ஜாக்கியும். பெங்களூர்(YAHOO) யாஹு அலுவலகமும்....

இந்தியாவில் நெட் வருகை பரவாலாக  வந்த போது எனக்கு தெரிந்து ஒரு மதுரை நண்பர்  ரெடிப்மெயிலில்  எனக்கு ஒரு அக்கவுன்ட் ஆரம்பித்து கொடுத்தார்.. அது மூன்று மாதத்துக்கு மேல் சீண்டவில்லை என்பதால் அந்த முதல் மெயில் ஐடி இட்ஸ்கான் ஆகியது...

அடுத்து பல வருடங்கள் நெட்  பக்கமே நான் வரவில்லை... ஆனால் இன்று நிலைமையே வேறு...திரும்ப நான் மெயில் பக்கம்  வந்த போது எனது  காதலிக்கு மெயில் ஐடி யாஹு டாட்காம்மாக இருந்த போதே மெயில் ஐடி இருந்தது.. சிலதகவல்கள் தெரிந்து கொள்ள ,, பகிர்ந்து கொள்ள நான் யாஹு மெயிலில் போய் ஒரு ஐடி ஆரம்பித்து போது  டாட் கோ டாட் இன் ஆனது..

அதன்பிறகு அந்த மெயில் ஐடியைத்தான் நான்  பலகாலம் உபயோகபடுத்திக்கொண்டு இருந்தேன்... காதலியோடும் மனைவியோடும் சாட் செய்ய யாஹு  மேசஞ்சர் கை கொடுத்தது...


அதன்பிறகு வலைஉலகம் வந்ததும் ஜிமெயில் என்னை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டது. அதன் பிறகு யாஹுவை நியாகபடுத்த நண்பர் யாஹுராம்ஜி நிறைய உதவிசெய்தார்.....அவருக்கு என் நன்றிகள்.
 (நண்பர் நிரஞ்சனுடன் அவர் அலுவலகத்தில்)
  

நான் பெங்களூரில் இருப்பதை  அறிந்து நண்பர் நிரஞ்சன் அவர்கள் போன் செய்தார் அவர் பெங்களுர் யாஹு அலுவலகத்தில் வேலைசெய்து கொண்டு இருக்கின்றார்... எனது யாஹு அலுவலுகத்துக்கு வரமுடியுமா? உங்களை  சந்திக்க முடியுமா? என்று அழைப்பு விடுத்தார்.. எனக்கும் ஒரு தகவல் தொழில் நுட்ப அலுவலகம் எப்படி இருக்கும் என்பதை  பார்க்க ஆவலாய் இருந்தேன்...

நான் முதன் முதலில் ஒரு டாக்குமென்டரி படப்பிடிப்புக்கு  சென்னை பொலாரிஸ் சென்று இருக்கின்றேன்.. அதுக்கு பிறகு நான் எந்த தகவல் தொழில்நுட்ப அலுவலகத்துக்கும் நான் போனது இல்லை.ஆனால் நிறைய காப்பரேட் அலுவலகத்துக்கு போய்  இருக்கின்றேன்...ஆனால்  நான்கு வருடத்துக்கு முன் எனது மனைவியின் தம்பி பரத்குமார் பி இன்போசிஸ் மைசூரில்
வேலை செய்து கொண்டு இருந்தான்.... பிருந்தாவன் கார்டனுக்கு போகும் போது அவனுடைய அலுவலகத்துக்கு அழைத்து சென்றான்..

பூலோகத்தில் ஒரு சொர்கம் என்றால் அது  மைசூர் இன்போசிஸ் கம்பெனிதான்...ஓத்தா ஒழுங்கா படிச்சி இருந்தா இங்க வேலைக்கு டிரை பண்ண இருக்கலாமே என்று மைசூர்இன்போசிஸ் அலுவலகத்தை பார்த்ததும் என்னையே மிக கேவலமாக திட்டிக்கொண்டேன்...எல்லாவற்றையும் வெளியில் இருந்தே பார்த்தோம்....ஆனால் இங்கே அலுவலகத்துக்கு உள்ளே அழைத்து போகின்றேன் என்று நண்பர் சொன்ன போது ,சரிபோய் விட்டு வருவோம்  எப்படித்தான் இருக்கின்றது என்று பார்த்து விட்டுவருவோம் என்று காலையில் கிளம்பினேன்.. நண்பர் நிரஞ்சன் என்னை பிக்கப் செய்து கொண்டார்..

இப்போது கூட அல்சூர் போக அந்த வழியில் பயணித்த போது அந்த யாஹு அலுவலகத்தை கடந்து செல்லும் போது கூட அந்த அலுவலகத்தின் உள்ளே போய் பார்வையிடபோகின்றேன் என்று நான் நினைத்து பார்த்தது இல்லை...

கோரமங்களா யாஹு அலுவலகம் இருந்த EGLகேம்பஸ்இல் இடத்தில் நிறைய தகவல் தொழில் நுட்ப அலுவலகங்கள் இருந்தன...

விசிட்டர்ஸ் டாக்  மாட்டிக்கொண்டு ஆபிசுக்குள் நுழைந்தேன்... இந்தியாவில் பெங்களுரில் மட்டும்தான் யாஹு அலுவலக கிளை இருக்கின்றதாம் .. இரண்டாம் தளத்தில் இருக்கும் நண்பர்....  நிரஞ்சன் சீட்டுக்கு போய் விட்டு தனது அலுவலகத்தை எனக்கு சுற்றிகாட்டஆரம்பித்தார்...

அது ஒரு 5 மாடிகட்டிடம் மிக விஸ்தாரணமான வாகன நிறுத்தம்...ஒரு புளோரில் 100 பேருக்கு மேல் வேலை செய்கின்றார்கள்...மொத்தம் 1500 பேர் பணி புரிகின்றார்கள்.

யாஹுபோல் தனது வேலையாட்களுக்கு சுதந்திரம் கொடுக்கும் நிறுவனம் உலகத்தில்  எங்கும் இல்லை என்று தனது கம்பெனி பற்றி  நண்பர் உயர்வாய் சொன்னார்...

ஒருவேலையை முடிக்க பத்து நாள் கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம்.. ஆனால்  சொன்ன நேரத்தில் வேலையை முடிக்கவில்லை என்றால் பெண்டு நிமிர்த்தி விடுவார்கள் என்று சொன்னார்....

வேலைசெய்யும் தனது நிறுவன ஆட்கள் உட்கார நல்ல விஸ்தாரமான இடத்தை வழங்கி இருக்கின்றது.. ஒருஒருவர் சீட்டுக்கும் ஒரு சின்ன ஒயிட் போர்டும் மார்க்கரும் இருக்கின்றது... டீக்கடை அண்ணாச்சி நம்பரில் இருந்து பேங்க் கடன் டியூடேட் முதற்கொண்டு மறந்துவிடும் பலவிஷயங்களை அதில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்..

அவர்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் என்னவெல்லாம் சின்னபொருட்களாக வைத்து அழகு படுத்திக்கொள்ளமுடியுமோ.. அவைகளை வைத்து இருக்கின்றார்கள்..பெண்கள் சீட் அருகில் நிறைய பொம்மைகளை காண முடிந்தது.

பெரிய புட்கோர்ட் இருக்கின்றது.. இரண்டு கேட்டர்கள் வைத்து ருசியான  உணவு கொடுக்கப்படுகின்றது..உள்ளே நுழைந்துவிட்டால் வெளிய போகவெண்டிய அவசியமே இல்லை.. ஆனாலும் பலர் வெளியே கார் பார்க் அருகே புகைபோக்கிகளாக இருக்கின்றார்கள்..இதில் பெண்களும் அடக்கம்


1500 பேருக்கு மேல் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.அந்த வேலை செய்யும் சூழலை பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் நன்றாக படித்து இருக்கலாமோ என்று எனக்குள் எழும் எண்ணத்தை தவிர்க்கமுடியவில்லை...  ஒருநல்ல அனுபவத்தை வழங்கிய நண்பர் நிரஞ்சனுக்கு எனது நன்றிகள்...

போங்கடா  போய் புள்ள குட்டிங்கள நல்ல படிக்கவைங்கடா.....


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...

இந்ததளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்... திரட்டிகளில்  ஓட்டு போட மறக்காதீர்கள்.. அப்படியே மைனஸ் ஓட்டு குத்தும் புண்ணியவான்கள் அதையும் செவ்வனே செய்ய கேட்டுக்கொள்கின்றேன்..

26 comments:

 1. nalla pakirvu jackie.. epadi irukinga :)

  ReplyDelete
 2. பதிவர் ஜீவ்ஸ் அங்கே தான் பணிபுரிகிறார்.

  ReplyDelete
 3. அண்ணே... சிறந்த பதிவு.. நேர்ல பாத்தா மாதிரி இருந்துச்சு.

  ReplyDelete
 4. படிக்கவைக்கறோம்.படிப்பதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் சம்பந்தம் குறைவு என்பது என் தாழ்ந்த அபிப்ராயம். அதுவொரு பாதுகாப்பான பாதை அவ்வளவே என்வரையில். அடித்து ஆட பல ஆட்டங்கள் உண்டிங்கே.

  ReplyDelete
 5. /ஒழுங்கா படிச்சி இருந்தா இங்க வேலைக்கு டிரை பண்ண இருக்கலாமே என்று மைசூர் இன்போசிஸ் அலுவலகத்தை பார்த்ததும் என்னையே மிக கேவலமாக திட்டிக்கொண்டேன்//

  ஜாக்கி அண்ணா, இக்கக்கு அக்கரை பச்சை. அப்படி எண்ண வேண்டாம். அலுவலகம் அழகாக இருக்கலாம். அங்கே நொந்து நூடுல்ஸ் ஆகிறவர்கள் ஆயிரம். தங்கள் லட்சியத்தில் ஜெயிக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. IT office pathuttu neraya pochericha pudicha padhivu than pathu irukken,

  Unga padhivu nermaya irundhuthu. Thanks

  ReplyDelete
 7. ithu pathivu niraya paerukku ookkamaaga irukkum. nandri jackie

  ReplyDelete
 8. unmai than jackie... but dont worry.... u r good in ur field now

  ReplyDelete
 9. அண்ணே நம்ம சீவ்ஸ்கூட யாகூல வேல பாக்குறதா சொல்லிகிட்டிருக்கார் இருந்தாரா???? பாத்தீங்களா???

  ReplyDelete
 10. அன்பின் ஜாக்கி - சில சமயங்களில் நாம் சிறு வயதில் கற்காததால் - இப்படி - இப்போது ஏக்கங்கள் வரும். ம்ம்ம்ம்ம்ம் கடந்து போகட்ட்டும். நாம் நம் வாழ்வினை மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறோம்.

  ReplyDelete
 11. //1500 பேருக்கு மேல் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.அந்த வேலை செய்யும் சூழலை பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் நன்றாக படித்து இருக்கலாமோ என்று எனக்குள் எழும் எண்ணத்தை தவிர்க்கமுடியவில்லை//

  நீங்க சொல்வது சரி தான்

  ஆனால் எல்லா வேலையும் விட இந்த IT - ல் மட்டும் தான் மனவுளைச்சல் அதிகம் உள்ளது, ஒரு வேலை ஒரு முறை கொடுக்கபட்டால் அதை முடிபதற்கு நேரம் ஒதுக்குவர் அதற்குள் முடிக்கும் பட்சத்தில் உங்களுக்கு அங்கு ராஜ மரியாதை கிடைக்கும் அதுவே ஒரு நிமிடம் தாண்டினாலும் நீங்கள் மட்டும் தான் அங்கு வேலை பார்க்கும் அனைவர்களை விடவும் முட்டாளாக பார்பக்க படுவீர்கள் அது மட்டும் அல்லாமல் முட்டாளாக ஆக்க படுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கையை தளர்த்தி பார்க்கும் இடம் அது.

  மனிதனின் அதிகபடியான உழைப்பை புடுங்கும் இயந்திர கொடோன் அதர்க்கு காரணம் கேட்டால் 24x7 வேலை நடக்கும் அலுவலகம் என்று ஒரு பதில் வரும்.

  பலர் கைல்யிலும் , பையிலும் பணம் புரளலாம் நிம்மதியாக ஒரு நாள் தூங்க முடியாது கனவில் கூட முடிக்க வேண்டிய வேலையும்
  அதர்க்கு நிர்னியிக்க பட்ட நேரம் மட்டும்மே மனதில் ஓடும். பலரும் அங்கு மனநிம்மதியை அடகு வைத்துதான் வேலை பார்கிறார்கள் எல்லாம் பணத்திர்க்காக.

  இப்படிக்கு

  முன்பு ஒருகாலத்தில் காசுக்காக IT என்னும் குட்டையில் ஊறிய மட்டைதான்.

  ReplyDelete
 12. Niranjan Maduraiyil padichavara - Ayira vysiar college - B.Sc(Physics)?

  ReplyDelete
 13. எல்லாம் ஒரு மாயைதான் சார் , உண்மையான சந்தோசம் ஒரு சாதாரண டி கடையில் டி குடிக்கும் போது கிடைக்கும்
  காபி ஷோபில் கிடைக்காது , A/C பஸ்லில் பயணம் செய்யும் போது எப்ப வெயில் மேல படும் என்று இருக்கும்
  அது சொர்க்கம் , எத்தனை பேர் யாஹூ கூகுளே இன்போசிஸ் வேலை கிடைக்கும் என்னதான் படிச்சாலும் ,BYEPASS ரோட்டில் வயல் பார்த்துகொண்டு ராமராஜன் பாடல் / இள்ளயராஜா பாடல் கேட்டுகொண்டு போவது சொர்க்கம் , இதையெல்லாம் நீங்கள் அனுபவித்து பாரும் சார் .

  ReplyDelete
 14. ///பூலோகத்தில் ஒரு சொர்கம் என்றால் அது மைசூர் இன்போசிஸ் கம்பெனிதான்//// இதை என்னால் எற்றுகொளவை முடியவில்லை , நிங்கள் கலை துறையில் வரபோகிறவர் கருத்துகள் சொல்லும் போது எத்தனை பேரை இது பாதிக்கும் என்று அலசவும் , BE,MBA படித்துவிட்டு ஒரு சாதாரன கம்பனில் வேலை செய்கிறனர் பலர் , அவர்கள் படிகவில்லையா,வாய்பு கிடைக்கவில்லை என்பது உண்மை , படிப்பு என்பது அறிவு வளர்சிக்கு மட்டுமே , பணம் சம்பாதிக்க நிச்சியம் படிப்பு தேவையில்லை

  ReplyDelete
 15. No Problem, You have good friends everywhere.
  Your feeling is late but you should reach everybody in our state.
  Poor & Less Educative parents should understand that they should try to give better education to their child..
  Then only they family will come out of that poor state in comming generation.
  Please try to make awareness in our state to educate childs in goodway.

  Education is the only hope for future.

  I am one of regular visitor for your blog and enjoys your writings...its toooooooooooooooooo good.

  God(???) bless !!!!
  Regards
  Pommuthurai

  ReplyDelete
 16. //போங்கடா போய் புள்ள குட்டிங்கள நல்ல படிக்கவைங்கடா.....//

  உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

  ReplyDelete
 17. ஜாக்கி நான் 13 வது வரைதான் படித்திருக்கிறேன்..முதலில் இந்த மனப்பான்மையை கழுவி விடு...நமக்கெல்லாம் வானமே எல்லை...

  ReplyDelete
 18. என் முகப்புத்தகத்தின் சுவரில் (facebook wall) Steve Jobs பற்றி ஒரு விடியோ இருக்கிறது. பாருங்கள். Apple iMac, iPhone ஆகியவற்றை உருவாக்கிய அந்த மாமனிதன் கல்லூரி drop out. நம்மூர் அரசு வேலையில் தான் 13வது படித்துள்ளார்களா? ரெகுலரா கரஸா? என்று கேள்விகள். வேலையே தெரியாவிட்டாலும் டிகிரி இருந்தால் மதிப்பார்கள். பல கார்ப்பொரேட் நிறுவனங்கள் இப்போது இந்த வரைமுறையைக் கைகழுவிவிட்டன.

  ReplyDelete
 19. போங்கடா போய் புள்ள குட்டிங்கள நல்ல படிக்கவைங்கடா.....

  இது தான் ஜாக்கி உங்ககிட்ட எதிபார்த்தது.

  நல்ல பகிர்வு,ஜாக்கி. thanks

  ReplyDelete
 20. அழகா இருக்குற பதிவர்களெல்லாம் சிறந்த பதிவர்கள்னு சொல்றமாதிரி இருக்கு நீங்க நெனைக்கிறது. எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்!

  //வெளிய போகவெண்டிய அவசியமே இல்லை//

  அதான் விஷயமே... IT ல இல்லேன்னு சந்தோசப்படுங்க ஜாக்கி :))

  ReplyDelete
 21. vazhkkaiyai azithu azithu ezutha mudiyaathu entru appadi ezatha mudinthaal evvalavu nantraaga irukkum entru naan adikkadi ninaippathu untu இன்னும் கொஞ்சம் நன்றாக படித்து இருக்கலாமோ என்று எனக்குள் எழும் எண்ணத்தை தவிர்க்கமுடியவில்லை entra varikalai paditha pothu ithuthaan thontriyathu

  ReplyDelete
 22. அடடா...!

  9....?
  கட்டவிழ்ந்த மனித மனங்கள் இத்தனையா? எனில், மேனன்களுக்கு வெற்றியா...?

  இல்லை... இல்லை....!

  34....!!!
  கட்டவிழாத மனித மனங்கள் மும்மடங்கு அதிகம்... கண்டு, மனம் ஆறுதல் அடைகிறது..!

  அப்பாடா...! நன்றி தமிழ்மணம்.

  ReplyDelete
 23. நீங்க சொல்லுற எல்லாதையும் கொடுக்கும் ITயில் வேலை நிரந்தரம் இல்லையே... நல்லா வேலை செய்தாகூட லே ஆப். பாலிசினு சொல்லி வீட்டுக்கு அனுப்பலாம்..

  மேனஜர் நினைக்கும் வரை தான் அந்த வாழ்க்கை..

  வெளியே எதற்காகவும் வர தேவையில்லாத வாழ்கையில் இருப்பவர்களுக்கு வேலை நிரந்தரம் இல்லாததால் டெர்மினேசன் பயம் எப்பவும் இருக்குமே. காலை வேலைக்கு வரும்போது.. இன்னைக்கு முழுக்க வேலையில் இருப்பமான்னு இல்லையான்னு நினைச்ச .. எப்படி இருக்கும் பாருங்க..

  சாடிஸ்ட் மேனேஜர் இருந்தா?...

  IT பெண்களின் நிலை இன்னமும் மோசம்...
  மேனேஜர் நினைத்தால்..
  டெர்மினெசன் பயம் காட்டியே.. எல்லாவற்றிகும் இணங்க வைக்கலாம்..

  அதெ பெங்களுரு..24 x 7 BPO ஆபீசில் டாய்லட் அடைப்பை சரிபண்னும்போது...நூற்றுகணக்கில் ஆணுறை இருந்தது செய்தியாய் வந்ததே.. பர்த்திங்க்ளா?

  ReplyDelete
 24. > போங்கடா போய் புள்ள குட்டிங்கள நல்ல படிக்கவைங்கடா.....

  பஞ்ச் லைன் .. பட்டாசு.. :)
  பட்டைய கெளப்புங்க ஜாக்கி

  ReplyDelete
 25. sir ungal ta enaku piditha thu entha madhiri veli padayaga pesu vathu than.....

  ReplyDelete
 26. அப்பப்போ 'சுருக்'ன்னு தைக்கிற மாதிரி வார்த்தைகளும் இருக்கு..அதுவே ஜாலியாகவும் இருக்கும்.. இனி ஜாக்கி பக்கத்தை பாக்கி இல்லாம படிக்கவேண்டியதுதான்.. முடிவு.. பண்ணிட்டேன்.. படிச்சுமுடிச்சுட்டு வந்து சொல்றேன்...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner