ரன் லோலா ரன், வின்டேஜ்பாயின்ட், போன்ற வெற்றி திரைப்படங்களின் திரைக்கதை உத்தியோடு வந்த இருக்கும் இந்த படம் தற்போது ஆக்ஷன் படம் ரிலிஸ் ஆகவில்லையே என்று பரிதவித்து போய் இருக்கும் ஆக்ஷன் ரசிகனின் மனக்குறையை இந்த படம் தீர்க்கின்றது...
===========
சோர்ஸ்கோட் படத்தின் கதை என்ன???
சோர்ஸ் கோர்ட் என்பது ஒரு புரோக்கிராம்...இறந்து போகும் முன் உங்கள் உயிரின் கடைசி எட்டு நிமிடங்களை தங்கள் ராணுவ பணிக்கு பயண்படுத்திக்கொள்வதுக்கு பெயர்தான் சோர்ஸ் கோட் அகும்...
====
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
டென்சில் வாஷிங்டன் நடித்த டேஜாவுன்னு ஒரு படத்தை நீங்க பாத்து இருப்பிங்க, அதாவது டைம் டிராவல் பண்ணி விபத்தை தடுப்பது.... அப்புறம் நம்ம காத்தவராயன் கதையான கூடு விட்டு விட்டு கூடுபாயும் கதை இதை எல்லாத்தையும் மிக்சியில் போட்டு அடித்தால் சோர்ஸ் கோர்ட் படத்தின் திரைக்கதை வரும்.....
திரும்ப திரும்ப ரயிலில் வரும் ஒரே காட்சிகள் அவன் எப்படி பாமரை கண்டுபிடிக்ககின்றான் என்பதை மிக சுவார1யமாக சொல்லி இருக்கின்றார்கள்....
திரைக்கதையில் லாஜிக்கோடு நிறைய டுவிஸ்டுகள்....
இது காத்தவராயன் கதை போலவா?? என்று நாம் யோசிக்கும் போது அது இல்லை என்று திரைக்கதையில் சொல்கின்றார்கள்... பட் எளிதில் யூகிக்க முடியாமல் பயணிக்கும் திரைக்கதை...
பாமரை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் இயலாமை காட்சிகளில்Jake Gyllenhaal நடிப்பில் பின்னி இருக்கின்றார்....
ரயிலில் பயணிக்கும் சக பயணியாக மைக்கேல்மான்ஹாட்டன் சிறப்பாக நடித்து இருக்கின்றார்... அவரின் குழந்தை தனமான சிரிப்புக்கு மவுன்ட் ரோட்டில் கால் ஏக்கர் எழுதி கொடுக்கலாம்...
போன வருடம் மே மாதம் ஷுட்டிங் ஆரம்பித்து ஏப்ரலில் 29ல் அதாவது இரண்டு மாதத்தில் ஷுட்டிங் நடத்தி முடித்து விட்டார்கள்..
சிக்காக்கோவுக்கு போகும் அந்த ரயிலை பார்க்கையில் அமெரிக்கர்கள் மேல் பொறாமையாக இருக்கின்றது.... அவ்வளவு சுத்தம்...
டிராக்கில் விழுந்தவன் மண்டையில் ரயில் மோதும் அந்த காட்சிக்கான சவுண்ட் நம்ம மண்டையில் மோதுவது போல இருக்கின்றது....
============
படத்தின் டிரைலர்
=============
படக்குழுவினர் விபரம்..
Directed by Duncan Jones
Produced by Mark Gordon
Jordan Wynn
Philippe Rousselet
Written by Ben Ripley
Starring Jake Gyllenhaal
Michelle Monaghan
Vera Farmiga
Jeffrey Wright
Russell Peters
Music by Chris P. Bacon
Cinematography Don Burgess
Editing by Paul Hirsch
Studio The Mark Gordon Company
Vendôme Pictures
Distributed by Summit Entertainment
Release date(s) April 1, 2011 (2011-04-01)
Running time 93 minutes
Country United States
France
Language English
Budget $32 million
Gross revenue $84,069,6
=============
தியேட்டர் டிஸ்கி...
இந்த படத்தை பெங்களுர் கோபாலன் சினமாஸ் ஸ்கிரின் ஒன்றில் பார்த்தேன்.
தியேட்டர் அசத்தல்.. புது தியேட்டர்... ஒரு 20 பேர் படம் பார்த்தோம்.. பின்ன டிக்கெட் 150 என்றால் யோசிக்கத்தானே வேண்டும்...??
=======
பைனல்கிக்
தற்போதைய ஆக்ஷன் திரில்லர் இந்தபடம்...
இந்த படம் பார்க்கவேண்டியபடம்...
==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
இந்த தளம் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்...முக்கியமாக சினிமா ரசிகர்களுக்கு...
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
=============
boss , may'la start panni eppadi april'a mudhichanga....
ReplyDelete// இந்த கமென்ட் பாக்ஸ் என் பதிவுக்கு உங்கள் பதில் என்ன என்பதை நான் அறிந்து கொள்ளவே... அதில் எதை வெளியிடுவது, எதைவெளியிடக்கூடாது என்பது என் விருப்பமே...
ReplyDeleteஎல்லாத்துக்கு என்னால் பதில் சொல்லமுடியாது...எனக்கு நேரம் இருப்பின் பதில் அளிப்பேன்
உங்களை வெளிபடுத்திக்கொள்ள தைரியம் இருப்பவர்கள் மட்டும் இங்கே கருத்துக்களை இடவும் புரோப்பைலை மறைத்து விட்டு பொங்குபவர்களோடு நான் வாதம் செய்வதில்லை...
Cool...
Very Good :-)
Thala, Fast Five padam ippo inga hit !
ReplyDelete//போன வருடம் மே மாதம் ஷுட்டிங் ஆரம்பித்து ஏப்ரலில் 29ல் அதாவது இரண்டு மாதத்தில் ஷுட்டிங் நடத்தி முடித்து விட்டார்கள்..//
ReplyDeleteபாஸ்... மேயில ஆரம்பிச்சு ஏப்ரல்ல முடிச்சா அது -2... மார்சல ஆரம்பிச்சுன்னு மாத்துங்க...
//டைம் டிராவல் பண்ணி விபத்தை தடுப்பது..
ReplyDeleteஎனக்குள் இருந்த ஒரு கதையின் ஒன்லைன் இது!!! Losing it now :(
அன்புடன்
கார்த்திகேயன்
காரணம் ஆயிரம்
http://kaaranam1000.blogspot.com
//அமெரிக்கர்கள் மேல் பொறாமையாக இருக்கின்றது.... அவ்வளவு சுத்தம்...// சுத்தம் மட்டுமல்ல ஜாக்கி. சத்தம் போட்டு பேச மாட்டார்கள். அனைத்து ரயிலிலும் முதல் மற்றும் கடைசி பெட்டிகள் "சைலன்ட்" பெட்டிகள் என்றழைக்கப்படும். அதில் செல்போன் பேசுவதோ சத்தமாக பேசுவதோ, சத்தமாக ம்யூசிக் கேட்பதோ சட்டப்படி குற்றம். கன்டக்டர்கள் கூட டிக்கெட் கேட்கும் போது மற்றவர்களுக்கு கேட்காமல் பேசுவார்கள். இதிலும் நம்மாட்கள் விதி விலக்குகள் இருக்கிறார்கள் (குறிப்பாக பெண்கள்)
ReplyDeleteபடம் பார்த்தேன். முழுமையாக புரியவில்லை. சந்தேகங்களை போனில் கேட்டு தெரிந்து கொள்கிறேன்.
ReplyDelete