ஆல்பம்...
தினத்தந்தியில் சாணிக்கியன் சொல்.. என்று ஒரு பகுதி வரும்... பெரும்பாலும் காமெடியாக இருக்கும்...அது போல ஒரு முறை வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்று சொல்லி இருந்தார்... அதை பார்த்து சிரித்து விட்டேன்... ஆனால் சென்னையில் மதியம் இரண்டு மணிக்கு பைக்கில் டிராவல் செய்த போது சிக்னல் போட்டு இருந்தால் நான் அதுக்கு முன்னே எதாவது நிழல் இருந்தால் அததன் அடியில் நின்று பயணிக்க வேண்டியதாக இருந்தது...
சென்னையில் வெயில் பட்டையை கொளுத்துகின்றது... மரங்களின் மகத்துவத்தை நிழலில் நிற்கும் போது தெரிந்து கொள்ள முடிகின்றது.பாரின் போறவன் இந்தியாவுல செட்டில் ஆக மாட்டேன்கின்றான்...பெங்களூர் போறவன் ஏன் தமிழ்நாட்டுக்கு வரமாட்டான்னு இப்ப எனக்கு பிரியுது...
====================
இங்கு கனி மொழி மீனவர்களுக்கு ஆதரவாக ஆளும் அப்பா அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி கைதானார்...இப்போது அதே போல நொய்டாவில் விவசாயிகளுக்காக காங்கிரஸ் பொதுசெயலாளர் ராகுல்காந்தி தர்ணா போராட்டம் நடத்தி கைது ஆகி இருக்கின்றார்... செமையா இருக்கு..ராகுல்சார் அப்படியே இங்க தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொள்கின்றது...இங்கு வந்தும் தர்ணா நடத்தி கைதாக வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்...தமிழகமும் இந்தியாவில்தான் இருக்கின்றது என்பதை தெவித்துக்கொள்கின்றேன்...
====================================
ஐஏஎஸ் தேர்வின் முடிவுகளில் முதல் பத்து இடத்தில் நான்கு பேர் தமிழர்கள்.. இதில் ஒருவர் முழுக்க முழுக்க தன் தாய் மொழியான தமிழில் எழுதி வெற்றி பெற்று இருக்கின்றார்.அகில இந்தியாவில் முதலிடத்தை தமிழகத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் பெற்று இருக்கின்றார்...
இத்தனைக்கும் அவர் போனமுறை இதே ஐஏஎஸ் தேர்வில் தோல்வி அடைந்தவர்....பிளஸ் டூவில் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் இறந்து போன மாணவிகளை நினைத்தால் பரிதாபமாக இருக்கின்றது...நான் எல்லாம் நைன்த் பெயில்
ஆனேன் என்பதை தெரிவித்தக்கொள்கின்றேன்.
=============
மிக்சர்
அழகர் சாமி குதிரை படத்துக்கு 38 லட்ச ரூபாய்க்கு... டிஐ செய்து இருக்கின்றார்கள்..ஒரு படத்துக்கு 8 லட்சத்துக்கு மேல் டிஜ பொதுவாக செய்வதில்லை என்று ஒரு சினிமா நண்பர் சொல்லி வியந்தார்...அழகர்சாமி குதிரை படத்தை இலக்கியவாதிகள் முதலில் பார்த்து விட்டார்கள்....
===================
வழக்கம் போல் டாக்டர் என்ஜினியர் ஆவேன் என்று சொல்லி பிளஸ் டூதேர்வு ரிசல்ட்டுகளை தாங்கி தினசரிகள் வந்தன.. சொல்லி வைத்தது போல் பல வருடங்களாக பல மாணவர்கள் டாக்டர் ஆகி ஏழைகளுக்கு சேவை செய்வேன் என்று சொல்லிவருவதை நானும் பார்த்து வருகின்றேன்... ஆனால் ஏழைகளுக்கு சேவை செய்யும் டாக்டர்கள் தமிழகத்தில் குறைவு..
===============
மாணவிகளை தொடர்ந்து சாதனைன்னு சொன்ன என்ன அர்த்தம்... பொம்பளை புள்ளன்னு பக்கத்துல இருக்கும் செட்டியார் கடைக்கு போய் உப்பு பாக்கெட் வாங்க கூட அனுப்பறது இல்லை...
ஆனா பசங்களை எருமை மாடு மாதிரி வளர்ந்துட்டு தண்ட தீனி தின்னுகிட்டு இருக்குன்னு சொல்லி சொல்லி கடை தெருவுக்கு அரிசியில் இருந்து ஆயில்வரை வாங்க அனுப்பிச்சா? எப்படி முதலில் வர முடியும்... பெண்கள்தான் தொடர்ந்து முதல் இடத்துல இருக்க முடியும்..
==========
========================
பிலாசபி பாண்டி...
பத்து வருடத்துக்கு முன்ன பசங்க காலையில எழுந்து கடவுள் போட்டோ எதிரே கண் முழிப்பாங்க.. ஆனா இப்ப காலையில் எழுந்ததும் எத்தனை மிஸ்டு கால் எத்தனை மெசேஜ் போன்ல வந்து இருக்குன்னு முதலில் பார்க்கின்றார்கள்.
===================
நான்வெஜ் 18+
ஒரு மூனு ஆராய்ச்சியாளர்கள்...காட்டுவாசிகளிடம் சிக்கி கொண்டார்கள்...சிறையில் ஒரு வாரம் அவர்கள் மூவரையும் சிறையில் வைத்து இருந்து விட்டு, ஒரு வாரம் கழித்து முதலாமவனை அழைத்து உன்னை சாவடிக்கனுமா? அல்லது யானா பூனா வேண்டுமா? என்று கேட்டார்கள்..
சாவுக்கு பயந்த முதலாமவன்... எனக்கு யானாபூனாவே போதும் என்று சொல்ல.. அவனை யானாபூனாவிடம் அழைத்து சென்றார்கள்.... யானா பூனா என்பவன் பத்தடி சமாச்சாரம் வச்சி இருக்கின்றவன்... அவன் வெறித்தனமான ஹேமோ... முதலாமவன் அவனை அறைக்கு தள்ளிகிட்டு போனான்.. அரைமணி நேரம் கழிச்சி கால்கள் நடுங்க...யப்பா இதுக்கு சாவே மேல் ஆண்டவான்னு கதறிகிட்டே வெளியே வந்தான்...
இரண்டாம் ஆளையும் அழைச்சிக்கினு போனாங்க.. ஆவன் முதல் ஆள் கதறதை பார்த்தாலும் அவனும் சாவுக்கு பயந்துகிட்டு யானாபூனா வேண்டும் என்று சொன்னான். அவனை யானா பூனா அழைச்சிகிட்டு போனான்.. ஒரு மணிநேரம் கழிச்சி வெளியே வந்த இரண்டாமவன்.. கடவுளே ஆராய்ச்சி செய்யவந்தது ஒரு குத்தமா?? ஏன் எங்களை இப்படி சோதிக்கற..
யானை பூனா கிட்ட போறதுக்கு சாவே மேல் ஏன் எங்களை நரகவேதனை படுத்தற.... இதுக்கு ஒரே வெட்டுல எங்க தலையை வெட்டி போட்டு இருக்கலாமே? அப்படின்னு ரெண்டு பேருமே தரையில விழுந்து அழுது கதறிகிட்டு இருந்தாங்க...
மூனாவது ஆள்கிட்ட காட்டுவாசி தலைவன் கேட்டான்.. உனக்கு சாவு வேணுமா? இல்லை யானாபூனா வேணுமான்னு கேட்டான்.. மூனாவது ஆள் ரொம்ப உஷாரா இருக்கறாதா நினைச்சிகிட்டு எனக்கு சாவு வேணும் சொன்னான்...
காட்டுவாசி தலைவன் யானை பூனாவை பார்த்து இவனை சாவடிச்சிடுன்னு சொன்னான்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
=======================
அண்ணே,
ReplyDeleteஎங்கேயிருந்து A ஜோக் புடிக்குரிங்க? சான்சே இல்லை.
உங்களையும் கேபிள் சங்கரையும் பாத்து நானும் கொஞ்சம் முயற்சி பண்ணினேன். முடியல. ஒரு நாள் உங்க லெவலை தொடுவேன் நம்பிக்கை இருக்கு.
நன்றி
அரவிந்
Hmm good as usual...
ReplyDeleteராகுல் உத்திரபிரதேஷ விவசாயிகளுடன் தர்ணா செய்வதற்காக அவர்களில் ஒருவரது இரு சக்கர வாகனத்தில் பயணித்து கிராமத்தை அடைந்ததாக செய்திகளில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்... அவர் ஏன் ஒரு முறை தமிழக மீனவர்களுடன் அவர்களது படகுகளில் கடலுக்கு சென்று ஒரு முறை இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷம் எழுப்பக்கூடாதுங்கிறேன்? அவனுக்கு எங்கெல்லாம் சூத்துல சூடு வைக்க மாட்டாங்களோ அங்கே போய் தர்ணா பண்ணுறதே வழக்கமா போச்சு...
ReplyDeleteடிஐ அப்படீன்னா என்னண்ணே?
ReplyDeleteஇந்த மாதிரி டெக்னிகல் விசயங்களையும் நேரம் கிடைக்கும்போது எடுத்து விடுங்கண்ணே..
//தமிழகமும் இந்தியாவில்தான் இருக்கின்றது என்பதை தெவித்துக்கொள்கின்றேன்...//
ReplyDeleteஅவர்களுக்கு ரிசல்ட் தாங்க முக்கியம்.எங்க போராடினா என்ன கிடைக்குமென்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.முட்டாள்களா என்ன?
//வழக்கம் போல் டாக்டர் என்ஜினியர் ஆவேன் //
ஏன் ஒருவரும் எழுதாளராவேன் என்று சொல்வதில்லை.(இதை சொல்லி வாய் மூடும் முன்னர் கன்னத்தில் பளார் விழலாம் வீட்டில்..உருப்படுற வழிய பாருடா என்று)
சரி..டாக்டர்,இஞ்சினியர் தவிர வேறு படிப்பே இல்லையா? நானும் தான் பர்ஸ்ட் மார்க் வாங்கினேன் பள்ளியில்.வங்கிக்கோ,தபாலாபீசிற்கோ சென்று ஒரு ஃபார்ம் எழுத தெரியாமல் முழித்தேன்.இன்றைய மாணவர்களின் நிலையம் இது தான்.
annae kalakkal pathivu eppovum pola...appuram ankaluka kural neenka koduthathu superb.....
ReplyDeletechance illai ponka..gr8
டிஐ அப்படீன்னா என்னண்ணே? enakkum athe doubt
ReplyDeleteBabu said...
ReplyDeleteடிஐ அப்படீன்னா என்னண்ணே? enakkum athe doubt
me too