நீங்க உங்க ஒய்ப் மேல ரொம்ப காதலா இருக்கிங்க.. அதே போலதான் உங்க ஒய்ப்பும்.. அவ்வளவு காதல் உங்க ரெண்டு பேருக்கும்.. உங்களுக்கு ஒரு பொண் கொழந்தை இருக்கு... ஒரு நாள் ஜாலியா பொண்டாட்டி கூட அவுட்டிங்போலாம்னு நினைக்கிறிங்க்.. குழந்தைய ஒருத்தங்க கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு வெளியே போலாம்னு போகும் போது காரில் ஏற்கனவே ஒருத்தன் உட்கார்ந்துகிட்டு உங்களை துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றான்.. நான் சொல்லற வேலை எல்லாம் நீ செய்யலைன்னா உன் குழந்தை உயிரோடு இருக்காதுன்னு மிரட்டறான்...சரி அவன் பொய் கூட சொல்லறான்னு நினைக்க முடியலை காரணம்.. உங்ககளை பற்றிய எல்லா விபரமும் அவன் விரல் நுனியில் வைத்து இருக்கின்றான்... எப்படி இருக்கும்???
என்டா பொண்டாட்டியோடு ஜாலியா கிளம்பனது தப்பாடா? என்று வருத்தபடவைக்கின்றான் ஒருவன்..
BUTTERFLY ON A WHEEL-2007 படத்தின் கதை என்ன????
Neil Randall (Gerard Butler) ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கின்றார்ன்...நீல் மனைவி Abby Randall (Maria Bello) ஹவுஸ்ஒய்ப்..மிக அழகாக வாழ்க்கை போய்க்கொண்டு இருககின்றது.. இந்த ஆத்மார்த்த தம்பதிக்கு சோபியா என்ற குழந்தை இருக்கின்றது..
ஒரு நாள் அந்த குழந்தை கடத்தபடுகின்றாள். எதிரி என்று யாரும் இல்லை அப்புறம் எப்படி??? டாம் (பிராசன்) என்பவன் நான் சொல்லும் வேலையை செய்யவில்லை என்றால் உனது குழந்தை கொல்லப்படும் என்று மிரட்டுகின்றான்.. எதுக்கு அவன் அப்படிநடந்துக்கனும்?? அவன் என்ன பைத்தியமா?? படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
இந்த படம் ஒரு நல்ல திரில்லர் கதை...
இந்த படம் கனடா நாட்டு மொழிப்படம்..
நம்ம பியர்ஸ்பிராசன் (ஜேம்ஸ்பாண்ட் ) வில்லனா நடிச்சபடம்.. ஆனா எதுக்கு இவர் வில்லனா நடிக்கனும்.. படத்தோட கிளைமாக்ஸ் பாருங்கள் அருமை..
நான் சொல்லற வேலையை செய்யலைன்னா உன் குழந்தையை கொண்ணுடுவேன் என்று மிரட்டி மிரட்டி காரியம் சாதிக்கும் போது நமக்கு இயல்பாகவே பிராசன் மீது கோபம் வரும்....
ஒரு தப்பு நடக்குது அதுக்கு இப்படியும் பனிஷ்மென்ட் கொடுக்க முடியுமா? அப்படி கொடுத்தா ஒரு பய இந்த தப்பை பண்ணவே மாட்டான்.. சார் அது என்ன தப்பு??, இதானே வேனாம்கிறது..... படம் பாருங்க...
தம்பதிகளுக்குள் என்னதான் புரிதல் இருந்தாலும் இந்த படத்தை ஒருமுறை அவசியம் பார்க்க இந்த படத்தை பார்க்க பரிந்துரை செய்கின்றேன்.
இந்த படம் மலையாளத்தில் காக்டெயில் என்ற பெயரில் இதே கதை அமைப்பில் வெளியானது...
என்னதான் விஷயம் அதுதான் என்றாலும் கணவன் எதிரில் மனைவியின் உடையை அவிழ்க்க சொல்லும் போது கணவன் துடிப்பது அருமை... அதே காட்சிக்கு வக்காலத்து கிளைமாக்சில் நல்ல சூடு..
நல்ல விறுவிறுப்பான திரைக்கதையாக இருந்தாலும் படம் கொஞ்சம் ஸ்லோதான். காரணம் மூன்று பேரோடு பயணிக்கும் திரைக்கதை அதனால் எளிதில் யூகிக்க கூடிய டுவிஸ்ட்டுகள்..பட் கிளைமாக்ஸ் அருமை அதனால் இந்த படம் பார்க்கவேண்டிய படம்.....
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்
Directed by Mike Barker
Produced by William Vince
William Morrissey
Pierce Brosnan
Written by William Morrissey
Starring Pierce Brosnan
Gerard Butler
Maria Bello
Callum Keith Rennie
Music by Robert Duncan
Cinematography Ashley Rowe
Editing by Guy Bensley
Bill Sheppard
Distributed by Lions Gate Entertainment (USA)
Icon Entertainment (non-USA)
Release date(s) August, 2007
Country Canada
United Kingdom
Language English
Budget $20 million
பைனல்கிக்....
இந்த படம் பார்க்கவேண்டியபடம்... எல்லா கணவனும் மனைவியும் இந்த படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும்....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
Dear Sekar,
ReplyDeletegud review!!
malayalis steal this story already, came as "cocktail"
senthil, doha
me the first?????
ReplyDeletesenthil, doha
y my comments are not showing??
ReplyDeletesenthil, doha
shattered the u.s. title will be easy to find the movie.
ReplyDeleteசெந்தில் கமென்ட் மாடுரேஷன் வச்சி இருக்கேன்.. சில நேரத்துல சில சைக்கோஸ் சொம்பை தூக்கிகிட்டு எல்லாம் உள்ள வந்துடுதுகள்.... அதுக்காகத்தான்.
ReplyDelete//malayalis steal this story already, came as "cocktail"//
ReplyDeletesorry, i didnt read the review full, coz i already seen the movie.
nice movie
senthil, doha
இது முதல் முறை பார்க்க பிரமிக்க வைக்கும்,இரண்டாம் முறை சல்லுன்னு இருக்கும்.ஆனால் பியர்ஸ் ப்ராஸ்னன் ரசிகர்கள் அவசியம் பார்கணும்,ஜெரார் பட்லர் செம பல்பு வாங்குவார் இதில்.
ReplyDeleteநல்ல படம்தான் ஜாக்கி :)
ReplyDeleteசில நேரத்துல சில சைக்கோஸ் சொம்பை தூக்கிகிட்டு எல்லாம் உள்ள வந்துடுதுகள்.... அதுக்காகத்தான்.... ahahhaahahah..........thoppi.. thoppi.....
ReplyDeleteNalla Padam...
ReplyDeleteNalla Vimarsanam...
Very nice film & nice review. Last week only I've seen this film.
ReplyDeleteRaj-lovewarehouse.blogspot
யோக்கியசிகாமணிக்ளுக்கு அறிவிப்பு...nachunu iruku...
ReplyDeleteபொங்கறநாயிங்க புரொபைலோட பொங்கினா அந்த மூஞ்சிங்களை பார்க்க ஆசை....rhyming-a pongi irukreenga sir... nalla iruku... :)
anbudan jackey enna epadei kovam vemarsanam seibavargal saiyatumaa kovam vanndam amaithee amaithee ennipondra nanbarkalukka ezutungal podum NADPUDAN NAKKEERAN (profoil ennaku thereyathu)en gmail nakkeeran1964@gmail.com
ReplyDelete"என்னை சீண்டுபவர் யாராகிலும் தனித்தனியா எல்லாம் பதில் சொல்ல முடியாது...ஒரே பதில்.. இதோ" Hi Jackie, Please leave this matter here, do not reply anymore to them. I know some people are insanely writing personally attacking not only you but also your followers and went into the extreme as they were saying your followers are all "SAKADAI". In the recent times they made the blogs very dirty place to enter. so it is better to avoid these people by not commenting any more.
ReplyDeletenice review. hav to watch :)
ReplyDeleteசில மனித விலங்குகள் நாங்கள் உத்தமர்களின் மறு உருவம் என்று உறுமிக்கொள்கின்றன .
ReplyDeleteயார் என்ன சொன்னாலும் சரி நீங்க கலக்குங்க பாஸ் !!!
நல்ல படம், நல்லா review சொல்லறீங்க ...சீக்கிரம் டோர்ரென்ட் தட்டி படத்த பார்க்கணும் ...
ReplyDeletehttp://rsksudhakar.blogspot.com/
நம்ம Blog பக்கத்தையும் கொஞ்சம் பார்த்து கருத்து சொல்லவும் !!!