சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) புதன் 18/05/2011

ஆல்பம்...
இரண்டு வருடம் ஆகிவிட்டது...முள்ளிவாய்கால் துயரசம்பவம் நடந்து...நிராயுதபாணியானமக்களையும், வெள்ளைக்கொடிகாட்டி சரணடைய வந்தவர்களையும் சுட்டுக்கொன்றார்கள்.. மரித்து போன ஆத்மாக்களுக்கு அஞ்சலிகள். 
=========================================
மணல்கொள்ளையை மட்டும் தமிழகத்தில் தடுத்து நிறுத்தினாலே நாற்பது ஆயிரம் கோடிரூபாய் லாபம் கிடைக்குமாம்... கணக்கு போட்டு பார்த்தால் தலை சுற்றுகின்றது.....
===================================
சென்னையில் வெயில் வாட்டி வதைக்கின்றது..  இரு சக்கர வாகனத்தை எடுத்து செல்லும் அன்பர்கள் சிரமம் பார்க்காமல் தயவு செய்து நிழலான இடத்தில் பார்க் செய்து விட்டு செல்லவும்.. அப்படி பார்க் செய்யாமல்   வெயிலில் நிறுத்தி விட்டு, அதாவது ஒரு ஐந்து நிமிடம் கழித்து வந்து வண்டியை எடுத்து அதில் ஸ்டைலாக உட்கார்ந்து கிக்கரை உதைத்து கிளம்பியதும் பேன்ட், உள்ளாடை எல்லாத்தையும் தாண்டி ஆசனவாயில் பழுக்க கம்பியை காய்ச்சி இழுத்தது போல் சூடு சும்மா ஜிவ் என்று ஏறுகின்றது.... பீகேர் புல் நான் என்னைய சொன்னேன்.....
==========================================
தலைநகரின் ஹாட் டாபிக் இரண்டு ஒன்று ஜெ அண்ணா சமாதிக்கு மாலை போட வந்தபோது சென்னை டிராபிக்கில் திணறியது.. இதனை தினமலர் கூட மயிலிறகால் வருடியது போல் மென்மையாக சொன்னது.... இரண்டு, தலைமைசெயலக இடம்மாற்றம்... இதற்கு எதிர்கட்சிகளிடம் எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றது...ஜெ இன்னும் மாறவில்லை  என்று எதிர்கட்சிகள் சொல்கின்றன. அவர் அறிவித்த எதையும் நான் விமர்சிக்க போவதில்லை.. காரணம் ஒரு வாரம் கூட பதவிஏற்று முடியவில்லை... ஆனால் தலைமைசெயலக மாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை...
==================================
பெட்ரோல் விலை ஒன்பது மாதத்தில் ஒன்பது முறை உயர்ந்து இருக்கின்றது... பெட்ரோல் விலை உயர்வுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரனாப் முகர்ஜி தெரிவித்தார்... அது பொது மக்களுக்கும் எண்ணை நிறுவணங்களுக்கு உள்ளபாடு..... விலைஉயர்வுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி இருக்கின்றார்... எலக்ஷன் வரட்டும் உங்களுக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் உண்டா ?என்று மக்கள் சொல்லுவார்கள்..
==========================================
எடியூரப்பாவுக்கும் பதவிக்கும் ஏழாம் பொருத்தம் போல பாவம் அவரை போட்டு விரட்டு விரட்டு என்று விரட்டிக்கிகொண்டு இருக்கின்றார்கள்... ஆனால் அவரோ அதை பற்றி எல்லாம் கவலைபடாமல் சளிக்காமல் போராடி வருகின்றார்...பதவி என்றால் சும்மாவா????

=============================================
மிக்சர்.
எங்கள் ஊரில் தேர்தல் ரிசல்ட்டுக்கு அடுத்த நாள் பரவிய வதந்தியில் ரஜினி செத்து விட்டார்.. அதிமுகவுக்கு ஓட்டு போட்டதை கலைஞர் டிவியில் பார்த்து விட்ட காரணத்தால் ரஜினியை கோபலாபுரத்துக்கு அழைத்து சென்று அடித்து உதைத்து  சாகடித்து விட்டனர்...தேர்தல் ரிசல்ட் முடிந்ததும் இறந்த செய்தியை அறிவிப்பார்கள் என்று பெரிய வதந்தி காட்டு தீ  போல பரவி இருக்கின்றது...சுனாமி வந்த போது கூட வீடுகள் எல்லாம் அடித்து மிதந்து வருகின்றது என்று சொல்லி வதந்தி காட்டு தீ போல பரவியதால் எல்லாரும் உயிர் பயத்தில் கடலூரில் இருந்து பாலூர் வரை அதாவது 15 கிலோமீட்டர் நடந்தே பிள்ளை குட்டிகளை அழைத்துக்கொண்டு ஒடினார்கள்... பலர் பக்கத்தில் இருக்கும் திருவகீந்தபுரம் மலையில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்..

=====================================================
இந்த தேர்தலில் ஜெயித்த உடன் வாக்களார்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும் முதல் அரசியல்வாதியாக ஸ்டாலின் இருக்கின்றார்.. அவர் சார்ந்த கட்சி படு தோல்வியை சந்தித்தாலும் வருத்தத்தை தூக்கி தூர வீசிவிட்டு இரண்டு நாட்களாக கொளத்தூர் தொகுதியில் நன்றி தெரிவித்துக்கொண்டு இருக்கின்றார்.. 

=============================
ஒரு வாரத்துக்கு முன் என் மனைவி பேஸ்புக்கை தூசி தட்டி அவரது முகநூல் பக்கத்தை மேம்படுத்தினார்.. அதில் ஸ்டேட்டஸ்சில் மேரிட் டூ ஜாக்கிசேகர் என்று கொடுத்தார்... அது எனது பக்கத்தில் ஸ்டேட்டஸ் மாற்றி இருப்பதால், இரண்டு வருடத்துக்கு பிறகுசிலர் வாழ்த்து தெரிவித்தனர்.. பலர் லைக் பண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்..
================================
இந்தவாரசலனபடம்...

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு டிரைலர் பார்த்துவிட்டு படம் பார்க்க வேண்டும் என்று ஆவலை இந்த படத்தன் டிரைலர் ஏற்படுத்தி  இருக்கின்றது... பார்ப்போம் படம் எப்படி இருக்கிபோகின்றது என்று.... 


==================================
இந்தவாரக்கடிதம்

இதனை தயவுசெய்து நாளைய சாண்டுவெஜ் மற்றும் நான்வெஜ்ஜில் பதிவு செய்யவும்... இவர்கள் தங்களை நடுநிலை நாளிதழ் என்று சொல்லிக்கொண்டு மக்களிடம் எப்படி சாதீய உணர்வுகளை தூண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பதிவுலகம் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்...

நீ ஏண்டா உன்னோட பதிவுல இதை போடலை என்று நீங்கள் கேக்கலாம்... என்னோட பதிவுகளை விட உங்கள் பதிவுகள் நிறைய பேருக்கு போய் சேரும் என்பதால் தான் உங்கள் மூலமாக இதனை பதிய முயற்சிக்கிறேன்...

இந்த செய்தி இங்கிருந்து தான் எடுத்தது... http://www.dinamalar.com/News_Detail.asp?Id=241980. இவர்கள் நாளை இந்த செய்தியை நீக்கினாலும் நீக்கி விடுவார்கள் என்பதால் தான் படமாக எடுத்து அனுப்பி வைத்திருக்கிறேன்...

நான் அ.தி.மு.க. விசுவாசி என்றும் நீங்கள் நினைத்து இதனை வெளியிடாமல் இருந்து விடாதீர்கள்... இங்கு மாற்றங்கள் நடக்க வேண்டும் என்று விரும்புவதால் எனக்கு கட்சி பாகுபாடு எல்லாம் கிடையாது...
-- 
Regards,

Senthil Kumar M

=============================
அன்பின் செந்தில் அந்த பேப்பரை பற்றி எல்லோருக்கும் தெரியும்....
=================
பிலாசபி பாண்டி..

ஒரே வீட்டில் ஐந்து மனைவிகளை வைத்து சமாளிக்க முடியாத காரணத்தினால், பின்லேடனே அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்து தன்னை தாக்கி அழிக்க சொல்லி இருக்கலாமோ??? டவுட்////

=================================
நான்வெஜ் 18+

கணவன் தொட்டால் அழகு போய்விடும் என்று நினைத்த மனைவி கணவனை தொடவிடாமல் பட்டினி போட்டுக்கொண்டு இருந்தாள்.. பொறுத்து  பார்த்த கணவன் மனைவி வளர்ந்த நாயை தர தரவென்று இழுத்துக்கொண்டு அவள் எதிரில் நிறுத்தினான்... உனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் இந்த பன்னியிடம்தான் நான் உடலுறவு வச்சிக்குவேன் என்று கணவன் கோபமாக சொல்ல ..... அதுக்கு மனைவி, ஏங்க அது பன்னி  இல்லை... நம்ம நாய். எனக்கு தெரியும் நான் அதுகிட்டதான் பேசிகிட்டு இருக்கேன்....

=====================================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS... 









========================

1 comment:

  1. சின்ன திருத்தம் அண்ணா. முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்து இரு வருடம் ஆகிறது..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner