Nenu Naa Rakshasi-telugu திரைவிமர்சனம்.சில படங்கள் டைரக்டருக்காகவே  பார்க்கலாம்.... எனக்கு பூரிஜெகந்நாத் படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு போய் உட்காருவேன்...காரணம் அவரின் மேக்கிங்... மற்றும் ஸ்டைல்.. மிகச்சிறந்த உதாரணம்  தெலுங்கு போக்கிரியை சொல்லுவேன்...தெலுங்கில் எனக்கு பிடித்த இரண்டு சினிமா பிரம்மாக்கள் இருக்கின்றார்கள்... ஒருவர் பூரி மற்றவர்..திருவிக்ரம்.... ============
Nenu Naa Rakshasi-telugu படத்தின் கதை என்ன???லீடர் படத்தில் நடித்த ரானாவை  எனக்கு ரொம்பவும் பிடிக்கும் இதில் புரோப்பஷனல்கில்லர் வேடம்... அபிமன்யூ(ராணா) மொபைல் போனுக்கு எந்த போட்டோ எம்எம்எஸ்இல் வந்தாலும் அவனை கொலை செய்வான்  ஏன்? எதுக்கு?  எந்த கேள்வியும் கேட்கவிரும்பமாட்டான்..


மீனாக்ஷி(இலியான) உங்களுக்கு பெரிய பிரச்சனை அதில் இருந்து மீள முடியவில்லை.. சரி தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்து மீனாக்ஷி வைத்து நடத்தும் வெப்சைட்டில் தகவல் சொல்லிவிட்டால் போதும்.. ஒரு வீடியோ கேமரா எடுத்துக்கொண்டு வந்து  நீங்கள் சாவதை ஏடூ இசட் வீடியோ எடுத்து யூ டியூப்பில் அப்பலோட் செய்து விடுவார்.... சரிய்யா? ரெண்டு பேரும் ஏன் இந்த வேலையை செய்கின்றார்கள் ?என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்....
==============


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


இலியானா தற்கொலை செய்து கொள்வதில் இருந்து படம் தொடங்குகின்றது... பட்  அந்த டெம்ட்டை படம்முழுவதும் வைத்து திரைக்கதையில் பட்டையை கிளப்பி இருக்கவேண்டாமா??


படத்தின் முதல் பாதியில் பூரியின் ஸ்டைல் மேக்கிங் ரசிக்க வைக்கின்றன... இரண்டாம் பாதியில் காதுல பூ.....


ஏதோ ஜாலியாக படம் எடுத்து சொதப்பியது போலவே இருக்கின்து....


முகமைதுகானுக்கும் டைரக்டருக்கும் அப்படி என்ன தொடர்பு என்று தெரியவில்லை... அப்படி என்ன ரசனை என்றும் தெரியவில்லை....


படத்தை சாக்காக வைத்து வெனிஸ் நகரத்தை சுற்றி பார்த்து இருக்கின்றார்கள்...


ராணாவுக்கு பல காட்சிகளில் அவர்  சூட் ஆகவில்லை.... அவரின் லீடர் ஒரு மாஸ்டர் பீஸ்... முக்கியமாக அழும் காட்சிகளில் பயங்கர சொதப்பல்...


இந்த துப்பாக்கி என்ற விஷயத்தை இன்னும் எத்தனை நாளைக்குதான் தீபாவளி துப்பாக்கி போலவே லாஜிக் இல்லாமல் இந்திய சினிமாக்காளில் உபயோகிப்பார்கள்  என்று தெரியவில்லை.... போங்கடா.. வெறுப்பா இருக்கு....
இலியானா அவரும் ஏமாற்றிவிட்டார்... அவரின் சைஸ் பற்றி வில்லன் அடிக்கும் கமென்ட்டால் நமக்கு அந்த உலக ரகசியம் தெரிகின்றது...
வழக்கமாய் பூரி படங்களில் காமெடி, பாட்டு, ரெண்டும் அசத்தல் ரகமாக இருக்கும்... இந்த படம் திருஷ்ட்டி...
இந்த படம் என்ன என்ன உலகபடங்களில் இருந்து சீன் உருவி இருக்கின்றார்கள் என்று என்னால் சொல்ல முடியும்... ஆனால் அது  மட்டுமே திரைக்கதைக்கு திருப்பங்கள் தரும் என்று நினைத்தது முட்டாள்தனம்....
==========


படத்தின் டிரைலர்....======
படக்குழுவினர் விபரம்.


Directed by     Puri Jagannadh
Produced by     Nallamalupu Bujji
Written by     Puri Jagannadh
Starring     Rana Daggubati
Ileana D'Cruz
Abhimanyu Singh
Music by     Rahman
Vishwa
Anoop Rubens
Bappi Lahiri.
Release date(s)     April 29, 2011 (2011-04-29)
Country     India
Language     Telugu===========
பைனல்கிக்...

இந்த படம் டைம்பாஸ் படம்..... அவ்வளவுதான்... 


=========


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS... 

 


======

1 comment:

  1. எனக்கு படம் பார்க்கும் சந்தர்ப்பமே இல்ல...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner