நீங்கள் உங்கள் குழந்தையோடு விளையாடிக்கொண்டு இருக்கின்றீர்கள். உங்கள் மனைவி வேலைக்கு போய் விட்டு வருகின்றார். வீட்டில் நுழைந்தவள் தன் ஓவர் கோர்ட்டில் இருக்கும் ரத்தகறையை கழுவுகின்றாள். போலிஸ் வந்து உங்களையும் உங்கள் மனைவியையும் அரெஸ்ட் செய்கின்றது....உங்களை மட்டும் விடுவிக்கின்றது...
உங்கள் மனைவி கொலை செய்யவில்லை என்று கதறுகின்றாள்.. பட் சந்தர்பம் சாட்சிகள் உங்கள் மகைவிக்கு எதிராக இருக்கின்றது... உங்கள் காதல் மனைவியை 20 வருடம் உள்ளே தூக்கி போடுகின்றார்கள்...நீங்கள் ஒரு சாமன்ய மனிதாராக என்ன செய்வீர்கள்...?
வேற என்ன செய்யறது?? கடைசி வரை உண்மையை வெளிக்கொண்டு வர சட்ட போராட்டம் நடத்துவேன்..
யோவ் அதான் வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டாங்களே?? சந்தர்பம் சூழ்நிலை எல்லாம் உங்க மனைவிக்கு எதிரா இருக்கு...
அப்படின்னா என்ன பண்ணறது.. மாசம் மாசம் மனு போட்டு பார்க்க வேண்டியதுதான்...
ஆனால் இந்த படத்தில் புருசன் என்ன செய்கின்றான் என்பது சுவாரஸ்யம்..
============================
THE NEXT THREE DAYS-2010- படத்தின் கதை என்ன??
ஜான் (ரசல்குரோவ்) கம்யூனிட்டி காலேஜ்ல டீச்சர் அவரின் மனைவி லாரா (எலிசெபத்பேங்) ஒரு கம்பெனியில் வேலை செய்கின்றார்... இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை....செய்யாத கொலைக்கு லாராவை அரேஸ்ட் செய்து 20 வருடம் தண்டனை கொடுக்கின்றார்கள்...
கணவன் சட்ட போராட்டம் நடத்தினாலும் தோல்வியில் முடிகின்றது. கடைசியாக மனைவியை சிறையில் இருந்து தப்பிக்க வைக்க நினைக்கின்றான்.... அந்த முயற்சியில் சாதரான டீச்சரான ஜான் எப்படி வெற்றி பெற்றான் என்பதை திரையில் பார்த்து மகிழுங்கள்..
=====================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
எனித்திங் பார் ஹர் என்ற பிரெஞ் படத்தின் ரீமேக்தான் இந்த படம்...
கிளாடியேட்டர் போன்ற படங்களில் நடித்த பெரிய ஹீரோ அப்படியே சைலன்டாக ஒரு சின்ன சேசிங் கதையில் அவரை இணைத்து இருப்பது டைரக்டர் Paul Haggisன் கதை சொல்லும் திறமைக்கு கிடைத்த வெற்றி என்பேன்...
அதனால்தான் இந்த படம் பாதிக்கு பாதி லாபம்....
ரசல் மற்றும் இயக்குனர் புவுல் இரண்டு பேருமே ஆஸ்கார் விருது பெற்றவர்கள். இயக்குனர் பவுல் கிராஷ் என்ற படத்துக்கு ஆஸ்கார் விருது பெற்றார்..
ஒரு சின்ன முன் கோபம் ஒரு விபத்து எப்படிஎல்லாம் ஒரு குடும்பத்தை சின்னபின்னமாக மாற்றுகின்றது என்பதே கதை...
அம்மா ஜெயிலில் இருப்பதால் அம்மாவை திரும்பிக்கூட பையன் பார்க்காமல் இருப்பதை பார்த்து வேதனையில் உழலும் போது எலிசெபத் நல்ல நடிப்பை வெளிபடுத்தி இருக்கின்றார்.,
தன் மனைவியை காப்பாற்ற அல்லது தப்பிக்க வைக்க எழு முறை சிறையில் இருந்து தப்பியவனிடம் எப்படி தப்பினாய் என்று கேக்டகும் போது எல்லோரிடமும் கீ இருக்கின்றது அதனை எவரும் பயண்படுத்தியதில்லை நான் பயண்படுத்தினேன் என்று சொல்வதும், ஜெயிலில் இருந்து தப்பிப்பது பெரிய விஷயம் இல்லை... அது எல்லோரும் தப்பித்து விடுவார்கள்.. ஆனால் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதே சாமர்த்தியம் என்று சொல்லும் அந்த காட்சிகள் சிறப்பு....
முதலில் மெதுவாக நகரும் இந்த திரைக்கதை திட்டம் போடும் காட்சிகளாகட்டும், மனைவியை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைக்க எடுக்க முயற்சிகளின் போது அந்த பரபரப்பு உங்களையும் தொற்றிக்கொள்ள வைக்கும்....
குழந்தையை அழைத்துக்கொண்டு போய் விடலாம் என்று நினைக்கும் போது திரைக்கதையில் அங்கு ஒரு டுவிஸ்ட்
ஜானின் அப்பா கேரக்டர் செமை....
3வருடத்துக்கு முன்பு நடந்த சீன் ஆப் கிரைமை தன் மனதில் ஒரு டிடெக்ட்டிவ் ஓட்டி பார்ப்பதும், அதுக்கான எவிடேன்ஸ் கிடைப்பதும் அசத்தல் ஆனால் அந்த காட்சியில் முயற்சி செய்தால் முப்பது வருடத்துக்கு முந்தையது கூட கிடைக்கும் என்பதைதான் அந்த காட்சியில் அந்த பட்டன் கையில் கிடைக்காமல் செய்து இருக்கின்றார்...
படக்குழுவினர் விபரம்....
Produced by Michael Nozik
Olivier Delbosc
Paul Haggis
Marc Missonnier
Written by Paul Haggis
Fred Cavayé
Starring Russell Crowe
Elizabeth Banks
Liam Neeson
Brian Dennehy
Olivia Wilde
Jason Beghe
Music by Danny Elfman
Cinematography Stéphane Fontaine
Studio Highway 61 Films
Distributed by Lionsgate
Release date(s) November 19, 2010
Running time 122 minutes
Country United States
Language English
Budget $30 million
Gross revenue $62,748,651
படத்தின் டிரைலர்..
பைனல்கிக்...
இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்... இந்த படம் அவரேஜ் என்று உலக ரசிகர்கள் சொல்கின்றார்கள்..ஆனால் ஒரு கணவனாக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று நினைத்து இந்தபடத்தை பார்த்தால் செமையாக இருக்கும்...
===========
இந்தபடம் சென்னையில் இப்போது கிடைக்கின்றது..டிவிடி கிடைக்கும் இடம்......
அலிபாய்
மூவ்ஸ் நவ்
69A, பார்மா பஜார்
பாரிஸ், சென்னை
கைபேசி..9003184500..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
=====================
நல்லா விமர்சனம். பார்த்தே தீரவேண்டிய படத்தை அறிமுகபடுதியதற்கு நன்றி.
ReplyDeleteநல்லா விமர்சனம். பார்த்தே தீரவேண்டிய படத்தை அறிமுகபடுதியதற்கு நன்றி.
ReplyDeleteஅண்ணா, நானும் பார்த்துவிட்டேன் ஆனால் அவசியம் பார்க்கவேண்டிய படம் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் நல்ல பீல் குட், ஆக்சன் சேசிங் மூவி என்பதில் சந்தேகமில்லை.
ReplyDeleteக்ரோவிற்காக பார்த்தேன்,
//முந்தைய ஜேம்ஸ்பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சோலஸ் படத்தின் திரைக்கதையை எழுதிய பாவ்ல் ஹ்கிஸ், எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம் “THE NEXT THREE DAYS //
இது கூடுதல் தகவல்
கரெக்ட்
ReplyDeletehttp://zenguna.blogspot.com
நல்ல விமர்சனம் ஜாக்கி சார்.
ReplyDeleteTORRENT மூலம் டவுண்லோடு செய்து பார்த்துவிட்டேன். மறுமுறை பார்த்தபோது சின்னச் சின்ன விஷயங்களை கூர்ந்து கவனிக்க முடிந்தது. ஹீரோயின் இன்சுலின் ஊசி போடுவது. லாப் ரிப்போர்ட்டை மாற்றுவது, சீன் ஆஃப் க்ரைம் எப்படி எதிராக மாறுகிறது. நல்ல படம்.
ReplyDelete