பெங்களூர்(பெண்களூர்) நண்பர்களின் சந்திப்புகள்..(பாகம் /2)

போனமுறை இப்படி ஒரு தலைப்பிட்டு போட்ட உடனேயே அதுக்கு   மைனஸ் ஓட்டு போட்டு தன் வயிற்று எரிச்சலை காட்டினார்கள்.. சரி இன்னும் எரியட்டும் இனி இது போல வாசக சந்திப்பு அப்டேட் நிறைய வரும் சாவுங்கடா கொய்யால....


 மூன்று நாட்களுக்கு முன்ஜாக்கி நான்  அருள் ...பிடிஎம்மில் இருக்கேன்.. வீட்ல இருக்கிங்களா,-? வரலாமா என்றார்... அவசியம் வாங்க என்றேன்..இதுக்கு முன் மகராஜா ஓட்டலில் சந்தித்து போட்டோ எடுக்காமல் மறந்து போன நண்பர்...அருள்  தற்போது இன்போசிஸ்இல்  பணிபுரிந்து வருகின்றார்.. அவருடைய மனைவி குழந்தையுடன் என்னை சந்திக்க  என் வீட்டுக்கு வந்து இருந்தார்...ஒரு இரண்டு மணி நேரம் அனைத்து கவலைகளையும் மறந்து பேசிக்கொண்டு இருந்தேன்.. என் மனைவியோடு  அவர் மனைவி நிறைய பேசினார்கள்.. அவரின் குழந்தையோடு எனது குடும்பம் விளையாடியது... குடும்பத்தோடு வந்த அந்த சந்திப்புக்கு இன்னும் நிறைய எழுதுவேன்..நான்தான் மாமியார் வீடு எ ன்பதால் சரியாக கவனிக்க முடியவில்லை....
அவரோடு பேசிக்கொண்டு இருக்கும் போதே தம்பி சூரியன் போனில் பேசினார்,....ஜாக்கி அண்ணே சவுக்கியமா? இன்னைக்கு உங்கள சந்திக்கலாமா? யாஹு ஆபிஸ்க்கு எல்லாம் போயிட்டு வந்து இருக்கிங்க கலக்கிற்ங்க போங்க.. சான்சே இல்லை அது ஒன்னும் கவர்னர் மாளிகையோ அல்லது ராஷ்ட்ரபதிபவனோ இல்லைதான்.. ஆனால் என்னை பொறத்தவரை அது பெரிய விஷயம்.  கண்டிப்பா சந்திக்கலாம் என்றேன்... ஒரு  ரிசப்ஷனுக்கு போய்விட்டு   என்னை பார்க்க வரேன்  என்றார்  வீட்டுக்கு  பக்கத்தில் இருப்பதால்  அவரை வீட்டுக்கு வரச்சொன்னேன்..வந்தார்...


சூரியன் ,அருள் போன்ற வாசக நணபர்களுடன் நானும் கொஞ்ச நேரம் பேசினேன்...அருள் குடும்பம் விடைபெற்று சென்றனர்... அதன் பிறகு நான் சூரியனோடு போய் தாக சாந்தி அடைந்தேன்... அது என்ன பிளன்டரோ என்னவோ அதை வாங்கி வந்தார்கள்... அவர்கள் அறையில் இருந்த நண்பர்களுக்கு என்னை அறிமுகபடுத்தினார்...


அண்ணே எனக்கு பதிவுலகில் ரெண்டு பேரை புடிக்கும் ஒன்னு வால்பையன் இரண்டு நீங்க.. வால்பையனோடு நான் நிறைய பேசனும்னு நினைச்சேன் ஒரு இரண்டு மாசத்துக்கு முன்ன அவரோடு  பெங்களுர் ரயில் நிலையம் அருகில் சந்தித்து பேசியைதை சொன்னார்..அவர்களுடைய நண்பர்களிடத்தில் நிறைய பேசினேன்..அடுத்து தான் சந்திக்க விரும்பும் ஆள் தண்டோரா என்றார்..

நண்பர் சூரியன் ராமநாதபுரத்து பக்கத்தில் இருந்து வந்து  ஆங்கிலம் தெரியாமல் கஷ்டபட்டு இன்று பெண்களூரில் ஒரு நல்ல நிலையில் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.. அவரின் நண்பர்கள் மாருதி மற்றும் வெங்கட் வெகு நாட்கள் பழகியது போல என்னிடத்தில் ஒட்டிக்கொண்டார்கள்..


அடுத்து இரண்டு நாளைக்கு முன்ன நண்பர் அரவிந் போன் செய்தார் மடிவாளா டோட்டல் காம்ளக்சில் தான் இருப்பதாகவும் சந்திக்க முடியயுமா என்று வினவினார்...வாசகர்கள்  ஆசையை நான் எப்போதுமே நிறைவேற்றுவேன்.. நன்றாக வயிறு எரியும் நண்பர்கள் ஒரு முறை திரும்பி சொல்கின்றேன்.. எனது வாசக நண்பர்கள்   என்னை சந்திக்கும் சின்ன ஆசையை நிறைவேற்றி வைப்பதை விட வேறு எனக்கு என்ன வேலை...????


நிறைய முறை பெங்களுர் வந்தாலும் நண்பர் அரவிந்தை ஒரு முறைதான் நான்  சந்தித்து இருக்கின்றேன்...டோட்டல்  காபி டேவுக்கு போனோம். நிறைய பேசினோம் என்னிடத்தில் நிறைய பேசினார் தன் மனது லேசாகி ,இருப்பதாக சொன்னார்... இரண்டு  காப்பிசினோ ஆர்டர் செய்து நெடுநேரம் பேசினோம்.... அவரின் உறவுக்கார பெண்ணும் அவருடைய 5ம்வகுப்பு படிக்கும் மகளும் வந்தார்கள்,...  அவர்களிடத்தில் என்னை அறிமுகபடுத்தி வைத்தார்....


பெண்ணுக்கு அமுதசுரபி என்று பெயர் வைத்தேன்..எல்லோரும்  நல்ல தமிழ் பெயரை அழைப்பார்கள் என்று வைத்தேன்... ஆனால் எல்லோரும் அமுதா என்று அழைப்பதாக சொன்னார்.. நாம்  ஒன்று நினைச்சா ஆண்டவன்  ஒன்று நினைக்கின்றான்... பிள்ளைகளுக்கும் தமிழில் பெய்ர் வைத்தால் எந்த அரசு சலுகையும் இல்லாத போதும் தனது மொழிக்கா மெனெக்கெட்ட நண்பர் அரவிந் பாராட்டபடவேண்டியவர்....


இந்தவார இறுதியில் என்னை சந்திக்க நேரம் கேட்டு இருக்கின்றார்கள்.. அந்த அப்டேட்கள் இனிமே  நிறைய வரும்....அப்புறம் அந்த டான்ஸ் பார் போய்விட்டு  ஜென்மசாபல்யம் அடைந்து  விட்டேன் அது பற்றி தனி பதிவு போடுவோம்....
இன்று கூட   ஆபாசமே தெரியாத அப்பா அம்மாவுக்கு பிறக்காமல்   முனிவர் கொடுத்த வரத்தில் பிறந்த சின்ன பையன்கள் மன்னிக்கவும்தெய்வக்குழந்தைகள் என்னை தாக்கி போஸ்ட் போட்டு இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.. இருந்துட்டு போகட்டும்..

திரும்பவும் நாம சொன்ன விஷயத்தை  உரக்க சொல்லுவோம்....


டேய் நான் அப்படித்தான்டான்னு ஆரம்பத்துல இருந்து சொல்லியும் தொடர்ந்து என்னை படிக்கிறிங்கபாருங்க... உங்களை மாதரி ஒரு காமெடி பீஸ்,மானம் கெட்ட சொரனை கெட்ட ஜென்மத்தை நான் பார்த்ததே இல்லைடா? இவ்வளவு சொல்லியும் நீங்க வருவிங்க. ஏன்னா இதைவிட்ட உங்களுக்கு பொழப்பு இல்லை.... பொங்கறநாயிங்க புரொபைலோட பொங்கினா அந்த மூஞ்சிங்களை பார்க்க ஆசை.... ஆனா சில பேரு டகூலு உடுவானுங்க பிகில் அடிப்பானுங்க ஆனா மூஞ்சியை மட்டும் காட்டமாட்டானுங்க அம்மாம் தைரியம்....அவனுங்க நேர்மையான ஆளுங்களாம்.....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...

இந்ததளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்... திரட்டிகளில்  ஓட்டு போட மறக்காதீர்கள்..

21 comments:

 1. நான் மொத வெட்டு

  ReplyDelete
 2. அண்ணே உங்கள பாக்கும்போது ரொம்ப பெருமையா இருக்குண்ணே.முடிந்தால் ‘நாகரஹொள்ள’ போயிட்டு வாங்கண்ணே. என் ப்ரெண்ட் ‘உல்லாஸ் கரந்த்கிட்ட’ உங்களைப் பத்தி சொல்லி வெச்சிருக்கேண்ணே. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. //அண்ணே உங்கள பாக்கும்போது ரொம்ப பெருமையா இருக்குண்ணே.முடிந்தால் ‘நாகரஹொள்ள’ போயிட்டு வாங்கண்ணே. என் ப்ரெண்ட் ‘உல்லாஸ் கரந்த்கிட்ட’ உங்களைப் பத்தி சொல்லி வெச்சிருக்கேண்ணே. வாழ்த்துக்கள். //
  இவன் இப்புடி போட்டிருக்கறத பார்த்தா எதோ உள்குத்து இருக்காபோல இருக்குண்ணே,ஹாஹாஹா பேரை பாருங்க,உல்லாஸ் கரந்தாம்.

  ReplyDelete
 4. என்ன பிரச்சன அப்படீன்னு பார்க்க போனதுனால லேட் ஆகி போச்சு

  ReplyDelete
 5. என்ன அண்ணே பெண்களூர்லையே செட்டில் ஆகுற ஐடியால இருக்கீங்களா ??

  ReplyDelete
 6. ஜாக்கி போட்டோ நல்லா வந்து இருக்கு..உன் கை பட்டா செல்போன் கேமராவும் ரெட் ஒன் காமிரா மாதிரி மாறிவிடுகிறது..

  ReplyDelete
 7. கார்த்தி இந்த மரா பற்றி எனக்கு நல்லா தெரியும்...தண்ணியில எப்படி பேசுவான்? தண்ணி இல்லாம எப்படி பேசுவான்னு ? எனக்கு தெரியும் மயிலு இந்த கெமென்ட் தண்ணி போட்டு டைப் அடிக்கும் போது அடிச்சி இருக்கு..

  ReplyDelete
 8. சிட்டி பாபு.... அது காமெடி அதைவிடுங்க..

  ReplyDelete
 9. இல்லை ரோமியோ அந்த பாக்கியம் எல்லாம் எனக்கு இல்லை....

  ReplyDelete
 10. இல்லை அரவிந் செல்போன் என்னுடையதாக இருந்தாலும் உங்கள் உறவுக்கார பெண்ணுக்கு என் நன்றி

  ReplyDelete
 11. அண்ணாச்சி சிலருக்கு பிரபலமடைய வேறு வழிகள் கிடைக்காமல் சும்மா இருக்கின்ற உங்களைச் சீண்டுகின்றார்கள் லூசிலை விடுங்கோ...

  ReplyDelete
 12. ரஜினி சொல்வாரில்லே அப்படியே நடந்துக்குங்க. “என் வேலைய செய்ய விடுங்கம்மா”

  ReplyDelete
 13. தலைவரே முதற்கண் வணக்கம்...
  நல்லதும் கேட்டதும் அவங்க அவங்க எடுத்துக்குறத பொறுத்து இருக்கு. இதை நான் சொல்லி உங்களுக்கு தெரியனுமுன்னு அவசியம் இல்லை. ஏனென்றால் என்னை விட நீங்க அனுபவசாலி என்பது எனக்கு தெரியும். நல்லது சொன்னாலோ புகழ்ந்தாலோ இதே சான்ட்விச் பகுதியில் போடுற நீங்க தான் இப்போ யாரவது எதாச்சு புடிக்கலைன்னு சொன்னா அதையும் எழுதுறீங்க... அது உங்க விருப்பம். இருப்பினும் நீங்க எழுத வேண்டிய பல விஷயங்கள் இதை பற்றி எழுதும் போது சிதறி விட வாய்ப்புகள் இருக்கு. இதைப் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் உங்கள் எழுத்துக்களை தொடருங்கள். அதைத் தான் என்னைப் போன்ற பலரும் எதிர்பார்க்கிறோம்...என் தாழ்மையான கருத்துக்கு செவி கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  டிஸ்கி...என் ப்ரோபைல் கூட என் போட்டோ இல்லாம தான் இருக்கு. சும்மா தமாசுக்கு சொன்னேன்.

  ReplyDelete
 14. ரொம்பவே அசத்துறீங்க ஜாக்கி,நினைத்தை எழுதும் தைரியம் உங்களிடம் உள்ளது..

  ReplyDelete
 15. அரவிந்த் கலர் கொஞ்சம் கம்மியான மாதிரியிருக்கு. நல்ல பகிர்வு. தொட்ருங்கள்.

  ReplyDelete
 16. சூரியன் நம்பரை எஸ்எம் எஸ் பண்ணு ஜாக்கி..

  ReplyDelete
 17. பங்காளி... பெண்களூரை அனு அனுவா அனுபவிக்கறீங்க போல...

  கலக்குங்க...

  உங்க வாசக நண்பர்களை கேட்டதா சொல்லுங்க...

  ReplyDelete
 18. பெங்களுரு ஜாக்கி சார்,

  அஞ்சலி போட்டோ மாத்துங்க சார்.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 19. சார் ரொம்ப சூடா இருக்கீங்க போல...

  அடித்து ஆடுங்கள். மங்காத்தா ஆடும் போது “ஓத்தா” சொல்லாமல் எப்படி ஆட முடியும்.

  keep rocking.

  அன்பு நித்யன்.

  ReplyDelete
 20. Jackie...As dagalty said...u leave all those things...now a days i feel u r mostly concentrating on some other ppl...U continue ur work...its not advice jackie...its just what i felt....u r more experianced...u know much better than me...but since now a days i do see u gettng angry too much...and u put too much replies to those guys...leave it jackie...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner