பெங்களூர்(பெண்களூர்) நண்பர்களின் சந்திப்புகள்..




 குறிப்பு... இது ஒரு சுய சொறிதல்...

ஒரு பதிவர் சந்திப்பு என்று அறிவித்து விட்டு அங்கு நானும் போய் இருக்கும் போது, நீங்க ஜாக்கிதானே என்று நலம் விசாரிப்பார்கள்... நாமும் நிறைய பேரை சந்தித்து இருப்போம், சிலரை படித்து இருப்போம்.. அந்த எழுத்தை வாசித்து ஒரு பிம்பத்தை மனது உள்வாங்கி இருக்கும் (ஈரோடுகதிர் கவனிக்க) அதனால் அவர்களை எளிதில் இனம் கண்டுக்கொள்ளலாம் ஆனால் எனது தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்கள் எப்படி இருப்பர்கள் என்பது எனக்கு தெரியாது? அப்படி நான் சந்தித்த  நண்பர்களை பற்றிய சுவாரஸ்யங்கள்... இங்கே...


இப்போதாவது தளத்தில் ரோமிங்கில் இருக்கின்றேன் என்று அறிவித்து இருக்கின்றேன்.. காரணம் இன்கம்மிங் ஒரு ரூபாய் எனபதால் முக்கிய விஷயத்தை மட்டும்  பேசவும் என்பதாய் அந்த அறிவிப்பு அப்படி இருந்தும் இரண்டு மூன்று கால்கள் அனானியாக வந்து ஓத்தாம்பட்டு வாங்கி கட்டிக்கொண்டார்கள்.


பெங்களூரில் இருக்கின்றேன் என்று ஒரு வரி எழுதிவிட்டு வந்தேன்..அதை படித்து விட்டு ஒரே ஒருவர்  அவரது வேலையையும் நேரத்தையும் ஒதுக்கி வந்து சந்தித்து இருந்தால் மகிழ்ச்சி என்று நினைத்துக்கொண்டேன்...

காரணம் என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும்  சந்திக்க வருபவர்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது... அதில் ஒரு ஆர்வம் அந்த கேரக்டர் எப்படி இருக்கும்? என்பதை அறிய ஆசை கொள்வேன்.
ஒரு ஏழு பேர் வந்து சந்தித்தார்கள்..

தொடர்ந்து பின்னுட்டங்களில் கருத்தை பகிரும் வித்யாசமானகடவுள் என்பவர் என்னை வந்து சந்திப்பதாக இருந்தார் வேலை பளு காரணமாக அவரால் சந்திக்க முடியவில்லை

என்னை சந்தித்த அத்தனை பேரும் சொன்னது நாங்கள் விரும்பி வாசிப்பது, லக்கி அதிஷா, கேபிள்,கார்க்கி, தண்டோரா. பரிசல்,நர்சிம், என்று பெரிய பட்டியலே சொன்னார்கள் இருப்பினும் என்னை சந்திக்க இருந்த பொதுவான ஆர்வம் இந்த ராவான ஆள் எப்படி நேர்ல இருப்பான் என்ற காமன் மேன்தாட்தான் என்னை சந்திக்க காரணம் என்பது என் கருத்து...ஆனால் நேரில் சந்தித்த போது அது வேறுமாதிரியாக இருந்தது...

என்னை சந்தித்து நாகர்கோவில்காரர்.. நான் இருக்கும் தெருவுக்கு பக்கத்திலேயே இருக்கின்றார்... அமீரகத்தில் இரண்டு வருடத்துக்கு மேல் வேலை செய்துவிட்டு இங்கு வந்து செட்டில் ஆகி இருக்கின்றார்... குழந்தைக்கு உடம்பு சரியல்லை என்றார்...பெய்ர் ஜெயசிங்.....

()மாதேஷ் நான் ராம்)

அடுத்ததாக நண்பர்கள் ராம் மற்றும் மதேஷ் இருவரையும் ஓட்டலில் சந்தித்தேன்..நிறைய பேசுனோம் இவர்கள் பற்றி ஏற்கனவே எழுதியாகிவிட்டது..

(டியர்பாலாஜிநான் மூர்த்தி)

அடுத்து மூர்த்தி பத்து வருடம் இதே ஊரில் வேலை செய்து விட்டு இப்போது வேறு வேலை தேடிக்கொண்டு இருக்கின்னறார். நிறைய பேசினோம்.. என்னோடு ஒரு படமாவது பார்த்துவிட வேண்டும் என்று அன்பு கோரிக்கை விடுத்தார்...


டியர் பாலாஜி என்று  எப்போதாவது பின்னட்டம் போடுபவர்.. போனில் போர் அடித்தால் என்னிட்த்தில் பேசிக்கொண்டு இருப்பவர்.. பெங்களுர் வந்ததும் நான் சந்திக்க ஆவல் கொண்ட மனிதர்களில் இவரும் ஒருவர்...திடிர் என்று திங்கள் என்னை படத்துக்கு அழைத்தார்.. நான் ஏற்க்கனவே பயணம் படத்துக்கு போக மூர்த்தியோடு கமிட் ஆகி இருந்தேன். அப்புறம் மூன்று பேராக போகலாம் என்று முடிவு  எடுத்தோம்..

(டியர்பாலாஜி மற்றும் நான்)

காதலர் தினத்தன்று தொம்லுர் பிரிட்ஜ் அருகே  இருக்கும் நந்தினி ஹோட்டலுக்கு போய் பிரியானி சாப்பிட்டு, பேம் தியேட்டரில் படம் பார்த்து விட்டு மூவரும் பேசிக்கொண்டு இருந்தோம்.. மூர்த்தியை வழி அனுப்பிவிட்டு பாலாஜி வீட்டுக்கு என்னை அழைத்து போனார்.. மனைவி, மற்றும் பெண்குழந்தையை அறிமுகபடுத்தி வைத்தார்...சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் போது அருள் என்பவர் போன் செய்தார்..

கொரமங்களா அருகில் இருக்கும் மகராஜா ஓட்டலில் அவரை மீட் செய்தேன்.. கரூர்காரர்....நிறைய பேசுனோம்... அவரது மனைவி  நெடுநாளாக  எனது தளத்தை படிப்பவராம்.. என்னங்க  உங்க தலைவர் வந்து இருக்கின்றார்...போய் பார்க்கலையா? என்று சொன்ன போதுதான் அவருக்கு நான் பெங்களூர் வந்த விஷயமே தெரியும் என்றார்... தமிழில் பதிவு எழுதும்பலரை பிடிக்கும் லக்கி அதிஷா கேபிள் போன்றவர்களை தொடர்ந்து வாசிக்கும் போது கிடைத்த லிங்கில் எனக்கு உங்கள் தளம் கிடைத்தது என்றார்.. பேச்சு சுவாரஸ்யத்தில் நான் போட்டோ எடுக்க மறந்து விட்டேன்.... மன்னிக்கவும்...காதலர்தினத்தின் போது பார்த்தது.. போன் நம்பர் மிஸ் செய்துவிட்டேன்..இன்போசிஸ்இல் பணி...முக்கியமாக வெளிநாடுகளில் இருக்கும் போது உள்ளுரில் இருப்பது போல உணர்த்துவது உங்கள் தளம் என்று சொன்னார்...

இரண்டுநாள் கழித்து நண்பர் யுவா என்பவர் போன் செய்தார்..
 (சுவாதி ஓட்டல்)

இப்பதான் எனக்கு தெரியும் நீங்க பெங்களுர்ல இருக்கிங்கன்னு இன்னைக்கு சந்திக்க முடியமான்னு கேட்க அவசியம்  சந்திக்கலாம் என்றேன்...

இவரும் பாண்டிச்சேரிகாரர்தான்... இங்கு ஒரு கம்பெனியில் புராஜக்ட் மெனேஜராக இருக்கின்றார்... நர்சிம்மை தொடர்ந்து வாசிப்பேன் என்றார்... முதலில் நான் பேசியது மயில்ராவணனிடம்தான்.. கார்க்கியின் நக்கல் எழுத்துக்கள் தனக்கு பிடிக்கும்  என்றார்.. கல்லூரி காலங்களில் தான் அவ்விதமாக இருந்தார் என்று சொன்னார்...

(யுவா...)

நீங்கள் இருக்கும் இடம்  சொன்னால்  நான் வந்து பிக்கப் செய்து கொள்கின்றேன் என்றார்.. இடம் சொன்னேன் நீல சென்னில் வந்தார்...பயணம் நாகர்ஜுனா போல இருந்தார் காரணம் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு அப்பாவாம்.. இவனுங்க எல்லாம் இளமை லேகியம் எங்க திங்கறாங்கன்னு தெரியலை..

யுவா சொன்னார்  ஜாக்கி, நீங்க ஏற்கனவே ஆரன்யா ஒட்டலில் சாப்பிட்டு விட்டீர்கள் அதனால் கண்டிப்பா ஒரு புது ஓட்டலுக்கு போக  வேண்டும் என்று சொன்னார்.. அப்படி எல்லாம் இல்லை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை  என்றேன்

 அந்த ஓட்டலுக்கு பக்க்ததில் சுவாதி ஓட்டலுக்கு போனோம்.. நிறைய பேசினோம்.. இரண்டு பேருக்கும் பாலகுமாரன் பிடிக்கும்..நான் மட்டும்தான்  போதையில் இருந்தேன்..
 (யுவா ரொம்ப அடக்கமாக)

அவர் ஆபிசுக்கு திரும்ப  போகவேண்டும் என்பதால் என்னை சந்திக்க ஆபிசில் இருந்து பாதியில் வந்துவிட்டேன் என்றார்...  என்னை விட்டில் டிராப் செய்து விட்டு சென்றார்.. போனதும் ஒரு பதிவையும் போட்டார்..... அதனை வாசிக்க  இங்கே கிளிக்கவும்...

 முதல் முறையாக எனக்கு பெங்களுரில் இருக்கும் போது ஒரு பிரபல பெண் பதிவர் போன் செய்தார்..

தொடர்ந்து ஒரு பெண் நண்பி வாசித்து விட்டு பின்னுட்டம் போடுவார்..  அந்த பெண் பெங்களூர்தான்,போன் செய்து வாழ்த்து தெரிவித்தார்... பேசும் போது நிறைய பதட்டம், இன்னும் நிறைய சொன்னார் அதை எழுதினால் அதிகம் அலட்டுவதாக தோனும் என்பதால் இத்தோடு நிப்பாடிக்கின்றேன்.ஞாயிறு என்னை  வந்து என்னை வந்து சந்திக்க விரும்புவதாக சொன்னார்.. அன்று அவர்  அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிறகு ஒரு நாளில் சந்திக்கின்றேன் என்று சொன்னர்... அவர் பெயர்சாஜன்....


சந்தித்த எல்லோரிடமும் நான் கேட்கும் கேள்வி..எனது தளத்தை யார் அறிமுகபடுத்தியது? ஏன் என் பிளாக் பிடிச்சது? காரணம் என்ன?  எப்போதில் இருந்து வாசிக்கின்றீர்கள்.,

பதில் இப்படித்தான் வந்தது
தமிளிஷ் மூலம் வந்தவர்கள் ஏராளம்..
வெளிப்படையாக என் சக நண்பனோடு பேசவது போல இருக்கின்றது...எழுதுவதை போல நேரில் துளி கூட அலட்டல் பத்தா இல்லாமல் இருப்பது மகிழ்வை தருவதாக அனைவரும் சொன்னார்கள்...நிறைய எழுதனும் என்றார்கள். 

நன்றி ஜாக்கி இப்பயும் எப்பயும் இதே போலதான்..

  
பெயர் வேண்டாம்.. ஒரு பீர் 185ரூபாய் பத்து பொண்ணுங்க ஆடுவது போல ஒரு இடம் இருக்கு போலாமா என்றார்.. போலாம் என்றேன்.. அங்க போயிட்டு அந்த சூழ்நிலையை உங்க ஸ்டைலில் எழுதவும் என்றார்...நானும் ஆர்வமமாய் இருந்தேன்..அதுக்கு பிறகு போன் செய்யவே இல்லை.. இப்போது அந்த பார் எங்கே இருக்கின்றது என்று தேடிக்கொண்டு இருக்கின்றேன்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..



குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்  






12 comments:

  1. சந்தித்த எல்லோரிடமும் நான் கேட்கும் கேள்வி..எனது தளத்தை யார் அறிமுகபடுத்தியது? ஏன் என் பிளாக் பிடிச்சது? காரணம் என்ன? எப்போதில் இருந்து வாசிக்கின்றீர்கள்... when i was searching about tamil blogs, i found this name.. nondha kumaran... its attracting name.. that day i started reading.. now keep on reading eventhough i have heavy work load.. all the best for your cini life... sachanaa...

    ReplyDelete
  2. //இப்போது அந்த பார் எங்கே இருக்கின்றது என்று தேடிக்கொண்டு இருக்கின்றேன்..//

    I know two bars at double road..
    1.From lal bagh if you cross Big Bazaar there is a big drainage..from the drainage 3rd building(next to the small wine shop)..i went to that bar to dring beer and i left that place immediately after i drunk the beer because to many girls surrounded me and smiling at me..
    2.in the same road u can find a fly over..there is a bar just right side at the starting of the fly over..
    iwas searching food in the late night so i went to that bar. i saw few girls were dancing there..

    ReplyDelete
  3. ஆக பெண்களூரை அனுபவிக்கறீங்க...

    ReplyDelete
  4. மைனஸ் ஒட்டு குத்திய புண்ணியவான்களுக்கு நன்றி...

    ReplyDelete
  5. நன்றி சஜானா உங்களை பற்றியும் இந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கின்றேன்.. ஆனால் நீங்கள் பெங்ண என்பதால் சில கேள்விகள் உங்களிடத்தில் முன் வைக்கவில்லை... நீங்களே பதில் சொல்லிட்டிங்க நன்றி...

    ReplyDelete
  6. ஜாக்கி, நல்லவொரு அறிமுகத்திற்கு நன்றிகள். என்னது நாகார்ஜுனா-வா...? இந்த மாதிரிலாம் ஏத்திவிட்டா, உங்களுக்கு தான் சிரமம். தொல்லை பண்ணுவேன் தங்களின் படத்தில் என்னை போடசொல்லி.

    ReplyDelete
  7. ஒரே இடத்தில் 5 பார்கள் பெயிர் பல்லவி பார் & theatre லேன்ட் மார்க்: corporation circle ஒரு பார் பிடிக்கவில்லை என்றால் மற்றொன்றுக்கு போய்விடலாம். சும்மா யாரையோ தேடுவது போல் ஒவ்வொரு பார் உள்ள பொய் பார்த்துவிட்டு வந்திரலாம். சத்தியமாக இதை நான் செய்யவில்லை நம்புங்கள். டிஸ்கி: கோக் 60 ரூ, பீர் 200 ரூ. மாலை 7 மணிமேல் உகந்த நேரம்.

    ReplyDelete
  8. இதற்கு பெயிர் லைவ் பேண்ட் சுமார் 5 ஆண்டு கழித்து இப்போது இந்த ஆட்சியில் open பண்ணிவிட்டார்கள்

    ReplyDelete
  9. அட அதெல்லாம் இல்லீங்க... அன்னைக்கு ஊருக்கு கிளம்பிக்கிட்டு இருந்தேன்... ஐந்தரைக்கே அலுவலகத்தில் இருந்து கிளம்ப வேண்டியவன்... ஆறரைக்கு தான் கிளம்ப முடிந்தது... ஐந்தரைக்கு கிளம்பி இருந்தால் ஏழு மணிக்கு சில்க் போர்ட் வந்திருப்பேன்... ஒரு மணி நேரம் தாமதத்தால், மடிவாலா வந்தது கிட்டத்தட்ட ஒன்பது மணி... அதான் சந்திக்க முடியலை... இந்த வாரம் இங்கு தான் இருப்பேன்... அந்த பக்கம் ஊரு வேலையும் இருக்கிறது... வரும்போது சந்திக்கிறேன்...

    ReplyDelete
  10. BJP Government ruling in Karnataga. Good. They have opened Live Band again. Very Good.

    INDIA IS SHINING!!!!????

    ReplyDelete
  11. நிச்சயமா அந்த பாருக்கு அடுத்த தடவயாவது நீங்க போகணும்!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner