சென்னை/ஓசூர்/பெண்களுர்…. பயணப்பார்வை 26/05/2011
நேற்று இரவு பத்து மணிக்கு வாசக நண்பர் குறும்பழகனின் வீடு கோயம்பேடு  பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில் உள்ள தெற்க்காசிய விளையாட்டு குடியுருப்பில் உள்ளதால் எனது வண்டியை அவர் வீட்டில் போட்டு விட்டு, மனைவி குழ்ந்தையை காண பெண்களூர் கிளம்பினேன்...குறும்பழகன் என்னை பேருந்து நிலையத்தில் டிராப் செய்தார்....

சரி இரவு நேரப்பயணம்தானே டாஸ்மார்க்கின் டாப்ஸ்டாரின் கட்டிங்கின் உறுதுனையோடு உற்சாகமாக  பயணிப்போம்  என்று நினைத்தேன் பிறகு நண்பர் குறும்பழகன் வீட்டுக்கு செல்வதால் அதனை தவிர்த்து விட்டேன்...குறும்பழகன் எந்திரன் படத்துக்கு டிக்கெட் கொடுத்த நண்பர்.. அன்றிலிருந்து இன்று வரை அந்த நட்பு பயணப்பட்டுக்கொண்டு இருக்கின்றது...


நான் பார்க்கும் போது குறும்பழகனின் மகள் கைகுழந்தையாக இருந்தாள்... இப்போது நடக்கின்றாள்....டாடி என்று கிளம்பும் போது சத்தம் போடுகின்றாள்.....பார்க்க மிக சந்தோஷமாக இருந்தது....

என் பயணங்கள் எப்போதுமே லாகர்தம்மாக டிக்கெட் புக் செய்து சரியான நேரத்தில் ரயில் பிடித்து , அல்லது பஸ் பிடித்து செல்லும் வழமை என்னிடத்தில் எப்போதும் இல்லை, ஒரு தேசாந்திரி போல கிடைக்கும் பேருந்தில் ஏறி பயணப்படும் ரகம் நான்....ஆனால் தேவைப்படும் போது புக் செய்து போவேன்.. மற்ற நேரங்களில் மாறி மாறி பயணம் செய்வதுதான் எனக்கு பிடித்த  ஒன்று.....

சென்னை கோயம்பேட்டில் நான்காம் நம்பர் நடைமேடையில் ஓசூர் பேருந்தில் நான் ஏறி கடைசி ஆறு பேர் சீட்டில் ஒரு பையனின் பக்கத்தில் நான் உட்கார்ந்ததும், அவனுக்கு பக்கத்தில் அமர்ந்து இருந்த நாற்ப்பதை கடந்த  பெண்மணி, உங்கள் மனைவியும் குழந்தையும் நலமா என்றார்???

எனக்கு அவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை... அவருக்கு பக்கத்தில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து இருந்த ஒரு பிகர் எப்படி இருக்கா? உங்க ஒய்ப்... என்றதும் எனக்கு எங்கோ பார்த்தோம் பட் சரியாய் நினைவில் இல்லை...நீங்க சேகர்தானே என்றதும் இன்னும் எனக்கு தூக்கிவாரிபோட்டது... நம்ம பிளாக் படிக்ககறவங்களோ? என்று ஒரு கணம் நினைத்து, பின் நினைவுக்கு வந்து விட்டது...

எனது மனைவியோடு அலுவலக வேலையாய் அயர்லாந்து சென்ற பெண்...இரண்டு மூன்று முறை சந்தித்து இருக்கின்றேன்..அப்புறம் வழக்கமாய் நல விசாரிப்புகள் முடிந்து பேருந்து கிளம்பியது....

நல்ல வேக்காடு எனது சட்டை வியர்வையில் குளித்தது... நல்லவேளை டாஸ்மார்க் டாப்ஸ்டார் துணையை நாடவில்லை.. நாடி இருந்தால் ஒன்னும் பிரச்சனை இல்லை... கொஞ்சம் சரக்கு கப்பு என்னிடத்தில் இருந்து இருக்கும்...நண்பியின் அம்மாவிடத்தில் இருந்து கேள்விகள் குறைந்து இருக்கும் அவ்வளவுதான்...

கடைசி ஆறு பேர் சீட்டில் ஐவர் மட்டுமே உட்கார்ந்து இருந்த காரணத்தால் ஒரு சீட்டுதான் இருக்கு என்று, பேருந்துக்கு கை காட்டும் அத்தனை பேருக்கும் கண்டக்டர் சொல்லிகொண்டு இருந்தார்... ஒருவர் எறினார்.. எனக்கு பக்கத்து சீட்டை  பார்த்து விட்டு, வரும் வழி எல்லாம் பெரிய பெரிய லக்கேஜ் இருந்த காரணத்தால் அவர் என் பக்கத்து சீட்டில் அமராமல் பேருந்தின் பின்பக்க படிகளில் அவர் உட்கார எத்தனிக்க, நான் அவரிடம் பூந்தமல்லி தாண்டியதும் படிகளில் உட்கார்நது கொள்ளுங்கள் இல்லையென்றால் திரும்பவும் ஒரு சீட்டு இருக்கு என்று, நடத்துனர் ஏலம் போடுவார்.. என்று சொன்னேன்.. அவரும் அதில் உள்ள நியாத்தை புரிந்து என் அருகில் உட்கார்ந்தார்....

அவரும் டாஸ்மார்க்கின் டாப்ஸ்டார் உதவியோடு பேருந்து ஏறி இருப்பதை  வாசம் உணர்த்தியது... அவர் கிருஷ்ணகிரிக்கு முன் ஏதோ ஒரு ஊரின் பெய்ர் சொல்லி டிக்கெட் கேட்க, நடத்துனர் கிருஷ்ணகிரி டிக்கெட் கொடுத்து மீதப்பணத்தையும் தந்து விட்டு முன்பககம் போய் விட்டார்...


ஒரு அரைமணிநேரம் போய் இருக்கும்.. என் மனைவியின் நண்பி குழந்தைக்கு என்ன பெயர் வைத்து இருக்கின்றீர்கள் என்றாள்...?? நான் யாழினி என்றேன்...கலைந்த தலையை அவள் கொண்டையிட்டுக்கொண்டே பெயரை யார் செலக்ட் செய்தது என்றாள்??, நானும் என் மனைவியும் என்றேன்..அதுவரை அரைமணிநேரம் அமைதி காத்த என் பக்கத்தில் அமர்ந்து இருந்த டாப்ஸ்டார்.. அவரது குரலை அதிகரித்து என் நண்பியை பார்த்தவாறு ச்சே என்னா வியர்வை என்றார்...

அதன் பிறகு பின்னால் ஏறியவர்களிடம் நடத்துனர் டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தார்.. டாப்ஸ்டார்.. யோசனையில் ஆழ்ந்தார்...யோசித்தார்...திரும்ப  பர்சில் இருக்கும் டிக்கெட்டை எடுத்தார்.. கண்டக்டரிடம் நான் எங்க ஊருக்கு டிக்கெட் கேட்டா? நீங்க எப்படி? கிருஷ்ணகிரிக்கு டிக்கெட் கொடுக்கலாம் என்று சத்தமாக வாதிட்டார்...அவ்வப்போது என் நண்பியை பார்த்துக்கொண்டார்...

நடத்துனர் சார். உங்க கிட்ட பஸ்ல ஏறும்போதே கடைசியில ஒரு சீட் இருக்கு... உங்க ஊருக்கு ஸ்டேஜ் இல்லை அதனால கிருஷ்ணகிரி டிக்கெட்தான் கொடுப்பேன்..என்று சொல்லிதான் ஏற்றினேன்... அதுவும் இல்லாம இந்த பஸ் சம்மர் ஸ்பெஷல் உங்க ஊர் மட்டும் இல்லை.... வழி ஸ்டேஜ் எல்லாம் எடுத்துட்டாங்க என்று நடத்துனர் தெளிவாக சொன்னார்...

திரும்பவும் டாப்ஸ்டார் யோசனையில் ஆழ்ந்தார்
அவரது செல்போனை எடுத்து சில எண்களை அழுத்தினார்...

ஹலோ.. நான்......... பேசறேன்....சென்னை டு ஓசூர் பஸ்ல இருக்கேன்.. பெரிய அநியாயம் நடக்குது,அவரின் ஊர் பேரை சொல்லி.......... டிக்கெட் கேட்டா கண்டக்டர் கிருஷ்ணகிரிக்கு டிக்கெட் கொடுக்கின்றார் என்று சத்தமாக போனில் சொன்னார்...கண்டக்டர் எதையும் சட்டை செய்யாமல் யாரோ கொடுத்த 500ரூபாயை விளக்கு வெளிச்சத்தில் சரி பார்த்து, மீத சில்லரையை கொடுத்துக்கொண்டு இருந்தார்.. நான் கூட ஏதோ போக்குவரத்து அதிகாரியிடம்தான் பேசுகின்றார்.... பெரிய ஆள்தான் என்று நினைத்துக்கொண்டேன்...


ஆனாலும் இந்த நேரத்துல அதுவும் நைட்டு 12 மணிக்கு மக்கள் பிரச்சனையை காது கொடுத்து கேட்கும் அதிகாரி யாரா இருப்பாங்க என்று என்னுள் ஆர்வம் கூடியது...

டாப்ஸ்டார் தொடர்ந்து கண்டக்டர் டிக்கெட்டில் அடித்த இரவு கொள்ளையை போனில் விரிவாய் விவரித்தார்...ஒரு நிமிஷம் என்று கண்டக்டரிடம் கொடுக்க...

கண்டக்டர் ரொம்ப ஸ்டைலாக அவரிடத்தில் இருந்து போன் வாங்கி ஹலோ என்றார்....
உடனே அதே ஸ்டைலுக்கு சற்றும் குறைவு இல்லாமல் என் நண்பி பக்கம் ஸ்டைலாக பார்வையை திருப்பினார்...

கண்டக்டர் போனில் தொடர்ந்தார்....

சார் நான் சொல்லிதான் அவரை வண்டியில ஏத்தினேன்.. அதுவும் இல்லாம இது  ஸம்மர் ஸ்பெஷல் வண்டி, என்ன வேனா எழுதிக்கிங்க.. டிப்போவுல சொன்னதைதான் நாங்க பாலோ பண்ணறோம்  என்று நடத்துனர் போல்டாக சொன்னார்........

நீங்க தினமுரசு நிருபராய் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.. உங்க பத்திரிக்கையே  எங்க பஸ்லதான் வருது என்று சொல்லி போனை டாப்ஸ்டாரிடம் கொடுத்தார்...

போனை வாங்கிய டாப்ஸ்டார்....

உனக்கு பிரச்சனை பற்றி தெரியனும் என்பதால் போன்செய்தேன் என்று சொல்லிவிட்டு கடைசியாக  ஒரு வார்த்தை சொன்னார்... நான் இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா,? என்று கேட்டார்.. எதிராளி மனதில் என்ன நினைத்து இருப்பார் என்பதை நான் உணர்ந்துக்கொண்டேன்..

இருங்காட்டு கோட்டை அருகே ஆக்சிடென்ட் என்பதால் பேருந்து ஊர்ந்து சென்று இளைப்பாறி பிறகு கிளம்பி என்று அந்த இடத்தை கடக்க மட்டுமே இரண்டு மணிநேரத்துக்கு மேல் ஆனாது...

லைட் ஆப் செய்ததும் டாப்ஸ்டார் படிக்கட்டுக்கு போய் உட்கார்நது கொண்டார்.... நல்ல தூக்கம் கிருஷ்ணகிரி தாண்டி எழுந்து பார்த்தேன்... டாஸ்டார் பேருந்தில் இருந்து இறங்கி வீடு நோக்கி போய்கொண்டு இருப்பார் என்பதை உணர்ந்துகொண்டேன்.... கிருஷ்ணகிரி அருகே மீண்டும் டிராபிக் ஜாம்...ஆனாலும் இரண்டரை மணிநேர டிராபிக் ஜாம் ஆக இருந்தாலும்.. டிரைவர்  விரட்டி விரட்டி ஓட்டினார்... 

காலையில் கிருஷ்ணகிரிதாண்டி சூர்யா ஓட்டலில் வண்டி நிற்க எனக்கு முன் சீட்டில் தூங்கி எழுந்த இரண்டு பேர்.. டிரைவர் இதுக்கு முன்னாடி கட்டவண்டியை ஓட்டி இருப்பானோ? என்று டிராபிக் ஜாம்  உண்மை தெரியாமல் கமென்ட் அடித்தார்கள்.. 

பேருந்து ஓசூர் வந்து நின்றது எனது மனைவி நண்பியின் குடும்பத்தினரிடம் விடைபெற்றேன்.... அவர்கள் மனைவி குழந்தையிடம் தான் கேட்டதாக சொன்ன நல விசாரிப்பை   என் பாக்கெட்டில் பத்திரபடுத்தினேன்.. 

பெங்களூர் தமிழ் எடிஷன் வாங்கினால் புரியாத பெயரை வைத்துக்கொண்டு இருக்கும் மந்திரிகள் திறப்பு விழா, மற்றும் அரசு விழா நியூஸ்கள் பார்க்கவேண்டும் என்பதால் ஓசூரில் தமிழ் நாட்டு எடிஷன்  பேப்பர் வாங்க போனேன்..... போனால் எழுத்தாளர்  பாமரன் தனது நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்தார்... இரண்டு நாளைக்கு முன்புதான் யாருக்கோ போட வேண்டிய நம்பரை என் செல்லுக்கு போட்டு விட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்... திடிர் என விடியலில் ஓசூரில் பாமரன்.. பார்த்ததும் ஆரத்தழுவிக்கொண்டார்... 

அவருடைய நண்பர்கள் செகுவாரோ மற்றும் அன்பழகனிடம் என்னை கற்றதுதமிரழ்ராமின் நண்பர் என்று அறிமுகபடுத்தினார்.. காரணம் எனக்கு பாமரனை ராம் வீட்டில்தான் எனக்கு அறிமுகம்... ஆனால் ஈரோடு பதிவர் சந்திப்பில் தான் அவரோடு நான் ரொம்பவும்  நெருக்கமானேன்.. தேநீர் குடித்து விடைபெற்றோம்... 

அங்கிருந்து பெண்களூருக்கு ஜிலேபி எழுத்துக்களுடன் இருந்த கர்நாடக டிராணன்ஸ்போர்ட்டை புறம்தள்ளி நமது தமிழ்நாட்டு வண்டியான சேலம் பெங்க்ளூர் வண்டியில் ஏறினேன்...நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும் என்ற கலைஞரின் பொன்மொழிகள் மே 13 க்கு மறுநாள் கல்த்தா கொடுத்து இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்....
வேண்டுமானால் ஜெ சொன்ன பொன்மொழியை பேருந்தில் எழுதலாம்... எனக்கு தெரிந்து அவர் சொன்ன பொன்மொழி....

அண்ணா நாமம் வாழ்க
புரட்சிதலைவர் எம்ஜியார் நாமம் வாழ்க.. 

என்ற நாமகரணத்தை  எழுதி வைக்கலாம்....
தமிழ்நாட்டு பார்டரை கிராஸ்  செய்ததும் என்னை யார் வரவேற்றார்களோ இல்லையோ ஏர்டெல் ரோமிங் கர்நாடகாவில் என்னை இனிதாய் வரவேற்றது......கூடவே ரோமிங் டாரீப் டிடெய்ல் சொல்ல தவறவில்லை 

மடிவாலாவில் இறங்கினேன் நந்தினி என்பது நினைவுக்கு வராமல் இரண்டு ஆவின் அரைலிட்டர் பாக்கெட் என்று சொன்னேன்.. நந்தினி வந்த போதுதான் நான் கர்நாடகத்தில் இருப்பதை மறுமுறை உணர்ந்தேன்.. 

வீட்டுக்கு வந்து முகம் கழுவலாம் என்று போகும் போது எனது கைபேசி ஒலித்தது...சென்னை நம்பர் இல்லாமல் 989 என்று ஆரம்பித்தது.. சரி ஊரில் இருந்து யாரோ  போன் செய்கின்றார்கள் என்று ஆர்வமாய் எடுத்தேன்...பின்வரும் பாடலை ரிங்டோனாக மாற்ற எண் ஒன்றை அழுத்தவும் என்று சொல்லும்  முன் போனை கட் செய்தேன்..ஒரு ருபாய் எடுத்துக்கொண்டோம் என்று மேசேஜ் சொல்லியது... சென்னையில் இருக்கும் போது இது போல எந்த காலும் வந்தது இல்லை...இனிதாய் வரவேற்று காலையிலேயே ஒரு ரூபாய் பிடிங்கி கொண்டது... ஏர்டெல்

ஓத்தா இந்த பொழப்புக்கு...... ஏன்டா காலையிலே ஊருக்கு வந்ததும் வராததுமாக, என்டா என்னை திட்ட வைக்கறிங்க..???


 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS... 
 


===========================

8 comments:

 1. ஜெ சொன்ன பொன்மொழி

  அண்ணா நாமம் வாழ்க
  புரட்சிதலைவர் எம்ஜியார் நாமம் வாழ்க..

  this is hilarious..:)

  ReplyDelete
 2. hm oru maasathula ethana thadawa ipadi travl panuwinga?

  ReplyDelete
 3. நானே பெங்களூர் போன மாதிரி இருக்கு ஜாக்கி

  ReplyDelete
 4. அருமை சகோ கூட வந்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்

  ReplyDelete
 5. ஓத்தா போன்ற வார்த்தைகளை தவிர்த்தால், உங்கள் பதிவுகளை என் அம்மா, அப்பாவிடம் கூட காட்ட முடியும்.

  நன்றி.

  ReplyDelete
 6. ஒரு நீண்ட சிறுகதை போன்ற சுவாரஸ்யமான அனுபவ கட்டுரை ஜாக்கி. well written

  ReplyDelete
 7. என்ன டா வண்டி சீரான வேகத்தில் போயிட்டு இருக்கே எப்போ டாப் கியர்ல போகும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன் .. கடைசி லைன் ஏரோப்ளேனை ஓவர் டேக் அடிச்சிடுச்சு.. ஹா ஹா ஹா செம கலக்கல்.

  ReplyDelete
 8. அது எப்படி சார் ஒரே ஒரு இரவு பயணத்தில் இவ்வளவு அனுபவங்கள் கிடைக்கின்றன??
  நான் டெல்லி லாம் போய் இருக்கேன் சார்..
  ஒரு எழவும் இல்ல..
  சுத்த வேஸ்ட்..
  நீங்க அடுத்த தடவ போகும்போது சொல்லுங்க..
  நானும் வரேன்..
  ஆனா என்னோட அதிர்ஷ்டம் உங்களுக்கு எதுவும் கிடைக்காது..
  மதுரவாயில் ல தூங்கி சாந்தி நகர்ல தான் எழுந்திருப்பீங்க .

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner