என் காதலி கே 70 சென்னை மாநகர பேருந்தில் வர வேண்டும்... அவள் அண்ணாநகர் கிழக்கில் இருக்கும், வள்ளியம்மாள் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தாள்....ஆனால் அன்று வரவில்லை...
மிகச்சரியாக அந்த பேருந்து காலை எட்டு மணிக்கு வடபழனி சிவன் கோவில் பேருந்து நிலையத்தை கடக்க வேண்டும்... அவள் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் தினமும் ஏறுவாள்... ஆனால் அன்று பேருந்தில் அவள் இல்லை...
பேருந்து நின்ற சில நொடிகளில் நவகிரகத்தை சுற்றுவது போல பேருந்தை சுற்றி சுற்றி வந்தேன்.. ஆனால் அவள் இல்லை... ஒரு வேளை பேருந்தை தவற விட்டு இருந்தால்??? அதனால் அடுத்துஅடுத்து வரும் கே 70க்காக காத்து இருக்க ஆரம்பித்தேன்...
காலை எழரை மணிக்கு பேருந்து நிலையத்துக்கு வந்து நின்றேன்...
காலை எழரை மணிக்கு பேருந்து நிலையத்துக்கு வந்து நின்றேன்...
காலை பதினொன்றரை வரை வந்த அனைத்து பேருந்தையும் மில்லி மீட்டர், மில்லி மீட்டராய் செக் செய்து விட்டேன்... அவள் வரவேயில்லை...
எங்கள் இருவரிடத்திலும் இப்போது போல் மணிக்கணக்காய் செல்போனில் பேசும் வசதி அப்போது இல்லை...தவித்து போய் விட்டேன்... தேவையில்லாத பயம் வேறு... எங்கள் காதல் அவள் வீட்டில் தெரிந்து, அவளை அவுங்க அப்பா அவுஸ்அரஸ்ட் செய்துவிட்டார்களா? என்பது போல எல்லாம் கற்பனை செய்து தவித்து போனேன்...
எங்கள் இருவரிடத்திலும் இப்போது போல் மணிக்கணக்காய் செல்போனில் பேசும் வசதி அப்போது இல்லை...தவித்து போய் விட்டேன்... தேவையில்லாத பயம் வேறு... எங்கள் காதல் அவள் வீட்டில் தெரிந்து, அவளை அவுங்க அப்பா அவுஸ்அரஸ்ட் செய்துவிட்டார்களா? என்பது போல எல்லாம் கற்பனை செய்து தவித்து போனேன்...
வடபழனியில் இருந்து குரோம்பேட் அஸ்தினாபுரத்தில் இருக்கும் அவள் வீட்டு பக்கம் போய், பைத்தியம் போல் பக்கத்து டீ கடைகளில் வெளியே நின்று, அவள் வேறு எதாவது வேலை விஷயமாக வெளியே வருவாளா? என்று பல மணிநேரம் வெயிட் செய்து இரவு பத்து மணிக்கு வீட்டுக்கு வந்தேன்... தூக்கம் வரவில்லை.. விடியலில் 3 மணிவரை கண் விழித்து நினைவு திரையில் பல கற்பனைகடிள படற விட்டேன், மறுநாள் காலை எழு மணக்கு அலாரம் வைத்து எழுந்து, திரும்ப அதே வடபழனி சிவன் கோவில் பேருந்து நிறுத்தம்.. வந்து நின்றேன்..
எட்டு மணிக்கு கே70 வந்தது. ஜன்னல் வழியாக என்னை பார்த்து பளிச்சென சிரித்தாள்...கடங்காரி நேத்துல இருந்து உன்னை பார்க்காம நான் எவ்வளவு தவிச்சேன் என்பது அவளுக்கு தெரிய நியாயம் இல்லை...
எனக்கு போன உயிர் வந்தது....நேற்று பகல் மற்றும் இரவு வரை நான் கற்பனை செய்து வைத்த கற்பனை கதைகள் எல்லாம் அவள் சிரிப்பில் காணாமல் போயின.... காரணம் காதல்... இந்த 12 வருடங்களில் என் மனைவியான காதலிக்கு, எதன் பொருட்டாவது காத்திருத்தலின் போது 24 மணிநேரம் தவித்த தவிப்பை சில தருணங்களில் நினைத்து பார்க்கையில் உதட்டோரசிரிப்பாக மாறி போய்விடுகின்றது...........காதலில் காத்திருத்தல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று...காதல் இது போலான பைத்தியக்கராத்தனங்களை உள்ளடக்கியது..
=================
Engeyum Kaadhal-2011 /எங்கேயும் காதல் படத்தின் கதை என்ன???
காதல் என்பது சுத்த பைத்தியக்காரத்தனம்.. காதலித்து காதலியை வீடுவரை அழைத்து வந்து அழகு பார்க்க கூடாது... ரயில் சிநேகிதி போல, ரயிலில் விட்டு விட்டு வர வேண்டும் என்ற கொள்கையுடன் வாழும் பிசினஸ்மேன் கமல் (ஜெயம்ரவி)... வருடத்துக்கு ஒரு மாதம் வெளிநாடு சுற்றுபயணம் செய்து ரீச்சார்ஜ் செய்து கொள்ளும் கேரக்டர்...
வெளிநாட்டு வாழ் பெண்ணாண கயலுக்கும் (ஹன்ஷிகாமோத்வானி) கமலும் சந்திக்க கயல்... கமல் மேல் காதல் கொள்கின்றாள்... பட் கமல்தான் காதலை வெறுப்பவன ஆயிற்றே??? அவர்களுக்குள் காதல் மலர்ந்ததா? இல்லையா? என்பதை வெண்திரையில் காண்க...
======================================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
ரொம்பநாளக்கு அப்புறம் ஒரு தமிழ்படம் செம ரிச்சாக காட்சி படுத்தப்பட்டு இருக்கின்றது... அதுக்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றிகள்.....
வெளிநாடுதான் படம் முழுக்க லொக்கேஷ்ன் என்றாலும் தேடிபிடித்து பார்த்து பார்த்து பேக்டிராப்பில் அசத்தி இருக்கின்றார்கள்...
கத்திரி வெயிலில் கழுத்து வியர்வையுடன் படத்துக்கு போனால் கண்ணுக்குகுளிர்ச்சியாக படம் முழுவதும் இருப்பது, படத்துக்கு பெரிய பிளஸ்...
ஜெயம்ரவி கார்பரேட் தனத்து ஆளுக்கான பாத்திரத்தில் மேன்லியாக பொருந்துகின்றார்.. அவரது நீண்ட நாள் குறையான அவரது குரலை கூட நக்கல் விட்டு இருக்கின்றார்கள்.. பல இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகின்றார்... வெள்ளைகாரிகளின் எதிரில் சட்டை போட்டாத தன் உடம்பில் நீர்த்திவளைகளை வழிய விடுகின்றார்...ஹன்சிகாவின் பெரிய மார்பில் முகம் புதைக்கின்றார்...
ஹன்சிகா (கொஞ்சம் டிஸ்கிரைப் பண்ணறேன்....)
இந்தபடம்தான் அறிமுகப்படம்.. பட் மாப்பிள்ளை முந்திக்கிச்சி...
உடைகளில் எதைப்பற்றியும் கவலைபடாமல் நடித்து இருக்கின்றார்...
மோட்டுவாளைக்கு ச்சே.... மோத்வானிக்கு,நேரம் நன்றாக இருந்தால் குஷ்புவுக்கு பிறகு, தமிழ்நாட்டில் கோவில் இவருக்கு கட்டபடலாம்...
பிறந்து பிறகு மைதாமாவு உணவுகள் அதிகம் தின்று இருப்பாரோ? என்று எனக்கு சந்தேகமாக உள்ளது...அப்படி ஒரு வெள்ளை.....
முகத்தில் மூன்று மச்சங்கள் தெண்படுகின்றன.. பட் அந்த உதட்டுக்கு மேல் இருக்கும் மச்சமும், சிரிக்கும் போது கன்னத்தில் சின்ன குழிவிழுதலும் நிறைய பேரின் தூக்கத்தை குழி தொண்டி புதைக்கும் சாத்தியங்கள் தென்படுகின்றன..
படம் மழுக்க தொடை தெரிய நடிப்பதால் வாழைத்தண்டு கால்களுக்கான அர்த்தம் எளிதில் விளங்குகின்றது...
சில நேரத்தில் சின்ன பெண்ணாகவும் சில நேரத்தில் மெச்சுசூர்டு பெண்ணாக தெரிகின்றார்...
நங்கை பாடலில் புடவையில் வருகின்றார்... கொஞ்சம் தொப்பை போட்டு இருப்பது தெரிகின்றது...
நீரவ் ஒளிப்பதிவு படத்துக்கு பெரியபலம்...
தற்போது அவரது நிஜ வாழ்க்கையில் மனது முழுவதும் காதலில் மூழ்கி இருக்கும் பிரபு தேவா, நிறைய காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கின்றார்.....
படத்தில் நிறைய முத்தக்காட்சி இருக்கும் தமிழ்படம் இதுவாகத்தான் இருக்கும்.... பாரிசில் முத்தம் கொடுத்துக்கொள்ளும் காதலர்கள் எல்லாம் படத்தில் சிறைப்படுத்தி இருக்கின்றார்கள்.. முக்கியமாக பார்க்கில் தண்ணீர் பாச்சும் போது குடை வைத்து தடுத்து முத்தம் இடும் அந்த காதலர்கள் நல்ல நகைச்சுவை.....
தப்பிக்கு சப்போர்ட்டாக சில இடங்களில் ராஜுசுந்தரம் கிச்சி கிச்சு மூட்ட முயற்சி செய்கின்றார்..
நங்கை சாங் கோரியயோகிராபி அசத்தல்..
இதே கதையை குடும்ப சென்டிமென்டுகள் இல்லாமல் மிஸ்டர் பர்ப்பெக்ட் என்ற தெலுங்கு படத்தில் பார்த்தேன்...
முதல் காட்சியில் பிரகாஷ்ராஜுவை காட்டியதும் அவரிடம் பிரபு தேவா.. சார் இந்த படத்தில் நீங்க இல்லை.. இவ்வளவு தூரம் வந்ததுக்கு நீங்க ஊரை சுத்தி பார்த்துட்டு போங்க என்று சொல்வதும்... ஒரு சேசிங்கில் அவர் உணர்ச்சிவசப்பட... சார் நான் அப்பயே சொன்னேன் இல்லை.... இந்த படத்துல நீங்க இல்லைன்னு டைரக்டர் சொல்வது குபிர் சிர்ப்பை வரவைக்கும் காட்சிகள்....
இந்த படத்தில் டைரக்டர் இன்ட்ரோதான் ஹீரோ இன்ட்ரோவே கிடையாது....
ஹாரிசின் இசை படத்துக்கு பெரிய பலம்... நீண்ட நாளுக்கு பிறகு பாடல்கள் நன்றாக இருக்கின்றன...
==================================
படக்குழுவினர் விபரம்...
Directed by Prabhu Deva
Produced by Kalpathi S. Aghoram
Kalpathi S. Ganesh
Kalpathi S. Suresh
Written by Prabhu Deva
A. C. Mugil
Jayakannan
Premsai
Starring Jayam Ravi
Hansika Motwani
Music by Harris Jayaraj
Cinematography Nirav Shah
Editing by Anthony
Studio AGS Entertainment
Distributed by Sun Pictures
Release date(s) May 6, 2011
Running time 125 mins
Country India
Language Tamil
=========================================
படத்தின் டிரைலர்....
தியேட்டர் டிஸ்கி....
இந்த படத்தை பெங்களுர் தாவக்கரை லட்சுமி திரை அரங்கில் பார்த்தேன்....
வழக்கம் போல ஜனகனமன திரைப்படம் தொடங்குமுன் போட எல்லோரும் எழுந்து நிற்க்க இரண்டு காதலர்கன் எழுந்து மரியாதை செய்யவில்லை....
அதே போல ஜனகன முடியும் போது பாரத் மாதாகி ஜே என்று கோராசாக எதாவது ஒரு குருப் சொல்கின்றது...
சன் எம்பளம்,கலாநிதிமாறன்,கல்பாத்தி அகோரம் போன்ற பெயர்கள் போடும் போது அதுக்கே அரைமணிநேரம் ஆயிடும் போல என்று பின் சீட்டுக்காரர்.. கன்னடம் மிக்ஸ் பண்ணிய தமிழில் முனகினார்....
=====================
பைனல் கிக்...
இந்த படம் பார்க்க வேண்டியிபடம்தான்...காதலிப்பவரும் காதல்வயப்பட்டவரும் அவசியம் பாருங்கள்...சன் தயாரிப்புக்கு இந்த காதல் படம் வெற்றிபடம்தான்...
==============================
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...

==================
This movie sounds like an adaptation of 'No strings attached' movie.
ReplyDelete//ஹன்சிகா (கொஞ்சம் டிஸ்கிரைப் பண்ணறேன்....)
ReplyDeleteஇப்படியே உடம்பை கவனிக்காமல்விட்டால் ஷகிலாவோடு போட்டி போடும்நாள்வெகுதொலைவில் இல்லை..//
ha ha ha, sure !
//இந்த படம் பார்க்க வேண்டியபடம்தான்//
ReplyDeleteஅண்ணே ஏண்ணே இப்புடி? இந்த படத்தை
இல்லாத என் எதிரிகளுக்குக்கூட பரிந்துரைக்கமாட்டேன். எவ்ளோ சப்பையா எடுக்க முடியுமோ? அப்படி எடுத்திருக்கிறார்கள். எங்கேயும் காதல், நங்காய் பாடலுக்காக முழுபடத்தையெல்லா சகித்துக்கொள்ள முடியாது. :-)
நான் படம் , பாத்துட்டு கமெண்டு போடுரேண்ணே ..! :)) விமர்சனம் பாக்க தூண்டுது , !
ReplyDeleteTHIS MOVIE IS THE DITTO COPY OF ENGLISH MOVIE"LOVE IN THE AFTERNOON " RELEASED IN THE YEAR 1957..EVEN THE DIALOGUES AND SCENES ARE COPYCAT.. Sekar PLSSSSSSSSS COMMENT ON THIS
ReplyDeleteஇந்தப்படத்தை பார்த்துவிட்டு வந்த என் நண்பர்கள் சொன்னார்கள் படம் எவ்வளவு அழகாஎடுக்கமுடியுமோ அவ்வளவு அழகா எடுத்திருக்கானுவோ ஆனா கதைதான் என்னான்னு கடைசிவரை சொல்லாம விட்டுவிட்டுடாங்க ஆனா ரொம்ப ந்ல்லப்படம்ப்பா..???ன்னு சொன்னாங்க....சன் டீ.விக்கு ரொம்பதைரியும்தான் மொக்கைப்படம்னு கேள்விப்பட்டிருக்கோம் ஆனா இவ்வளவுபெரிரிரிரிரிரிர்ய்ய்ய்ய்ய்யயய மொக்கைப்படம்னு நினைக்கலைன்னு சொன்னாங்க...இதை கேட்ட நான் எப்படி அந்தப்படம் பார்ப்பேன் அவ்வளவு நல்லவனா நான்..?
ReplyDelete