நம்ம ஊரில் ஊரே ஒரு நாதஸ்வர திருவிழாவை ஒரே இடதிதில் கொண்டாட முடியுமா? எங்கு காணினும் நாதஸ்வரகாரர்கள், தவில்காரர்கள், மழிக்க பட்ட மீசை இல்லாத முகங்கள்..வெற்றிலைபோட்டு குதப்பும் வாய்கள்,தெய்வமகன் சிவாஜி வைத்து இருந்த ஹேர்ஸ்டைலை இன்னமும் பாலோ செய்து கொண்டு இருப்பவர்கள்.
பட்டு வேட்டி சில்க் ஜிப்பா என்று ஊரே நாதஸ்வர திருவிழாவை கொண்டடி இருக்கின்றதா? இல்லை... சரி பறையடிப்பவர்கள் தப்புக்கொட்டுபவர்கள் ஒரு நான் தமிழகத்தில் இருந்து ஒரே இடத்தில் கூட தாங்கள் அனுதினமும் வாசிக்கும் இசையை கொண்டாடி இருக்கின்றார்களா?
தமிழகத்தில் வருடா வருடம் கர்னாடக சங்கீதத்துக்கு திருவையாறில் ஆதனை நடக்கின்றது... ஆனால் அதே ஆராதனையை முன் வைத்து எந்த திரைப்படமும் வந்ததுஇல்லை... அன்னியன் படத்தில் கூட அது ஒரு பார்ட்டாக வரும். முழுக்க முழுக்க இசையை மையபடுத்தி வந்த திரைப்படங்கள் மிக குறைவு....
ஊரே கொண்டாடும் இசை திருவிழாக்கள் தமிழகத்தில் மிக குறைவு அதுதான் மிக முக்கியகாரணம்....
பெல்கிரேடுல் இருந்து பேருந்தில் நான்கு மணி நேர பயணம்.. செர்பியாவில் இருக்கும் குகா என்ற கிராமத்தை அடைந்து விடலாம்....
வருடந்தோரும் 60 ஆயிரம் மக்களுக்கு மேல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி... 20000 பேர் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள உலகத்தில் பலமுனைகளில் இருந்து வருகின்றார்கள்... அது ஒரு டிரம்பட் இசைத்திருவிழா....
விழா தொடங்கும் இரண்டு வாரத்துக்கு முன்பில் இருந்தே போட்டியில் கலந்து கொள்ள வந்து இருக்கும் குழுக்களை பரிசோதித்து கழித்து கட்டும் வேலை நடக்கத்தொடங்கிவிடும்...
சரியாக ஒரு சுபயோக சுபதினமான வெள்ளிக்கிழமை அன்று விழாவை தொடங்கி வைப்பார்கள்.. அன்று தொடக்கவிழா...மறுநாள் சனிக்கிழமை விழா கொண்டாட்டம் ஞர்யிறு போட்டி நடக்கும்....
இதற்க்கென இருக்கும் ஒரு ஓப்பன் ஆடிட்டோரியத்தில் போட்டி நடக்கும்... அந்த 60000க்கு மேமற்ப்ட்ட மக்கள் சரக்கோடு அட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்..சற்றே யோசித்து பாருங்கள் அந்த நிகழ்வை.,.....
வருட வருடம் போட்டியின் பரிசாக இருக்கும் தங்க டிரம்பட்டை வெல்வதே அனைத்து குழுவின் நோக்கம்...
எங்கள் பள்ளியில் ஒரு பேன்ட் கோஷ்ட்டி இருந்தது மார்ச் பாஸ்ட் நடத்தும் போதும் ஸ்போர்ட்ஸ்டே நடக்கும் போது அந்த டிரம்பட் இசைகேட்கும்.....
என் மனைவியின் அக்கா கூட பேண்ட்கோஷ்ட்டியில் இருந்தாள்... போட்டோ மட்டும் பார்த்து இருக்கின்றேன்.
சின்ன வயதில் பள்ளிக்கு போகும் வழியில் எருமை மாட்டு தோளை வெயிலில் காயவைத்து அதனை தப்பு மேளத்துக்கு தயார் செய்வார்கள்... காலனியான அஅந்த பகுதியை கிராஸ் செய்யும் போது நெருப்பில் காட்டி பிராக்டிஸ் செய்வதை பார்த்து இருக்கின்றேன்.
ஆனால் இந்த பேண்ட் கோஷ்ட்டியோடு நேரடி தொடர்பு இல்லையென்றாலும் மறைமுக தொடர்பு ஒன்று எனக்கு இருக்கின்றது...
கடலூர் நியூசினிமா இருக்கும் இடத்தில் அண்ணா பாலம் ஆரம்பிக்கும் இடத்தில் லேப்ட் சைடில் ஆற்று ஓரமாக எனது அண்ணன் டிங்கர் குமார்.. டிங்கர் ஷாப் வைத்து இருக்கின்றார்.. அவர் கடைக்கு பக்கத்தில் ஒரு பேண்ட் கோஷ்ட்டி கடை வைத்து இருக்கின்றது,...
எந்த புது படத்தின் பாடல்கள் வந்தாலும் அவர்கள் பிராக்டிஸ் செய்வார்கள்..கடலூரின் சுற்று புறத்தில் இருக்கும் மார்வாடி திருமணம் மற்றும்பெரிய தலைகள் மண்டையை போட்டு விட்டால் இவர்கள் பேண்டு வாசிப்பார்கள்...
அண்ணனின் டிங்கர் ஷாப்பில் உட்கார்ந்து இருக்கும் போது இசையெனும் இன்ப வெள்ளத்தில் நீந்த விடுவார்கள்..விதவிதமாய் வாசித்து ரசிக்க வைப்பார்கள்.. சிலநேரத்தில் நல்ல அற்புதமான பாடலை பாடி கலவரபடுத்துவார்கள்..
கரகாட்டகாரன் படத்தை அப்படியே செர்பியாவில் எடுத்தால் எப்படி இருக்கும்... அது போலதான் இந்த செர்பிய படமும்...
GUCHA-2006 உலகசினிமா/ செர்பியா படத்தின் கதை என்ன?
இரண்டு டிரம்பட் கோஷ்ட்டிகள் இரண்டு பேருமே ஒரே ஊராக இருந்தாலும் வசதி வாய்ப்புகளில் எற்றத்தாழ்வு இருக்கின்றது.. ஏழ்மையான கோஷ்ட்டியில் இருக்கும் ரோமியோ என்ற பையன் செல்வந்தர் கோஷ்ட்டியில் இருக்கும் ஜிலியான என்ற பெண்ணை காதலிக்கின்றார்ன்.. அந்த காதல் அவள் அப்பாவுக்கு பிடிக்கவில்லை காரணம் ரோமியோ ஜிப்சி இணத்தை சேர்ந்தவன் என்பதால் அந்த காதலுக்கு தடை ஜுலியான ரோமியோ வாசிக்கும் டிரம்பட் வாசிக்கும் இசையில் மயங்கிதான் காதலித்தாள்...
குகா கிராமத்தில் நடக்கும் டிரம்பட் போட்டியில் இரண்டு பேரும் மோதுகின்றார்கள்.. பெண்ணை வீட்டில் வைத்து பூட்டி விட்டு போட்டிக்கு போகின்றார்கள்.. போட்டியில் ரோமியோவின் டிரம்பட் கோஷ்ட்டி பல சிக்கல்களை சந்திக்கின்றது.. காதலியோ வீட்டு சிறையில்?? எப்படி ரோமியோ போட்டியில் ஜெயித்தான் என்பது மீதிக்கதை.
படத்தின்சுவாரஸ்யங்களில் சில..
தமிழ் படத்தின் எல்லா அம்சங்களும் நிறைந்த ஒரு செர்பியன் படம் இது.. செர்பியா மட்டும என்ன ? செவ்வாய் கிரகத்திலேயா? இருக்கின்றது.. அதுவும் இதே பூமியில் அல்லவா இருக்கின்றது... அங்கேயும் ரத்தமும் சதையுமான உணர்வுள்ள மனிதர்கள் தானே வாழ்கின்றார்கள்.
கோஷ்ட்டி மோதல் இருக்கின்றது...
காதலுக்கு எதிர்ப்பு இருக்கின்றது...
காதலன் விட்டுக்கு போய் வாசலில் நின்று சண்டை போடுவது இருக்கின்றது..
காதலியை வீட்டு சிறையில் அடைப்பது இருக்கின்றது..
இரண்டு பேரும் ஊரை விட்டு ஒடுவது இருக்கின்றது..
காதலி வீட்டு சிறையில் இருந்து தப்பித்து வருவது இருக்கின்றது..
இப்படி இந்த படம் அக்மார்க் தமிழ் படத்தின் டுவிஸ்ட்டடகள் இந்த படத்திலும் இருக்கின்றது...
ஆனாலும் இந்த படம் உலக படமாக இருக்க காரணம் படம் நெடுகிலும் இருக்கும் டிடெயில்...
ஒரு ஆப்பிள் மரத்துக்கு நடுவில் சந்திக்கும் காதலர்கள் முததமிட்டு அவன் கிளம்பும் போது அந்த பெண் ஒரு ஆப்பிளை பறித்து திண்ணக்கொடுக்கும் காட்சி ஆதாம் ஏவாள் காட்சி என்றாலும் அது ரசிக்கதக்கஅளவில் இருக்கின்றது..
முதன் முதலில் தனியாக டிரம்பட் பிராக்டிஸ் செய்யும் ரோமியோவை காட்டில் மறைந்து இருந்து அவனையும் அவன் வாசிக்கும் இசையையும் மறைந்து நின்று ரசிக்கும் போது டிஸ்டர்ப் செய்யும் செடியின் சிம்பை கோபமாக விளக்குவது நல்லகாட்சி.
அந்த பெண் நன்றாக நடித்து இருக்கின்றார்.. பல்லில் கிளிப்போட்டு வாய்திறந்து சிரிக்கும் போது அந்த பெண்ணிடம் வேறு ஒரு அழகு இருக்கின்றது...
பேருந்தில் ஏறிப்போகும் அந்த சேசிங் காட்சி.. அப்போது டிராவல் அகும் கேமரா அருமை.
கடைசி காட்சியில் அந்த போட்டி நடக்கும் போது அந்த குகா கிராமத்து நிகழ்வை அந்த சந்தோஷத்தை நம் கண் முன் பல கட்ஷாட்டுகளில் அந்த இடத்தில் இருப்பதை போன்ற உணர்வை இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஏற்ப்படுத்துகின்றார்கள்.
போட்டியில் டிரம்பட் வாசித்துக்கொண்டே என் பிகர் வந்து விட்டதா? என்று சைகையால் கேட்கும் இடம் கவிதை..
படம் முழுக்க நிறைய இசைக்கோர்வைகள்... இசையில் லயித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்... அந்த அளவுக்கு டிரம்பட் இசை நெஞ்சை நெகிழவைக்கும்....
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு எதிர் எதிர் அணியின்ர் போட்டி போட்டு வாசிப்பது செமை..
இசைபிரியர்கள் தவறவிடக்கூடாத படம் இது...
இந்த படத்தை நேற்றுதான் லூமீயர்மூவிஸ்ல் இந்த படம் ஒளிப்பரப்பானது.. சென்னை கேபிள்களில், வேர்டுமூவிஸ் சேனல் மற்றும்
படம் முழுக்க நிறைய இசைக்கோர்வைகள்... இசையில் லயித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்... அந்த அளவுக்கு டிரம்பட் இசை நெஞ்சை நெகிழவைக்கும்....
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு எதிர் எதிர் அணியின்ர் போட்டி போட்டு வாசிப்பது செமை..
இசைபிரியர்கள் தவறவிடக்கூடாத படம் இது...
இந்த படத்தை நேற்றுதான் லூமீயர்மூவிஸ்ல் இந்த படம் ஒளிப்பரப்பானது.. சென்னை கேபிள்களில், வேர்டுமூவிஸ் சேனல் மற்றும்
லூமீயர் முவிஸ் இரண்டுமே இல்லை.. காரணம் என்ன என்பது சென்னைவாசிகளுக்கு நன்கு தெரியும்..
பெங்களுர்வாசிகள் இந்த படத்தை லூமியர்மூவிஸ்சேனலில் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
பெங்களுர்வாசிகள் இந்த படத்தை லூமியர்மூவிஸ்சேனலில் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
படத்தின் டிரைலர்
படம்பெற்றவிருதுகள்.
European Film Awards
Year Result Award Category/Recipient(s)
2007 Nominated European Film Award Best Composer
Dejan Pejovic
Sofia International Film Festival
Year Result Award Category/Recipient(s)
2007 Won Audience Award Dusan Milic
படக்குழுவினர் விபரம்
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
ஓட்டு போட மறவாதீர்கள்.
படம்பெற்றவிருதுகள்.
European Film Awards
Year Result Award Category/Recipient(s)
2007 Nominated European Film Award Best Composer
Dejan Pejovic
Sofia International Film Festival
Year Result Award Category/Recipient(s)
2007 Won Audience Award Dusan Milic
படக்குழுவினர் விபரம்
Marko Markovic - Romeo
Aleksandra Manasijevic - Juliana
Mladen Nelevic - Satchmomo
Slavoljub Pesic - Sandokan
Svetislav Pesic - Rocky
Nenad Okanovic - Beans
Mira Djurdjevic - Romika
Olga Odanovic - Paraskeva
Zumrita Jakupovic - Marijana
Crew
Director: Dusan Milic
Director of Photography: Petar Popovic
Executive Producer: Goran Radakovic
Production Designer: Aleksandar Denic
Composer: Dejan Pejovic
Editor: Marko Glusac
Producers: Karl Baumgartner, Thanassis Karathanos, Goran Radakovic, Aleksandra Milic, Josef Aichholzer, Stefan Kitanov and Emir Kusturica
A production of Pallas Film Dakar Film, Film Deluxe, Aichholzer Film, Art Fest
In co-production with Bulgarian National Television
Supported by MDM, Eurimages, Ministry Of Culture Serbia, Film Fonds Vienna And Bulgarian National Film Center
Technical Data
Format: 35mm / 1:1,85 / Colour / Dolby Digital
Length: 94 Min
Original Language: Serbian, Roma
Aleksandra Manasijevic - Juliana
Mladen Nelevic - Satchmomo
Slavoljub Pesic - Sandokan
Svetislav Pesic - Rocky
Nenad Okanovic - Beans
Mira Djurdjevic - Romika
Olga Odanovic - Paraskeva
Zumrita Jakupovic - Marijana
Crew
Director: Dusan Milic
Director of Photography: Petar Popovic
Executive Producer: Goran Radakovic
Production Designer: Aleksandar Denic
Composer: Dejan Pejovic
Editor: Marko Glusac
Producers: Karl Baumgartner, Thanassis Karathanos, Goran Radakovic, Aleksandra Milic, Josef Aichholzer, Stefan Kitanov and Emir Kusturica
A production of Pallas Film Dakar Film, Film Deluxe, Aichholzer Film, Art Fest
In co-production with Bulgarian National Television
Supported by MDM, Eurimages, Ministry Of Culture Serbia, Film Fonds Vienna And Bulgarian National Film Center
Technical Data
Format: 35mm / 1:1,85 / Colour / Dolby Digital
Length: 94 Min
Original Language: Serbian, Roma
பைனல்கிக்
இந்த படம் அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்... படம் முடிந்தும் அந்த காதலும் அந்த டிரம்பட் இசையும் உங்களை சுற்று அரைமணிநேரத்துக்கு மேல் இருக்கும்..
அந்த கடைசி பத்துநிமிட இசை உங்களுக்காக மேலே விடியோவாக..
காதல் போதையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த படம் கவரும்...
=================
அனைவருக்கும் அட்வான்ஸ் காதலர்தின நல்வாழ்த்துக்கள்..
அந்த கடைசி பத்துநிமிட இசை உங்களுக்காக மேலே விடியோவாக..
காதல் போதையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த படம் கவரும்...
=================
அனைவருக்கும் அட்வான்ஸ் காதலர்தின நல்வாழ்த்துக்கள்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.
ஓட்டு போட மறவாதீர்கள்.
First.......
ReplyDeleteபடம் எப்படியிருக்கிறதோ தங்கள் விமர்சனம் மிக அருமை ஜாக்கி....
ReplyDeleteசென்னை கேபிள்களில், வேர்டுமூவிஸ் சேனல் ம
ReplyDeleteஇல்லை.. ??
world movies channel came in scv setopbox
why these two channels not available in Chennai ? (i am not chennai residence)
ReplyDeleteலூமியர் சேனல் முன்பு வந்து கொண்டிருந்தது செட்டாப் பாக்ஸ்களில். இப்போது இல்லை.. கேபிள் செட்டாப்பாக்ஸகளில். ஜாக்கி.
ReplyDelete//பட்டு வேட்டி சில்க் ஜிப்பா என்று ஊரே நாதஸ்வர திருவிழாவை கொண்டடி இருக்கின்றதா? இல்லை... //
ReplyDelete- வணக்கம்,திருவாரூர் (முதல்வர் ஊர்) நகரில்,ஒவ்வொரு அறுவத்தி மூவர் திருவிழாவிலும் நீங்கள் கேட்பது போல் நாதஸ்வர-தவில் வித்வான்கள் ஒன்று சேர்வதுண்டு.
நகரமே இசை உற்சாகத்தில் சிலமணி நேரங்கள் திளைக்கும் நேரம் அது.குறிப்பாக மல்லாரி ராகம் இசைக்கப்படும் போது தேரோடும் வீதிகள் அதிரும்.முன்பெல்லாம் 63 நாதஸ்வர மற்றும் 63 தவில் கலைஞர்கள் மட்டுமே கலந்துக் கொண்டதாகவும்,தற்போது அதன் எண்ணிக்கை பல்கி பெருகிவிட்டதாகவும் தகவல்.
இதேபோல் எண்கண் எனும் (முருக ஸ்தலம்)கிராமத்திலும் இத்திருவிழா நடத்தப்படுகிறது.இந்த ஒன்றுகூடல் மூலம் கலைஞர்கள் பரஸ்பரம் தத்தம் நிலை அறிந்துக் கொள்வதால்,கண்டுக்கொள்ளாமல் விடப்பட்ட பலரும் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.உங்களுக்கு தெரிவிப்பதன் மூலம் பலருக்கும் இச்செய்தி சென்றடையும் என்றும் நம்புகிறேன்.
பார்த்திடுவோம்
ReplyDeleteஅப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க
ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்
http://speedsays.blogspot.com/2011/02/ipl.html
சென்னயில் வேர்ல்ட் மூவீஸ் SCV settop boxil வருகிறுது.பல நல்ல படங்களை பார்க்க முடிகிறது.
ReplyDelete