நான்காம் கட்ட ஈழ போரை நாம் இன்னும் கொஞ்ச நாளில் நாம் மறந்து விடுவோம்...பிரபாகரன் யார் என்று கேள்வி கேட்போம்..? அதன் பாதிப்புகளை எழுத்து வடிவில் கூட பேச அஞ்சுவாம்...பொதுவாக இது போலான அடக்கு முறைகளை மக்கள் மத்தியில் மறக்காமல் இருக்க செய்ய வேண்டியது ...ஒவ்வொரு கலைஞனின் கடமையாகும்...
அந்த வலியையும், எம்மக்கள் ஆட்பட்ட சித்திரவதைகளையும், எதாவது ஒரு கலையின் மூலம் வெளிபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்... அது வெகு ஜனமக்கள் ரசிக்கும்,பெயிண்டிங், கட்டுரை, நாவல், திரைபப்டம், குறும்படம் போன்றவற்றின் மூலம் வெளிபடுத்தி்க்கொண்டே இருக்க வேண்டும்....நமது நாட்டை பொறுத்தவரை திரைப்படம் சான்சே இல்லை...அப்படி ஈழத்தை பற்றி எடுத்த படங்கள் பாதி வெளிவரவேயில்லை.....
ஆனால் ஐரோப்பாவிலும் அதன் நேச நாடுகளும்... இரண்டாம் உலக போரையும்,ஹிட்லர் செய்த அட்டுழியத்தை இன்னும் மறக்காமல்... ஏதாவது ஒரு வகையில் படம் எடுத்துக்கொண்டேதான் இருகின்றார்கள்...60 வருடங்கள் கழிந்தாலும் அது போலான படங்களில், காட்சிகளின் ஊடாக காட்டப்படும் உண்மைகள், இன்னும் நம் நெஞ்சை நெகிழவைத்து சுடும் என்றால் அது மிகையில்லை என்பேன்...
ஒரு போர் ஒரு தேசத்தின் கனவுகளை எப்படி நாசம் செய்யும்? என்பதையும்....ஒவ்வொரு தனி மனிதனின் கனவுகளின் கண்ணாடி சட்டத்தில் கல் வீசி எப்படி கை கொட்டி சிரிக்கும் என்பதையும்... அப்படி ஸ்டார் ஹோட்டல்களில் சர்வராக வேலை செய்தவன் ஒருவனின் வாழ்க்கையையும்.. அவன் காதல்மற்றும் போருக்கு பிறகான அவன் தனிமை... அவன் கனவுகளின் சிதைவுகள்தான் இந்த படத்தின் கதை
I Served the King of England படத்தின் கதை இதுதான்....
Jan Dítě 15 ஆண்டுகால சிறைவாசத்துக்கு பிறகு வெளியில் வருகின்றான்...ஜேன் ஒரு சர்வராக தன் இளமை வாழ்க்கையை ஆரம்பித்தவன்....நேராக தனது பழைய வீட்டுக்கு போய் அதனை செப்பனிட்டுக்கொண்டு இருக்கும் போது, தனது பழைய நினைவுகளில் மெல்ல நினைத்து பார்க்கின்றான்...சிறுவயதில் இருந்து ஜேனுக்கு இருக்கும் பெரிய கனவு... பெரிய கோடிஸ்வரனாக வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பது...ஆனால் ஜென் செய்வது ஒரு சர்வர் தொழில்.. ஆனால் நம்பிக்கை இழக்காமல் உழைக்கும் ஜெனுக்கு இருக்கும் ஒரு பெரிய inspiration ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல் ஓனர்Kyle Kahunt.... மிக சாதாரணமாக சர்வராக வாழ்க்கையை ஆரம்பித்து, எப்படி ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு அதிபர் ஆனார்? அவர் செய்யும் தொழிலில் உள்ள பக்தி... அதன் நேர்த்தி, customer களை கவனித்து கொள்ளும் பாங்கு என்று அசத்தும் அந்த ஓட்டல் முதலாளிKyle Kahunt... எப்போதும் I Served the King of England என்று அலட்டாமல் சொல்லிகொள்வார்... அதாவது அப்படி ஒரு பாக்கியத்தை பெற்றவராக சொல்லுவார்...ஜேனுக்கும் அதே ஹோட்டலில் சர்வர் வேலை... கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து கொண்டு இருக்கும் போது....மெல்ல ஹிட்லரின் எழுச்சி அந்த ஹோட்டலை சின்னாபின்னமாக்குகின்றது....அப்போது அவனுக்கு ஹிட்லரின் நாஜீ படையில் சோல்ஐராக பணிபுரியும் பெண்ணானLiza மேல் காதல் கொள்ள, அது அந்த ஹோட்டலில் வேலை செய்யும் எவருக்கும் பிடிக்கவில்லை.. அதனால் ஜேக் டிஸ்மிஸ் ஆகின்றான்... அதன் பிறகு ஜேன் லிசாவை திருமணம் செய்து கொள்கின்றான்.... இரண்டாம் உலக போர் அந்த தம்பதியை எப்படி புரட்டி போட்டது...ஹிட்லரின் ஆதிக்கம் என்ன?...ஜேக் எதற்க்கு ஜெயிலுக்கு போனான்? மனைலி லீசா என்னவானாள்... என்பதை வெண்திரையில் பாருங்கள்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
இந்த படம் ஒரு வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு இரண்டாம் உலக போரின் வலியை சொன்னபடம்....
இந்த படம் நாவலை தழுவி எடுக்கபட்டது....அதே போல் ஜெனின் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் சொல்லும் திரைக்கதை...இந்த படம்..
ஒரு ஹோட்டலின் முதலாளி எப்படி இருக்க வேண்டும்? அதன் நேர்த்தி என்ன? தொழில் சுத்தம் என்றால் என்ன? வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? போன்றவற்றை நீங்கள் இந்த படத்தில் பார்க்கலாம்... பெரிய பெரிய ராஜாக்கள் எல்லாம் வந்தால் சர்வர்களுக்கு எந்தளவுக்கு டிப்ஸ் வரும் என்பதையும் சொல்லி இருப்பார்கள்...
சமயோஜித புத்தியோடு இருக்கும் ஜேன் எப்படி எல்லாம் டிப்ஸ் வாங்கி கொள்கின்றான் எனபதை காமெடி இழையோட சொல்லும் காட்சிகள் சிரிப்பை வரவைக்கும் காட்சிகள்..
ஜேன் சர்வ் செய்யும் 18++ போட்டோ
ராஜா போல் தன் ஹோட்டலை பார்த்து பாத்து செதுக்கிய ஓட்டல் முதலாளி... இரண்டாம் போரினால் ஏற்படும் அரசியல் மாற்றம் ....அவரை எந்தளவுக்கு மனது நோக செய்கின்றது என்பதை வலியோடு சொல்லும் காட்சிகள் சான்சே இல்லை..
லீசா , ஜேனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அவன் பியூர் ஆரியனாக இருக்க வேண்டும் என்று செமன் டெஸ்ட் எடுக்கவைப்பதில் ஆகட்டும்...
இருவரின் உடலுறவின் போது...ஹிட்லரின் தேச பாடல்களையும், அவர் உதிர்த்த உறுதி மொழிகளையும் லீசா சொல்லிக்கொண்டே இருக்க... மெஷின்தனமாக ஜென் முயங்கி கொண்டே இருக்க.... அது போலான காட்சியில் தெரிந்து விடுகின்றது ஹிட்லரின் பிரெயின் வாஷ்......
ஒரு18+ போட்டோ
ஜேன் செமனை டெஸ்ட்டுக்கு எடுக்கும் காட்சி சிரிப்பை வரவைக்கும்
அதே போல் அந்த உடலுறவு காட்சியின் போது கிராம போன் ரிக்கார்ட் ஓடவதும் அது போலான உடலுறவின் வேகமும்.. அதற்க்கு ஜேனின் எக்ஸ்பிரஷ்னும் சான்சே இலலை....
திருமணத்துக்கு பிறகு வேலை செய்யும் ஓட்டலும் அதன் சுற்று புறமும் கொள்ளை அழகாக காட்டி விட்டு, போரின் போது அதனை எரியவிட்டு இருப்பது... சான்சே இல்லை...
ஹோட்டல் காட்சிகளில் சப்ளை செய்யும் உணவுகளின் நேர்த்தியை காட்டும் காட்சிகளையும்,சுல்தான்கள், அதிகாரிகள் வரும் போது உணவு பரிமாறபடும் முறைகளும் அதற்கான காட்சிகளில் காட்டபடும் ரிச்னெஸ் சான்சே இல்லை
படத்தில் நிர்வாணகாட்சிகள் ஏராளம்...
மிக அற்புதமான ஒளிப்பதிவை செய்து இருப்பவர்...Jaromír Šofr மிக முக்கியமாகஓட்டல் காட்சிகளின் போது அந்த ரிச்னெஸ்....
ஜேனின் அந்த உயரம் குறைவும்.... சிரிப்பு வராமல் சிரிக்க வைக்கும் அவர் உடல் மொழியும் உம்மானாம் மூஞ்சியை கூட சி்ரிக்கவைக்கும்...
இந்த படம் வாழ்வில் தவறவிடக்கூடாதபடம்... படம் பாத்துவிட்டு இந்த ஜாக்கியை வாழ்த்துவீர்கள்...
ஜெர்மன் சோல்ஜர்களின் செமனை மட்டும் எடுத்து பாதுகாக்க சொல்லி போரில்ஜெர்மனியர்கள் இறந்தாலும் அடுத்த தலைமுறை பியூர் ஜெர்மனியராக பிறக்க வேண்டும் என்று நினைக்கும் பல் நோக்கு திட்டத்தை என்னவென்று சொல்வது...
இந்த படம் சென்னை 6வது உலக படவிழாவில், சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் இது... ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மறுமுறை திரையிடபட்டு ரசிக்கபட்டது...
இயக்குனர் Jiří Menzel கவிதை போன்ற காட்சிகள் படம் முழுவதும் தெரியும்..
படத்தின் டிரைலர்... original கண்டிப்பாக 18++
படத்தின் டிரைலர் (ஆங்கில மொழியாக்கம்...)
படக்குழுவினர் விபரம்...
Directed by Jiří Menzel
Produced by Rudolf Biermann
Written by Screenplay:
Jiří Menzel
Novel:
Bohumil Hrabal
Starring Oldřich Kaiser
Julia Jentsch
Ivan Barnev
Martin Huba
Marián Labuda
Milan Lasica
Josef Abrhám
Jiří Lábus
Music by Aleš Březina
Cinematography Jaromír Šofr
Distributed by Bioscop
Release date(s) Czech Republic:
19 December 2006
United Kingdom:
9 May 2008
United States:
29 August 2008
Running time 120 min.
Country Czech Republic
Slovakia
Germany
Hungary
Language Czech
அன்புடன்
ஜாக்கிசேகர்
(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....)
நன்று.......
ReplyDeleteRight :)
ReplyDeleteநன்றி ராஜ பிரியன்..
ReplyDeleteநன்றி ரோமியோ..இந்த படத்தை அவசியம் பார்க்கவும்..
ReplyDelete//ஒரு போர் ஒரு தேசத்தின் கனவுகளை எப்படி நாசம் செய்யும்? என்பதையும்....ஒவ்வொரு தனி மனிதனின் கனவுகளின் கண்ணாடி சட்டத்தில் கல் வீசி எப்படி கை கொட்டி சிரிக்கும் என்பதையும்... //
ReplyDeleteபின்னிட்டிங்க சார்...
- www.srisathish.blogspot.com
//ஒரு போர் ஒரு தேசத்தின் கனவுகளை எப்படி நாசம் செய்யும்? என்பதையும்....ஒவ்வொரு தனி மனிதனின் கனவுகளின் கண்ணாடி சட்டத்தில் கல் வீசி எப்படி கை கொட்டி சிரிக்கும் என்பதையும்... //
ReplyDeleteபின்னிட்டிங்க சார்... --
நன்றி ஸ்ரீதரன் மிக்க நன்றி... உங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும்...
விமர்சனம் அருமை,
ReplyDeleteஇரண்டாம் உல்க போர் பற்றிய படங்கள் குறித்து எழுதுங்கள். அவ்வகையான படங்கள் என்றால் உயிர் எனக்கு... இந்த வாரம் அது பற்றி ஒரு பதிவும் எழுதியுள்ளேன்..
நன்றி
தமிழ் உதயன்
அண்ணே இந்த மக்கா ஓட்டு போட்டுட்டேன்.
ReplyDeleteவிமர்சனம் அருமை,
ReplyDeleteஇரண்டாம் உல்க போர் பற்றிய படங்கள் குறித்து எழுதுங்கள். அவ்வகையான படங்கள் என்றால் உயிர் எனக்கு... இந்த வாரம் அது பற்றி ஒரு பதிவும் எழுதியுள்ளேன்..
நன்றி
தமிழ் உதயன்--//
நன்றி தமிழ் உதயன்
கண்டிப்பாக எழுதுகின்றேன்..
அண்ணே இந்த மக்கா ஓட்டு போட்டுட்டேன்.//
ReplyDeleteநன்றி கார்த்தி..
//ஏன்டா மக்கா.. ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....//
ReplyDeleteமுடியாது... முடியாது...
முடியாது... முடியாது...
ReplyDeleteநன்றி ராஜன்...செம சிரிப்பு சிரிச்சேன்..
//இந்த படம் வாழ்வில் தவறவிடக்கூடாதபடம்... படம் பாத்துவிட்டு இந்த ஜாக்கியை வாழ்த்துவீர்கள்...//
ReplyDeleteநிதர்சனம்!
ரொம்ப அருமையான படம். பகிர்தலுக்கு நன்றி!
அதுவும் தேனீ மொய்க்க அந்த பொண்ணு நடந்து போற அழகே அழகு!
முழு படமுமே கவிதையான கோரியோகிராப்!