(PAYANAM-2011)ராதாமோகனின் திரில்லர் பயணம்



மொழி படத்துக்கு பிறகு இயக்குனர் ராதா மோகன் தமிழில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இயக்குனர் பட்டியலில் தனக்கென தனி இடம் ஒதுக்கியவர்..

ஆனால்  இவரின் முதல் படமான அழகியே தீயேவை பெரும்பாலும் எவரும் சொல்லமாட்டார்கள்.. ஆனால் எனக்கு ரொம்பவும் பிடித்த படம் அழகிய தீயே..

அந்த படம் பார்க்கும் போது எல்லாம் எனக்கு எப்போதும் ஒரு உற்சாகம் பூரிக்கும்... காரணம் மென்மையாக கதை சொல்லிய முறை... காதலுக்கு பூம் என்று ஒரு சவுன்ட் கொடுத்தது...

மென்மையாக இயல்பாக கதை சொல்லும் இயக்குனர் ஒரு திரில்லர் படத்தை இயக்குகின்றார் என்றால் உங்களுக்கு அந்த படைப்பின்  மீது இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு வரும் இல்லையா-?  எனக்கும் இந்த படத்தை  பார்க்க வேண்டும் என்ற ஆசை இயல்பாய் எழுந்தது..


ராதமோகனை பிடிக்க மற்றும் ஒரு காரணம் குறைந்த செலவில் தரமான திரைப்படத்தை கொடுப்பவர்.. அப்படிபட்ட இயக்குனரின் இந்த பயணம் எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம்....

பயணம் படத்தின் கதை என்ன??


ரொம்ப சிம்பிள்.. சென்னையில் இருந்து செல்லும் விமானத்தை தீவிரவாதிகள் பாக்கிஸ்தானுக்கு கடந்த இருக்கும் போது எதிர்பாராதவிதமாக திருப்பதி விமான நிலையத்தில் தரை இறங்குகின்றது.. கடத்தல்காரர்கள்..டிமான்ட் தீவிரவாதி ஒருவனை விடுதலை செய்ய வேண்டும்... ஆனால் அந்த தீவிரவாதியை பிடிக்க கமெண்டோ படையினர் பலரது உயிரை பலி கொடுத்து இருக்கின்றார்கள்..அந்த பயங்கர தீவிரவாதியை விடுதலை செய்யவில்லை  என்றால் பிளைட்டில் இருக்கும் 100க்கு மேற்பட்டவர்கள் உயிர் இழப்பார்கள் என்று விமானத்தை கடத்திய தீவிரவாதிகள் மிரட்டுகின்றார்கள். அரசு அவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்ததா? பயணிகள் என்னவானார்கள் என்பதை வெண்திரையில் பார்த்து ரசியுங்கள்..



படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்யும் நடிகர் பிரகாஷ்ராஜ்.... குறைந்த பட்ஜெட்டில் நல்லபடங்கள் எடுத்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கும் இயக்குனர் ராதாமோகன் என சினிமாவை நேசிப்பவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் நான்காவது படம்....

ஒரு திரில்லர் படத்தில் சமீபத்தில் விழுந்து விழுந்து சிரித்து ரசித்த படம் இதுதான் என்று நினைக்கின்றேன்.

சமகால நடிகர்களின் பஞ்ச டயலாக்குகளை போட்டு கிழி  கிழி என்று கிழித்து இருக்கின்றார்கள்..

பிரபல நடிகராக நடித்து இருக்கும் பிருத்விராஜ்ம் அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் சாம்ஸ் அடிக்கும் கூத்துக்கள் கண்ணில் நீர்வர சிரிக்கவைப்பவை...

தீவிரவாதியாக நடிக்க ஒரு ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் பையன் என்னம்மா பிச்சி உதறி இருக்கின்றான்...

எனக்கு பிரம்மானந்தம் காமெடி என்றால் எனக்கு உயிர்... மொழியில் அவர் அடிக்கும் லூட்டி சான்சே இல்லை இந்த படத்தில் இயக்குனராக சிரியஸ்நெஸ் புரியாமல் வாட் சின்? வாட் மீனிங்? என்று கேள்கள் கேட்கும் இடம் குபீர்....

பாடல்கள் இல்லாத இந்த படம் தனது இயக்கத்திறமையினால் ராதா மோகன்...தொய்வில்லாமல் கதை சொல்லி இருக்கின்றார்...

நாகர்ஜுனாவை பார்க்கும் போது எல்லாம்கடுப்பாக இருக்கின்றது... நான் படிக்கும் போது உதயம் படம் பார்த்தேன்.. அப்படியேதான் இன்னமும் இருக்கின்றார்... எப்படிய்யா? யோவ்.....? செம ஸ்மார்ட்....அவருடைய கோபம் அந்த கடைசிடுவிஸ்ட் எல்லாம் சூப்பர்...

சில லாஜிக் உதைத்தாலும் இப்படி ஒரு படத்துக்கு அதை பார்க்க வேண்டாம் என்பது என் எண்ணம்..

உதாரணத்துக்கு நாகர்ஜுனா ஹெலிகாப்டரில் வந்து இறங்கி காரில்  ஏர்போர்ட்டுக்கு போவது போல காட்டி இருப்பார்கள்...ஹெலிகாப்டரில் வருபவர் நேராக ஏர்போர்டிலேயே இறங்கலாமே???


எரோப்பிளேன் செட் போட்டு இருக்கின்றார்கள்...பயணிகள் பிளைட் ஏறும் போது இருக்கும் பிரைட்நஸ் இரண்டு நாளுக்கு பிறகு எல்லோருக்கும் டல் மேக்கப் என அசத்தி இருக்கின்றார்கள்...

சனாகானின் உதட்டு பளபளப்பு மறுநாள்காலை மிஸ்ஸிங்... அதே போல டிவி நியுஸ் ரிப்போர்டர்களும் டல் மேக்கப்பில் காட்டி இருப்பார்கள்...

டிஆர்பி ரேட்டிங்குக்கு சேனல்களின் அத்து மீறலை ஒரு பிடி பிடித்து இருக்கின்றார்கள்...

இரண்டு நாளைக்கு மேல் என்று காட்டும் போது ஆண் கதாபாத்திரங்கள் எல்லோருக்கும் இரண்டுநாள் தாடியோடு இருப்பார்கள். அதுதான் இயக்கம்..ஹேட்ஸ் ஆப் ராதாமோகன்...

மிகை இல்லாத நடிப்பில் மிரட்டி இருக்கின்றார் பிரகாஷ்ராஜ்...

வசனம் ஞானவேல்.. ராதாமோகனின் பலம் அவரது படத்து வசனங்கள்...இந்த படத்தில் இவர்புகுந்து விளையாடி இருக்கின்றார்...

வயசுக்கு வந்த புள்ளையும்  வாழைத்தாரும் என்ற டயலாக்.. செமை....



எம்எஸ்பாஸ்கருக்கு எல்லாபடத்திலும் ஒரு நல்ல வேடம் கிடைத்து விடுகின்றது... அந்த பாதர் வேடம் காலத்துக்கும் மனதில் நிற்கும் வேடம்


படத்தின் டிரைலர்..

=============

படக்குழுவினர் விபரம்

Directed by Radha Mohan
Produced by         Prakash Raj
Written by   Radha Mohan
Starring       

    * Nagarjuna Akkineni
    * Prakash Raj
    * Poonam Kaur
    * Sana Khan

Music by     Pravin Mani
Cinematography    K. V. Guhan
Studio         Silent Movies
Release date(s)      February 11, 2011 (2011-02-11)
Country       India
Language    

·        Tamil



பெங்களூர் பேம் தியேட்டர் டிஸ்கி...
 (டியர்பாலாஜி, நான்,மூர்த்தி)

இந்த படத்தை பெங்களுர் பேம் தியேட்டரில் நான் எனது தளத்தின் நெடுநாள் வாசகர்கள் டியர்பாலாஜி, மற்றும் மூர்த்தியோடு பார்த்தேன்...

மூர்த்திக்கு என்னோடு ஒரு படமாவது பார்த்துவிடவேண்டும் என்பது ஆசை..

திங்கள் கிழமை வாக்கில் படம் பார்த்தேன் அதனால் ஒரு 15 பேருக்குமேல் இல்லை...

தியேட்டர் நன்றாக இருந்தது...

ரொம்பநிறைவாக படம்  பார்த்தோம்....

 =========================
பைனல்கிக்...

இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்..குறைந்த செலவில் தமிழில் ஒரு நல்ல திரில்லர் படம்// நண்ப்ர் மொக்கை நண்பன் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரைப்படவிமர்சனம்.
==========


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள். 








11 comments:

  1. //உதாரணத்துக்கு நாகர்ஜுனா ஹெலிகாப்டரில் வந்து இறங்கி காரில் ஏர்போர்ட்டுக்கு போவது போல காட்டி இருப்பார்கள்...ஹெலிகாப்டரில் வருபவர் நேராக ஏர்போர்டிலேயே இறங்கலாமே???
    //

    ரொம்ப சிம்பிள் லாஜிக் ஜாக்கி. ஏர்போர்ட்டில் இறங்கினால் தீவிரவாதிகள் கமேண்டோ ஆபரேஷன் நடக்கப் போகிறது என்பதை ஊகித்துவிடுவார்கள்

    ReplyDelete
  2. அழகிய தீயே முதல் படமா

    பிரசாந்த், தற்போதைய நெடும் தொடர் நாயகி முன்னாள் திரைப்பட நாயகி காவேரி ஆகியோரை அறிமுகம் செய்த வைகாசி பொறந்தாச்சு தானே ராத மோகனின் முதல்/மூன்றாம் படம் (தண்ணி குடம் எடுத்து ஒரு பாடல் கூட செம ஹிட், தேவா இசை என நினைக்கிறேன்)

    ReplyDelete
  3. நல்லவேளை ஜாக்கி பார்க்க வில்லை . அதில் தண்ணிக் கொடம் என்று கடலில் இருந்து குடத்தில் குடி தண்ணீர் கொண்டு வருகிறார்கள் என ஜாக்கி லாஜிக் மீறல் சொல்லி இருப்பார்.

    ReplyDelete
  4. ராதா பாரதி, ராதா மோகன் இருவரும் ஒரே ஆள் தானே, இல்லையா
    வேறு வேறு நபர்கள் எனில் மன்னிக்கவும் ஜாக்கி

    ReplyDelete
  5. Ahaa.. He is so sweet and smart
    //நாகர்ஜுனாவை பார்க்கும் போது எல்லாம்கடுப்பாக இருக்கின்றது... நான் படிக்கும் போது உதயம் படம் பார்த்தேன்.. அப்படியேதான் இன்னமும் இருக்கின்றார்... எப்படிய்யா?

    ReplyDelete
  6. விமர்சனம் நீளம் குறைவாக உள்ளது. இன்னும் நிறைய எதிர்ப்பார்த்தேன். ஓட்டு போட்டாச்சு..

    ReplyDelete
  7. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..

    கேவி.. ஏர்போர்ட் என்பது பல சதுரகிலோமீட்டர் அதனால் அந்த கேள்வி


    ராம்ஜி எங்க இவ்வளவுநாளா ஆளையே கானோம்...

    ஜெகன் பெரிசு பெரிசா படிச்சி கெட்டு போய் இருக்கின்றீர்கள்..

    உங்க கேள்விக்கு பதில் தேடிக்கிட்டு இருக்கேன்.

    ReplyDelete
  8. சிறப்பான விமர்சனம். நன்றி

    ReplyDelete
  9. Indha vimarsanathukka romba naala kathu irundhen. Sirappa irunthathu. Ithula speciala Thirupathi airportnu solli irunthathala andha airport konjam sirusu than. Oru velai adhanalathano ennavo. Vaikasi poranthachu RadhaBharathi idhu Radhamohan. Vera vera kalakattam.

    Vazga valamudan

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner