ஆல்பம்..
தேர்தல் முடிந்த பிறகு ஒரு ஆக்ரோஷமான பேட்டி ரிசல்ட் எப்படி இருந்தாலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களிடம் இருந்து வரும்... ஆனால் இந்த முறை அப்படி ஒரு பேட்டியை கலைஞர் கொடுக்கவேயில்லை, கனிமொழி குறித்த கவலைதான் எல்லாத்துக்கும் காரணம்...கலைஞரின் பேட்டிக்கு யார் காத்து இருக்கின்றார்களோ இல்லையோ? வட இந்திய மீடியாக்கள் கண்களில் விளக்குஎண்ணெய் ஊற்றிக்கொண்டு காத்து இருக்கின்றன..
=================================
விக்கலுக்கு விஷத்தை குடித்த பீதியில் இருக்கின்றார்கள் தமிழக மக்கள்... சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி பழைய பாடதிட்டத்தை பின்பற்ற தமிழக அரசு சொல்லி இருக்கின்றது..விடுமுறைக்கு வெளியூர் சென்ற பிள்ளைகள் 15ம்தேதிதானே பள்ளி திறக்கபோகின்றது, என்ற சந்தோஷத்தில் இருக்கின்றார்கள்.....சமச்சீர் கல்வி முறையை தடுத்து நிறுத்துவதால் பாதிக்கபடப்போவது கேந்திரிய வித்யாலயா,பத்மசேஷாத்திரி, பொன்வித்யாசரம், போன்ற பள்ளிகளின் பள்ளி மாணவ மாணவிகள் இல்லை... அரசு தொடக்கபள்ளி, அரசு உதவிபெறும் நடுநிலைபள்ளி மாணவர்களை சற்றே யோசித்து பார்க்க வேண்டும்... காரணம் அவர்கள் இப்போதுதான் எடுக்கின்றார்கள்.. அவர்கள் தலையில் ஓங்கி கூட்டி படிப்பின் மீதே வெறுப்பு வரும் அளவுக்கு செய்து விட வேண்டாம்...இப்போது சமச்சீர் கல்வி தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் பொதுநலவழக்கு தொடர்ந்து இருக்கின்றார்கள்.. அது இன்று விசாரனைக்கு வருகின்றது...
===============================
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு அழகிரி பெயர் எங்கேயும் தென்படவில்லை இன்று தென்படுகின்றது.. கனிமொழி, சரத்,ராசா போன்றவர்களை திகார் ஜெயிலில் சந்தித்து விட்டு வந்து இருக்கின்றார்...பல ரவுடிகள் கொட்டம் மதுரையில்அடக்கி இருக்கின்றதாம் காவல்துறை.-...வாழ்த்துகள்.
இந்த பாடலை காலையில் கேட்டு பாருங்கள்.. ஒரு பெரிய புத்துணர்ச்சி கிடைக்கும்... என்னதான் நகரம் சார்ந்த வாழ்க்கை நாம் வாழ்ந்தாலும்... இந்த பாடலை கேட்கும் போது ஒரு கிராமத்தான் உங்களுக்குள் இருந்து எட்டி பார்ப்பான் என்று உறுதியாக சொல்லிக்கொள்கின்றேன்.... எனக்கு மேற்க்கத்திய இசைதான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.. ஆனால் காதலிக்க ஆரம்பித்த பிறகுதான் இளையராஜாவின் மேற்கத்திய இசையை விட கிராமத்து இசை ரொம்பவும் பிடிக்கின்றது... இந்த பாடல் வெள்ளிக்கிழமை காலையில் கேட்கும் போது அது தனி சுகம்தான்..
மிக்சர்....
இன்று மதியம் அல்லது இன்று இரவு பெண்களூர் பயணம்..ஞாயிறு அல்லது திங்கள்கிழமை சென்னை வருவதாக உத்தேசம்..
=============================
காலை சென்னை விமான நிலையத்துக்கு போனேன்..5 மணிக்கு புனே பிளைட்.. அத்தை பையன் புனேவில் வேலையில் ஜாயிண்ட் பண்ண பயணமானான்... அவனை வழியனுப்ப ஏர்போர்ட் சென்றேன்.... முற்றிலும் சென்னை ஏர்போர்ட் மாறி இருக்கின்றது..இன்னும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன... ஆனால் சுத்தம் இல்லை...
============================
செயின் திருடர்கள் நான் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் ஆந்திராவுக்கு தப்பி ஓடிவிட்டார்கள் என்று முதல்வர் சொல்லி வாய் மூடும் முன்பே அவரது கட்சி எம்எல்ஏ பழ. கருப்பையா மனைவியிட்ம் ஒரு ஹெல்மட் திருடன் செயினை பறித்துக்கொண்டு சென்று இருக்கின்றான்....அவசரத்தில் செல்போன் தவறவிட்டு விட்டு சென்று இருக்கின்றான்... கடைசியில் விசாரித்தால் அவர்கள் வீட்டு கார்டிரைவர்...
============================================
பெரிதாய் ஐபில் போட்டிகளில் ஆர்வம் இல்லை.........ஆனாலும் சென்னை கிங்ஸ் ஜெயித்து விடுமா? என்று நேற்று முழுவதும் நண்பர்கள் பலர் பேசிக்கொண்டு இருந்தார்கள்.. சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று வென்று பைனலுக்கு போயவிட்டது...
========================
அமைச்சர் மரியம் பிச்சை தேர்தலுக்கு உழைத்த உழைப்பு எல்லாம் சடுதியில் வீணாக போய்விட்டது...எம்எல்ஏ பதவி ஏற்புக்கு வரும் போது விபத்தில் மரணம் அடைந்து விட்டார்.. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.. அது விபத்து அல்ல திட்டமிட்ட சதி என்று முதல்வரே சொல்கின்றார்..... அமைச்சரின் பாதுகாவலராக சென்ற போலிசார் விபத்து நடந்த உடன் எல்லா செக்போஸ்ட்டுக்கும் தகவல் சொல்லி இருந்தாலே,இந்நேரம் விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரியை மடக்கி இருக்கலாம்...இப்போது தனிபடை அமைத்து இருக்கின்றார்கள்....
==============================
சினிமா நியூஸ்
வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறிவிட்டது... கமலின் விஸ்வரூபம் படத்தை செல்வராகவன் இதுநாள் வரை இயக்குவார் என்று சொல்லிவந்தார்கள்..பட் லேட்டஸ்ட் நியூஸ் படத்தை எழுதி இயக்குவது கமல்தான்...செல்வராகவன் இந்த புராஜக்ட்டில் இல்லை...யார் இயக்கினா நமக்கு என்ன?? படத்தின் நாயகி சோனக்ஷி சின்கா...தெரியதவங்களுக்கு புகைபடம் இணைத்து இருக்கின்றேன்.
நான் எழுதும் உலகபடங்கள் மற்றும் ஹாலிவுட்படங்கள் சென்னை பர்மா பஜாரில் மூவிஸ்நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது என்று எழுதி இருந்தேன்..நிறைய பேர் வாங்கிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்..பட் வெளியூர் நண்பர்கள் நாங்கள் எப்படி வாங்குவது என்று கேட்டு பலர் வருத்தப்பட்டார்கள்..? நீங்கள் அலிபாய்க்கு ,9003184500 போன் செய்து அவர் அக்கவுண்ட் நம்பரில் பணத்தை போட்டால் கூரியரில் அனுப்பிவைக்கின்றேன் என்று சொன்னார்...தேவைபடுவோர் முயற்சிக்கவும்.
==============================================
பிலாசபிபாண்டி
2020ல் பெண்கள்.......
கணவன்..ஒரு கப் காபி மா....
மனைவி... என்னடா கேட்டே??
கணவன்..தரட்டுமான்னு கேட்டேன்..??
அடப்பாவிங்களா எதுக்கு இதுக்கு 2020 வரை போகனும்... இந்த பாண்டியே அதுக்கு உதாரணம்.
================================================
நான்வெஜ்..18+
ஏன்டா நேத்து நைட்டு நான் எங்கவீட்டு மொட்டைமாடியில் இருந்து உங்க வீட்டு ஜன்னலை பார்க்கின்றேன். என்னதான் உனக்கு மூட் வந்தாலும் இப்படியா? ஜன்னல் கதவை சாத்தமாக்கூட செக்ஸ் வச்சிக்கறது..இடியட் அப்படி என்ன அவசரம்??? இல்லைடா நேத்து நான் ஊர்ல இல்லை.. நான் இருந்து இருந்தா, எல்லாத்தையும் சாத்திட்டுதான் செக்ஸ் வச்சிக்குவேன்...........
=======================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...

==========================
ம்ம்...கிரிக்கட்டும் சிறிதாக...அருமை!!
ReplyDeleteநல்ல வாழ்வு பாடல் அருமையானது.. எனக்கும் பிடிக்கும்..
ReplyDeleteசமசீர் கல்விக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் நல்லது.
ReplyDeleteit is not sonakshi sinkha..
ReplyDeletechange it Jackie....check google image with dabaang