நடுநிசி நாய்கள்..தமிழில் சென்டிமெண்ட் இலக்கணம் உடைத்த படம்.



இந்திய அளவில் உறவுக்குள்  ஒரு பிம்பம் இருக்கின்றது.. அப்பா அப்படி செய்யமாட்டார்...,அண்ணன் அப்படி செய்யமாட்டான், அம்மா அப்படி செய்யமாட்டார், தங்கை அப்படி செய்யமாட்டார், என்மகள் அப்படி செய்வே மாட்டார்... இந்த மாட்டர்கதை  இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இங்கு பிரபலம்...புனித பிம்பங்களில் இருப்பவர்கள் எதையும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையைதான் இன்னும் பொது மக்கள்  நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.. ஆனால்அடிப்படையில் அவர்கள் மனிதர்கள்...மனிதன் ஒரு கூடிவாழும் விலங்கு என்பதை அவ்வப்போது மறந்து விடுகின்றோம்...


நாம் விலங்கா என்றால் ஆம்.. இதை எழுதுபவனும் படிப்பவனும் அடிப்படையில் விலங்குகள்தான்.. எல்லோரும் மனிதர்கள்.. கடவுள் யாரும் இல்லை.. அப்படி பட்ட சூழ்நிலைககளால் விலங்குநிலைக்கு தள்ளபட்ட மனிதனின் வாழ்வை இந்த படத்தில் பதியைவைத்து இருக்கின்றார்.இயக்குனர் கவுதம்..


நான் நிறைய முறை சொல்லி இருக்கின்றேன்.. யார் மீதும் புனித பிம்பத்தை உருவாக்காமல் 5 பர்சென்ட் சந்தேகத்தை எவர் மீதும் வைத்து பழக வேண்டும் என்று நான் அடிக்கடி என் கல்லூரி மாணவ மாணவிகளிடம் அடிக்கடி சொல்லுவேன்..  முக்கியமாக பெண் பிள்ளைகள் இடத்தில் சொல்லுவேன்.. இந்த ஜாக்கியா இருந்தாலும் அதே 5 பர்சென்ட் சந்தேகம் என் மீதும் இருக்கவேண்டும்  என்று...நானும் மனிதன்தான்..



இரண்டு வாரங்களுக்கு முன் அப்பா மீது மக்ள் கொடுத்த பாலியல் தொல்லை குறித்து பல பத்திரிக்கைகள் விரிவாய் எழுதியது..ஆனால் அப்பா அப்படி செய்வரா?  ஒருசில அப்பாக்கள் செய்வார்கள்..  அப்படிபட்ட  அப்பாக்களை  பற்றி இந்த படத்தில் சொல்லி இருக்கின்றார்....இயக்குனர்...
==============================

நடுநிசிநாய்கள் படத்தின் கதை என்ன???



சின்ன வயதில் சிறுவன்வீராவுக்கு அவ்ன் அப்பா  எற்படுத்திய மனக்காயங்களால் அவன் வளர வளர மனச்சிதைவாக மாறி அது எந்த விதத்தில் இந்த சமுகத்தில் இருக்கும் அப்பாவிகள் மீதும் கட்டவிழ்த்து விடப்படுகின்றது என்பதே கதை.... இதுக்கு மேல விவரிச்சா  கதை மேல் இருக்கும். ஈர்ப்பு போய்விடும் என்பதால் நான் இந்த படத்துக்கு இதுவே அதிகம்....

படத்தின் சுவாரஸ்யங்களில் இருந்து சில....

படம் வருவதற்கு முன்பே இந்த படம் பார்டர்டவுன் படத்தின் கதை என்று ஒரு ரூமர் உலா வந்தது.....   அப்படி இல்லை... இந்த படத்தின் கதை களம் வேறு...

இந்த படம் போலான கதைகள் ஹாலிவுட்டில் ஏராளம்...இது போல நிறைய பார்த்தாகிவிட்டது.. பட் தமிழில் இந்த படம் நல்ல முயற்சி....

இசையே இல்லாமல் படம் நெடுகிலும்  ஸ்பெஷல் எபெக்ட் சவுண்டில் கதையை நகர்த்தி இருப்பது ஒரு புதுமை... நம் இயல்பான வாழ்வில் எதாவது இசை நம்மை  சுற்றி இருக்கின்றதா? இல்லையல்லவா... அது போலதான் படமும்...

படம் பார்க்கும் போது ஏதோ உலகபடம் பார்ப்பது போல இருந்தது காரணம்...இசையில்லாதகாரணம்....

சமீபத்தில் வந்த இரண்டு தமிழ் படங்களில் பாடல்கள் இல்லை...  ஒன்று பயணம்.. மற்றது..நடுநிசிநாய்கள்...

மீனாட்சி அம்மாவாக நடித்த பெண்மணி யாரும்மா நீ ..கையை குடு... சும்மா பின்னி பெடல் எடுத்து விட்டார் அம்மணி...

ஒரு 5 நிமிஷத்துக்கு படுக்கையில்  அந்த பெண்மணியின் முகத்தில் டைட்டாக  கேமரா இருக்கின்றது..அந்த பர்பாமென்ஸ்  சூப்பர்..

நிறைய ஷாட் நைட் எபெக்ட் ஷாட்ஸ்...


ஹாஸ்டல் படத்தில் வருவது போல இன்னும் டிடெயில்லாக காட்டி இருந்தால் தமிழ் ரசிகனுக்கு படம் பிடிக்காமல் போகலாம்.. காரணம்  அது போலான காட்சிகள் ஆங்கிலபடத்தில் வந்தால் மட்டுமே மனது ஏற்றுக்கொள்ளும்..

இந்த கதைக்கு அனைத்து பெண்களையும் கவர்ச்சியாக காட்டி இருக்கலாம் ஆனால்  எது தேவையோ அது  ரசிகனுக்கு பிரிந்தால் போதும் என்றபடி காட்சி வைத்து இருப்பது அருமை..

கவுதம் இந்த படத்திலும் வாய்ஸ் கொடுத்து இருக்கின்றார்.. படத்தில் வரும் தியேட்டர் காட்சியில் தியேட்டரில் ஓடும் ஒருதிரைப்பட காட்சிக்கு.. வாசன்ம் பேசி இருக்கின்றார்.. காட்சியை கூட காட்டமாட்டார்கள்.அதில் வரும் வசனம் எனக்கு ரொம் பிடித்தது... பயம் இருந்தா பத்தடிக்கு பள்ளம் தோண்டி அதுல உயிரோடு புதைஞ்சி போயிடு...அவன் ராட்சன்.. அவ்வளவுதான் ...
சமீராரெட்டி நன்றாக நடித்து இருக்கின்றார்... ஆனால் ஒரு மெல்லிய சோகம்அந்த பெண்ணிடத்தில் இருக்கும் ஒரு மலர்ச்சி இருக்காது...


விராவாக நடித்து இருப்பவர் கவுதமின் உதவியாளராம்.. தலைவருக்கு பிறக்கும் போது எங்கேயோ மச்சம் இருந்து இருக்க வேண்டும்... இல்லையென்றால் இவ்வளவு.. குளோசாக...

சிகப்பு ரோஜாக்கள் கமலின் மச்சம் தவழ்ந்து விராவிடம் வந்து இருக்கின்றது.அதே படத்தல் போலிசாக நடித்து இருப்பவரும் ககவுதம் உதவியாளராம்.. நல்ல ஸ்மார்ட்.. ஆனால் அந்த ஸ்மார்ட்நெஸ்க்கு அவர் நிச்சயம் வருத்தபட்டு இருப்பார்.. படத்தை பாருங்கள்..


படத்தில் சில லாஜிக் கேள்விகள் கேட்கலாம் ...

சில டயலாக்குகளில காட்சியை சொல்லி இருப்பது செம டச்..

ஒரு காட்சியில் சமந்தா வருகின்றார்...குருகாணிக்கை

அப்பா   நண்பர்களோடு  செக்ஸ் வைத்துக்கொண்டு இருக்கும் போது என்டா சமர்  உன்னை நிக்கவா கூப்பிட்டேன் என்று அந்த பையனை  அறையும் காட்சியில் புரிந்து கொள்ளலாம்..

என்னை அப்பா வாரத்துக்கு இரண்டு நன் தூங்க விடமாட்டார்.. என்பது போன்றவை தமிழுக்கு புதுசு.

 வளர்த்த பையனோடு செக்ஸ் வைத்துக்கொண்டாலும் அது விபத்தாக நினைத்து அவன் தவறு செய்தாலும் அவன் மீது காட்டும் பரிவு.. செமை .

எனக்கு ஏனோ அந்த  மீனாட்சி கேரக்டரை பிடித்து விட்டது...



பெண் பிள்ளைகளுக்கு கொடுக்கபடும் பாலியல் தொல்லைகள் ஆண்பிள்ளைகளுக்கு இணையாக கொடுக்கபடுக்கின்றது என்ற செய்தியை இந்த படம் உரத்து சொல்கின்றது..


4ல் ஒரு பெண்குழந்தையும்
7ல் ஒரு ஆண்குழந்தையும் பாலியல்தொல்லைக்கு  உட்படுத்துபடுகின்றார்கள்.

இது போலான குற்றங்கள் எங்கும் பதிவு செய்யப்படுவதில்லை... என்பதையும் இந்த படம் சுட்டிக்காட்டுகின்றது...

படம் முடியம் போது இரண்டாம் பாகம் எடுக்க வருவது போல காட்சிகள் அமைக்கபட்டு இருந்தாலும்..  டாக்டர் பேசும் அந்த டைட்டில் வசனம் பேசிக்கொண்டே இருப்தை... இந்த பிரச்சனை என்பது முடிவில்லாதது என்பதாக சொல்லி இருப்பது நச்..

பாலியில் தொல்லை குறித்து  தெளிவு  பெறவும் தகவல் கொடுக்கவும் போன் நம்பர் கொடுக்கின்றார்கள். பெரிய விஷயம்..





==================

படத்தின் டிரைலர்...






==============

படக்குழுவினர் விபரம்..

Directed by     Gautham Menon
Produced by     Kumar
Jayaraman
Madan
Written by     Gautham Menon
Starring     Veera
Sameera Reddy
Deva
Cinematography     Manoj Paramahamsa
Editing by     Anthony
Studio     Photon Kathaas
R. S. Infotainment
Distributed by     Two95 Entertainment
Release date(s)     18 February 2011 (2011-02-18)
Country     India
Language     Tamil

========

பைனல்கிக்..

இந்த படம் பார்க்கவேண்டியபடம்.. படம் ஏ சர்ட்டிபிகேட்... குழந்தைகள் மற்றும் குழந்தையாக நினைத்துக்கொண்டு இருக்கும் பெண்ணையோ பையனையோ அழைத்துக்கொண்டு போய் இப்படி ஒரு படத்தை பார்த்து விட்டோமே என்று புலம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த படம் பலருக்கு பிடிக்காமல் போகலாம்... எனக்கு  பார்க்கலாம்... நல்ல  செய்தியை சொன்ன படம்.. அவ்வளவுதான்..
============


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..



குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

19 comments:

  1. படத்தினை சரியான கோணத்தில் பார்க்க உதவும்படியான விமர்சனம்.

    ReplyDelete
  2. நாளைக்கே பார்க்க முயற்ச்சிக்கிறேன.

    ReplyDelete
  3. Enna Jackie sir bangalore poittu vanthuttu suda suda vimarsanam innakke pottutinga. Unga konam romba vithyasama irukku. Eenna 90% indha padatha pathi negative aa than comments varum.

    ReplyDelete
  4. ஜாக்கி சார் ..எப்படி சொன்னாலும் இந்த படம் அருவெறுப்பே. ஷங்கருக்கு எப்படி பாய்ஸ் ஒரு கரும்புள்ளி ஆனதோ அது போலவே நடு நிசி நாய்கள் கெளதமுக்கு. இது போல மனிதர்கள் இருக்கலாம்.. இல்லையென்று மறுப்பதற்கில்லை..ஆனால் மிஞ்சினால் 5 சதவிதமே இருக்கும் அவர்களை சினிமாவாக்கி விழிப்புணர்வு என்ற பெயரில்.. மேலும் வக்கிரத்தை தூண்டுவது சரியா? என்ன ஏது என்று அறியாமல் சத்யத்திற்கு வந்த சிலரின் கோபமான தர்ம சங்கடதை இன்று காண நேர்ந்தது..அருமையான டெலிபிலிமாக பிரபல தொலைக்காட்சி ஏதேனும் ஒன்றில் தகுந்த பப்ளிசிட்டியுடன் வெளியீட்டு இருந்தால் விழிப்புணர்வு என்ற வகையில் நிச்சயம் கவனிக்கப்பட்டிருக்கும்.

    ReplyDelete
  5. enna boss no தியேட்டர் டிஸ்கி.??

    ReplyDelete
  6. விரிவான ஒரு விமர்சனம்..
    படம் நாளை பார்க்க எண்ணியுள்ளேன்

    பெரிய அளவுள்ள பைல்களை வேகமான Copy செய்ய.. எனும் பெயரில் ஒரு பதிவினை இட்டுள்ளேன் நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்
    http://farhacool.blogspot.com/2011/02/copy.html

    ReplyDelete
  7. விமர்சனம் அருமை. உடனே படம் பார்க்க வேண்டும் போல் உள்ளது.

    ReplyDelete
  8. படத்துக்கு ஜாக்கீ(யோ) !

    ReplyDelete
  9. ஜாக்கி...

    இதற்கு நேர்மாறா உண்மைதமிழன் விமர்சித்து இருக்கிறார்....

    பார்க்கலாமா கூடாதான்னு சொல்லுங்களேன்...

    ReplyDelete
  10. அண்ணே! நீங்க சொன்னதுபோல் மீனாட்சி கேரக்டர் அருமை, ஆனா படம் பார்க்கும் போது சின்ன நெருடல் இருந்தது, ஆனா கிளைமேக்ஸ்லா கிளியர் ஆயிடுச்சு, சமீரா கேரக்டருக்கு வேற யாராவது நடித்து இருக்கலாம் முகத்தில் கொஞ்சம் முதிர்ச்சி தெரியுது, சில இடங்களில் லாஜிக் உதைக்குது... ஆனாலும் நல்ல முயற்சி, வெகுஜனங்களிடம் எடுபடுமான்னு கொஞ்சம் டவுட்டா இருக்கு?
    எனக்கு பிடிச்சிருக்கு. :-)

    ReplyDelete
  11. நல்லா ரசித்து எழுதியிருக்கீங்க

    ReplyDelete
  12. இன்னும் படம் பாரக்கவில்லை. ஆயினும் உங்களின் பதிவினைப் பார்த்ததும் நான் முன்னர் எழுதிய பதிவு ஞாபகம் வந்தது.... அதன் இணைய முகவரி இங்கு... http://justopentalk.blogspot.com/2010/02/blog-post_24.html

    ReplyDelete
  13. ரொம்ம்ம்மம்ப நன்றி சார். இந்த மாதிரி விமர்சனம் கொடுத்ததற்கு .
    மற்ற பிளாக்கர் நண்பர்கள் எல்லாருடைய விமர்சனமும்
    'நீச்சல் குளத்தில் அவங்க ஏன் நீச்சல் ஆடை அணிந்து இருக்காங்க? என்று 'முட்டாள்தனமாக ஆதங்கபடுவது போல் இருந்தது

    உங்களை பாராட்ட எனக்கு தகுதியே கிடையாது. அதனால இந்த நேர்மையான விமர்சனத்திற்கு
    1 க்கு அடுத்து எத்தனை ஜீரோ போட முடியுமோ அத்தனை நன்றிகள்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner