அப்படி நான் என்ன எழுதிவிட்டேன் நண்பர்களே.....???


இந்த பதிவு எனது சுயசொறிதல் அதுவும் சந்தோஷ சுயசொறிதல் என்பதால் முக்கிய வேலை இருப்பவர்கள்.. இந்த பதிவை கடந்து விடுங்கள்....

எனது இந்த பதிவை படிக்காதீர்கள்  என்று சொன்னாலும் படித்து விட்டு வழக்கம் போல சிலர் வயிறு எரியலாம்... அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது....

திரும்பவும் அந்த தலைப்புக்கே வரேன்.... அப்படி என்ன எழுதிவிட்டேன் நண்பர்களே?? என் மீது இவ்வளவு பாசம் வைக்க...??????
  
சமீபகாலமாக என் வாசக நண்பர்கள் என்னை நெகிழ்ச்சிப்டுத்தி நன்றிக்கடனில் தத்தளிக்க வைக்கின்றார்கள்....  இத்தனைக்கும் நான் எழுதி ஒரு புத்தகம் கூட  போட்டதில்லை... தீவிர இலக்கிய கவனிப்பும்,  வாசிப்பும் என்னிட்த்தில் இல்லவே இல்லை... நான் எழுதுவது எல்லாம் என் தளத்தில் மட்டுமே..


இத்தனைக்கும் நான் பெரிதாக அவர்களுக்கு எதுவும் செய்ததில்லை.. நான்  என் ஓய்வு நேரத்தில் பதிவுகளை  என் தளத்தில்எழுதுகின்றேன்...அதுவும்  எழுத்து பிழைகளுடன்...மற்றபடி நான் எதுவும் அவர்களுக்கு செய்ததில்லை.. ஆனால் நேரம் மெனக்கெட்டு கண் விழித்து, தூக்கம் துறந்து பல நாட்கள் எழுதி இருக்கின்றேன்.... அந்த உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று எடுத்துக்கொள்கின்றேன்...பல நாட்கள் சிஸ்டம் எதிரில் உட்கார்ந்து இருக்கும் போது மனைவி எது பேசினாலும் காதில் வாங்காமல் எழுதி தள்ளி இருக்கின்றேன்....அந்த டேடிகேஷனுக்கு கிடைத்த அன்பு பரிசுகள்  இவை என்று எடுத்துக்கொள்கின்றேன்...


என் எழுத்தில் குறைந்த பட்ச நேர்மையை கடைபிடித்து வருகின்றேன்... என்னை ஒரு போதும் இன்டலெக்சுவல் என்றோ? நான் சொல்வது ஒன்றே இந்த உலகின் வேதவாக்கு என்று ஒரு போதும் சொல்லியதில்லை.....ஆனால் பலர் அப்படி நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.... அதுக்கு நான்  ஒன்றும் செய்ய முடியாது.... அவர்கள் கொடுக்கும் அந்த ஐஎஸ்ஓ 2011 சர்ட்டிபிகேட்டுக்கு நான் எழுதவில்லை

என்னை தரம் தாழ்ந்து திட்டியவர்களை பெயர்களை ஒருபோதும் நான்  உச்சரித்ததேஇல்லை.  அதுதான் என் புறக்கனிப்பு...ஆனால் அவர்களை என் அம்மாவிடத்தில் பெயரோடு முறையிட்டு இருக்கின்றேன்... அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்...அவர்கள் அனுபவித்து உணர்வார்கள்...அதை நான் என் கண்ணால் பார்த்து இருக்கின்றேன்..என்னை திட்டி விட்டு திரும்ப சமாதானம் பேச வந்தவர்களை ஒரு போதும் நான் மன்னிப்பதில்லை... அப்படி வந்தவர்களை புறம்தள்ளி இருக்கின்றேன்... அது யாராக இருந்தாலும்......


சரி இனி நெகிழ்ச்சியான சில பகிர்தல்கள்......இதையெல்லாம் எழுத வேண்டுமா? என்று யோசித்தேன்....எழுதவேண்டும்....நிச்சயமாக பதியவேண்டும்.. எனக்கு இத்தனை பேர் இருக்கின்றர்ர்கள் என்று எனக்கு நானே தட்டிக்கொள்ள நிச்சயம் எழுதிப்பதியவேண்டும்... என்னதான் நான் காதலிக்கின்றேன் என்று பத்து லட்டர் எழுதி இருந்தாலும்.. ஒரு முறையாவது காதலியை சட்டென்று இழுத்து அனைத்து  ஒரு உதட்டு முத்தம் அழுத்தமாய கொடுத்தால், அந்த வெறித்தனம், அந்த காதல், அந்த காமம் உணரப்படும் அல்லவா? அது போலத்தான் இதுவும்.... சில நேரங்களில் எழுதிதான் என் நெகிழ்வை வெளிபடுத்தி இருக்கின்றேன்...அதற்காக எழுதுகின்றேன்...

பதிவுலகில் சமீபத்தில் ஒரு பெரிய பணப்பிரச்சனை குறித்து விவாதித்து   சண்டை போட்டது அனைவரும் மறந்துவிட போவதில்லை.. அந்த நேரத்தில் என்னிடத்தில் அனானியாக நீயும்  சீக்கிரம் மாட்டுவ தம்பி என்று சொன்னார்கள்... என் வீழ்ச்சியில் சந்தோஷம் கொண்ட அந்த பண்ணாடைகளுக்கு அப்போது யாதோரு பதிலும் நான் சொல்லவில்லை.. சில பதிவுகளில் என் பெயரை குறிப்பிடாமல் பின்னுட்டத்தில் அதே அனானிகள் என்னை வசை பாடினார்கள்..

அனானிகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை...நானாக யாரிடமும் பணம் கொடுங்கள் என்று கேட்கவில்லை..  என் மீது வைத்த அன்பு காரணமாக  நண்பர்கள் என்னிடத்தில் கொடுத்தார்கள்....நான் 5 பேரிடம் பணம் வாங்கி இருக்கின்றேன் என்று நான் முன்பே எழுதி இருக்கின்றேன்... என் வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் தெரியும்....ஒரு கால் அந்த பணத்தை என்னால் கொடுக்க முடியாத நிலை வருமானால்.... என் புது வீடு விற்க்கப்பட்டு அந்த பணம் எனக்கு பணம் கொடுத்த என் நண்பர்களுக்கு கொடுக்கபடும் என்பதை இங்கே சொல்லிக்கொள்கின்றேன்... அதனால் அனானிகள் கவலைபடவேண்டாம்... எனக்கு பணம் கொடுத்த  அத்தனை பேரும் என் மீது  நம்மபிக்கை கொண்டவர்கள்..ஒரு கையெழுத்து இல்லை, ஒரு புரோ நோட்டு இல்லை...அந்த நம்பிக்கைக்கு ஒரு போதும் குறையாது....அப்படித்தான் நான் வளர்க்கபட்டு இருக்கின்றேன்....

ஒரு  நண்பருக்கு கொஞ்சம் சீக்கரம் கொடுக்க வேண்டும்... அவரிடம்  என் நிலை விளக்கினேன் அவர் புரிந்து கொண்டு ஒன்னும் பிரச்சனை இல்லை பொறுமையாக கொடுங்கள் ஜாக்கி என்று சொல்லிவிட்டார்கள்.. அந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற, அதனால் நான் நேசித்த சினிமாவை தலைமுழ்கிவிட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கின்றேன்...ஒரு பைசா கூட வட்டி இல்லாமல் நான் வீடு வாங்க குறித்த நேரத்துக்கு உதவிய நண்பர்களுக்கு என்ன கைமாறு செய்ய போகின்றேன்....


நான் பணம் வாங்கி ஒரு வருடம் முடிந்து விட்டது ..  சான்பிரான்சிஸ்க்கோவில் இருக்கும் நண்பர் ஹரி  ராஜகோபலானிடம் வீடு வாங்க ஐம்பாதாயிரம் வாங்கி இருந்தேன். ஐந்து பேரில் அவரும் ஒருவர்....  வாங்கி ஒரு வருடம் ஆகிவிட்டபடியால் அவருக்கு  கடிதம் அனுப்பி இருந்தேன்...அவர்  அந்த பணம் ஐம்பாதாயிரம் உங்கள் மகள் யாழினிக்கு வைத்துக்கொள்ளவும் என்று சொல்லிவிட்டார்....

Hello Jackiesekar!

No worries, you can keep that money for your little daughter யாழினி.

Keep up good work I am confident that you have a great future.Take care.

Please  call me Hari -:) no sir pls

Thank you

Best Regards
Hari Rajagopalan

============

தங்கச்சி,அண்ணன், தம்பி, எவன் இப்படி கொடுப்பான்...???ஒரு ரூபாயா? ரெண்டு ரூபாயா?? ஐம்பாதாயிரம் ரூபாய்.. எவன் குடுப்பான் இந்த காலத்தில்.....ஏற்கனவே ஒரு சிங்கபூர் நண்பர் ஒரு லட்சத்தை எனக்கு கொடுத்து இருக்கின்றார்...இப்போது ஹரி.... இந்த இருவரும் என் மீது வைத்து இருக்கும் பாசத்துக்கு நான் என்ன கைமாறு செய்யபோகின்றேன் என்று தெரியவில்லை..  வாழ்நாள் முழுவதும் இந்த பாசத்துக்கு நான் கடமைபட்டு  இருக்கின்றேன்.. அந்த அன்பும் நெகிழ்ச்சியும் கீழே வரிகளாக வார்த்தைகளாக....என் எதிர்காலத்தில் கவலை கொள்வதை பாருங்கள்.... திரும்பவும் கேட்கின்றேன்.... நான் அப்படி என்ன எழுதிவிட்டேன்..???
=============

அன்பின் ஹரி..

மன்னிக்கவும் தாமதமான கடிதத்துக்கு,


பணம் கொடுக்க வேண்டும் என்று நான் அனுப்பிய கடிதத்துக்கு அந்த பணத்தை யாழினிக்கு வைத்துக்கொள்ளவும் என்று சொல்லி வந்த கடிதத்தை படித்து விட்டு எனக்கு விவரிக்க வார்த்தைகள் இல்லை... சில கடிதங்கள் எழுத வார்த்தைகள் தேட வேண்டும். இவ்வளவு தாமதமாக எழுதும் போது கூட உணர்ச்சி வயப்பட்டட நிலையில் வார்த்தைகள் கிடைக்கவில்லை...பெரிய மனது வேண்டும்..ஹரி... பெரிய விஷயம்... யாழினி கொடுத்து வைத்தவள்தான்...இன்று எழுதலாம் இல்லை நாளை எழுதலாம் என்று தள்ளி தள்ளி போய் கொண்டே இருந்தது.. இன்று என்ன வருகின்றதோ அதை எழுதுவோம் என்று உட்கார்ந்து விட்டேன்..... ஊரில் அனைவரும் நலம் என்று நம்புகின்றேன்.. சென்னை வரும் போது அவசியம் சந்திக்கலாம்..

இந்த கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்று கூச்சமும் உணர்ச்சிவயப்படலுமே இந்த தாமதத்துக்கு காரணம்.. என்  நிலை புரிந்து கொள்வீர் என்று நம்புகின்றேன்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

============     
Hello Jackisekar !

No worries

I hope that your future would be bright and peppered with extraordinary achievements and success.

Wishing you all the best in your future endeavors.

With deepest regards,

Thank you

Hari Rajagopalan

==============================================
 என் மனைவிஒன்பது மாதமாக இருந்த போதே  வாசக நண்பர் கரூர் அருன் அவர் மனைவி சரண்யா மற்றும் அவர்களின் குழந்தையுடன் வந்து என்னையும் என் மனைவியை பார்த்து விட்டு சென்றார்கள்...

குழந்தை யாழினி பிறநத உடன் இங்கே பெங்களூரில் இருக்கும் எனது  வாசக  நண்பர் பாண்டிச்சேரி டியர் பாலாஜி மற்றும் அவர் மனைவி  அவரின் பெண் குழந்தை மற்றும் வாசக நண்பர் நாகர்கோவில் விஜய் மற்றும் அவரின் மனைவி மற்றும் பெண்குழந்தையுடன் எங்களையும்  எங்கள் குழந்தையையும் பார்க்க வந்தார்கள்... இரண்டு குடும்பமும் ஒரே நேரத்தில் வந்து என் மாமியார் வீட்டை கலகலப்பாக்கினார்கள்..நானும் என் மனைவியும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை....குழந்தைகளுக்கு உடை  மற்றும் பொருள் வாங்கி வந்து குவித்து விட்டார்கள்... நன்றி நண்பர்களே....
===========================

போனமுறை நான் பெங்களூரில் இருக்கும் போதே எப்போது சென்னைக்கு வருவிங்க என்ற தொடர்ந்து போன் செய்து கொண்டு இருந்தார் ஒரு நண்பர்...  பெயர் தினேஷ்.. செஞ்சிக்கு பக்கத்தில் ஒரு கிராமம்..கிராமத்தின் பெயர் நினைவில்லை...தற்போது கத்தாரில் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்.. விடுமுறையில் தமிழகம் வந்து இருப்பதாகவும் இன்னும் சில தினங்களில் கத்தார் போக போவதாகவும் அதற்குள் என்னை பார்க்க ஆவலாய் இருப்பதாக தெரிவித்தார்...

 நான் சென்னை வந்ததும் அவருக்கு போன் செய்தேன்....அன்று மாலை தினேஷ் என் வீட்டுக்கு வந்தார்.. ஒரு ஸ்வீட் பாக்கெட்டும் வேறு ஒரு வஸ்துவையும் கையில் திணித்தார்... உங்களுக்கு என் அன்பு பரிசு என்றார்,.. அது 320 ஜீபி டிரான்ட்சென்ட் ஹார்டு டிஸ்க்.. அண்ணே இதில் ஒரு 50 உலகபடத்துக்கு மேல இருக்கும்... பொதுவா பலது நிங்க பார்த்து இருக்கலாம்... இதை பார்த்துட்டு நீங்க விமர்சனம் எழுதனும்....இந்த ஹார்ட்டிஸ்க்கும் உங்களுக்குதான்....எதுக்கு இதெல்லாம் என்றேன்...
(வாசக நண்பர் தினேஷ் உடன் நான்...)

உங்களுக்கு தெரியாது அண்ணே... கத்தாரில் வெள்ளிக்கிழமை ஒரு நாள்தான் லீவ்...வாரம் முழுவதும் வேலை பெண்டுகழட்டும்... பொண்டாட்டி புள்ளை எல்லாருரையும் விட்டு புட்டு கடல் கடந்து இருக்கோம்... நீங்க அந்த வாரத்தில் எழுதும் எல்லா படத்தையும் புதன் ,வியாழனில் டவுன்லோட் போட்டு விடுவோம்... வெள்ளிகிழமை அந்த படத்தை பார்போம்...  வாரத்தில் ஒரு வெள்ளிக்கிழமையான விடுமுறை நாளை எங்களுக்கும் எங்க பிரண்ட்ஸ்சுக்கும் ரொம்ப சந்தோஷமா ஆக்கறிங்க அதுக்கான எனது  சின்ன பரிசு என்று சொன்ன போது நான் நெகிழ்ந்து போனேன்......இன்னும் நிறைய படங்கள் எழுத வேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டேன்.... நன்றி தினேஷ்.........
=========
அதுமட்டும் அல்ல அமெரிக்காவில் வேலை செய்யும் எனது வாசக நண்பி திடிர் என்று போன் செய்தார்... நான் இன்னும் இரண்டு மாதத்தில் சென்னை வரப்போகின்றேன் உங்களுக்கு என்ன வேண்டும்?? ஜாக்கி.. என்ன வாங்கி வர வேண்டும் ?என்றார்..அதே போல வத்தியாயிருப்புபாலகுமாரன் ஜாக்கி உங்களுக்கு என்ன  வேண்டும் இன்னும் இரண்டு மாதங்களில்  ஊருக்கு வரப்போகின்றேன்... என்ன வாங்கிவரவேண்டும் என்று கேட்ட போது நீங்கள் என் மேல் வைத்து இருக்கும் அன்பு போதும் என்றேன்...
===============================
ஜாக்கி நான் சிங்கபூர் பாண்டியன் பேசறேன்? என்ன சரக்கு வேண்டும்....நீங்க சொல்லறதை வாங்கி வரேன் எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யுங்க.. நான் அவசரமா ஊருக்கு போறேன் ஏர்போட்ல வந்து மட்டும்  வாங்கிக்க முடியுமா? என்று ஐஎஸ்டி போட்டு பேசி அன்பை வெளிபடுத்தும் நண்பரை என்ன சொல்வது?????

ஜாக்கி என் பேரு ராஜ்குமார்.. நான் வக்கில்... சென்னை ஹைகோர்ட்டில்  பணிபுரிகின்றேன்.. உங்க பிளாக் வாசிச்சேன்... நாங்க ஈகா தியேட்டர்கிட்ட மூனு பேர் சேர்ந்து ஆபிஸ் வச்சி இருக்கோம் என்று பேசினார்....நான் கூட இப்ப பாரிஸ் பக்க போயிகிட்டு இருக்கேன் என்று சொல்லிவிட்டு அவரது ஆபிஸ்  போனதும் நல்ல வரவேற்பு... என்னை சந்தித்ததில் அவருக்கு பெருமகிழ்ச்சி.. முக்கியமாக சத்தி டூ பெங்களூர் பயண அனுபவத்தை சிலாகித்த என்னோடு பகிர்ந்தார்.... என்னை அவர்  நண்பர்களிடம் அறிமுகபடுத்தி வைத்தார்....அவர் அதிஷாவிடம் பேசி இருக்கின்றேன் என்று சொன்னார்....லக்கி, அதிஷா, கேபிள் மூவருடையதும் தொடர்ந்து வாசிப்பேன் என்று சொன்னார்...
=======================
அதே சத்தி பதிவை வாசித்து விட்டு அண்ணே என் பேரு கார்த்தி நான்  பெங்களூர்ல வேலை செய்யறேன்... அப்பா பரஸ்ட் டிப்பார்ட்மென்ட்ல ரிட்டையர்டு... அந்த பக்கம் வந்த சொல்லுங்க.... நாம காட்டுல போய் ரிசார்ட்டுல தங்கலாம் என்று அழைப்பு விடுத்து இருக்கின்றார்.....அண்ணே நிச்சயம் நாம காட்டுல தங்கனும் அதை நீங்க உங்க பாணியில் எழுதனும் என்று அன்பு வேண்டுகோள்விடுத்தார்...



=========================

ஒரு ஐந்து நட்களுக்கு முன் ஒரு மெயில் நான் கேஷவ்.... நான்  லண்டனில்  ஒரு பிரபல கார்கம்பெனியில் வேலை செய்கின்றேன்... முதலில் எனது அட்ரசை செக் செய்தார்...ஒரு கூரியர் அனுப்பி இருந்தேன் வந்ததா? என்று கேட்டார்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை..  என்ன கூரியர்?? என்ன மேட்டர்...??? என்றேன்...


சாரி ஜாக்கி, உங்களுக்கு நான் முன்னாடியே கால் பண்ணி மேட்டர சொல்லியிருக்கணும். சர்ப்ரைஸா இருக்கட்டுமுனு விட்டுட்டேன். 

யாழினிக்கு லண்டனிலிருந்து ஒரு டிரஸ் அனுப்பியிருக்கேன். நாளைக்கு (புதன்) பகல்ல உங்களுக்கு கால் பண்றேன்.

அன்புடன்,
கேஷவ்.
========================================================

 லண்டனில் கேஷவ்வோடு வேலை செய்யும் சென்னை நண்பரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று அவசரமாக சென்னை கிளம்ப.. சட்டென என்னுடை ஞாபகம் வர பக்கத்தில் இருக்கும் கடைக்கு போய் என் குழந்தைக்கு உடை வாங்கி அவரிடம் கொடுத்து அனுப்பி இருக்கின்றார்....நான் இன்னும் அந்த உடையை பார்க்கவில்லை அது சென்னையில் என் மேல் வீட்டில் கூரியர் வாங்கி வைத்து இருக்கின்றார்கள்..... அடுத்து நாள் அரைமணிநேரம் பேசினார்...ரொம்ப நாட்களாக படித்து வருகின்றேன்.. உங்க்ள் பிளாக்கினை தன்னை போல என் பிளாக்ககை நேசிக்கும் இன்னோரு  நண்பர் செக்கோஸ்லோவாகியாவில் இருப்பதாக தெரிவித்தார்...மிக நீண்ட நாள் பழகிய நண்பருடன் பேசிய உணர்வை அந்த பேச்சு ஏற்படுத்தியது.... திரும்ப ஒரு மெயில் அவரிடத்தில் இருந்து நான் என்ன நினைத்தேனோ அதையே அவரும் குறிப்பிட்டு அவருடைய போன் நம்பரை  எழுதி.. எந்த உதவியையும் என்னிடத்தில் எப்போது வேண்டுமானாலும் கேட்கவும் என்று எழுதி இருந்தார்...  நான் அதுக்கு போட்ட பதிலில் அந்த வார்த்தைகள் ஆயிரம் யானைபலத்துக்கு சமம் என்று பதில் சொல்லி இருந்தேன்....
 என் ரத்த உறவு முறை அல்ல....என் நெடுநாளைய நண்பனும் இல்லை.. அவர் கருப்பா சிவப்பா என்பது கூட தெரியாது.,...ஆனால் என்னையும் என் குழந்தையையும் நேசித்த அன்புக்கு என்ன கைமாறு செய்ய போகின்றேன்.....எல்லாம் கொடுத்தது இந்த பதிவுலகம்தான்..

=========================================
இரண்டு நாளைக்கு முன் ஒரு கடிதம்.. கடையநல்லூரில் இருக்கும் எனது வாசக நண்பர் காத்திக் கவி ஒரு கடிதமும் என்னை வரைந்து ஒரு புகைபடத்தையும் அனுப்பி இருந்தார்...அந்த போட்டோவை வரைய இரண்டு மணிநேரம் ஆனதாக சொல்லி இருந்தார்.....எனக்கு அந்த படம் ரொம்பவும் பிடித்து இருக்கின்றது..அந்த புகைபடம் இங்கே....


 அவரின் கடிதம்.....


அண்ணே வணக்கம்ணே எப்படினே இருக்கீங்க. நாங்க எல்லாரும் இங்கன நல்லா இருக்கோம் 
உங்களோட வெப்சைட்ஐ கடந்த நாலு மாசமா படிக்கிறேண்ணே என்னமா எழுதிறிய சூப்பெர்னே. காலையிலே எந்திச்சதும் முதல்ல பேப்பர் அப்பறமா உங்க தளம் இது ஒரு வழக்கமாகவே போச்சு 
அதனாலேயே நான் கொஞ்சம் அப்டேட் ல இருக்கிற மாதிரி ஒரு பீல். எதுக்குனா நீங்க ஆட்டுக்குட்டியில் இருந்து அரசியல் வரைக்கும் எல்லாத்தை பத்தியும் எழுதறீங்க.
முன்னாடிலாம் எனக்கு தமிழ் சினிமாவை தவிர எதுவுமே தெரியாது. இப்போ தெலுங்கு ஹிந்தி இங்கிலீஷ் படங்கள் பார்க்கிறேன் அதுவும் நீங்க விமர்சனம் பண்ண படங்கள் மட்டும். என்னோட பிரெண்ட்ஸ் கிட்ட நீங்க விமர்சனம் பண்ண படங்களை அப்படியே டப்பா அடித்து சொல்லும் பொது நம்மள ஒரு புத்திசாலியாகவே பார்க்கிறானுக. உங்க தளத்தை படித்துட்டு ஊருக்குள்ள ஒப்பிச்சிகிட்டு திரிந்தேன்
எல்லாரும் என்னை அவன் கொஞ்சம் விவரம் ஆகிட்டான்னு சொன்னாங்க 
இப்போ தயக்கம் இல்லாமல் சுயமாகவே பேசறேன். எல்லாம் உங்களாலதான்
உங்களுடைய எழுத்து உங்களுக்கும் தெரியாமல் எனக்கும் தெரியாமல் எனக்கு ஒரு தன்னம்பிக்கை கொடுத்திருக்கு அண்ணா. உங்களுக்கு நன்றி சொல்லனும்னு நினைத்தேன் அப்பறம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். அடுத்த தலைமுறையை உருவாக்குபவன் சிறந்த படைப்பாளி என்கின்ற பொது 
கடமையை செய்வதற்கு எதற்க்காக நன்றி 
கடைசியாக யாழினியின் காதுகளில் எனது விசாரிப்புகளையும் சொல்லுங்கள் 

========
 கார்த்தி கவி

=============================================

 ரொம்ப நன்றி கார்த்தி கவி..ஆனால் உண்மை என்னவென்றால் நிறைய  உலக படங்களை என் தளத்தில் படித்தேன் என்று நண்பர்களிடம் பொதுவாக சொல்லுவதில்லை ...


காரணம் அவர்கள் நண்பர்களிடம் கொஞ்சம் சீன் காட்ட வேண்டும் அல்லவா??... அதை கார்த்தியும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டு இருக்கின்றார்.....

சிலர் அனானியாக நிறைய சீண்டி இருக்கின்றார்கள்... நிறைய நக்கல் விட்டு இருக்கின்றார்கள்... என்னை திட்டி வந்த கடிதங்கள் மட்டும் 200க்கு மேல் என் மெயில் இன்பாக்சில் இருக்கின்றது...ஆனால் அனானியாக  இருப்பவர்கள்தான் பெரும்பாலும் இதில் நிறைய....

என்னை திட்டும் கடிதங்கள்  நான் நிறைய எழுத ஊக்கமாய் இருக்கின்றன.... என்னை வாழ்த்தும் கடிதங்கள் எனக்கு மயில் இறகாய் தடவி கொடுக்கின்றன....தினமும் எழுதிக்கொண்டு இருக்கின்றேன்....காரணம் மேலே இருக்கும் நெகிழ்ச்சியான வாசக  நண்பர்களால்.....மற்றும் முகம் தெரியாத என் பிளாக் படிக்கும் நண்பர்களுக்கும்.... எனக்காய் ஓட்டு போட்டு உற்சாகபடுத்தும் நண்பர்களுக்கும்....நான் தினமும் எழுதுகின்றேன்... என்னை நேசிப்பது போல, என் குடும்பத்தையும் நிறைய நண்பர்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை போலவே நேசிப்பதினால் அந்த அன்புக்காக முன்னை விட நான் நிறைய எழுதுகின்றேன்......

நான் எப்போதுமே பெரிய பருப்பு என்று நான் நினைத்ததே இல்லை... அப்படி வெளிக்காட்டிக்கொண்டதும் இல்லை....நான் சுயம்பு அல்ல... நான் வளர மேலே உள்ள நான் குறிப்பிட்ட பல நண்பர்களின் ஊக்குவிப்பே நான் வளரக்காரணம் என்பதற்கே இந்த பதிவு......

மற்றவர்கள் போல பிளாக் எழுதி ஒரு மயிறும் புடுங்க முடியாது என்று என்னால் சொல்ல முடியாது...
நான் நிறைய  நண்பர்களின் பாசத்தையும், நேசத்தையும் பன் மடங்கு பெற்று இருக்கின்றேன்.... அதனால் மற்றவர்கள் சொல்வது போல் என்னால் இந்த பதிவுலகத்தை சொல்லிவிட முடியாது...
இப்போதும் இவ்வளவு பெரிய பதிவு எழுதிய பின்பும் ஒரே கேள்வி இப்போதும் என் மனிதில் இருக்கின்றது...

அப்படி நான் என்ன எழுதிவிட்டேன் நண்பர்களே.....???


உங்கள் அன்புக்கு எப்போதும் பாத்திரமானவானாக இருக்கவே பிரியப்படுகின்றேன்.....
பரம் பொருளின் துணையோடும் நெகிழ்ச்சியான பிரியங்களுடன்....
ஜாக்கிசேகர்...






(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS...
 


=================================================

49 comments:

  1. அன்பின் ஜாக்கி,

    எழுத்திலும் செயலிலும் நேர்மை இருப்பதால் வெற்றி மீது வெற்றி உனனை வந்து சேரும்!

    வாழ்த்துக்கள்!!!
    அன்புடன்
    அரவிந்தன்

    ReplyDelete
  2. அண்ணா இது உங்கட நேர்மையின் வெற்றி நான் பிளாக்கர் கு வந்ததே உங்கட ப்ளாக் ல இருக்க காதலால தான்,

    ReplyDelete
  3. எழுத்திலும் செயலிலும் நேர்மை இருப்பதால் வெற்றி மீது வெற்றி உனனை வந்து சேரும்!

    thats enoug jackie

    ReplyDelete
  4. இந்த காலத்திலே நட்பின் பெருமை எல்லோருக்கும் புரிவதில்லை...வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. Dear Jakky

    Do not feel let down at any time.Because the self confident is very needed one at this world.

    I am nawas Khan from saudi arabia.I started blog reading from last one year or so.But my first and foremost favorite is jakky. I know your not a professional writer.But still your writing has a attractive in its own way. I read many blogs. But you are special from all.

    Even i am reading your blog in last one year i am not voted for your article. This is my first latter to you also. So there are many people following you without giving any vote and reply.That is not mean that you are not getting your appreciation. you have the ability and guts.Keep going on you will reach your mile stone one day.it is not faraway from you.

    Thanks and regards

    Nawas Khan

    ReplyDelete
  6. சினிமாவுக்கு எப்புடி ஒரு ரஜினி அப்புடி தான் தமிழ் பிளாக்குக்கு எங்க அண்ணன் ஜாக்கி ...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஜாக்கி..எளிமையும் ,உண்மையும் என்று பெருமை பெறும்...

    ReplyDelete
  8. நெகிழ வைத்து விட்டீர்கள் ஜாக்கி.நீங்க எப்போ கோவை வந்தாலும் வர்றதுக்கு முன்னால ஒரு மெயில் போடுங்க...

    ReplyDelete
  9. //உங்கள் அன்புக்கு எப்போதும் பாத்திரமானவானாக இருக்கவே பிரியப்படுகின்றேன்....//

    நீ பாத்திரமா இரு இல்ல பக்கெட்டா இரு, ஆனா இப்படியே இரு..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  10. சந்தோஷமா இருக்குண்ணே.. வாழ்த்துகள்..:-))

    ReplyDelete
  11. congrats jackie. very touching mails from ur friends. I am also continuously studying ur blog, especially sandwich and nonveg.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் ஜாக்கி.

    ReplyDelete
  13. Jakie - you are special... that's why you are here.

    ReplyDelete
  14. //உங்கள் அன்புக்கு எப்போதும் பாத்திரமானவானாக இருக்கவே பிரியப்படுகின்றேன்....//

    நீ பாத்திரமா இரு இல்ல பக்கெட்டா இரு, ஆனா இப்படியே இரு..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்//

    Sriram style...

    ReplyDelete
  15. உங்கள் தளத்தைப் பார்த்துதான் நானும் சில ஹாலிவுட் படங்களின் டிவிடிக்களை வாங்கவேண்டுமென்று முடிவு செய்திருக்கிறேன். நன்றி ஜாக்கி.

    வார்த்தை பிரயோகங்களில் நீங்கள் அசரவைப்பதில்லை. மாறாக மிக எளிமையான வார்த்தைகளில் பலரையும் சென்றடைகிறது உங்கள் எழுத்து. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  16. Jackie,
    Glad to hear that you have made several friends via your blog. Also, it is really nice to note that your are grateful for their help.
    Best wishes.

    ReplyDelete
  17. Good post. Continue your good work. All the best for your successful future.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் பங்காளி....

    கலக்குங்க...

    ReplyDelete
  19. உண்மைக்கு கிடைத்த பரிசு.......
    எளிமை +உண்மை = ஜாக்கிசேகர்

    ReplyDelete
  20. எனது இந்த பதிவை படிக்காதீர்கள் என்று சொன்னாலும் படித்து விட்டு வழக்கம் போல சிலர் வயிறு எரியலாம்... அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது....// எனக்கே லைட்ட எரியுது! அவுங்களுக்கு வெடிச்சுடும். எங்க சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் காணோம். அப்புறமா ஒருமணிநேரம் தாமதமாக, லேட், லட்டோ லேட் அரைமணி நேரம் லேட் என்று தலைப்போட வரபோவுது

    ReplyDelete
  21. அனைவருக்கும் நீங்கள் சிறந்த நண்பராக விளங்குவதே இத்தனை அன்புக்கும் காரணம்.

    ReplyDelete
  22. நெகிழ்ச்சியான பதிவு ஜாக்கி.

    ReplyDelete
  23. யூ ஆர் ராக்கிங் மேன்!!

    ReplyDelete
  24. Naan ungal Theevira Vasagan........Eego vai udaithu unmai pesum dhairiyam..........ungalukku undu......I like it.....

    ReplyDelete
  25. எனக்கு தெரிந்து இன்று புதிதாக பதிவேழுத வரும் பல புதிய பதிவர்களுக்கு நீங்களும் ஒரு முக்கியமான Inspiration அண்ணே. காரணம், நானும் உங்களை பார்த்து தான் பதிவெழுதவே வந்தேன்.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள்.....
    தொடர்ந்து கலக்குங்கணே ...

    ReplyDelete
  27. பாஸ் நான்லாம் இத்தன வருஷமா மாங்குமாங்குனு எழுதறேன் எனக்குலாம் ஒரு பய லெட்டர் போட்டதில்ல.. என் கல்யாணத்துக்கே நாலஞ்சு பேர்தான் வந்தாங்க.. உங்களுக்கு இவ்ளோ ஆதரவிருக்குனா உங்களுக்குள்ள ஏதோ ஒரு ஈர்ப்பு காந்தசக்தி இருக்கு.

    இவங்களுக்கு என்ன திருப்பி செய்ய போறீங்க அப்படீன்ற கேள்வியோட என் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் தலைவரே... ஃபீலிங்க விடுங்க.. சந்தோஷமா இருங்க..

    ReplyDelete
  29. You are blessed to be loved by so many people:))

    ReplyDelete
  30. அருமை அண்ணா...நெகிழ வைத்துவிட்டீர்கள்..வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. அதிஷா said...
    பாஸ் நான்லாம் இத்தன வருஷமா மாங்குமாங்குனு எழுதறேன் எனக்குலாம் ஒரு பய லெட்டர் போட்டதில்ல.. என் கல்யாணத்துக்கே நாலஞ்சு பேர்தான் வந்தாங்க.. உங்களுக்கு இவ்ளோ ஆதரவிருக்குனா உங்களுக்குள்ள ஏதோ ஒரு ஈர்ப்பு காந்தசக்தி இருக்கு.

    இவங்களுக்கு என்ன திருப்பி செய்ய போறீங்க அப்படீன்ற கேள்வியோட என் வாழ்த்துகளும்!


    எங்க அன்னான் ஒன்னும் செய்ய வேண்டாம் தொடர்ந்து எழுதினாலே போதும்

    ReplyDelete
  32. I am Chandramouli from Jakarta, Indonesia. Like many anonymous readers, I too follow your blogs almost every day. Unknowingly, the blog writers do create affinity and friendship in the virtual world. You are doing great - Keep it up. Best wishes, Chandramouli

    ReplyDelete
  33. முன்பெல்லாம் உங்கள் தளத்தில் வாசிப்பதும் வருவதும் இல்லை. ஆனால் நானும் இப்போது உங்கள் பதிவுகள் வந்தவுடன் வாசிக்க ஆரம்பித்து விட்டேன். நீங்கள் சொன்னமாதிரி வரிக்கு வரி வாசிப்பதில் தான் உங்கள் வெற்றியே. என்னுடன் சவுதியில் இருக்கும் ஒருவர் பகிர்ந்து கொண்டார். நான் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உங்கள் தளத்தைத் தான் பார்ப்பேன் என்று. நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று. நாடுகள் தாண்டி நட்பையும் அன்பையும் உங்கள் எழுத்துகள் வாய்த்துக்
    கொடுத்திருக்கின்றன. வானம் வசப்படும். நெகிழ்வான பதிவு.

    ReplyDelete
  34. நன்றி அரவிந்... சரின், மங்களூர் சிவா,ஷர்புதின்

    ReplyDelete
  35. ந்ன்றி நெல்லை ராம், நந்தனா,வெங்கி , மணிஜி,

    ReplyDelete
  36. Even i am reading your blog in last one year i am not voted for your article. This is my first latter to you also. So there are many people following you without giving any vote and reply.That is not mean that you are not getting your appreciation. you have the ability and guts.Keep going on you will reach your mile stone one day.it is not faraway from you.//

    நன்றி நவாஸ்கான் உங்களை போன்றவர்களின் வெளிப்பாடுகளை பார்க்கும் போதுதான் நான் இன்னும் எழுத வேண்டும் என்று தோன்றுகின்றது... எங்கள் கடிதத்திக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  37. கோவை நேரம்,புதுகை.அப்துல்லா,sriram,கார்த்திகைப் பாண்டியன்,ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) காவேரிகணேஷ்,கொக்கரகோ,Venkat M//

    நன்றி நண்பர்களே....

    ReplyDelete
  38. உங்கள் தளத்தைப் பார்த்துதான் நானும் சில ஹாலிவுட் படங்களின் டிவிடிக்களை வாங்கவேண்டுமென்று முடிவு செய்திருக்கிறேன். நன்றி ஜாக்கி.

    வார்த்தை பிரயோகங்களில் நீங்கள் அசரவைப்பதில்லை. மாறாக மிக எளிமையான வார்த்தைகளில் பலரையும் சென்றடைகிறது உங்கள் எழுத்து. தொடர்ந்து நிறைய எழுதுங்கள். //

    நன்றி ரகு நிச்சயம் செய்கின்றேன்... வெளிப்படையான பாராட்டுக்கு என் நன்றிகள்,

    ReplyDelete
  39. பொதுவாக பெண்கள் நிறைய பேர் என் தளத்தை வாசித்தாலும் பின்னுட்டங்கள் அதிகம் இடுவதில்லை... மிக நன்றாக இருந்தால் ஒன்று போன் அல்லது சாட்டில் பாராட்டி விட்டு போய் விடுவார்கள். ஆனால் பதிவர் பொன்மலரின் இந்த பின்னுட்டம் மற்றும் வெளிப்படையான பகிர்தலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  40. நாடோடிப் பையன்,blogpaandi,Tech Shankar,சங்கவி,இராஜ ப்ரியன்,dearbalaji, sவந்தியத்தேவன் ,மிக்க நன்றி நன்பர்களே...

    ReplyDelete
  41. நன்றி யுவா, பரிசல்,இந்தியன்,ஏசி, துரை,பலாசி,பிரசாத்,நந்தா,ஜெட்லி , துரை அனைவருக்கும் என்நன்றிகள்..

    ReplyDelete
  42. நன்றி அதிஷா உங்கள் வெளிப்படையான பகிவுக்கு... உங்களுக்கான பதிலை தம்பி கார்த்தியே சொல்லிவிட்டார்....

    ReplyDelete
  43. நன்றி சந்திரமவுலி மிக்க நன்றி...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner