பீத்துணி..(.அன்னையர் தியாகம்)


உங்கள் மலத்தை நீங்கள் ரசித்து இருக்கின்றீர்களா?

யோவ் என்னய்யா சொல்லற... கருமம் கருமம்... அதை எப்படி ரசிக்க முடியும்--??

சார்... உங்க உடம்பில்தான் இத்தனை நேரம் இருந்துச்சி அது கீழ வந்ததும் அதை என் வெறுக்க வேண்டும்...?

யோவ் என் மலம்தான் ஆனால் அதனை வைத்து நான் எப்படி கொண்டாட முடியும்....கப்பு நாத்தம் என்னாலேயே தாங்க முடியலை....

என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க...?


பின்ன என்னய்யா? ஆய் இருந்துட்டு சம் டைம்ஸ்கையை  மொந்து  பார்த்தா அந்த ஸ்மெல் இருக்கும் அதனால சோப்பு போட்டு கை கழுவிட்டு வருவேன்... அவ்வளவு ஏன்?
வெள்ளைக்காரன் சாப்பிடறதை பார்த்து இருக்கியா?? நீ...

பார்த்து இருக்கேன் சார்... ரெண்டு கையலையும் சாப்பிடுவான்.. பார்கரா இருந்ததாலும், சாண்ட்விச்சா இருந்தாலும், இரண்டு கையலாதான் சாப்பிடுவான்..நான் பார்த்து இருக்கேன்....

யோவ் ஏதோ வெளிநாட்டுக்கு போயி பார்த்துட்டு வந்தது போல சொல்லற...??,

இல்லைசார்... இங்க மகாபலிபுரம்,ஸ்டார் ஓட்டல், மற்றும் ஹாலிவுட் படங்களில் எல்லாம் அவர்கள் இரண்டு கையால் சாப்பிடுவதை பார்த்து இருக்கேன்..

காரணம் என்ன தெரியுமா ஓய்? அவன் பிச்சாங்கைன்னு ஒன்னு அவன் கல்சர்ல இல்லை... அவன் ரெண்டுகையையும் சமமாதான் யூஸ் செய்வான் ... அவனை பொறுத்தவரை இரண்டு கையும் ஒன்னுதான்... அனா நாம பிச்சாங்கையால எந்த பொருளையும் அதிகமா யூஸ் செய்யமாட்டோம்... காரணம் நம்ம கப்பு மேட்டர் அப்படி... அவன் ரெண்டு ரொட்டி சாப்பிட்டு தண்ணி குடிச்சா போதும் காலைல ஆய்.. வந்தா  பேப்பரால தொடச்சா போதும்..ஆனா நாம உள்ள தள்ளற மேட்டருக்கும் நம்ம உணவு பழக்கத்துக்கும் ஒரு பக்கெட் தண்ணி இருந்தாதான் நிம்மதியா இருக்கும்.......அதனாலதான் நம்ம பீயை நாம எப்படி ரசிக்க முடியம்னு கேக்கறேன்.........?


கரெக்ட் சார் நம்ம பீயை நாம ரசிக்க முடியாதுதான்...உங்களுக்கு எத்தனை பசங்கன்னு தெரிஞ்சிக்கலாமா??


யோவ் எதுக்கு இந்த கேள்வி...?? சரி இருந்தாலும் சொல்றேன்.. ஆண் குழந்தை ஒன்னு, பெண் குழந்தை ஒன்னு...

குட்சார்...உங்க குழந்தைங்க மலத்தை ரசிக்க வேண்டாம் அட்லீஸ்ட் ஆய் கழுவியாவது விட்டு இருக்கிங்களா??

சார் அது எல்லாம் என் ஒய்ப் வேலைசார்... நான் எதுக்கு செய்யனும்??


 சார் ஆய் கழுவ வேணாம் ...அட்லிஸ்ட் ஹெல்ப்பாவது பண்ணி இருக்கிங்களா??


 யோவ் என்ன பேச்சு பேசறே??  நான் என் குழந்தைக்கும் என் மனைவிக்கும், ஒரு நாள் ஹெல்ப் பண்ணலாம்னுதான் நினைச்சேன்... இரண்டு வாய் சாப்பாடு, வாயில வச்சி இருப்பேன்... என் பையன் ஆய் போயிட்டான்....ஜட்டியை அவுத்து பார்த்தா அந்த மஞ்சளும் கொழ கொழப்பும் உவ்வே...... கண் முடிகிட்டு கிளின் பண்ணிட்டு, டெட்டால் போட்டு கை அலம்பிட்டு வந்து சாப்பாட்டுல கை வைக்கிறேன்.... என்னால அதுக்கு மேல ஒரு வாய் சாப்பட்டை என்னால வாய்ல வைக்க முடியலை.....



அன்பின் நண்பர்களே... இப்படித்தான் எல்லா கணவர்களின் நிலையும்.. ஒரு பத்து சதவிகித ஆண்கள் வேண்டுமானால் தன் குழந்தை ஆய் போனதை அருவருப்பு இல்லாமல் உதவி செய்திட முடியும்.... ஆனால்  90 சதவிகித ஆண்கள் அப்படி இல்லை என்பதே நிதர்சன உண்மை.... ஆனால்  எல்லா அம்மாக்களும் அப்படி இல்லை... அவர்கள் ஒரு போதும் தன் ஈன்று எடுத்த பிள்ளையின் மலத்தை அருவருப்பாக பார்த்ததே இல்லை...


குழந்தை வெறுமனே பால் மட்டும் குடித்தால் மலத்தில் ஸ்மெல் வராது.. ஆனால் திட உணவுவை குழந்தைக்கு கொடுப்பதில் இருந்து மலத்தில் ஸ்மெல் வர ஆரம்பிக்கும்...தன் கழிவை தானே அப்புறபடுத்திக்கொள்ள குழந்தை தயார் ஆகும் வரை அவர்களின் மூத்திர துணியில் இருந்து பீத்துணிவரை கசக்கி போட்டு உழைப்பு எடுக்க  வேண்டும்...

 நானும் பார்த்து இருக்கின்றேன்...மிக முக்கியமாக அம்மாக்கள் ஒரு வாய் எடுத்து வாயில் உணவை வைக்கும் போதுதான்.... நன்றாக தூங்கிய குழந்தை எழுந்து வீர் என்று அழும்.....சில குழந்தை மூத்திரம் இருந்து வைக்கும்.. சில ஆய் இருந்து அதனை உடல் எங்கும் ஈலுப்பிக்கொண்டு நிற்கும்....ஆனால் அம்மாக்கள் அதனை பொறுத்துக்கொண்டு சுத்தம் செய்து விட்டு திரும்பவும் சாப்பிடுவார்கள்.. எவ்வவளவு பெரிய விஷயம்...

இன்று தெருவில் நடுக்கும் போது அத்தனை ஆண் பெண்ணுக்கும் அம்மாக்கள்தான் மூத்திர துணியும், பீத்துணியும் கசக்கி போட்டு கப்பான மலத்தையும் சுத்தபடுத்தி நம்மை வளர்த்தவர்கள் நம் அம்மாக்களே.... அவர்கள் தெய்வத்தின் தெய்வங்கள்... அதே போல பலருக்கு உறுதுனையாக இருந்தவர்கள்... அவர்களின் அம்மாக்கள்தான்...

என் அம்மா யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஒரு மனிஷியாய் 5 பிள்ளைகளுக்கு மூத்திர துணி, பீத்துணி கசக்கி  எங்களை வளர்த்தவள்... அம்மா நீ கிரேட்தான்... உலகில் உள்ள அம்மாக்கள் எல்லோருமே கிரேட்தான்..

இவ்வளவு ஏன்........... எனது இருபது வயதில் வயிற்றுபோக்கினால் கடலூர் அரசு பொது மருத்தவமனையில் கிழிந்த நாராய் பிய்ந்த பாயில் படுத்து கிடந்த போது, எழுந்து போய் பாத்ரூம் போக கூட சக்தியில்லாமல் படுக்கையிலேயே எனக்கு ஆய் தண்ணியாக போய்விட அதை வழித்து போட்டவள் என் அம்மாதான்..


 20 வயது ஆண்மகனாய்  நான் வளர்ந்து இருக்கும் போது என் அம்மா எனக்கு ஆய் துடைத்து விடுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் கூச்சத்தில் உடல் நடுங்கி, இயலாமையில்ல என் கண்கள் குளமாக முகம் திருப்பிக்கொண்டேன்....

அம்மா என் தலைகோதி என்னிடத்தில் ஒரு வார்த்தை சொன்னாள்...

இரண்டு வயசுலயும் நீ என் புள்ளதான்.., நாற்பது வயசுலயும் நீ என் பிள்ளைதான்..எழுவது வயசானாலும் நீ என் பிள்ளைதான்.....
 =====
இந்த பூவுலகில் வாழும் எல்லா அம்மாக்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகள்....
=================
அன்னையை போற்றும் இந்த பாடலை கேளுங்கள்...


==============
அன்பின் அம்மாவுக்கு,
போனவருடம் அன்னையர் தினத்தன்று உனக்கு நான் ஒரு  கடிதம் எழுதினேன்..  இந்த வருடம் கடிதம் எழுதுவதை விட அம்மாக்கள் நிறைய பேர் செய்யும் இந்த பீத்துணி மேட்டரை வெட்கம்காரணமாக பலர் தவிர்த்து விடுகின்றனர்...ஆனால் எவ்வளவு பெரிய தியாகம் அது.... அதனால் அதனை இந்த வருடதில் எழுதினேன்....உனக்கு தெரியும் எங்களுக்கு குழந்தை பிறந்து இருக்கின்றது என்பது... எல்லாம் உன் ஆசி...

போன வருடம் அன்னையர் தினத்தன்று என் அம்மாவுக்கு நான் எழுதிய கடித்த்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்...
 



பிரியங்களுடன்.
ஜாக்கிசேகர்...

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...





===========================

15 comments:

  1. முற்றிலும் உண்மை அண்ணா. அன்னைக்கு ஒர் தாலாட்டாக அமைந்த ஒரு பாடலின் வரிகளை வாசிக்க http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_08.html

    ReplyDelete
  2. இதையெல்லாம் அந்தப் "பன்னாடைகள்" நினைத்துப் பதிவு போடுவதில்லையே?ஏதோ ஜாக்கி தான் "அடல்ட்ஸ்"ஓன்லி பதிவு போடுவதாக பினாத்துவார்கள்!சரியான நேரத்தில் அன்னையர் பற்றிய பெருமையைப் பதிவாகப் போட்ட ஜாக்கி நன்றி!!!!

    ReplyDelete
  3. very true,word to word unmaai jackie,
    kutty ponnu ungalaku niraiya experience kudukaraa pola,

    ReplyDelete
  4. My eyes are filled with tears. Thankyou. I LOVE YOU AMMA.

    ReplyDelete
  5. ஜாக்கி, நான் பத்து சதவிகித ஆண்களில் இருக்கிறேன், நீ சொன்னது முழுக்க முழுக்க உண்மை. நீயும் பத்து சதவிகித ஆண்களில் இருப்பாய் என நம்புகிறேன்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  6. அடல்ட்ஸ் ஒன்லி பதிவுகள் எழுதுவோர்க்கு மத்தியில் இப்படி ஒரு அதிரடியான தலைப்பில் அர்த்தமுள்ள பதிவு. நன்றி. 20 வயதில் உங்களுக்கு நடந்த உண்மைச்சம்பவத்தையும் சேர்த்து எழுதியதில் உங்கள் வாழ்வில் அம்மாவின் பங்கு எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  7. நன்றி ஜாக்கி,
    அம்மாவை மறந்த அத்தனை
    மகன்களுக்கும்,எனக்கும்
    கண்ணீர் வர வைத்து விட்டது.
    நன்றி அம்மா ....நன்றி அம்மா ....
    நன்றி அம்மா ....

    ReplyDelete
  8. நன்றி போட்டோகிராபர் சங்கர்..

    நன்றி டாக்டர் ரோகினி...

    நன்றி வழிப்போக்கன்...

    நன்றி நாரதர்

    நன்றி ரகுநநாத்

    ReplyDelete
  9. நன்றி மதுரை .. நன்றி ஆர் எஸ்...

    ReplyDelete
  10. இதையெல்லாம் அந்தப் "பன்னாடைகள்" நினைத்துப் பதிவு போடுவதில்லையே?ஏதோ ஜாக்கி தான் "அடல்ட்ஸ்"ஓன்லி பதிவு போடுவதாக பினாத்துவார்கள்!சரியான நேரத்தில் அன்னையர் பற்றிய பெருமையைப் பதிவாகப் போட்ட ஜாக்கி நன்றி!!!! //

    சொல்லறவன், வாந்தி எடுக்கறவ, பண்ணாடைகள் பற்றி எல்லாம் நான் ஒரு போதும் கவலை படுவதில்லை....

    முனிவரின் வரத்தால் இந்த பூவுலகில் ஜனித்தவர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள்..

    நன்றி யோகா..

    ReplyDelete
  11. அடல்ட்ஸ் ஒன்லி பதிவுகள் எழுதுவோர்க்கு மத்தியில் இப்படி ஒரு அதிரடியான தலைப்பில் அர்த்தமுள்ள பதிவு. நன்றி. 20 வயதில் உங்களுக்கு நடந்த உண்மைச்சம்பவத்தையும் சேர்த்து எழுதியதில் உங்கள் வாழ்வில் அம்மாவின் பங்கு எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டேன். //

    நன்றி ஜஸ்ட் பார் லாப்..

    அதிரடியான தலைப்பு எல்லாம் இல்லை.. என் வீட்டு, எங்கள் ஊர் பேச்சு வழக்கு இப்படித்தான்...

    ReplyDelete
  12. ஜாக்கி, நான் பத்து சதவிகித ஆண்களில் இருக்கிறேன், நீ சொன்னது முழுக்க முழுக்க உண்மை. நீயும் பத்து சதவிகித ஆண்களில் இருப்பாய் என நம்புகிறேன்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம் //

    ஸ்ரீ நாம் இப்படி இருப்பதால்தான் இந்த பதிவு

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner