அன்பின் குசும்பனுக்கு.....
வணக்கம் வாழிய நலம்....தோள் வலி சரியாகி இருக்கும் என்று நம்புகின்றேன். இப்போதுதான் உனது வெளிப்படையான பஸ் பார்த்தேன் படித்து விட்டு சிரித்தாலும் உடன் கடிதம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை அந்த பஸ் அதுக்கு பின் இருக்கும் சின்ன பிளாக் ஹுயூமர் என்னை ரசிக்க வைத்ததால் இந்த கடிதத்தை எழுதுகின்றேன்....
நான் வலையுலகத்துக்கு வந்த போது மிக மிக அறியபட்ட நபராக உங்களை பார்த்து பிரமித்து போய் இருக்கின்றேன்..
எனக்கு தெரிந்து அமீரகம் என்றால் ஆசிப் மீரான் அண்ணாச்சிதான் ...
ஆனால் ஒரு எட்டு அரசியல் சார்புடைய தலைவர் படங்கள்..... கட்டற்ற சுதந்திரத்தில் உங்கள் நகைச்சுவை.... என அந்த பதிவு தமிழ்மணத்தில் முன்னனியில் இருக்கும்....அப்படி நான் ரசித்த பதிவுகள் நிறைய... உங்களுக்கு அத்தனை நண்பர்கள்.....
ஒரு நாள் மணிஜி என்னை அழைத்தார்...குசும்பன் வந்து இருக்கார்... நம்ம ஆபிஸ்க்கு வா என்று....
அதன் பின் மதியம் திநகரில் ஒரு ஒட்டலில் நீங்கள், நான்,டிஆர் அசோக்..,மணிஜி, கேபிள் மற்றும் ரமேஷ் வைத்யாவுடன் சாப்பிட்டது மட்டுமே நம் முதல் சந்திப்பு என்று எண்ணுகின்றேன்.
அதன்பிறகு நான் ரொம்ப உணர்ச்சிவயப்பட்டு எழுதிய பதிவு ஒன்றை நக்கல் விட்டு இருந்த போது நான் உங்களிடம் வருத்தப்பட்டேன்...
அதன்பிறகு அந்த சம்பவங்கள் அதன் பின்னான சில ஆமிரக சம்பவங்களில் உங்கள் முடிவை நான் வேறு ஒரு நண்பர் மூலம் நான் கேள்விபட்ட போது நான் நெகிழ்ந்து போனேன்..
அதன் பிறகு இன்றுவரை என் மீதான அந்த மரியாதை துளியும் குறைந்தது இல்லை....சஞ்சய் திருமணத்தில் நீங்கள் என்னிடத்தில் பேசினீர்கள்... ரொம்ப சந்தோஷம்..
\
\இப்போதும் பஸ்ஸில் உங்கள் நக்கல் நையாண்டிகளை தினமும் ரசித்தபடிதான் இருக்கின்றேன்.. அதே போல எல்லோரிடத்திலம் என்னை போல மிக உரிமையாக வாடா போடா என்று பேசும் நட்பும் உங்களிடத்தில் எனக்கு பிடித்தமானவைதான்...
கார்த்தி கவி போல உங்களை என்னால் படம் வரையமுடியாவிட்டாலும் கடிதம் எழுத முடியம் அல்லவா?,அதுதான் இந்த கடிதம்...
இந்த கடிதம் நக்கலுக்கான கடிதம் அல்ல.. ஒரு நேசிப்பின் வெளிப்பாடு..
கடிதம் எழுதுவது எனக்கு ரொம்ப பிடித்த விஷயம்...
சென்னை வந்தால் சந்திக்கலாம்
நமக்கு யாரும்கடிதம் எழுதவில்லை என்ற வருத்தம் இனி வேண்டாம்...
உங்கள் குடும்பத்தினருக்கு என் அன்பும் கனிவும்......
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
===================
குறிப்பு...
குசும்பனுக்கு திடிர் என்று கடிதம் எழுத ஒரே காரணம்....அவர் இன்று அனுப்பிய கூகுள் பஸ்தான் அது கீழே.....
http://www.jackiesek ar.com/2011/05/blog- post_31.html
ஜாக்கியோ ட இந்த பதிவை படிச்சதும்....கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது...பணம் கொடுத்த நண்பர்களை விட....ஜாக்கியின் போட்டோவை வரைந்து அனுப்பியது எல்லாம் மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது .
ஹம்ம்ம்ம்...இதோட 5 வருசம் ஆவுது...ஒருபிக்காலி பிலாக்கியாவது லெட்டர் போட்டு இருக்கா? ஊருக்கு வருகிறேன் என்றால் எல்லாரும் மொபைலை சுவிட் ஆப் செஞ்சிடுறாங்க...
ஜாக்கியோ
ஹம்ம்ம்ம்...இதோட 5 வருசம் ஆவுது...ஒருபிக்காலி பிலாக்கியாவது லெட்டர் போட்டு இருக்கா? ஊருக்கு வருகிறேன் என்றால் எல்லாரும் மொபைலை சுவிட் ஆப் செஞ்சிடுறாங்க...
FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...

=========================
உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.
ReplyDeleteShare
ஜாக்கி.. யூ ஆர் ஸிம்ப்ளீ கிரேட். அடுத்தவங்களை சந்தோசப்படுத்திப்பார்க்கும் உங்களுக்கு என் வந்தனங்கள்
ReplyDeleteஆஹா அண்ணே மனசுல பட்டதை சொல்லியிருந்தேன். பண விசயம் கூட பெருசா படவில்லை என்று எதுனால சொல்லியிருந்தேன்னா...நம்ம அண்ணாச்சி, அய்யனார் எல்லாம் என் கல்யாணத்தின் பொழுது உதவி செஞ்சாங்க...ஆனா போட்டோ எல்லாம் ஒருத்தர் 2 மணி நேரம் வரைஞ்சி அனுப்பினார் என்பதை படிச்சதும் கொஞ்சம் பொறாமையா இருந்துச்சு...அதுனால தான் அந்த பஸ் இதுவரை எனக்கு எல்லாம் யாரும் கடிதம் எழுதியது இல்லை என்று காமெடியா சொன்னேன்...
ReplyDeleteகுசும்பா நீ சொல்லறது புரியது..அதை எப்பபடி சொல்லி இருந்தாலும் எழுதனும்னு தோணிச்சி எழுதிட்டேன்...
ReplyDeleteகுசும்பன் அவர்களை குளிர்வித்த ஜாக்கியாருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஆசிப் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஷர்பூதின்
ReplyDelete