black lamb-2009- உலகசினிமா/ ரஷ்யா/ கிராமத்தான்...



நம்ம ஊரில் ஒரு பேச்சு இருக்கும் கொஞ்சம் தலை காய்ந்து இருந்தாலோ அல்லது பேச்சில் கிராமத்து வாடை இருந்தாலோ அவர்களை கிராமத்தான் என்று அவர்களை எள்ளி நகையாடுவதும் அவர்களை நகரத்தார் மிக கேவலமாக நடத்துவதும் என  நாம் நிறைய பார்த்து இருக்கின்றோம்.. 

 கிராமத்தில் இருந்து ரஷ்யநகரத்துக்கு வரும் ஒரு கிரமத்து குடும்பம் படும் பாட்டை நகைச்சுவையுடன் சொல்ல வந்து இருக்கும் படம் இது...


black lamb-2009- உலகசினிமா/ ரஷ்யா படத்தின் கதை என்ன???

எந்த குடும்பத்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத விஷயம்யாதெனில் இடப்பெயர்வுதான்....  இடப்பெயர்வு என்பது ரொம்பவும் கொடுமையான விஷயம்.. சட்டென உங்கள் குடும்பத்துடன்  ஊட்டியில் போய் இனி குடும்பத்துடன் வாழ வேண்டும்  என்று சொல்லிவிட்டால்..அந்த பழக்கபடாத சூழ்நிலை, அந்த மக்கள்,குளிர்வாழ்க்கை என்று  சட்டென அந்த ஊரில் ஒட்ட முடியாது அல்லவா அது போலதான் ஒரு கிராமத்தில் இருந்து குடும்பத்துடன் சூழ்நிலை காரணமாக மாஸ்கோ நகர வாழ்க்கை வாழ வரும் ஒரு பெரியவரையும் அவர் குடும்பத்தையும் நகரத்தின் அதிகார வார்கம் எந்தெந்த விதத்தில் ஆட்டி படைக்கின்றது என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கின்றார்கள்... 
ஒரு பெரியவர்  இரண்டு பேத்திகளோடும் ஆட்டுகுட்டிகள், ஒரு பழைய லாரி போன்றவற்றோடு ஒரு கார் வாஷ் செய்யும் இடத்தை விலைக்கு வாங்கி குடிவருகின்றார்.... ஆனால் அந்த இடத்தை ஒரு டான் அடைய ஆசைப்படுகின்றான். இவன் கொடுக்கும் குடைச்சல்கள் மற்றும் அதிகாரவர்கம் கொடுக்கும் கொடைச்சல்களை எப்படி சமாளித்து அந்த இடத்தில் வாழ்கின்றார்கள் என்று நகைச்சுவையோடு சொல்லி இருக்கின்றார்கள்..

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

போன உலக படவிழாவில் மண்ணின் மனத்தை சொல்லும் விதமாக  ஒரு பையன் தனது அம்மாவை தேடிப்போவான்...கடைசியில் அவன் சொந்த கிராமத்தை அடையும் போது . அங்கு எல்லோரும் அவர்கள் கிராமிய இசையை இசைத்து டான்ஸ் ஆடுவார்கள்... அந்த பையனும் தனது மண்ணின் இசையை கேட்டு ஆடுவான்...

அது போல இந்த படத்திலேயும் ஒரு காட்சி  ஓட்டல் வைக்க அனுமதி வழங்க வரும்  அதிகாரி.. கிழவர் போடும் ஒரு லோக்கல் டான்ஸ் ஆட்டத்தை பார்த்து விட்டு அவரும் ஆடி விட்டு அனுமதி கொடுத்து விட்டு போகும் போது எல்லோருக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருக்கின்றான் என்று சொல்லும் காட்சி...


நகைச்சுவையோடு வரும் மெல்லிய சோக இழையும் இந்த படத்தில் ஹோட்டல் வைக்க சரியான இடம்தானா? என்று சான்று கொடுக்கவரும் அதிகாரியிடம் பெரியவ்ர் போடும் கிராமத்து டான்ஸ் நகரத்து மனிதரிடமும் இன்னும் கிராமத்து வாசனை விட்டு விடவில்லை எனும் விதமாக அந்த பெரியவரின் ஆட்டத்தை ரசித்து சேன்ங்ஷன் செய்யும் காட்சி அற்புதம்.. 

அந்த பெரியவர் உங்கள் மனதில் எப்போதும் இருப்பார் அது போலான உருவம்.

இந்த படம் சென்னை எட்டாவது உலகபடவிழாவில் உட்லண்ட்ஸ் சிம்பனியில் பார்த்தேன்..

பைனல்கிக்...
படத்தில் ஒரே ஒரு காட்சி மட்டும்தான் மிக அழுத்தமாக இருக்கும்... மற்றபடி இந்த படம் ஒரு காமெடி படம்... இந்த படம் டைம்பாஸ்படம்தான்... 


குறிப்பு 
இந்த படத்தை பற்றி கூகுளில் தேடினால் எந்த விபரமும் கிடைக்கவில்லை.. அதனால் இந்த சுருக் விமர்சனம்.

7 comments:

  1. சிறிய விமர்சனம் நல்லாயிருக்கு... விரிவான உங்கள் விமர்சனப்பார்வை இல்லாதது எதோ குறைவது போல் தெரிகிறது.

    ReplyDelete
  2. வழக்கம் போல அருமை

    ReplyDelete
  3. உங்க ஸ்டைலில் விமர்சனம் இல்லையே...
    ஆனாலும் வழக்கம் போல அருமை.
    http://www.sakthistudycentre.blogspot.com/

    ReplyDelete
  4. // இந்த படத்தை பற்றி கூகுளில் தேடினால் எந்த விபரமும் கிடைக்கவில்லை.. அதனால் இந்த சுருக் விமர்சனம். //

    என்னடா சின்னதா இருக்கேன்னு யோசிச்சேன்... இதான் மேட்டரா...

    ReplyDelete
  5. // இந்த படத்தை பற்றி கூகுளில் தேடினால் எந்த விபரமும் கிடைக்கவில்லை.. அதனால் இந்த சுருக் விமர்சனம். //

    என்னடா சின்னதா இருக்கேன்னு யோசிச்சேன்... இதான் மேட்டரா...

    ReplyDelete
  6. good review jackie.. after reading ur short review like to watch thz movie.. but unable found d torrent... here is
    imdb link for this movie
    http://www.imdb.com/title/tt1792035/

    if anyone find torrent for this movie publish d link

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner