந்தனைகளும் கருத்துகளூம் வேறு வேறுதான், அதற்காக தனிப்பட்ட காழ்புணர்ச்சி வேண்டாம் நான் பெரியவன் நீ சிறியவன் என்று அரசியல் வாதி மாதிரி சண்டைப்போட வேண்டாம் என்று பணிவன்புடன் அனைத்து பதிவாளர்களையும் இதன் மூலம் வேண்டிக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் அனைவரும்

    ReplyDelete
  42. YELLORUM NALLA FILM KAATURANGAPPA. VAAZGA TAMIZ.

    ReplyDelete
  43. //THOPPITHOPPI said...//
    //எல்லாரும் காரி துப்பிய ஒருவிஷயத்தை//
    அதெப்பிடி நீங்களா ஒரு முடிவுக்கு வாறீங்க ..

    எயிட்ஸில் முதல் இடம் என்றால் நாம் ஏற்றுக்கொள்வதில்லை .கலாச்சாரம் கலாச்சாரம்னு பேசி அதிலை 75 % பேருக்கு தெளிவே இல்லை ...அதே போல தான் இந்த படத்திற்கும் எதிர்ப்பு ...
    . நமீதாவின் தொப்பிள் வக்கிரம் தான் ..ஆம்லேட் போடுறது ..டபிள் அர்த்தம் வசனங்கள் ...அதை காட்டி காட்டி பழகியதால வக்கிரமாக தெரியவில்லை ..இந்த படத்தில் கழுத்துக்கு கீழேயே ஒரு ஷாட் உம் வைக்கவில்லை ..அப்புறம் என்ன ?

    ReplyDelete
  44. அருமையான நெத்தி அடி ... கவுதம் அப்பவே சொன்னாரு மனப்பக்குவம் அடைந்தவர்கள் பார்க்க வேண்டிய படம் என்று ..ஏன் இவங்க பாக்றாங்க ? இன்னுமே வளராதவங்க ?..விடுங்க சேர் .

    ReplyDelete
  45. ஜாக்கி.. இது போன்ற படங்கள் பலருக்கு தவறான ஐடியாவை கொடுத்துவிடும். ஒஹ்! இது போல நிறைய இருக்கு போல இருக்கு. நாமளும் செஞ்சா தப்பில்லை என்ற முடிவுக்கு வர தூண்டும். இது விளம்பரம் கொடுக்கும் எபக்ட் போல தான். சரவணா ஸ்டோர் விளம்பரம் ஒன்றை பார்த்து யாரும் போவதில்லை. அது மறு படி மறுபடி வரும்போது இது உண்மை தான் போல இருக்கு என்ற எண்ணம் நம்மை அறியாமல் தோன்றும். அதை தான் விளம்பரங்கள் தூண்டும். இது போன்ற படங்கள் , இது ஒன்று மட்டுமல்ல, இது தப்பி தவறி வெற்றி பெற்றால் அதே டெம்ப்ளேட்-இல் வரும் மற்ற படங்கள், இது சரி தான் என்ற எண்ணத்தை தூண்டிவிடும்

    இது கண்டிப்பாக துப்ப வேண்டிய படம் தான். வெற்றி பெறவே கூடாத படம் தான்.

    உங்கள் கருத்தோடு மாறு படுகிறேன்.

    தனிப்பட்ட வெறுப்புகள் யாருக்கும் யார் மீதும் வேண்டாம். கருத்துக்கள் வேறு. நாம் வேறு. உங்கள் கருத்துக்களோடு நான் முற்றிலும் வேறு பட்டாலும் நீங்கள் எழுதும் பெரும்பாலான எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. நான் உங்கள் எழுத்துக்களுக்காக அடிக்கடி வருவேன்.

    ReplyDelete
  46. அடடா...!

    9....???

    கட்டவிழ்ந்த மனித மனங்கள் இத்தனையா? எனில், மேனன்களுக்கு வெற்றியா...?

    இல்லை... இல்லை....!

    34....!!!

    கட்டவிழாத மனித மனங்கள் மும்மடங்கு அதிகம்...!!! இதுகண்டு, என் மனம் ஆறுதல் அடைகிறது..!

    அப்பாடா...! நன்றி தமிழ்மணம்.

    ReplyDelete
  47. நான்கு சுவற்றுக்குள் பல வன்மங்களின் கூடாக திகழும் மனிதன் பொது வெளியில் தன்னை உலகை மாற்ற வந்த கோமானாக கருதி கொள்கிறார்கள் .

    Sex on television can't hurt you unless you fall off. ~Author Unknown

    ReplyDelete
  48. ஜாக்கி...

    ரவிசங்கர் குறிப்பிட்டுள்ள அனைத்து படங்களின் விஷயங்களும் ஆபாசம் தான்... அதனால், இந்த நடுநிசி நாய்கள் படம் ஆபாசம் இல்லை என்று சப்பை கட்டு கட்டுகிறீர்களா?

    ஆபாசம் எந்த படத்தில் வந்தாலும் ஆபாசம் தான்.. அது சாமி இயக்கிய சிந்து சமவெளி ஆயினும், இந்த கவுதம் மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் ஆயினும்.

    போதிக்க நிறைய நல்ல விஷயங்கள் இருக்க, இதற்கெல்லாம் கொடி பிடிக்க வேண்டாமே!!!

    ReplyDelete
  49. //இந்த பதிவு யாருக்கும் பதில் சொல்ல அல்ல...இதற்கு எதிர்கருத்தோ அல்லது எதிர்பதிவோ வந்தாலும் நான் பதில் சொல்ல போவது இல்லை.. காரணம் ஒரு விஷயத்தை தொடர்ந்து என்னால் பேசிக்கொண்டு இருக்கமுடியாது.. இது எனது கருத்து அவ்வளவே...//


    இது. இது நல்ல ப்ளாகருக்கு அழகு

    ReplyDelete
  50. நடுநிசி நாய்களை விமரிசிப்பதற்குப் பதிலாக கௌதம் மேனனை பொளந்துகட்டுவதில் எனக்கு(ம்) உடன்பாடில்லை. படத்தில் எடுத்துக்கொண்ட கதைக்களம் தப்பென்றும் நான் கருதவில்லை,

    ஆனாலும்..

    ‘என்கிட்ட பெரிய சாமான் இருக்கு, பார்க்குறியா?’ என்பதுபோன்ற காட்சிக்குத் தேவையில்லாத - வலியத்திணித்த ’உலகமகா’ வசனவரிகளையும்,

    மகனால் பலாத்காரம் செய்யப்படும் வளர்ப்புத்தாயின் உணர்ச்சிகரமான முகத்தை அவ்வளவு நேரம் க்ளோஸ்-அப்பில் காட்டி - ஒரு கட்டத்தில் தாயும் மகனின் ‘மேட்டருக்கு’ உடன்படுகிறாள் என்று உலகத்துக்கு ’சேதி’ சொன்னதையும்,

    பார்க்கையில் உள்ளே ஒளிந்திருக்கும் பூனைக்குட்டி வெளியே வந்துவிடுகிறதே!

    நல்லது - அல்லது இரண்டையும் இரண்டு தட்டுகளில் வைத்துப் பார்க்கும்போது ’அல்லது’தான் விஞ்சி நிற்கிறது என்பதே என் கருத்து.

    ReplyDelete
  51. இந்தப் பதிவோடு உடன்பட முடியவில்லை..உங்களை நெக்ஸ்ட் மீட் பண்றேன்..

    ReplyDelete
  52. நான் கூட பரங்கிமலை ஜோதி பிட்டு படம் பார்ப்பவன் தான் அந்த படம் என்னை பாதிக்கவில்லை ஆனால் ந . நா .. படம் என்னை மிகவும் பாதிக்கிறது என்னை மட்டும் அல்ல என் போன்ற பிட்டு படம் பார்ப்பவர் அனைவரையும் பாதிக்கிறது . இது போன்று எந்த பிட்டு படத்தின் கதையும் இதுவரை வரவில்லை அல்லது நான் பார்த்தது இல்லை.

    ReplyDelete
  53. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...

    கருத்தில் சின்னவர் பெரியவர் என்று எதுவும் இல்லை அனால் நான் ஒரு வஷயத்தை பகிர வேண்டும் என்றால் அனானியாக இருக்க கூடாது... நான் ஒருவனிடம் வாதம் செய்ய வேண்டும் என்றால் அவன் யார் அவன்தராதரம் என்ன வென்று தெரியவேண்டாமா? முகம் காட்டிவிட்டேன் எனக்கு பதில் சொல்லு என்று சில ஆட்கள் சொன்னால் அவர்களிடம் நான் கருத்த்து சொல்லும் அளவுக்கு அவர்கள் இல்லை என்று அர்த்தம்...

    ஒரு கருத்தை சொல்ல மறைந்து கொண்டு பேசும் போதும் உன்னை எப்படி மதித்து பேசமுடியும்...?? நாங்கள் எல்லாம் எங்களை வெளிபடுத்தி இருக்கின்றோம் எங்கள் கேள்விக்கு பிதில் சொல்லலாமே என்றால் யா கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய வேண்டும்.....

    ReplyDelete
  54. கொய்யால.. தமிழ்மணத்துல 50 மைனஸ் ஒட்டு பிளஸ் ஓட்டு 12 இண்ட்லி பிள்ஸ் ஓட்டு 40 சோ சுட்டி கழிச்சி பார்த்தா பிளஸ் ஓட்டு 52வருது... அதுல ஒரு ஓட்டை கழிச்சாலும் 51 அப்படியும் பிளஸ் ஓட்டு ஒரு ஓட்டு அதிகமாதான் இருக்கு...

    நன்றி.. யப்பா யாராவது மைனஸ் ஓட்டு குத்துங்க... நானும் பாடம் படிக்கனும்..

    ReplyDelete
  55. நல்ல பதிவு .. தொப்பி தொப்பி ..குப்பி கிப்பி ..எல்லாம் ஒடுங்க ..ஒடுங்க

    ReplyDelete
  56. நடுநிசி நாய்கள் நல்ல படமா இல்லையா என்பது இரண்டாவது.
    பொதுவாக ஒருவர் அவர் கருத்தை வெளியிடும், போது நமக்கு எதிர் கருத்து இருந்தால் அதை சொல்லும் போதும் அடுத்தவர் மனது புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    அல்லது என்னால் முடியாது என்றால் ஜாக்கி ஒன்றும் வந்து உங்களை படிக்க சொல்லி வற்புறுத்தி இருக்க வாய்ப்பில்லை.
    அதனால் அதை ஒதுக்கி விட்டுவிட்டு போய் விடலாம்.
    இது போன்ற தனிமனித தாக்குதல்கள் நாகரிகமானவை அல்ல என்று நினைக்கிறன்.

    ReplyDelete
  57. ஜாக்கி தொப்பி தொப்பி போன்ற போலி பதிவர்களுக்கு ஆப்பு அடிக்க ஒரு புதிய சட்டம் வருகிறது
    காத்திருக்கவும்.

    ReplyDelete
  58. Jackie, I'm reading urs and cable's blog regularily. Am not comparing, but I feel reading comfortable only reading your both blog. Now coming to matter.

    The movie was certified 'A', why did people go to that movie with children when it was announced 'Pschyo Thriller'. And he has shown clearly only that boy, due that sitn he has become like that. Some one is getting so angry reading ur reviews and u also getting more tensed these days. No need jackie. You need not care about those ppl. You just keep writing and keep up your good work. Where is 'Seedan' review? what is this jackie? is it not released in banglore? Take care jackie...

    ReplyDelete
  59. hello sir
    i am your fan.i read every post in your blog.i admire your thoughts very much.when i read this post i feel both +ve as well as -ve.because i defend personal vulgar words against GVM and his movie is so vulgar. sorry for my English.sir, oru nalla movie parththuvittu orall nallavana marunalum athu antha padaththukku kitaththa credit. athe mathiri ippadi oru padaththai parthuvittu 2 members mind marunalum kettathuthane sir.Avaroda varanam ayiram movie parthu en appava miss pannivittan entru thoniyathu.i told my husband you also see that father and son relationship.See Movie is a movie.our peoples are that much matured (Ex.our politics) thats why i am telling. keep yr good work.thank you sir.
    -KavithaSaran, Kochi

    ReplyDelete
  60. எப்படியோ கௌதம்மேனனுக்கு ஓசி விளம்பரம் கிடைத்து விட்டது.

    ReplyDelete
  61. Well said Jackie sir....keep it....

    ReplyDelete
  62. ஜாக்கி அவர்களுக்கு வணக்கம்,
    நான் உங்களுடைய blog-ன் தொடர் வாசகன்.
    இதுவரை பின்னூட்டம் இட்டதில்லையே தவிர தங்களுடைய படைப்புகளை படிக்க தவறியதில்லை.
    இந்த பதிவில் தங்களுடைய வழக்கமான நடை சற்று மாறியிருப்பதை காண இயலுகிறது.
    மேலும் இவ்வளவு ஆக்ரோசமான பதிவு அவசியமா என்ற கேள்வியும் எழுகிறது.
    கலாசார காவலர்கள், இந்த பதிவை கண்டு திருந்த போகிறார்களா என்ன?
    இந்த படத்தை பற்றிய தங்களுடைய தெளிவான கண்ணோட்டத்தை பட விமர்சனத்திலேயே தெரியபடுத்தி விட்டீர்களே!!!
    தங்களுடைய என்னத்தை இன்னும் நாசூக்காக சொல்லி இருக்கலாமோ என்பது என் கருத்து!

    நன்றி...
    கார்த்திகேயன்

    ReplyDelete
  63. ஏசர்ட்டிபிகேட் கொடுத்த ஒரு படத்தில் அது நொட்டை இது நொள்ளை இதை என்னால எற்றக்கொள்ளமுடியவில்லை என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் அது உங்கள் உரிமை.. அதை விடுத்து கவுதம் மேனன் அரிப்பெடுத்தவன் என்று சொல்வது ஏற்புடையது அல்ல....


    correct.........

    ReplyDelete
  64. குறிப்பு....

    இந்த பதிவு யாருக்கும் பதில் சொல்ல அல்ல...இதற்கு எதிர்கருத்தோ அல்லது எதிர்பதிவோ வந்தாலும் நான் பதில் சொல்ல போவது இல்லை.. காரணம் ஒரு விஷயத்தை தொடர்ந்து என்னால் பேசிக்கொண்டு இருக்கமுடியாது.. இது எனது கருத்து அவ்வளவே...

    - சொன்னது நீதானா சொல் சொல் ஜாக்கி சொல் சொல்

    ReplyDelete
  65. படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. இருப்பினும் திரை விமர்சனப்படி என் கருத்து தமிழில் இது போன்ற படங்கள் வருவது நலமே.

    அதான் A ன்னு கொடுத்து இருக்காங்க இல்லை அப்புறம் ஏன் பாஸ் சின்ன பசங்கள பாக்க விடறீங்க.

    அப்புறம் ஜாக்கி நீங்கள் இந்த ஆபாச வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். ஏன் என்றால் எத்தனை பெண்கள் தங்கள் பதிவை படிப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவும்.

    ReplyDelete
  66. நான் வலைப்பதிவுகளின் வாசகன். அதிகமாக கருத்து பதிவு செய்வதில்லை. இப்பதிவில் கருத்து பதிவு செய்வது அவசியம் என்று கருதி பதிக்கிறேன்.
    இப்படம் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே.எனவே சிறுவர்கள் படம் பார்த்து கெட்டு போக வாய்ப்பில்லை.pedolphites பற்றி பல ஆங்கில படங்கள் வந்துள்ளன.தமிழிலும் சில படங்களில் மறைமுகமாக காட்டியுள்ளனர்.அப்பா- மகன் முறையற்ற உறவு மட்டுமே தமிழ் திரைக்கு புதிது. பத்திரிக்கைகளில் இது போன்ற செய்திகள் பலமுறை வந்துள்ளன.தற்போது பரபரப்பாக உள்ள ஆருசி கொலை வழக்கு மர்மம் வெளியாகும் போது பல அதிர்ச்சிகள் நிச்சயம். ஜாக்கி உங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு வேலையை தொடருங்கள்.

    ReplyDelete
  67. ஆ ஊன்னா மூணு மாசத்திற்க்கு ஒரு முறை ஆரம்பிச்சுறிங்கப்பா...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner