தாமதமாக மினிசாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ் /பதினெட்டுபிளஸ்/ஞாயிறு/15/05/2011

ஆல்பம்...

ஜெயின் ஆதரவு அலை என்று  ஒன்றும்  இல்லை.. கருணாநிதியின் கடுமையான எதிர்ப்பு வேறு ஆள் இல்லாத காரணத்தால் ஜெவிடம் கொடுக்கபட்டு இருக்கின்றது என்று சொல்கின்றார்கள்..எரியும் கொள்ளியில் இப்போதைக்கு நல்ல கொள்ளி.. சாரி நல்ல என்ற வார்த்தையை சொல்ல என்னால் முடியவில்லை என்று பேஸ்புக்கில் ஒரு நண்பர் வருத்த பட்டு இருக்கின்றார்... எல்லா விவாதங்களிலும் இந்த கருத்து முன்வைக்கபடுகின்றது...

=============================
ஹரி ஓம் என்று ஆரம்பிக்கும்முன்னமே அவ்வளவு பெரிய தலைமை செயலகத்துக்கே அந்த கதி என்றால் வீஏஓ தேர்வு எழுதியவர்கள் மற்றும்  அரசு வேலையை எதிர்பார்த்து காத்து இருக்கும் பலருக்கு ஜுரத்தில் கைகால்கள் நடுங்கிகிடக்கின்றார்கள்....ஜெ இன்னும் மாறவில்லை என்பதற்கு இது சிறந்த உதாரணம்...


=========================

நேற்று நண்பர் பாலாபாரதி ஒரு பஸ் விட்டு இருந்தார்.... எம்ஜிஆர் சிலைக்கும், அண்ணா சிலைக்கும்  ஜெ மாலை மரியாதை செய்வித்த காரணத்தால் சென்னையில் அரைமணி நேரத்துக்கு மேல் டிராபிக் ஜாம்.. நகரத்தில் அரைமணிநேரம் என்பது சாதாரண விஷயம் இல்லை... மம்மி ரிட்டர்ன்... என்று பஸ் விட்டு இருந்தார்... பட் நேற்றுதான் முதன் முறையாக வெகுநாட்களுக்கு பிறகு படைபரிவாரங்களுடன் வெளியே வந்து இருக்கின்றார்.... இந்த சந்தோஷம், உற்சாகம் எல்லோருக்கும் இருக்கும்.. யார்  வெற்றியடைந்து இருந்தாலும் இப்படித்தான் நடந்து இருக்கும்... அதனால் இதனை கருத்தில் கொள்ள வேண்டாம்... ஆனால் இனி வரும் நாட்களில் விவேக் படத்தில் டிராபிக்கில் டீ குடிப்பதும், விமானத்தில் முதல்வர் போவதற்கு தரையில் டிராபிக் கட் செய்யும் காமெடி நடக்காமல் இருந்தால் சரிதான்..
==========================================
அன்னையின் வெற்றி பரிசு இந்த பெட்ரோல் விலையேற்றம் என்று ஒரு நண்பர் நக்கல் விட்டார்..... ஒன்பது மாதங்களில் ஒன்பது முறை பெட்ரோல் விலையை ஏற்றி இருக்கின்றார்கள்.
பெட்ரோல் விலை இப்போது சென்னையில் லிட்டர் 67 ரூபாய்... தமிழகத்தில்  ஆளும் கட்சிக்கு பெரிய ஆப்பு  வைத்தது போல சென்ட்ரலுக்கும் பெரிய ஆப்பு வைத்தால் பெரிய  சந்தோஷம் அடைவேன்...
===================
நல்லவேளை கலைஞர் தோற்று விட்டார்... இல்லையென்றால் கனிமொழி ஒருவேளை வரும் 20ஆம் தேதி கைது ஆனால் முதல்வர் மகள் கைது என்று பத்திரிக்கைகள் அலறி இருக்கும்... நல்லவேளை இப்போது கைதானால் முன்னாள் முதல்வர் என்று சேதாரம் கொஙசம் கம்மியாகும்....
============================
மக்களுக்கு ஒரு பெரிய நன்றி சொல்லவேண்டும்...தொங்கு நிலை எல்லாம் எற்படுத்தாமல் யாரோ ஒருவருக்கு மெஜாரிட்டி கொடுத்த அளவில் மக்கள் நல்லதையே செய்து இருக்கின்றார்கள்....எதிர்கட்சியாக விஜயகாந்த் மக்களுக்கு நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து போராடும் என்று சொல்லி இருக்கின்றார்...சட்டசபை கூட்ட தொட்ர் பார்க்க  இப்போதே ஆவலாய் இருக்கின்றேன்..
===================
மிக்சர்..
நேற்று டிஸ்கவரி புக் பேலசில் 361 டிகிரி இதழ் வெளியிட்டுக்கு சென்று இருந்தேன்... அப்துல்லா, மாமல்லன்,லக்கி ,அதிஷா, கேபிள்,நேசமித்ரன், நிலாரசிகன். காவேரிகணேஷ் போன்றவர்களை சந்தித்தேன்... மாமல்லன் சாரிடம்  நானும் அப்துல்லாவும் பேசிக்கொண்டு இருந்தேன்.. கதைகளில் காட்சி படுத்தலை லாஜிக் இல்லாமல் எழுதும் இலக்கியவாதிகளை பற்றி விவரித்துக்கொண்டு இருந்தார்... நான் நிறைய பாடங்களை அந்த இடத்தில் கற்றுக்கொண்டேன்... நன்றி மாமல்லன் சார்....நிலாரசிகள் என்னிடத்தில் 361டிகிரி புத்தகம் ஒன்றை கொடுத்தார்... அந்த புத்தகத்தின் லே அவுட் நன்றாக இருந்தது
============================
திமுக தோற்க்க என்ன காரணம் என்று வேறு ஒரு கோணத்தில் எழுதப்பட்ட இந்த பதிவை ஒரு முறை அனைவரும் வாசியுங்கள்.... எழுதிய அபி அப்பா....வாசிக்க இங்கு கிளிக்கவும்....
================


வாழ்த்துகள்....

எனது பெண்களூர் யாஹு நண்பர் நிரஞ்சன் அவர்களின் குழந்தைக்கு இன்று பிறந்தநாள்..எல்லா நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பரம் பொருளை பிரார்த்திக்கின்றேன்.. நண்பா அடுத்த வாரம் பெண்களூர் வரும் போது குழந்தையையும் உன்னையும் சந்திக்கின்றேன். சென்னையில் கொஞ்சம் வேலை..
===================================================
பார்த்ததில் பேஜார் ஆனது...

மடிவாலா டோட்டல் மாலில் பச்சேஸ் செய்து கொண்டு இருந்தேன்... ஒரு பெண்மணி ஷகிலா போல உடம்பை பெற்று இருந்தார்.. கணவர் மற்றும் குந்தையுட்ன் வந்து பர்சேஸ் செய்தார்.. அவர் அந்த உடம்புக்கு டிசர்ட் அணிந்து இருந்தார்.... அதில் ஐ ஹேவ் நீயூ பேக் என்று அவரின் மார்பு பகுதியில் பெரிய எழுத்தில் எழுதிஇருந்தது.. தெலுங்கு போக்கிரியில் மகேஷ்பாபு இலியானாவை நிறுத்தி படிப்பது போல இல்லாமல் எல்லோரும் படித்து விட்டு சென்றார்கள்.. ஆனால் ஒரே ஆறுதல் அந்த எழுத்துக்கு கீழே...பெரிய பேக் படம் வரைந்து இருந்தது
====================
படித்ததில் பிடித்தது என்று கிருஷ்ணாசாமி என்பவர் ஒரு நண்பர் எனக்கு பின்னுட்டம் இட்டு இருந்தார்... அதில் வான்முகில் என்பவ்ர் எழுதி இருந்தது உங்கள் பார்வைக்கு....

Karuthu Kandasamy said...
படித்ததில் பிடித்தது....


@Vaanmugil : விக்கல் நிற்க விஷம் குடித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களே!, இன்னும் 2 நாட்களில் பேயாட்டம் தொடக்கம். என்ஜாய்!

=====================
இந்தவார கடிதம்..

hi Jackie,
I sent a comment on your post about the movie " I spit on your grave" aanaal comment vanthathaanu theriyalai. Yenna, naan post comment panniya vudan oru pop up blocker vanthathu.

anyway, solla vanthathu enna venraal : naan ungal blogai apapo allathu adikkadi padipen. intha maathiri Goramaana cinemaa paarkum pothu ungalukku manathukku kashtamaaga irukkaathaa? ennaal rape, sexual violence ponra padangalai konjam kooda paarka mudiyaathu. antha kaatchigal ungal manak kannil pala naal meendum meendum vandu konde irukkaathaa? ithanaaleye naan ippo thellam kashtmaana padangal, seiythigal ellam paarpathe illai.

ungal kuzhanthai matrum ungal kudumbaththukku manamaarntha vaazhthukkal.

and also i had mentioned another coincidence. I read your post on Satya sai baba yesterday. I had posted a very similar post about him a few days ago at my blog. (ramyamani.wordpress.com). I was very surprised to see how similarly we had written.

Ezhuthikkonde irunga!

With regards from chicago,
Ramya
================
அன்பின் ரம்யா உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி மற்றும் உங்களை வெளிபடுத்தியமைக்கு... நானும் உங்கள் சாய்பாபா பதிவை படித்தேன்....எந்த படங்கள் நான் பார்த்தாலும் எப்படி இந்த ஷாட்டுக்கு லைட் செய்து இருப்பார்கள்.. ஷாட் காம்போசிஷன் எப்படி செய்து இருப்பார்கள் என்று அதிகம் பார்ப்பதால்  எந்த ராவான படமாக இருந்தாலும் அதனை நான் சினிமாவாக மட்டுமே பார்பேன்.. எல்லோருடைய மனநிலையும் ஒன்று கிடையாது அல்லவா?? தே படத்தை எனது பிளாக்கின் இரண்டு பெண் ரசிகைகள் பார்த்து விட்டு இடைவேளைக்கு பிறகான காட்சி எந்த படத்திலும் நாங்கள் பார்க்கவில்லை... பெரிய நிறைவாக இருந்தது என்று சொல்லி இருந்தார்கள்... எனினும் மிக்க நன்றி...
===============
பிலாசபி பாண்டி..
காதலியோடு இருக்கும் போது சாப்பாடு, காமம் எல்லாம் அளவாய் இருக்கவேண்டும். இரண்டு அதிகமாச்சினா?? வாந்திதான் வரும்...
 ================
நான்வெஜ்18+
எல்லாத்துக்கும் பெட் கட்டும் ரெண்டு பியூன்களுக்கு பெரிய தர்கம்.. பொம்பளை மெயின் சமாச்சாரம் சீனியரா  அல்லது ஆண்களின் லுல்லு சீனியாரா என்று பெரிய தர்கம் நடந்தது..லுல்லுதான் சந்ததி விருத்திக்கு முதன்மை காரணம் அது இல்லையென்றால் எதுவும் இல்லை... இந்த ஜனநடமாட்டமே இல்லை என்று தங்கள் தரப்பை முன் வைத்தார்கள்...ஆனால் பைனல் ரிசல்ட்பெண்கள் சமாச்சாரத்துக்கு கொடுத்தார்கள்... காரணம்...

அதை பார்த்ததும் எழுந்து சல்யூட் அடிப்பது ஆண்களின் சமாச்சாரம் என்பதால் சீனியர் பொசிஷன் வெற்றி வாய்ப்பை ஆண்கள் இழக்கின்றார்கள்  என்று அறிவித்தார்கள்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS... =======================

3 comments:

  1. வெறும் அரசியல்?

    ReplyDelete
  2. பெரும்பாலான பதிவர்கள் DMK அனுதாபிகள் போல தெரிகிறது.மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்வதற்கு தயக்கமா அல்லது DMK கட்சி பாசமா.

    ReplyDelete
  3. I still think that it was a massive negative vote for DMK that propelled AIADMK to get into power. Some might have thought that if AIADMK had won, it was a tragedy; but if DMK had won, it was a disaster. The electorate perhaps felt that things wouldn't get any worse, so it was better to vote for AIADMK. Now, it is for AIADMK to capitalize on the situation and win the hearts of people. No doubt, JJ is a great administrator. But for the aberration of shifting the Assembly back to Fort St George, the start-up actions of JJ seem in order. The fact, however, is that the new Secretariat right in the middle of Mount Road didn't have any aesthetic appeal (definitely not for an ICON of TN). It is a tall challenge for DMK to resurrect themselves from the ashes, given the massive scams that have taken place. 2G scam, monopoly of film world, free rein to family members, etc. must never have happened. It is a pity that MK, with all his contributions to the Tamil language, has to retire just as an ex CM, instead of like a Statesman among the ranks of Rajaji, Kamaraj and others. Forgive me for this long post.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner