HANGOVER-2/2011 பேச்சிலர் பார்ட்டியும் அதனால் வந்த வினையும்.
இன்று  நண்பர்கள் திருமணத்துக்கு செல்லும் யாரும் காலையில் நண்பன் முகூர்த்த நேரத்தில் தாலி கட்டுவதை பார்த்ததே இல்லை..
காரணம் இரவு முழுவதும் சரக்கு அடித்தால் எப்படி காலையில் முகூர்த்த நேரத்தில் அட்டடென்ட் செய்ய முடியும்... சரக்கு அதிகமானால் காலையில் எழுந்து இருக்கும் போது ஹேங்ஓவர்தான்...உலகில் ஹேங்ஓவர் போன்ற கொடுமையான தலைவலியை பலர் அனுபவத்து இருக்க வாய்ப்பு இல்லை... எனக்கு எப்போதாவது சரக்கு மாற்றி அடித்தால் மறுநாள் காலையில் தலைவலி பின்னிபெடல் எடுக்கும்... அந்த தலைவலி பீடைக்கு பயந்தே நான் எந்த சரக்கோடும் வேறு எந்த சரக்கிற்கும் கலப்பு திருமணம் செய்து வைத்ததே இல்லை....ஆனால் இப்போது ஹாட்டுடன் பியர் மிக்ஸ் செய்தால் உடம்பு அழிச்சாட்டியம் செய்யாமல் அமைதி காக்கின்றது.. அதுவும் நண்பர் குமாரால்....

பத்து வருடத்துக்கு முன் குடிப்பவனை பார்த்தால் அவன் குடிகாரன் என்று சொல்லுவார்கள்.. படங்களும் அப்படியே சித்தரித்தன.. ஆனால் இன்று எந்த படத்தை எடுத்தாலும் நாயகன் தன் நண்பர்களுடன் குடிப்பதை காட்டுகின்றார்கள். குடி வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது....ஐடி வளர்ச்சி காரணமாக படித்த பெண்கள் பீர் டேஸ்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்..கேரளாவில் தகப்பனும் மகனும் ஒன்றாய் அமர்ந்தே குடிப்பார்கள்..ஆனால் தமிழகத்தில் அந்த நிலை வர வெகுகாலம் காத்து இருக்க வேண்டிய அவசியம் இலலை....

எனது பால்ய நண்பன் சுபாஷின் திருமணம்.... பேச்சிலர் பார்ட்டிக்காக கடலூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்தான்..மாலையில் இருந்தே நணபர்கள் தாக சாந்தியில் இறங்க அரம்பித்து விட்டார்கள்.... வெகு நாட்கள் கழித்து கல்யாண சாக்கை வைத்து  நண்பர்கள் சந்தித்ததால் பல புல்கள் காலியாகி கொண்டு இருந்தது.

முதல் தடவை கன்னிதன்மை இழந்ததில் இருந்து பிரபல நடிகையின்  சின்ன மார்பு வரை அலசி ஆராயப்பட்டது....தொட்டுக்க ஊறுகாயாக அரசியல் பேசப்பட்டது..அறை முழுக்க சேவல் பண்ணையாக இருந்த காரணத்தால்  போதையில் பல நண்பர்கள் அறையில் ஜட்டியோடு குறுக்கும் நெடுக்குமாக அலைய ஆரம்பித்தார்கள்....சிகரேட் சாம்பிரானியில் அறை தத்தளித்தது.... 

நண்பருக்கு காலை ஆறு எழரை முகூர்த்தம்...இரண்டு மணி வரை குடித்த காரணத்தால் நிலவரம் யாருக்கும் தெரியவில்லை...இதில் காட்டான் முரளிதான்(கறுப்பாக இருந்தகாரணத்தால் அந்த பெயர்) நிறைய குடித்தான்...


ரூமில் இடம் கிடைத்த இடத்தில் போரில் இறந்து போனவர்கள் போல சிதறி கிடந்தார்கள்... முதலில் டாய்லட் போய் வெஸ்ட்ரன் டாய்லட்டில் ஆபாயில் போட்ட நண்பரால் எழுந்திருக்க முடியாததால் அதிலே வாய் வைத்த படி மட்டடையாகி விட... அடுத்து காட்டான் முரளி வாந்திஎடுக்க போனால் அங்கே வேறு ஒருவன் அந்த இடத்தை பில் பண்ணி இருந்த காரணத்தால், வாஸ் பேஷனில் வாந்தியெடுத்து விட்டு தண்ணிர் திறந்து விட்டவன் போதையில் முடவில்லை... வாழ் பேஷன் கி அப்படியே மட்டையாகி விட.. வாந்தியில் வாஷ் பேஷன் அடைத்துக்கொள்ள, தண்ணீர் பாத்ரூமில் ரொம்பி வாத்தியோடு அது அறை முழுக்க பரவ ஆரம்பித்தது அறையில் ஒரு இன்ஞ்சிக்கு தண்ணணீர் ரொம்பி காரிடரில் வழிய ஆரம்பிக்க, ஹேட்டல் நிர்வாகம் அலறி அடித்து வந்து கதவை  தட்ட பலர் அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தார்கள்... அங்கே மணமகன் தாலி காட்டி அய்யர் சொன்னார் என்று இல்லாத அருந்ததியை பார்த்து இருப்பதாக பொய் சொல்லிக்கொண்டு இருந்தான்...

அந்த அறையே நாற்றத்தில் குடல் புடுங்கியது....காட்டான் முரளி எழுந்தான் எல்லோரும் அவனையே பார்த்தார்கள் கல்யாணத்ததுக்கு எடுத்து வந்த உடைகள் எல்லாம் பாழகிவிட்டதால் அவன் மேல் பெரும் கோபத்த்தில் இருந்தார்கள்.
அவன் தண்ணியில் கிடந்த ஈரமான அவன் சட்டையை எடுத்து போட்டுக்கொண்டான். இரண்டு வாக்கியத்தை சொல்லி விட்டு அறையில் இருந்து, திருமண மண்டபம் பக்கமே போகாமல்,மணமகனான நண்பனை வாழ்த்தாமல் சென்றுவிட்டான்....அதன் பிறகு காட்டான் முரளியை நான் பார்க்கவே இல்லை....இரண்டு வருடங்களுக்கு முன் அவனை பற்றிய பேச்சு வந்த போது...ஏதோ யோகிகள் பற்றய புத்தகத்தை எல்லாம் படித்து விட்டு பாழுங்கினற்றுக்கு உள்ளே உட்கார்ந்து குண்டலினி யோகம் செய்து கொண்டு இருக்கின்றான் என்று சொன்னார்கள்...முரளி சொன்ன இரண்டு வாக்கியங்கள் என்ன???

ஈர சட்டை பொட்டுக்கொண்டு அவன் சொன்ன இரண்டு வாக்கியங்கள்...

என்னை யாரும் திட்டாதிங்க...
எனக்கு தலை சீவ ஒரு சீப்பு கொடுங்க...

===================================
ஹேங்ஓவர் படத்தின் கதை என்ன??

பில், ஹலன், டக் மற்றும் பல் டாக்டர் ஸ்டூவர்ட் நால்வரும் தாய்லாந்தில் நடக்க இருக்கும் ஸ்டுவர்ட் கல்யாணத்துக்கு போகின்றார்கள்... திருமணத்துக்கு இரண்டு நாளுக்கு முன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடுகின்றார்கள்....ஆனால் போதை தலைக்கு ஏறியதும்   என்ன நடக்குது  என்று தெரியவில்லை... ஆனால் எழுந்து பார்க்கும் போது அவர்கள் ஒரு பாடாவதி லாட்ஜில் இருக்கின்றார்கள்...இவர்களுடன் வந்த மணப்பெண்ணின் தப்பி டேட்டியை காணவில்லை...அவனை தேடிக்கண்டுபிடித்துக்கொண்டு போனால்தான் திருமணம் நடக்கும்... அதனால் அவனை தேடுகின்றார்கள்... போதையில் என்ன நடந்தது என்று தெரியாத காரணத்தால் தேடுதலில் சிக்கல்.... மணமகளின் தம்பி கிடைத்தானா? திருமணம் இனிதே நிறைவு பெற்றதா என்பதை சிரித்து சிரித்து வயிற்று வலியுடன் பாருங்கள்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் இருக்கின்றது... பெரிதாய் திரைக்கதைக்கு அலட்டிக்கொள்ளவில்லை நான் லீனியர் திரைக்கதையை தூசுதட்டி திருப்பி போட்டு இருக்கின்றார்கள்....  உலகம் முழுவதும் செமையாக கல்லா கட்டுகின்றார்கள்...


முதல் பாகத்தை  இயக்கிய Todd Phillips
தான் இநத படத்தையும்  இயக்கி இருக்கின்றார்.. தயாரிப்பு வேலையும் பார்த்து இருக்கின்றார்...

இரட்டை அர்த்த வசனங்கள் படம் முழுவதும் விரவிகிடைக்கின்றது...

இதில் ஒரு கேரக்டர் கே என்பதால் அற்த கேரக்டர் அடிக்கும் கூத்துக்கள் சொல்லிமாளவில்லை..

தாய்லாந்து அழகையும் ஏசியாகாரர்கள் மீதானஅமெரிக்கர்கள் பார்வையும் மிக அழகாக பதிவு செய்து இருக்கின்றார்கள்...

படத்தில் வெடிச்சிரிப்பை வரவைப்பது ஆலன் கேரக்டர்தான்.. மனிதன் பாடி லாங்வேஜ் அம்புட்டு ரசனை....


மறந்து போன சில நிகழ்வுகளை கொஞ்சம கொஞ்சம் காட்டி விட்டு முதல் பாகத்தை போலவே கடைசியில் போட்டோவில் அவர்கள் போதையில் செய்த வீர திர பராக்கிரமங்களை காணும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை...படக்குழுவினர் விபரம்...

Directed by     Todd Phillips
Produced by    Todd Phillips
Daniel Goldberg
Written by      Todd Phillips
Scot Armstrong
Craig Mazin
Starring           Bradley Cooper
Ed Helms
Zach Galifianakis
Music by         Christophe Beck
Cinematography         Lawrence Sher
Editing by       Debra Neil-Fisher
Mike Sale
Studio Legendary Pictures
Green Hat Films
Distributed by            Warner Bros. Pictures
Release date(s)          May 26, 2011
Running time 102 minutes[1]
Country           United States
Language        English
Budget            80 million
Gross revenue            31,610,367
 ==========================
படத்தின் டிரைலர்..
 ==================================
தியேட்டர் டிஸ்கி

பெங்களூர் ஊர்வசி தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன்...

தியேட்டருக்கு உள்ளே போகும் முன் தியேட்டடர் ஓனர் ரவி சங்கரை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு வந்தேன்... நான் போனில் அவரிடம் பேசினாலும் நினைவில் வைத்து இருந்தார்.,..

இன்னும் இரண்டு மாதத்தில் இன்னும் பெரிய மாற்றத்தை இந்த தியேட்டர் சந்திக்க இருக்கின்றது என்று சொன்னார்...4கே புரொஜக்ஷன்...

நிறைய பெண்கள் தங்கள் காதலனுடன் வந்து இருந்தார்கள்...

எனக்கு பின்னால் உட்கார்ந்து இருந்த ஒரு தெலுங்கு பையன் வரிக்கு வரி சத்தமாக சிரித்துக்கொண்டே இருந்தான்.,... ஒரு வேளை கஙச அடித்து விட்டு வந்து விட்னோ? என்று தெரியவில்லை... அவனோடு வந்த இன்னும் இரண்டு பேரும் அப்படியே செய்தார்கள்...

டூ வீலர் பார்க்கிக் வண்டியரை பார்க் பண்ணும் போதே வரைமுறையில்லாமல் பார்க் பண்ணி விடுவதால்  படம் முடிந்து வாகனத்தை எடுக்க கால் மணி நேரத்துக்கு மேல் ஆகின்றது...


==============================

பைனல்கிக்...

இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதால்,இளசுகளை இந்த படம் சுண்டி இழுக்கும் என்பதில் ஐயம் இல்லை...  இந்த படம் பார்க்க வேண்டிய படம்....(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS..

.  

==============

6 comments:

 1. ஆகா! பாக்கணுமே தல! எப்போ டோரண்டில கிடைக்குமோ? :-(

  ReplyDelete
 2. Going for it today evening. Thanks!

  ReplyDelete
 3. padathuda kathayaa wida அதுக்கு முதல் சொன்ன காட்டன் த கத supar

  ReplyDelete
 4. இந்த அனுபவங்கள் எனக்கும் இருக்கு இத பத்தி நானும் ஒரு பதிவு போடணும் உண்மையா இந்த கல்யாண ரிசப்சன் பார்டி மேட்டர் மட்டும் எல்லாருக்கும் சொல்ல முடியாத பல சந்தோசத்த கொடுக்கும்...

  ReplyDelete
 5. தமிழ்ல்லயா பார்த்திங்க!?

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner