(THE TAKING OF PELHAM 123)இரயில் கடத்தல்...

ரீமேக் கலாச்சாரம் எல்லா இடத்திலும் இருக்கின்றது...ஏதோ நாம்தான் தொடர்ந்து செய்வது போல் கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கின்றோம்...ஆனால் அது ரிமேக் படம்தானே என்பது போல் செலவு செய்யாமல் ஹாலிவுட்டில் அசத்திவிடுவார்கள்....

எந்த ஒரு பெரிய பிரச்சனை நடக்கும் போதும் சில சின்ன விஷயங்களை நாம் மறந்து விடுகின்றோம்.... அதைதான் புத்திசாலிகள் மிகவும் சாதகமாக எடுத்து கொள்கின்றார்கள்...

THE TAKING OF PELHAM 123 படத்தின் கதை இதுதான்...
Bernard Ryder (John Travolta) அவனுக்கு கீழ ஒரு நாலு பேர் ஆயுதங்களோட ஒரு சப்வே டிரைன கடத்தறனுங்க... Walter Garber (Denzel Washington) டிரைனுக்கான சிக்னல் இத்யாதி சொல்லற வேலை.. திடிர்னு ரயில் தண்டவாளத்துல தேமே நிக்க .. என்ன ஏதுன்னு விசாரிச்சா? டிரைனை கடத்திட்டோம்னு பதில் வருது...கடத்தினை ராய்டர் சாதரண ஆள் இல்லை ஜகஜால கில்லாடி... ஒரு பதினெட்டு பேரை பினைகைதியா பிடிச்சு வச்சிகிட்டு ஒரு மணி நேரத்துல பத்து மில்லியன் பணம் வேனும்னு சொல்லறான்... ஒரு செகன்ட் தப்பினாலும் ஒரு நிமிஷத்துக்கு ஒரு கொலை செய்வேன் சவால் விடறான்.... உடனே மேயருக்கு தகவல் போகுது... அவரு பத்து மில்லியன் டாலர் பணத்தை கொடுத்து பினைகைதிகளை விடுவிக்க ஆன்ஷன் எடுக்குறார்.... அந்த பணம் எல்லாம் ஒரு கார்ல போலிஸ் பாதுகாப்போட எடுத்துக்கிட்டு போயிகிட்டு இருக்கறப்ப.... அந்த கார் விபத்துகுள்ளாகுது.... அங்க சரியான நேரத்துக்கு பணம் போய் சேர்ந்துச்சா?

பினைகைதிகள் எத்தனை பேர் செத்தாங்க? அவ்வளவு பணத்தையும் எடுத்துகிட்டு ரெய்டர் எப்படி தப்பினான்... இது போன்ற பரபரபப்புகளை காரகுழம்பு சாதம் சாப்பிட்டு கிட்டே சோத்துவத்தலை தொட்டுக்குனு நல்ல டிவிடியில படத்தை பாருங்க....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

டென்சில் வாஷிங்டன் குரல், மார்கன் பிரிமேன் குரல் ஜான் டிரிவோல்டா குரல் ...இந்த மூனு பேரு குரல்லயும் ஒரு போதை கலந்து இருக்கும்....

இரண்டு லெஜன்ட்... டிரவோல்டா...டென்சில் இரண்டு பேரும் போட்டி போட்டு நடிச்சபடம் இது....

டிரவால்டோ இந்த படத்துல செம கெட்டப்.... இந்த படத்துலயும் அசத்தோ அசத்தி இருக்கின்றார்...

டென்சில் சிரிப்புக்கு ஒரு வசிகரம் கண்டிப்பா இருக்கு.... அதுவும் ஆபிஸ்ல டீ டிரஸ்மேல ஊத்திகினதும் சிரிக்கும் சிரிப்பு

ஒரு ரயிலுக்கு சிக்னல் கொடுக்கும் ஆபிசர் சட்டென நெகோஷியேஷன் டீம் ஹெட் போல் பேசுவது போலான திரைக்கதை அற்புதமான விஷயம்...

இந்த கதை ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கபட்டபடம் இது...

1974,1998ல் இதே கதையமைப்பில் இதே பெயரில் ஏற்க்கனவே இரண்டு படங்கள்எடுக்கபட்டது என்பதால்.... இந்த படம் 3வது படம்..இது ஒரு ரீமேக் பிலிம்...

2008ல் இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கபட்டது... பிசியான ரயில் போக்குவரத்து ஷாட்களை எடுக்க லேட் நைட் நேரத்தில் கொடுக்கபட்டது... அதே போல் பல ரயில் மற்றும் டிராக்குகள் ஸ்டுடியோவில் செட் போட பட்டது...

டென்சில் மற்றும் டிரவோல்ட பேசும் போது எடிட்டிங் மற்றம் கேமரா கோணங்கள் அற்புதம்... மிக முக்கியமாக பணத்தை எடுத்துக்கொண்டு செல்லும் காரை வேகமாக காட்டும் போது பார்வையாளனுக்கு அந்த பரபரப்பு தொற்றி்க்கொள்வது போல் படம் பிடித்து வெற்றி பெற்று இருக்கின்றார்... படத்தின் கேமராமேன்...

ஏற்க்கனவே இயக்குனர் டோனிஸ்காட்... நடிகர் டென்சிலோடு .. மேன் ஆன் பயர் , டெஜவு படங்களில் கை கோர்த்தவர்தான்....

ஒரு நல்ல ஆக்ஷன் படம் பார்க்க இந்த படத்தை பரிந்துரைக்கலாம்...


டோனிஸ்காட் ஒரு அக்ஷன் டைரக்டர் என்பதை மீண்டும் நிறுபித்து இருக்கின்றார்...
படத்தின் கிளைமாக்ஸ் டுவி்ஸ்ட் எதிர்பார்த்ததுதான்

படத்தின் டிரைலர்




படக்குழுவினர் விபரம்..
Directed by Tony Scott
Produced by Tony Scott
Todd Black
Jason Blumenthal
Steve Tisch
Written by Brian Helgeland
David Koepp (uncredited)(screenplay)
Morton Freedgood (novel)
Starring Denzel Washington
John Travolta
John Turturro
Luis Guzman
and James Gandolfini
Music by Harry Gregson-Williams
Cinematography Tobias A. Schliessler
Editing by Chris Lebenzon
Studio Columbia Pictures
Metro-Goldwyn-Mayer
Relativity Media
Scott Free Productions
Escape Artists
Distributed by Columbia Pictures
Release date(s) June 12, 2009
Running time 106 minutes
Country United States
Language English
Budget $100,000,000
Gross revenue $150,024,824 (worldwide)


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

16 comments:

  1. பாத்துடுவோம் ஜாக்கி...மீ தா பர்ஸ்டு..

    ReplyDelete
  2. அறிமுகத்திற்கு நன்றி..

    ReplyDelete
  3. ஓகே பாத்துடுவோம் , தல kilometer zero படம் லிங்க் கெடைக்குமா ?...

    ReplyDelete
  4. நான் பார்த்துட்டேன் தல .. செம விறு விருப்பு ..

    ReplyDelete
  5. john travolta கெட் அப் வித்தியாசமா இருக்கு போல

    ReplyDelete
  6. /மிக முக்கியமாக பணத்தை எடுத்துக்கொண்டு செல்லும் காரை வேகமாக காட்டும் போது பார்வையாளனுக்கு அந்த பரபரப்பு தொற்றி்க்கொள்வது போல் படம் பிடித்து வெற்றி பெற்று இருக்கின்றார்... படத்தின் கேமராமேன்...//

    ஆங்கில படத்துக்கே உரித்தான வேகம்ன்னு சொல்லுங்க..படம் பார்த்துர வேண்டியதுதான்.

    ReplyDelete
  7. கூடிய விரைவில் பார்த்துருவோம் அண்ணே...

    ReplyDelete
  8. அண்ணே படம் ரொம்ப நல்லா இருக்கும்,ஓட்டுக்கள் போட்டாச்சு

    ReplyDelete
  9. முந்தைய படங்களைப்பார்க்கவில்லை. டிஹில் ட்ரவோல்டா மிகநடிப்பை வெளிப்படுத்திய்ருந்தார் என்பது ஒரு சாதாரண சினிமா ரசிகனான என் அபிப்ராயம். வாழ்த்துகல், இன்னும் பல இதுபோல் எழுதுங்கள். உங்கல் பதிவால் பல நல்ல படங்களை நானும் பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. தலைவா புதுசா சோனி ப்ளூ ரே ப்ளேயர் வாங்கிருக்கேன். சுறு சுறு விறுவிறு படங்களா ஒரு நாளஞ்சு (கண்டிப்பா DTS Audio இருக்கனும்) சொல்லுங்களேன்.

    ReplyDelete
  11. நன்றி சம்பத்...

    நன்றி பின்னோக்கி

    நன்றி அப்பாவிதமிழ்ன்...கீலோமீட்டர் லிங்க் எனக்கு தெரியாது.. பட அறிமுகம் மட்டும்தான் நம்முடையது...

    நன்றி ரோமியோ பாய்...

    நன்றி தர்ஷன்... அமாம் இதுல டிரேவோல்டா கெட்டப் சூப்பர்

    ReplyDelete
  12. நன்றி பூங்குன்றன்

    நன்றி ராஜபிரியன்


    நன்றி ஜெட்லி


    நன்றி கார்த்தி...

    அனைவருக்கும் என் நெஞ்சார்ந்து நன்றிகள்...

    ReplyDelete
  13. முந்தைய படங்களைப்பார்க்கவில்லை. டிஹில் ட்ரவோல்டா மிகநடிப்பை வெளிப்படுத்திய்ருந்தார் என்பது ஒரு சாதாரண சினிமா ரசிகனான என் அபிப்ராயம். வாழ்த்துகல், இன்னும் பல இதுபோல் எழுதுங்கள். உங்கல் பதிவால் பல நல்ல படங்களை நானும் பார்க்கிறேன்.//


    நன்றி டாக்டர் உங்கள் வருகைக்கும் உங்கள் பின்னுட்டத்திற்க்கும்...

    உங்கள் பதிவைவாசிக்கி்றேன்.. இப்போது தொடர்ந்து எழுதுவது போல் தெரிகின்றது... தொடருங்கள்..

    நன்றி

    ReplyDelete
  14. தலைவா புதுசா சோனி ப்ளூ ரே ப்ளேயர் வாங்கிருக்கேன். சுறு சுறு விறுவிறு படங்களா ஒரு நாளஞ்சு (கண்டிப்பா DTS Audio இருக்கனும்) சொல்லுங்களேன்.//

    அண்ணாமலையான் இப்ப வருகின்ற எல்லா படங்களும் டிடிஎஸ்தான்.. இந்த படமே டிடிஎஸ்தான்...

    நன்றி

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner